LaTeX/C2/Beamer/Tamil
From Script | Spoken-Tutorial
beamer.
Time | Narration |
---|---|
00:00 | லேடக் மற்றும் பீமர் ஐ பயன்படுத்தி ப்ரசன்டேஷன் தயாரித்தல் குறித்த இந்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | முதலில் திரையில் தெரிவதை விளக்குகிறேன். |
00:14 | மூல பைல் இங்கே இருக்கின்றது. பிடிஎஃப்லேடக் கட்டளையை பயன்படுத்தி இங்கே அதை தொகுக்கிறேன். , |
00:21 | இந்த மூலையில் அதன் வெளியீடு தெரியும். |
00:28 | முதலில் இதை பார்த்துவிட்டு இங்கே சற்று நேரத்தில் திரும்பி வரலாம். |
00:33 | இதை முதலில் செய்வோம். முதல் ஸ்லைட் இந்த மூலத்தில் இருந்து வருகிறது. – begin frame, end frame, title page. |
00:45 | title page இல் title, author மற்றும் date வரையறைகள் உள்ளன. |
00:55 | நான் பயன்படுத்தும் ஆவண கிளாஸ் beamer. ஆவணத்தை இங்கே ஆரம்பித்து இருக்கிறோம். |
01:01 | சரி, இதுதான் முதல் ஸ்லைட், இரண்டாவதற்கு போகலாம். இதன் பெயர் அவுட்லைன். இதை எப்படி செய்வது ?, |
01:13 | Begin frame, end frame ஆகியவை ஒரு ஸ்லைட் ஐ வரையறுக்கின்றன.. Frame title அவுட்லைன். அது இங்கே இருக்கிறது. |
01:20 | பின் நான் இந்த சாதாரண ‘itemize’ கட்டளையை பயன்படுத்துகிறேன். மூன்றாவது ஸ்லைடுக்கு போகலாம். |
01:28 | இந்த ஸ்லைட் லேடக் பற்றிய மற்ற ஸ்போகன் டுடோரியல்கள் பற்றி பேசுகிறது. லேடக் குறித்து நிறைய ஸ்போகன் டுடோரியல்கள் ஏற்கெனெவே கிடைக்கின்றன. |
01:36 | லேடக் ஐ பயன்படுத்த தயக்கம் இருந்தால் அவற்றை பார்க்கவும். |
01:43 | இவை லேடக் ஐ எப்படி பயன்படுத்துவது,எப்படி விண்டோஸில் நிறுவி இயக்குவது என விவரிக்கின்றன. |
01:50 | fosse dot in மூலம் இன்னும் நிரந்தர தொடுப்பு கொடுக்க முயற்சிக்கிறேன். |
01:58 | ஆகவே இதன் முடிவுக்கு வந்துவிட்டோம். ஆகவே இதுதான் முதல் ஸ்லைடின் மூலம். |
02:10 | இந்த ஆவணத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம் என்பதை பார்க்கலாம். |
02:15 | இப்போது எப்படி இந்த ஆவணத்தில் பீமர் தரும் நிறைய அம்சங்களை சேர்த்து இன்னும் சிறப்பாக ஆக்கலாம் என்று காணலாம். |
02:22 | ஆரம்பத்துக்கு போகலாம். இந்த பைலின் உச்சிக்கு போகலாம். என்ன மாறுதல்கள் நான் செய்யப்போகிறேனோ... |
02:31 | மேம்பாடு செய்யப்போகிறேனோ அவை இங்கே செய்யப்படும். ஒவ்வொன்றாக செய்து விளக்கிக்கொண்டே போகிறேன். |
02:39 | இந்த கட்டளை - ‘beamer theme split’ - ஐ சேர்க்கும்போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். |
02:47 | அதை வெட்டி, இங்கே வந்து ஒட்டி, சேமிக்கிறேன். பின் தொகுக்கலாம். பின் பிடிஎஃப் லேடக் beamer. |
03:02 | நான் இதை சொடுக்குகிறேன். ஆகவே அது இந்த பேனரை இங்கேயும், சில பேனர்களை இங்கேயும் உருவாக்கியது. |
03:12 | இங்கேயும். சரி. எப்படி செய்வது எனில் இங்கே வந்து இந்த பேக்கேஜை பயன்படுத்த வேண்டும். |
03:23 | இதை சேர்க்கிறேன் – beamer theme shadow. அதை வெட்டி, இங்கே வந்து ஒட்டி.. இதெல்லாம் Document கட்டளைக்கு முன்னால் ஒட்ட வேண்டும். |
03:38 | தொகுக்கலாம் .. சரி, தொகுக்கலாம். சரி, இதை சொடுக்கும்போது என்ன ஆகின்றது எனப்பாருங்கள். அது பெரிதாகிவிட்டது. |
03:49 | இங்கே நிறம் மாறிவிட்டது. இது அத்தனையும் ஒரு கட்டளை – beamer theme shadow ஆல் செய்யப்பட்டது. |
04:00 | இது போல நிறைய பேக்கேஜ்கள் உள்ளன. சில மற்ற அம்சங்களை காட்டப்போகிறேன். |
04:06 | மேலும் படிக்க சுட்டிகளை இந்த அறிமுகத்தின் பகுதியாக கொடுக்கப்போகிறேன். அதை இங்கே காணலாம். – ‘references for further reading’. |
04:17 | இந்த பேச்சின் கோட்டுச்சித்திரம் -அவுட்லைன் இப்படி இருக்கிறது.நாம் கொஞ்ச நேரத்தை title page, author name, color, logo போன்றவற்றில் செலவிடுவோம். |
04:25 | உங்கள் ப்ரெசன்டேஷனில் பயன்படுத்த Minimal animation, இரண்டு நெடுபத்தி ஒழுங்கு, எண்களும் பட்டியலும், சமன்பாடுகள், verbatim போல இன்னும் சில... |
04:36 | சரி, ஆரம்பத்துக்கு வரலாம். அடுத்தது logo.... logo வை இங்கிருந்து வெட்டி ஒட்டலாம். |
04:49 | இதுவும் டாக்குமென்ட் கட்டளைக்கு மேலே ஒட்டப்படும். இந்தlogo எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். |
04:59 | அதை காண iitb logo.pdf ஐ திறக்கலாம். அதே பெயரை இங்கே தருகிறேன். |
05:08 | நான் எந்த பிம்ப பைல் பற்றி பேசுகிறேன் என்று இதை திறக்கும்போது புரிந்திருக்கும். |
05:15 | இந்த logo கட்டளையை சேர்த்தபின்.... 1 cm உயரம்.... அது இந்த மூலைக்கு வந்துவிடும். |
05:24, | ஆகவே அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். இதை சொடுக்கலாம்.iitb logo வந்துவிட்டது. |
05:35 | இது இனி வரும் எல்லா பக்கங்களிலும் காணப்படும். |
05:42 | சரி. அடுத்து இந்த கட்டளையை சேர்க்கலாம்.ப்ரெசன்டேஷன்களுக்கு சில சமயம் எழுத்துக்களை தடிமனாக ஆக்குவது நல்லது. |
05:55 | ஆகவே அதற்காக இதை வெட்டி இங்கே ஒட்டுகிறேன் |
06:08 | உண்மையில் அதை இந்த begin டாக்குமென்ட் கட்டளைக்கு அடுத்து ஒட்ட வேண்டும். |
06:15 | இதை சேமிக்கிறேன். இதை நான் தொகுக்கிறேன். சரி இப்போது இதை நான் சொடுக்கினால் எல்லா எழுத்துக்களும் தடிமனாக ஆகிவிட்டதை காணலாம். |
06:28 | தடிமனாக ஆகிவிட்டன. |
06:37 | அடுத்து இங்கே எழுதியுள்ளதை மேம்படுத்தப்போகிறேன். |
06:43 | உதாரணமாக இது இங்கே பல விஷயங்களை நிரப்ப முயல்கிறது. தலைப்பு இங்கே வருகிறது. இங்கே உருவாக்கியவர் தகவல்... மற்றும் பல விஷயங்கள். |
06:54 | சில சமயம் இங்கே சிறிய தலைப்பை நான் விரும்பலாம். உதாரணத்துக்கு இந்த வெற்று இடம் போதாமல் இருக்கலாம். |
07:02 | ஆகவே என்ன செய்யலாம். தீர்வுக்கு இதை பயன்படுத்தலாம். |
07:07 | உதாரணமாக, இதோ running title. |
07:13 | இதை வெட்டுகிறேன். title கட்டளைக்கு பின்னால் இது வர வேண்டும்., title கட்டளை க்கும் உண்மையான தலைப்பு - title க்கும் நடுவில் |
07:29 | ஆகவே இங்கே ஒட்டலாம். இங்கே என்ன ஒட்டினேனோ அது சதுர அடைப்புக்குள் இருக்கிறது என்பதை கவனியுங்கள். |
07:36 | ஆகவே சேமித்து இயக்கலாம். |
07:46 | ஆகவே செய்யும் போது இதை சொடுக்குகிறேன். இந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். |
07:51 | தலைப்பு இப்போது மாறிவிட்டது எனக்காணலாம். தலைப்பின் பின் பகுதி மட்டுமே காண்கிறது. ஏனெனில் அதை மட்டுமே சதுர அடைப்புக்குள் கொடுத்தேன். – presentation using latex and beamer. |
08:03 | அடுத்து h-space அரை cm என்கிறேன். இங்கே கொஞ்சம் இடம் தருகிறேன். அப்புறம் பக்க எண்கள் இங்கே உள்ளன. |
08:12 | இங்கே அது 3 இல் 1 என்கிறது. அடுத்து 3 இல் 2. அடுத்து 3 இல் 3... இதே போல... |
08:21 | இது எந்த கட்டளையை பயன்பத்தி நடக்கிறது? ‘insert frame number … வகுத்தல் குறி.. insert total frame number’. |
08:28 | இதே போல உருவாக்கியவருக்கும் செய்யலாம். அதற்கு இங்கே வரலாம். |
08:37 | இதை வெட்டலாம். author க்கு அடுத்து இது வருகிறது. |
08:49 | இங்கே ஒட்டி சேமித்து தொகுக்கிறேன். |
08:56 | கண்ணன் மௌத்கல்யா என்று வந்துவிட்டது. அதைதான் சதுர அடைப்புக்குள் கொடுத்தேன். இது இனி வரும் எல்லா பக்கங்களிலும் காணப்படும். |
09:05 | அடுத்த விஷயத்துக்கு போகலாம். இது சமன்பாடுகளை சேர்ப்பது. |
09:19 | இது முழுதும் ஒரு சட்டமாக - frame ஆக இருக்கிறது. முழுச்சட்டம். |
09:24 | ஆகவே நான் இதை முழுதுமாக வெட்டுகிறேன். |
09:30 | இங்கே திரும்பி வந்து இந்த ஆவணத்தின் கடைசிக்குப்போய் ஒட்டுகிறேன். சேமிக்கலாம் |
09:38 | ஆகவே நான் புதிய ஸ்லைட் ஒன்றை உருவாக்கிவிட்டேன். அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். |
09:45 | ஆகவே இங்கேதான் frame துவங்குகிறது. |
09:51 | இதை தொகுக்கலாம். 4 பக்கங்கள் இப்போது உள்ளன. அது இன்னும் 3 என்கிறது. இன்னொரு முறை சொடுக்க 4 ஆகிவிட்டது. |
10:07 | ஆகவே இதுதான் சமன்பாடு உள்ள ஸ்லைட். இந்த சமன்பாடுகளை எழுதுவது எப்படி என்று நான் சொல்லப்போவதில்லை. |
10:15 | நான் முன்பே உருவாக்கிய சமன்பாடுகளை எழுதுவது எப்படி என்ற ஸ்போகன் டுடோரியலில் அவை உள்ளன. |
10:21 | நான் என்ன செய்தேன் என்றால் அந்த லேடக் ஆவணத்துக்கு சென்று அதை வெட்டி இங்கே ஒட்டிவிட்டேன், அவ்வளவுதான். |
10:28 | சமன்பாடு எண்களை நான் எடுத்துவிட்டேன். ஒரு ஸ்லைட் இல் சமன்பாடு எண்களை கொடுப்பதில் அர்த்தம் இல்லை. |
10:36 | ஆனால் சில சமயம் அதன் நிறத்தை மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும். |
10:44 | உதாரணமாக இதை நீல நிறமாக மாற்ற விரும்பினால்... இதை செய்கிறேன். இங்கே வந்து... |
10:54 | கட்டளை – color, blue- இப்போது இதை மூடுகிறேன். |
11:05 | சேமிக்கவும். இதை தொகுக்கலாம். இதை சொடுக்கலாம். இப்போது இது நீலமாகிவிட்டது. |
11:16 | ஆகவே நீங்கள் பேசும்போது சமன்பாட்டை இந்த எண் என்று குறிப்பிட வேண்டுவதில்லை. நீல நிறத்தில் இருக்கும் சமன்பாடு என்று சொல்லலாம். அல்லது மாஸ் பேலஸ் சமன்பாட்டை பாருங்கள் எனலாம், இதே போல்... |
11:29 | பேச்சின்போது கேட்போர் நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் அதை குறிப்பிடலாம். |
11:35 | அடுத்து நாம் செய்யப்போவதென்ன? அசைவரைகலையை சேர்க்கலாம். |
11:50 | தகவலை ஒவ்வொரு கருதுகோளாக காட்ட இது பயன்படுகிறது. |
11:58 | ஆகவே இதை வெட்டி இங்கே ஒட்டுகிறேன். அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். |
12:08 | முதலில் தொகுக்கலாம்.... என்ன நடக்கிறது? |
12:17 | இது கடிதம் எழுதுவது குறித்த spoken டுடோரியல். இந்த தகவல் அங்கேயும் இருக்கிறது. |
