C-and-C++/C2/First-C++-Program/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:41, 26 September 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00.02 முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00.07 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00.10 C++ program ஐ எழுதுதல்
00.13 அதை compile செய்தல்
00.14 இயக்குதல்
00.17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00.22 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் G++ Compiler version 4.5.2
00.35 இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,
00.38 Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
00.44 சில editorகள் vim மற்றும் gedit
00.48 நான் gedit ஐ பயன்படுத்துகிறேன்
00.51 இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் http://spoken-tutorial.org
00.56 ஒரு உதாரணத்தின் மூலம் C++ program எழுதுவதைப் பார்ப்போம்
01.01 Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
01.09 text editor ஐ திறக்க prompt ல் type செய்க
01.13 “gedit” space “talk” dot “cpp” space ampersand “&”.
01.21 prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
01.25 அனைத்து C++ fileகளும் dot “cpp” extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும்
01.31 Enter ஐ அழுத்தவும்
01.33 text editor திறந்துள்ளது
01.36 program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
01.38 எழுதுக - double slash “//” space
01.41 “My first C++ program”.
01.44 double slash வரியை comment செய்ய பயன்படுகிறது
01.49 program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
01.52 இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
01.55 இது program ன் தகவலைக் கொடுக்கிறது
01.59 double slash... single line comment எனப்படும். Enterஐ அழுத்தவும்
02.05 எழுதுக hash “#include” space opening angle bracket closing angle bracket .


02.13 முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
02.20 bracket னுள் எழுதுக “iostream” .
02.23 iostream என்பது header file
02.26 இந்த file... C++ ல் standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக
02.35 எழுதுக “using” space “namespace” space “std” மற்றும் semicolon “;” .
02.45 using statement... compiler க்கு std namespace ஐ பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறது
02.52 namespace என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே.
02.56 இது identifierகளின் பெயர்களை localize செய்வதன் மூலம் செய்யப்படுகிறது
03.01 இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope ஐ வரையறுக்கிறது
03.05 ஒரு namespace னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும்
03.11 முழு standard C++ library உம் declare செய்யப்படும் std தான் இங்கே namespace. Enter ஐ அழுத்துக.


03.20 எழுதுக “int” space “main” opening bracket “(” closing bracket “)” .


03.27 main ஒரு சிறப்பு function
03.30 program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
03.35 opening மற்றும் closing bracket... Parenthesis எனப்படும்.
03.39 main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என்கிறது
03.45 இங்கே int main function க்கு arguments இல்லை. இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது
03.52 data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
03.56 main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம்.
04.02 ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும்
04.05 ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
04.09 இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
04.13 main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது
04.19 argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக.
04.29 எழுதுக opening curly bracket “{”
04.32 opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
04.37 பின் closing curly bracket “}”
04.40 closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது.
04.45 இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க
04.49 cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
04.51 Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது
04.55 பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
04.58 இங்கே space விடுவோம்
05.01 எழுதுக “cout” space இரண்டு opening angle bracket '
05.08 இங்கே cout என்பது terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard C++ function
05.14 bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக
05.18 cout functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”.
05.31 “\n” ... புதுவரியைக் குறிக்கிறது
05.35 இதன்படி cout function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது
05.41 ஒவ்வொரு C++ statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும்


05.45 அதனால் வரி முடிவில் அதை இடவும்
05.48 Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது. Enter ஐ அழுத்துக.
05.53 ஒரு space விட்டு எழுதுக “return” space “0” semicolon “;”.
06.00 இந்த statement... integer zero ஐ திருப்புகிறது
06.03 இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும்
06.06 function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்
06.10 return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது
06.15 return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
06.20 file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும்


06.23 அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம்


06.26 இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்


06.30 applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
06.34 இப்போது program ஐ compile செய்வோம்
06.37 terminal க்கு திரும்புவோம்


06.39 எழுதுக “g++” space “talk.cpp” space hyphen “-o” space “output”.
06.49 இங்கே g++ என்பது C++ programகளை compile செய்ய பயன்படும் compiler.
06.55 talk.cpp என்பது file பெயர்
06.59 -o output என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது. enter ஐ அழுத்துக
07.07 program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
07.10 ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட output... கடைசி file என பார்க்கிறோம்


07.19 program ஐ இயக்க dot slash “output” என எழுதி


07.24 Enter செய்க
07.27 “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது
07.31 குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.


07.35 editor க்கு திரும்புவோம்.
07.38 இங்கே { ஐ மறக்கிறோம் எனில்.
07.42 file ஐ சேமிக்கவும்.
07.44 இயக்குவோம். terminal க்கு திரும்பவும்
07.48 முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும்
07.55 talk.cpp file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம்


08.02 input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது.
08.07 text editor க்கு திரும்புவோம்.
08.09 முன்னர் சொன்னது போல closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது


08.14 bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும்


08.19 அதை இயக்குவோம்


08.21 மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம்


08.26 அதைதான் இப்போது செய்தேன். ஆம் வேலைசெய்கிறது
08.32 மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்


08.35 text editor க்கு திரும்புவோம்.
08.38 இங்கே std. ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில்
08.44 terminal க்கு சென்று compile செய்வோம்.
08.48 talk.cpp file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம்


08.59 semicolon க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் cout declare செய்யப்படவில்லை
09.05 cout என்பது standard C++ library function


09.09 முழு C++ library function உம் std namespace ல் வரையறுக்ப்படுகிறது


09.15 ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது.
09.18 இப்போது பிழையை சரிசெய்வோம்


09.19 Text editor க்கு சென்று வரி 3 ல் std என எழுதுக
09.23 அதை சேமிப்போம்
09.25 compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது. slide களுக்குப் திரும்புவோம்.


09.32 இப்போது பயிற்சி,


09.33 உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக


09.37 single line comment பயன்படுத்தினோம்


09.40 எனவே ஒரு multiline commentஐ முயற்சிக்கவும்
09.44 தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
09.49 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09.53 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10.01 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10.14 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


10.20 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10.28 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst