Java/C2/while-loop/Tamil
From Script | Spoken-Tutorial
Time' | Narration |
00:02 | Java-ல் While Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:06 | இதில் கற்கபோவது while loop அதைப் பயன்படுத்துவது |
00:12 | இங்கு பயன்படுத்துவது
Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:21 | tutorial-ஐ தொடர, Java-ல் relational operators ஐ தெரிந்திருக்க வேண்டும்
|
00:26 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும |
00:36 | இது while loop-ன் structure. |
00:39 | இரு பகுதிகள் உள்ளன. |
00:41 | ஒன்று loop running condition இரண்டாவது loop variable.
|
00:48 | உதாரணத்தைப் பார்க்கலாம். Eclipse-க்கு வருவோம் |
00:55 | இங்கே eclipse IDE மற்றும் மீதி code-க்கு அமைப்பும் உள்ளன
|
01:00 | class WhileDemo-ஐ உருவாக்கி main method-ஐயும் சேர்த்துள்ளேன். |
01:05 | while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சடிப்போம். எழுதுக int n = 1
|
01:15 | இந்த variable n நம் loop variable ஆகும் |
01:21 | எழுதுக while ' parenthesis-னுள் n less than or equal to 10 open மற்றும் close braces |
01:33 | இந்த condition... looping running condition எனப்படும்.
|
01:37 | அதாவது condition உண்மையாக இருக்கும் வரை இந்த loop இயங்கும் |
01:42 | n மதிப்பு 10 க்கு சமமாகவோ சிறியதாகவோ இருக்கும் வரை இது இயங்கும்
|
01:47 | nன் மதிப்பு 10 ஐ விட பெரியதாகும் போது இது நிற்கும் |
01:53 | loop-னுள், n ன் மதிப்பை அச்சடிப்போம் |
01:58 | System.out.println(n); பின் increment n = n + 1; |
02:12 | இதில், முதலில் 1 அச்சடிக்கப்படுகிறது பின் n மதிப்பு இரண்டாகிறது |
02:18 | பின் loop condition சோதிக்கப்படுகிறது.
|
02:21 | இன்னும் இது உண்மை. 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது |
02:25 | அதேபோல 10 அச்சடிக்கப்படும் வரை loop செயலாகிறது. பின் n... 11 ஆகிறது. இப்போது condition உண்மையல்ல. எனவே loop நிற்கும்
|
02:37 | code-ஐ செயலில் பார்ப்போம். |
02:39 | சேமித்து இயக்குவோம். |
02:47 | பார்ப்பதுபோல, எண்கள் 1 முதல் 10 வரை அச்சடிக்கப்படுகிறது.
|
02:52 | இப்போது எண்கள் 50 முதல் 40 வரை அச்சடிக்கலாம் |
02:58 | எனவே 50-ல் ஆரம்பிக்கலாம். n = 1 ஐ n = 50 ஆக்குக |
03:03 | 40 வரை போகலாம்.
|
03:05 | அதாவது n... 40-க்கு சமமாகவோ பெரியதாகவோ இருக்கும் வரை. condition ஐ n greater than or equal to 40 என மாற்றுக.
|
03:16 | பெரிய எண்ணிலிருந்து சிறியதிற்கு loop செய்வதால் loop variable-ஐ குறைக்க வேண்டும்.
|
03:22 | எனவே n=n + 1 ஐ n=n - 1 என மாற்றுக
|
03:27 | சேமித்து இயக்கவும். பார்ப்பது போல எண்கள் 50 லிருந்து 40 வரை அச்சடிடப்பட்டுள்ளன. |
03:42 | இப்போது 7 ன் முதல் 10 மடங்குகளை அச்சிடலாம் |
03:48 | அதற்கு 7 உடன் ஆரம்பிக்கலாம்
|
03:50 | எனவே n = 50 ஐ n = 7 என மாற்றி 70-ல் முடிக்கவும்.
|
03:57 | condition ஐ n less than equal to 70என மாற்றவும்
|
04:03 | இதில், loop 70-ல் முடிகிறதா என உறுதிப்படுத்தவும். |
04:07 | மடங்குகளைப் பெற, loop variable-ஐ 7 ஆக அதிகரிக்கலாம்.
|
04:12 | எனவே n=n - 1 ஐ n=n + 7 என மாற்றுக
|
04:18 | இதில் முதல் 7 அச்சடிக்கப்பட்டு பின் n... 14 ஆகிறது, 14 அச்சடிக்கப்பட்டு அதேபோல 70 வரை செல்கிறது. சேமித்து இயக்கவும் |
04:33 | பார்ப்பது போல, 7 ன் முதல் 10 மடங்குகள் அச்சடிக்கப்படுகின்றன
|
04:43 | ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகையைப் பெற while loop ஐயும் பயன்படுத்தலாம்.
|
04:47 | அதை செய்வதைப் பார்க்கலாம். |
04:49 | main method-ஐ துடைக்கலாம்.
|
04:54 | int n equal to 13876. இதுதான் அந்த எண் |
05:02 | பின் int dSum equal to 0. digit sum என்பதன் குறியீடான variable dsum... இலக்கங்களின் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்ளும்
|
05:18 | எழுதுக while, within brackets n greater than 0 open மற்றும் close curly brackets
|
05:27 | இந்த condition-ஐ பயன்படுத்துவதற்கான காரணம் while-ல் தெளிவாக இருக்கும் |
05:32 | கூட்டுத்தொகையைப் பெற, முதலில் இலக்கங்களைப் பெற வேண்டும் |
05:36 | அதற்கு modulo operator-ஐ பயன்படுத்துகிறோம்.
|
05:40 | எழுதுக dSum = dSum + (n % 10) எனவே unit digit-ஐ பெற்று இதை dsum-க்கு சேர்க்கிறோம் |
05:52 | பின் 10 ஆல் வகுத்தல் மூலம் அந்த இலக்கத்தை நீக்குவோம். n = n / 10 |
06:08 | முதல் முறை loop இயங்கும் போது, dSum 6 ஆகவும் n 1387 ஆகவும் இருக்கவும். |
06:15 | இரண்டாம் முறை loop இயங்கும்போது, dSum 7 மற்றும் 6-ன் கூடுதலான 13 ஆகவும், n 138 ஆகவும் இருக்கும்.
|
06:22 | அதேபோல loop இயங்கி, n-லிருந்து இலக்கங்கள் நீக்கப்பட்டு முடிவாக |
06:28 | n zero ஆகும். பின் condition n greater than 0 பொய்யாகி loop நிற்கும் |
06:36 | print statement-ஐ சேர்க்கலாம் |
06:42 | System.out.println(dSum) |
06:51 | code-ஐயும் செயலையும் பார்க்கலாம். சேமித்து இயக்கவும் |
06:59 | பார்ப்பதுபோல இலக்கங்களின் கூடுதலான 25 அச்சிடப்பட்டுள்ளது |
07:06 | இவ்வாறு, programming-ன் மிக அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான while loop பயன்படுத்தப்படுகிறது |
07:16 | இத்துடன் இந்த tutorial முடிகிறது.
|
07:20 | இதில் while loop மற்றும் அதை பயன்படுத்துவதை கற்றோம்
|
07:26 | பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும்.
|
07:29 | While loop-ஐ பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் reverse-ஐ கண்டுபிடிக்கவும். |
07:37 | இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:45 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
07:50 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:57 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:12 | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும்
[1] |
08:17 | தமிழாக்கம் பிரியா. நன்றி |