12:21 | ஒரே வித்தியாசம் என்னவென்றால் நான் அதை begin enumerate மற்றும் end enumerate இடையில் ஒட்டி இருக்கிறேன்; இந்த ‘item plus minus alert’ ஐயும் இட்டு இருக்கிறேன். |
12:33 | அது என்ன செய்கிறது என்று பார்க்கலாம். இங்கே ஒரு கட்டளை ‘pause’ என்று எழுதி இருக்கிறேன். ஆகவே அது அங்கே தாமதிக்கும். இப்போது begin enumerate துவங்குகிறது. |
12:45 | ஆகவே மேலே போகலாம், கீழ் பக்கம், அடுத்த பக்கம் , அடுத்த பக்கம் , அடுத்த பக்கம் . |
12:53 | கீழே நான் போகப்போக கடைசியாக வரும் தகவல் சிவப்பாகவும் மற்றவை முன்னிருப்பு நிறமான கருப்பாகவும் இருப்பதை பார்க்கலாம். ஆவணத்தின் கடைசிக்கு நான் வந்துவிட்டேன். |
13:05 | ஆகவே தகவலை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க நினைத்தால் அசைவரைகலையை உருவாக்க இது ஒரு சுலபமான வழி. |
13:18 | அடுத்து alerted color ஐ நீலமாக்க நினைக்கிறேன். alerted color என்பது இதுதான். இங்கு alerted color சிவப்பாக உள்ளது. |
13:32 | alerted color ஐ நீலமாக்க நினைக்கிறேன். அது இங்கு நான் தேர்ந்தெடுத்த நிறத்துடன் இசைந்து போகும்.. |
13:41 | சரி, இங்கே வந்து இதை வெட்டி எடுக்கிறேன். |
13:52 | இது ஆவணத்தின் ஆரம்பத்துக்கு போக வேண்டும். Document கட்டளை ஆரம்பிக்கும் முன். |
14:00 | இதை தொகுக்கலாம்... இதை நான் சொடுக்கும்போது …. alerted color இப்போது நீலமாகிவிட்டது. |
14:12 | இதை சாதித்தது ‘set beamer color – alerted text’ கட்டளை. இங்கே ஒரு வெற்று இடம் உள்ளது. இங்கே... ‘முன் புலம் நீலத்துக்கு சமம்’, fg சமக்குறி blue. |
14:24 | இப்போது முழு ஆவணத்தின் நிறத்தை மாற்றுவது எவ்வளவு சுலபம் எனக்காட்டுகிறேன். |
14:33 | ஆகவே என்ன செய்கிறேன். இங்கே வருகிறேன். இந்த ஸ்லாஷ் டாகுமென்ட் கிளாஸ் க்குப்பின் beamer என்று ஆரம்பிக்கும் முன்னால்... இங்கே brown என்று எழுதுகிறேன். |
14:46 | சேமித்து தொகுக்கலாம். |
14:52 | இது பழுப்பு நிறமாகிவிட்டது என்பதை பார்க்கலாம். இதற்கு அதிக வேலை எடுக்கவில்லை, |
15:03 | சரி, இதை முன்னிருந்த நிறத்துக்கு கொண்டுபோகிறேன். |
15:09 | முன்னிருப்பு நிறம் நீலம். ஆகவே அதை தனியாக குறிப்பிட வேண்டாம். இப்போது மீண்டும் நீலமாகிவிட்டது. |
15:21 | ஆகவே இங்கே வந்து இதை நீக்குகிறேன். இப்போது படங்களை உள்ளிடலாம், |
15:30 | இதை வெட்டலாம். இங்கே வருகிறேன். இதன் கடைசிக்கு போகலாம். |
15:41 | அந்த கடைசியில் இருப்பது.... இதை தொகுக்கலாம். அடுத்த பக்கத்துக்கு போகலாம். ஆகவே example of the figure பக்கம் இங்கே இருக்கிறது.. |
15:53 | சரி, இதை உள்ளிட என்ன வழிகாட்டல்கள்? சில முக்கியமான குறிப்புகள் உள்ளன. அடுத்ததாக அதை பார்க்கலாம். |
16:05 | இதை வெட்டி இங்கே ஒட்டி சேமித்து தொகுக்கிறேன். |
16:21 | ஆகவே இது வந்துவிட்டது. Hints for including figures. |
16:28 | இந்த படத்தை உருவாக்கிய மூலத்துக்கு வருவோம். இப்படித்தான் படத்தை ஸ்லைடில் உருவாக்கினோம். ஆகவே குறிப்புகள் என்ன? |
16:37 | லேடக் ஆவணத்தில் தேவையான மிதக்கும் சூழலை ப்ரெசன்டேஷன்களில் பயன்படுத்தாதீர்கள். உதாரணமாக begin figure, end figure என்றெல்லாம் எழுத வேன்டாம். |
16:46 | மேலும் நீங்கள் படத்தை உள்ளிடுவது பற்றி அறிய tables and figures என்னும் வேறு spoken டுடோரியல் க்கு செல்ல வேண்டும். |
17:01 | ஆகவே இதை செய்ய வேண்டாம்.‘include graphics’ கட்டளையை நேரடியாக பயன்படுத்துங்கள். |
17:08 | உதாரணத்தை பார்க்கலாம். include graphics கட்டளை பயன்படுத்தப்படுகிறது. உரையின் முழு அகலத்தையும் பயன்படுத்தச் சொல்கிறேன். பைல் iitb. |
17:19 | மேலும் பீமர் தேவையான எல்லா பேக்கேஜ்களையும் ஏற்கெனெவே கொண்டுள்ளது. ஆகவே எந்த பேக்கேஜையும் சேர்க்க வேண்டியதில்லை, பயன்படுத்த வேண்டியதில்லை. எல்லாமே உள்ளே இருக்கின்றன. |
17:30 | பின் எல்லாவற்றையுமே சென்டர் சூழலில் இடுகிறோம். இந்த சட்டம் முடிந்தது. |
17:40 | தலைப்பு, பட எண் என்று ஒன்றும் சேர்க்க வேண்டாம். |
17:44 | பார்க்கிறவர் யாரும் பட எண்களை நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. |
17:51 | முன்னே காட்டிய ஒரு படத்தை குறிப்பிட நினைத்தால் திருப்பிக்காட்டுங்கள். |
17:56 | இன்னொரு ஸ்லைட் உருவாக்க ஒரு காசும் செலவழியாது. முன் காட்டிய ஸ்லைட் ஐ பிரதி எடுத்து மீண்டும் காட்டுங்கள். |
18:05 | சரி, இத்துடன் படங்களும் அவற்றுக்கான வழி காட்டிகளும் முடிந்தன. இந்த ஆவணத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். |
18:12 | இப்போது இரண்டு நெடுபத்தி சூழலை எப்படி உள்ளிடுவது என்று பார்க்கலாம். |
18:24 | இங்கே வருவோம். ஆவணத்தின் கடைசிக்கு. சேமிக்கவும். |
18:32 | இதை சுலபமாக்க முதலில் இதை நீக்குகிறேன். |
18:42 | என்ன செய்யப்போகிறேன்? பகுதி தகவலை மட்டும் காட்டலாம். இதை தொகுக்கலாம், என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். |
18:57 | ஆகவே …... இப்போது எனக்கு இரண்டு நெடுபத்திகள் உள்ளன...... |
19:28 | இதை இன்னும் சேமிக்கவில்லை. அதனால் சரியாக வரவில்லை. இந்த இரண்டு நக்ஷத்திரங்களை பாருங்கள். ஆகவே முதலில் சேமிக்கிறேன். |
19:35 | ஆகவே இதுதான் பிரச்சினை. சேமிக்காமல் தொகுத்தால் பிடிஎஃப் பைல் இங்கே உள்ளதுக்கு பொருந்துவதில்லை. |
19:45 | ஆகவே இதை தொகுக்கலாம். இங்கே வரலாம். இப்போது அது இங்கு உள்ளதுடன் பொருந்தி இருக்கிறது. |
19:58 | மையப்படுத்துவோம். Frame title, Two columns, அப்புறம் ‘mini page ’ என்ற கட்டளையை பயன்படுத்துகிறேன், மையப்படுத்துகிறேன், 45 சதவிகித உரை அகலத்தை பயன்படுத்துகிறேன். |
20:15 | Begin enumerate. இந்த இரண்டு... பின் end enumerate. முன் போலவே அலர்ட் செய்கிறேன். |
20:25 | இந்த இரண்டையும் பாருங்கள். இதுதான் ஆவணத்தின் முடிவு. ஆகவே இதன் முடிவில் என்னிடம் இருப்பதை ஒட்டுகிறேன். |
20:37 | இங்கே முந்தைய mini pageமுடிந்துவிட்டது. இப்போது நான் இன்னொரு mini page உருவாக்கப்போகிறேன். இந்த மினி பக்கத்தில் முன் நாம் பார்த்த இந்த IITb யை இடப்போகிறேன். இந்த பிம்பம் நாம் முன்னேயே பார்த்ததுதான். |
20:52 | இந்த மினி பக்கமும் 45 சதவிகித அளவே. இதை தொகுக்கலாம், முதலில் சேமிக்கலாம். |
