Firefox/C2/Firefox-interface-and-toolbars/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 13:55, 29 November 2012 by 10.102.152.163 (Talk)
Time | Narration |
00:00 | Mozilla Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:05 | இந்த பயிற்சியில் Firefox Interface மற்றும் Toolbars பற்றி அறிந்து கொள்வோம். |
00:11 | இந்த பயிற்சிக்காக உபுண்டு 10.04-ல் இயங்கும் Firefox பதிப்பு 7.0 ஐ பயன்படுத்துகிறோம். |
00:19 | Firefox Interface ஐ பற்றி பார்த்து அறிவோம். |
00:23 | நவீன browser க்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களையும் Firefox உள்ளடக்கியுள்ளது. |
00:28 | Mozilla Firefoxசை நன்கு பயன்படுத்த, அதன் ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் அறிய வேண்டும். |
00:34 | Mozilla Firefox Interface ஐ ஆறு தனிப்பட்ட பகுதிகளாக கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். |
00:41 | Menu bar, Navigation toolbar, Bookmarks bar, Side bar, Status bar மற்றும் Content area என்னும் உள்ளடக்கப் பகுதி |
00:53 | இவை ஒவ்வொன்றினையும், செயல்பாடுகளையும் அறியலாம். |
00:57 | File பட்டியில் உள்ள New Window-வை சொடுக்குங்கள். |
01:01 | ஒரு புது window மேல் வரும். |
01:05 | ஒரு சிலருக்கு browser இல் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் இருக்கும். |
01:08 | அதற்காக பக்கத்தை View - Zoom மற்றும் Zoom in ஐ சொடுக்கி zoom செய்து பார்க்கலாம். |
01:14 | மாறாக, Ctrl (+) +சை சொடுக்கவும். |
01:18 | இதனால் எழுத்துக்களின் அளவு பெரியதாகும். |
01:21 | Mozilla Firefox-சின் பதிப்பை அறிய Help மற்றும் About Firefox ஐ சொடுக்கவும். |
01:27 | முன்னிருப்பாக Firefox ஒரு Homepage ஐ காண்பிக்கும். |
01:32 | நம் விருப்பமான இணையபக்கத்தை Homepage ஆக்க, Edit and Preferences என்பதை சொடுக்கவும். |
01:39 | Windows பயனர்கள் Tools and Options என்பதை சொடுக்கவும். |
01:42 | General tab இலுள்ள Homepage புலத்தில் சொடுக்கி ‘www.yahoo.com’ அல்லது விருப்பமான இணையதள முகவரியை டைப் செய்க. |
01:52 | இடக்கை மேல் மூலையில் இருக்கும் இப்போது Close buttonனை சொடுக்கி Firefox Preference window-வை மூடலாம். |
02:00 | Edit menuவை பயன்படுத்தி குறிப்பிட்ட வார்தைகளை அந்த இணைய பக்கத்தில் தேட முடியும். |
02:05 | address bar இல் ‘www.google.com’என்று தட்டச்சவும். |
02:12 | Edit மற்றும் Find ஐ சொடுக்கவும். |
02:14 | உலவி சாளரத்தின் கீழ் ஒரு சிறிய கருவிபட்டை தோன்றும். |
02:19 | அந்த textbox இல் ‘Gujarati’ என்று type செய்யவும். |
02:23 | அந்த இணையபக்கத்தில் ‘Gujarati’ என்ற வார்த்தை highlight ஆகியிருப்பதை கவனிக்கலாம். |
02:28 | மிகப்பெரிய வலைப்பக்கத்தில் வார்த்தைளைத் தேடும் போது இது மிகவும் பயன் படும். |
02:33 | இதை மூடிவிடலாம். |
02:35 | பெயருக்கு ஏற்றார்போல, Navigation toolbar இணையத்தில் உலவ உதவியாக இருக்கும். |
02:41 | Navigation toolbar இருப்பதிலேயே பெரிய textbox ஆகும். இதில்தான் பார்க்க விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்வீர்கள். |
02:48 | அது URL bar அல்லது Address bar என்றறியப்படுகிறது. |
02:52 | URL மீது சொடுக்கி ஏற்கனவே இருக்கும் முகவரியை அழிக்கவும். |
02:57 | இப்போது ‘www.google.com’ என்று தட்டச்சவும். |
03:02 | Enterஐ அழுத்தவும். |
03:03 | இப்போது google homepage இல் இருப்பீர்கள். |
03:06 | பின்நோக்கும் அம்புக்குறி icon ஐ சொடுக்கி முன் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு போகலாம். |
03:12 | முன்நோக்கும் அம்புக்குறியை சொடுக்க மீண்டும் google homepage இல் இருப்பீர்கள். |
03:17 | URL bar இன் வலக்கை பக்கத்தில் வீடு போன்ற அமைப்புடைய ஒரு icon இருக்கும். |
03:22 | இதை சொடுக்க, எந்த இணையபக்கத்தில் இருந்தாலும், உங்களை default homepage க்கு கொண்டு செல்லும். |
03:28 | இந்த செயல்பாடு குறிப்பிட்ட site ஐ பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது search engine ஐ பயன்படுத்தும் போதோ மிக உதவியாகும். |
03:34 | இப்போது நாம் homepage பொத்தான் மீது சொடுக்குவோம். |
03:36 | முன்பே homepage ஐ ‘www.yahoo.com’ என்பதாக மாற்றிவிட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். |
03:42 | இதனால், homepage மீது சொடுக்க, அது yahoo homepage க்கே கொண்டு செல்கிறது. |
03:49 | Bookmarks bar ஐ பார்ப்போம். |
03:51 | அடிக்கடி பார்க்க விழையும் இணையபக்கங்களுக்கு செல்ல Bookmarks உதவும். |
03:57 | URL bar ல் ‘www.gmail.com’ என்று தட்டச்சவும். |
04:03 | பக்கம் முழுதும் தரவேறியதும் URL bar க்கு வலப்புறம் இருக்கும் star பொத்தானை சொடுக்குங்கள். |
04:10 | அந்த star பொத்தான் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதை காணலாம். |
04:13 | மீண்டும் star மீது சொடுக்குங்கள். |
04:14 | dialog box ஒன்று மேல் வரும். |
04:17 | ‘Folder’ drop down menu விலிருந்து ‘Bookmarks toolbar’ரை தேர்ந்தெடுக்கவும். |
04:23 | இப்போது Gmail bookmark, Bookmarks bar ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம். |
04:28 | மூலபக்க படவுரு மீது சொடுக்கி yahoo மூலபக்கத்திற்கு செல்லவும். |
04:33 | Gmail Bookmarks மீது சொடுக்குங்கள். இதனால் நீங்கள் Gmail login பக்கத்திற்கு போகலாம். |
04:39 | Bookmarks bar ஐ பயன்படுத்தி அடிக்கடி பார்க்கும் இணையபக்கங்களை அவற்றை homepage ஆக்காமலே செல்ல சேமிக்கலாம். |
04:46 | அடுத்ததாக Sidebar பற்றி அறியலாம். |
04:49 | View மற்றும் Sidebar மீது சொடுக்கி, பின் Historyயை சொடுக்கவும். |
04:54 | இடக்கைபுறமிருக்கும் bar ல் மூன்று தெரிவுகள் இருப்பதை காணலாம் - today, yesterday மற்றும் older than 6 months. |
05:02 | அதில் காணக்கிடைக்கும் option கள் உங்கள் கணிணியில் Firefox பயன்பாட்டு இடைவெளியை பொருத்து அமையும் |
05:09 | Today icon க்கு அருகிலுள்ள கூட்டல் குறியை சொடுக்கி menu வை விரிவுபடுத்தவும். |
05:15 | Google homepage க்கு செலுத்தக்கூடிய கூகுள் இணைப்பை தேர்ந்தெடுங்கள். |
05:19 | ஏற்கனவே பார்த்த ஒரு இணையபக்கத்திற்கு மீண்டும் செல்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள்! |
05:25 | Sidebar ல் அதற்கேயான தேடல் வசதி அமைந்திருக்கிறது. |
05:29 | இந்த search box ல் பார்க்க விரும்பும் இணையதளத்தின் பெயரை டைப் செய்ய முடியும். |
05:34 | இணைய historyயில் அந்த முகவரியை தேடித்தரும். |
05:37 | இந்த search box ல் ‘google’ என்று தட்டச்சுங்கள். |
05:39 | தேடல் விளைவாக google homepage முதல் இணைப்பாக வரும். |
05:43 | இந்த Sidebar ஐ மறைக்க, Sidebar இன் வலப்புற மேல்பகுதியில் இருக்கும் ‘x’-சை சொடுக்கலாம். |
05:51 | அடுத்து, Status bar ன் செயல்பாடு என்னவென்று பார்க்கலாம். |
05:55 | Status bar என்பது browser window வின் கீழ்பகுதியில் நீங்கள் காண விழையும் site ன் நிலை குறித்த விபரம் அறியலாம். |
06:02 | URL பட்டையில் ‘www.wired.com’ என்று டைப் செய்து Enterஐ அழுத்தவும். |
06:10 | Status bar ஐ துரிதமாக பாருங்கள். இணையபக்கத்தை தரவிறக்குவதன் Status ஐ கண்டறியலாம். |
06:16 | Status bar ஒரு குறிப்பிட்ட இணையபக்கம் ஏன் தரவிறக்கமாகவில்லை, தரவிறங்க அது எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. |
06:25 | கடைசியாக, Content area பற்றி அறிவோம். |
06:28 | இந்த பகுதியில்தான் பார்க்கும் இணையபக்கத்தின் தகவல் உள்ளடக்கங்களைக் காணலாம். |
06:33 | இதுதான் இப் பயிற்சியின் நிறைவு பகுதியாகும். |
06:35 | இப் பயிற்சியில் Firefox interface மற்றும் toolbars பற்றியறிந்தோம். |
06:43 | இப்போது இந்த assignment ஐ மேற்கொள்ளலாம். |
06:46 | உங்கள் home page ஐ ‘www.spoken-tutorial.org’என்று மாற்றி அந்த இணையபக்கத்துக்கு செல்லுங்கள். |
06:54 | உங்கள் browser ரிலுள்ள History செயல்பாட்டை பயன்படுத்தி பின் 'yahoo’ இணையதளத்திற்கு செல்லுங்கள். |
07:00 | பின் வரும் இணைப்பில் உள்ள வீடியோ காட்சிகளில்.. |
07:05 | Spoken Tutorial project பற்றி சுருக்கமாக காணலாம். |
07:07 | சிறந்த bandwidth இல்லாதிருந்தால் அதை தரவிறக்கியும் காணலாம். |
07:12 | Spoken Tutorial Project குழுவினர் இணைந்து Spoken Tutorial-களை பயன்படுத்தி workshop களை நடத்துகின்றனர். |
07:17 | Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர். |
07:21 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org முகவரிக்கு மின் மடல் எழுதவும். |
07:27 | Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும். |
07:31 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது. |
07:39 | இந்த Mission குறித்த மேலதிக தகவல்கள் http://spoken-tutorial.org/NMEICT-Intro என்ற இணையதள பக்கத்தில் உள்ளன. |
07:50 | இந்த பயிற்சி நகல் Srividhya.S-ன் பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது. |
07:56 | எங்களோடு இணைந்திருப்பதற்கு நன்றி. |