21:07 | இப்போது இதை சொடுக்குகிறேன். அது வந்துவிட்டது. ஆனால் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. இது முதல் உருப்படியையும் இந்த படத்தையுமே சேர்த்து காண்பிக்கிறது. |
21:22 | இந்தப்படம் பின்னால் வர வேண்டும். ஆனால் நாம் லேடக்குக்கு எங்கேயும் அப்படி சொல்லவே இல்லை. அதை தெளிவாக சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. |
21:35 | ஆகவே ஒரு வேளை நாம் இப்படி சொல்லி இருந்தால்... இங்கே இடும் தகவலை முதலில் காட்டு, அப்புறம் இதைக்காட்டு..... |
21:44 | ஆனால் அப்படி எங்குமே நம் சொல்லவில்லை. |
21:50 | ஆகவே இது போன்ற நுணுக்கங்களுடன் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதை சரி செய்ய ஒரு வழி இன்னொரு கட்டளை ‘pause’. |
21:59 | இதை தொகுக்கலாம். சேமிக்க.. ஆகவே இப்போது இது சரியாகிவிட்டது. |
22:08 | இந்த பிரச்சினை சரியாகிவிட்டது. முதலாவது, இரண்டாவது, இன்னும் ஒன்று ... மேலே போகிறது. சரி. |
22:24 | சரி, இங்கே வரலாம். அடுத்தது அட்டவணை. |
22:39 | இதை சேமித்து தொகுக்கலாம். அட்டவணை வந்துவிட்டது. |
22:51 | இந்த டேபிளை உருவாக்குவது எப்படி என்று இங்கே நான் சொல்லப்போவதில்லை. அட்டவணைகள் பற்றிய வேறு ஸ்போகன் டுடோரியலில் இது சொல்லப்பட்டு இருக்கின்றது. |
22:57 | நான் செய்து இருப்பதெல்லாம் அதை வெட்டி இங்கே ஒட்டியதுதான். சட்டம்- ப்ரேமின் ஆரம்பத்துக்கு போகலாம். |
23:12 | அங்கே பயன்படுத்திய அதே table ஐத்தான் நான் வெட்டி இங்கே ஒட்டினேன். begin tabular மற்றும் end tabular கட்டளைகள் center சூழலில் வருவதை பார்கலாம். |
23:22 | குறிப்புகள் என்ன? குறிப்புகள் படங்களுக்கு சொன்னது போலவே.... |
23:28 | ஆகவே அதையும் பார்க்கலாமே. குறிப்புகள் இங்கே உள்ளன. |
23:44 | தொகுக்கலாம் . இதை பாருங்கள். மேலே போகலாம். |
23:51. | மீண்டும் மிதக்கும் சூழலை ப்ரசன்டேஷன்களில் பயன்படுத்த வேண்டாம். |
23:56 | tables பற்றிய spoken டுடோரியலில் tabular என்பதை table சூழலில் பயன்படுத்தினோம்.. |
24:02 | Table சூழல் என்பது ஒரு மிதக்கும் சூழல். அதை இங்கே சேர்க்க வேண்டாம்.நேரடியாக சொருகவும். |
24:11 | உதாரணமாக, நாம் நேரடியாக center சூழலில் உள்ளிட்டோம். |
24:17 | caption, table எண் ஆகியவையும் தேவையில்லை. தேவையானால் அவற்றை பிரதி எடுத்து காட்டவும். |
24:25 | இங்கே அசைவரைகலை நடப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணத்துக்கு இந்த ஸ்லைட், இது நிறம் மாறுவதில்லை. |
24:40 | முன்னே பார்த்தபோது அடுத்து வரும் உருப்படி நீலமாக தெரிந்தது இல்லையா? இப்போது இல்லை. ஏன்? |
24:46 | ஏனெனில் இங்கே சூழல் வேறானது. |
24:52 | Begin itemize, End itemize, இதனுள் நாம் item plus minus என்று பயன்படுத்துகிறோம். முன்னே நாம் alert என்பதை உபயோகித்தோம். |
25:01 | அதை நினைவு கூறுங்கள். அதை இனியும் பயன்படுத்தவில்லை. ஆகவே அது கருப்பாகவே வருகிறது. அசைவரைகலையை காட்ட இது இன்னும் எளிய ஒரு முறை. |
25:12 | நாம் யோசித்து தேர்ந்தெடுக்கலாம். ஆகவே இப்படி எழுதி இருக்கிறேன். முந்தைய ஸ்லைட் இல் வேறு விதமான அசைவரைகலையை காட்டு. |
25:22 | இப்போது இதை வினியோகம் செய்யும் பிரசுரமாக ஆக்க தேவை இருக்கலாம். இதை அப்படியே அச்சடித்தால் ... |
25:28 | இங்கே இருப்பது 24 பக்கங்கள் அச்சடிக்கப்படும். ஆனால் இங்கே 10 பக்கங்கள் மட்டுமே உள்ளன. |
25:40 | அதாவது 10 தனித்தன்மை உடைய சட்டங்கள் ஆனால் 24 பக்கங்கள். இதை அப்படியே அச்சடித்தால் 24 பக்கங்கள் அச்சடிக்கப்படும். |
25:49 | அதை செய்ய ஒரு வழி இங்கே ஒரு எளிய மாற்றியை இட வேண்டும். ‘handout’. |
26:00 | அதை செய்தால் … இதை தொகுக்கலாம். இப்போது 10 பக்கங்கள் மட்டுமே உள்ளன. மீண்டும் தொகுக்கலாம். |
26:13 | அசைவரைகலை? அது இப்போது இலல்லவே இல்லை. அடுத்த பக்கம் , அடுத்த பக்கம் , அடுத்த பக்கம் , அடுத்த பக்கம் , அடுத்த பக்கம் மேலும்... |
26:24 | ம்ம்ம்... நிறத்தை மாற்ற எண்ணினால்... அதை இன்னும் செய்ய முடிகிறது. |
26:35 | அது மாறிவிட்டதை காணலாம். இந்த பாராமீட்டர்கள் எல்லாவற்றையும் comma க்களால் பிரிக்க வேண்டும். |
26:42 | இதை மீண்டும் நீலத்துக்கு மாற்றிவிடலாம். இதை தொகுக்கலாம். |
26:52 | சில சமயம் என்ன செய்ய வேண்டும் என்றால் Verbatim சூழலை பயன்படுத்த வேண்டும்.. |
27:06 | ஆகவே இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். |
27:13 | இங்கே கடைசிக்கு போகலாம். சேமிக்கவும், இங்குதான் verbatim துவங்குகிறது. |
27:24 | ஆகவே verbatim உருவாகிவிட்டது என்று காணலாம். |
27:30 | இங்கே நான் சில SciLab கட்டளைகளால் அவற்றை காட்டி இருக்கிறேன். இங்கே நிறத்தை நீலமாக ஆக்கிவிட்டேன். மேலும்.... |
27:39 | மிக வித்தியாசமாக நீங்கள் செய்ய வேண்டியது begin ... frame... சதுர அடைப்புக்குள் – fragile என இருத்துவதுதான். |
27:52 | இப்படி செய்யாவிட்டால் பிரச்சினைதான். சரி ஆகவே இதை பாருங்கள்,... நாம் அப்புறமாக வந்து இதை கவனிக்கலாம். |
28:01 | ஒரு வேளை இதை நீக்கிவிட்டால்... சேமித்து தொகுக்க..... |
28:09 | இங்கே கேள்விக்குறி... ஏதோ சரியில்லை என்று சொல்லுகிறது. |
28:14 | ஆகவே இதை திருப்பி எழுதிவிடலாம். – fragile. சேமித்து வெளியேறுவோம். |
28:21 | மீண்டும் தொகுக்கலாம். அது திரும்பி வந்துவிட்டது. |
28:30 | Beamer கிளாஸ் இல் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவற்றை எப்படி ஒருவர் அறிந்துகொள்வது? |
28:40 | அதற்கு சில தகவல்களை இங்கே வைத்து இருக்கிறேன். கீழே போகலாம். |
28:48 | இந்த ஸ்லைட் இல் எங்கே இந்த தகவலை பெறுவது என்பது இருக்கிறது. |
28:54 | இதை தொகுத்து மேலே போகலாம். beamer க்கு அதிகார பூர்வ மூலம் beamer user guide dot pdf |
29:08 | நான் அதை இங்கே கண்டுபிடித்தேன். அனால் அது பீமர் கிளாஸ் ஐ எழுதிய ஆசிரியரின் beamer project வலைப் பக்கங்களிலேயே இருக்கிறது. |
29:21 | இதை காட்டுவதற்கு... இதை நான் ஏற்கெனெவே தரவிறக்கிவிட்டேன். நான் முன் சொன்ன வலைதளத்தில் அது இருக்கிறது. |
29:32 | அது ஒரு 224 பக்கம் ஆவணம். மிகப்பெரிய ஆவணம். |
29:39 | என்ன காட்ட வருகிறேன் என்றால் இங்கிருந்து தகவலை நேரடியாக பெற்று பயன்படுத்த முடியும். |
29:45 | ஆகவே இதன் முதல் பக்கத்தை பார்க்கலாம். முதல் பக்கத்திலேயே ஆசிரியர் எப்படி எளிய உதாரண ஸ்லைடுகளை தயாரிக்கலாம் என்று சொல்கிறார். அதன் மூலத்தையும் இங்கே கொடுத்துள்ளார். |
29:57 | இதை நாம் வெட்டி இங்கே ஒட்டலாம். இதை சின்னதாக்கலாம். ஆவணத்தின் கடைசிக்கு செல்கிறேன். |
30:09 | இங்கே ஒட்டலாம். சேமித்து... தொகுக்கலாம். அடுத்த பக்கம் போகலாம் . |
30:21 | அங்கே பார்த்தது இங்கே வந்துவிட்டது. இங்கே ஆசிரியர் theorem சூழலை பயன்படுத்தி உள்ளார். |
30:33 | உதாரணமாக, begin theorem, end theorem,... இங்கே வருகிறது பாருங்கள், சின்ன எழுத்துக்களில் வரும். frame subtitle ஐயும் பயன்படுத்தி இருக்கிறார்.அதனால் இது சிறிய எழுத்துக்களில் உள்ளது. |
30:42 | அப்புறம் begin proof, end proof இங்கே வருகிறது.அவர் proof என்கிறார். அது இன்னொரு சாளரத்தை திறந்து ‘proof dot’ என்கிறது. |
30:52 | இப்படித்தான் இது - இந்த சூழல் - வரையறுக்கப்பட்டு இருக்கின்றது. இவர் வேறு alert உத்தியை பயன்படுத்துகிறார். |
31:01 | அதை பார்க்க வேண்டுமானால் பின்னால் போய் இந்த handout ஐ நீக்கிவிடலாம். இதனால் அசைவரைகலை தெரிய வரும். இதை தொகுக்கலாம். |
31:21 | ஆகவே பக்கம் 34 க்கு போகலாம். |
31:31 | பின்னால் போவதால் அசைவரைகலையை பார்க்கலாம். இதை பாருங்கள்... இதையும்... |
31:37 | ஆகவே என்ன செய்திருக்கிறார்? இந்த இரண்டு உருப்படிகள் ஒன்று என எண்ணிடப்பட்டது. மற்றவை இரண்டு மற்றும் மூன்று என்று. |
31:51 | அதாவது ஸ்லைட்களில் உள்ளவை தோன்றும் வரிசையை மாற்றும் படி குறிப்பிட இயலும். |
32:00 | இதை இன்னும் விரிவாக பார்க்க நேரமில்லை. நான் கொடுத்துள்ள உசாத்துணையை படித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள். |
32:10 | இந்த வழிகாட்டியில் நிறைய அம்சங்கள் உள்ளன. beamer கிளாஸ் இல் ஏராளமான கிளாஸ்கள் உள்ளன. அவற்றில் சிலதாவது முயற்சி செய்து பாருங்கள். |
32:20 | சரி. இதை ஹான்ட் அவுட் ஆக மாற்றலாம். |
32:36 | ப்ரசன்டேஷன் பாங்கில் பிரச்சினையே. நாம் handout பாங்குக்கு போகிறோம். |
32:42 | நீங்கள் அசைவரைகலையை காட்டும் presentation பாங்கில் பொதுவாக தொகுத்தல் அதிக நேரம் எடுக்கும். |
32:48 | ஆகவே முடிந்த வரை உங்கள் உருவாக்கத்தை handout பாங்கிலேயே செய்யுங்கள். சில சமயம் சரி பார்க்க வேண்டுமானால் presentation பாங்குக்கு மாறிக்கொள்ளலாம். |
32:59 | கடைசியாக நீங்கள் அதை presentation ஆக அளிக்கும்போது presentation பாங்குக்கு மாறிவிடுங்கள். |
33:06 | மேலும் இதை பிரசுரமாக அச்சடிக்க நினைத்தால் handout பாங்குக்கு மாற்றுங்கள். கடைசிக்கு போகலாம். இந்த ஸ்போகன் டுடோரியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். |
33:15 | நன்றி அறிவித்தலை செய்யலாம். நான் இதை முழுதும் பிரதி எடுத்து.... இங்கே வருகிறேன். |
33:31 | வழக்கம் போல தொகுக்கலாம். சரி. |
33:42 | இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நிதி உதவி National Mission of Education through ICT. இதுதான் அந்த திட்டத்தின் வலைத்தளம். |
33:53 | எங்களுடன் சேர்ந்து இருந்தமைக்கு நன்றி. வணக்கம் கூறி விடை பெறுவது Kannan Moudgalya இது குறித்த உங்கள் கருத்துக்களை kannan@iitb.ac.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நன்றி. |