C-and-C++/C2/First-C-Program/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:40, 10 August 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.02 C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00.06 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00.08 எளிய C program ஐ எழுதுதல்
00.11 அதை compile செய்தல்
00.13 இயக்குதல்
00.14 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00.19 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
00.22 Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1
00.31 இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,
00.33 Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
00.39 சில editorகள் vim மற்றும் gedit
00.42 இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன்
00.46 இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [1]
00.51 ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம்
00.56 Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
01.07 இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக
01.12 “gedit” space “talk” dot “c” space “&”
01.20 prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
01.25 அனைத்து C fileகளும் dot “c” extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும்
01.31 Enter ஐ அழுத்தவும்
01.33 text editor திறந்துள்ளது
01.37 program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
01.39 எழுதுக - double slash space
01.42 “My first C program”.
01.48 double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது
01.52 program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
01.56 இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
01.58 இது program ன் தகவலைக் கொடுக்கிறது
02.01 double slash... single line comment எனப்படும்.
02.07 Enterஐ அழுத்தவும்
02.09 எழுதுக hash “include” space opening bracket closing bracket
02.17 முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
02.24 இப்போது bracket னுள் எழுதுக“stdio” "dot” h”
02.30 stdio.h என்பது ஒரு header file
02.34 ஒரு program... standard input/output function களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக
02.43 எழுதுக - “int” space “main” opening bracket,
closing bracket 
02.50 ' main ஒரு சிறப்பு function
02.53 program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
02.58 opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும்.
03.04 main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என குறிக்கிறது
03.11 இங்கே int main function க்கு arguments இல்லை
03.15 இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது
03.19 data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
03.23 main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம்.
03.30 ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும்
03.33 ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
03.37 இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
03.41 main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது
03.47 argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம்
03.52 இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக.
03.58 எழுதுக opening curly bracket “{”
04.00 opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
04.05 பின் closing curly bracket “}”
04.08 closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது.
04.13 இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
04.20 Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது
04.23 பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
04.26 இங்கே மூன்று space விடுவோம்
04.29 எழுதுக “printf” opening bracket closing bracket “()”
04.34 printf ... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function.
04.39 bracketகளினுள், within double quotes,
04.44 printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும்
04.50 எழுதுக “Talk To a Teacher backslash n”
05.00 Backslash n “\n” ... புதுவரியைக் குறிக்கிறது
05.03 இதன்படி printf function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது
05.11 ஒவ்வொரு C statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும்
05.15 அதனால் வரி முடிவில் அதை இடவும்
05.19 Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது.
05.24 Enter ஐ அழுத்தி மூன்று space களை விடவும்
05.28 பின் “return” space “0” மற்றும் ஒரு semicolon “;”
05.34 இந்த statement... integer zero ஐ திருப்புகிறது
05.38 function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்
05.45 return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது
05.51 return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
05.56 file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும்
06.00 அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம்
06.03 இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
06.06 applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
06.11 terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம்.
06.15 எழுதுக “gcc” space “talk.c” space hyphen “-o” space “myoutput”
06.24 gcc என்பது compiler
06.27 talk.c என்பது filename .
06.30 -o myoutput என்பது... myoutput file க்கு executable செல்லவேண்டும் என்கிறது
06.37 Enter ஐ அழுத்துக
06.39 program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
06.42 ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட myoutput... கடைசி file என பார்க்கிறோம்
06.54 program ஐ இயக்க dot slash “myoutput” என எழுதி Enter செய்க
07.01 “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது
07.06 முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement.
07.10 return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம்
07.16 நம் program க்கு திரும்புவோம்.
07.17 return statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n");
07.35 save ஐ சொடுக்கவும்.
07.37 compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம்.
07.41 மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம்
07.46 அதைதான் இப்போது செய்தேன்
07.51 இரண்டாம் statement welcome இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம்
07.58 program க்கு திரும்புவோம்
08.00 return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம்
08.07 Save ஐ சொடுக்குவோம்.
08.09 compile செய்து இயக்குவோம்
08.15 இரண்டாம் printf statement welcome உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம்
08.23 குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம்.


08.29 “stdio.h” ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில்


08.35 compile செய்து இயக்குவோம்.
08.42 talk.c file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம்.
08.48 compiler ஆல் “stdioh” என்ற பெயரில் header file ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது
08.59 compilation உம் முடிக்கப்படுகிறது.
09.03 அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot “.” ஐ இட்டு save ஐ சொடுக்குவோம்


09.11 compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
09.19 மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்
09.23 program க்கு திரும்புவோம்.
09.26 வரியின் முடிவில் semicolon ஐ இட மறக்கிறேன் எனில்
09.31 Save ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம்
09.42 talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் semicolon ஐ எதிர்பார்க்கிறது.
09.51 program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது


09.59 அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும்
10.07 இது வரி 6
10.09 இதுதான் semicolon ஐ இட வேண்டிய கடைசி இடம்
10.13 compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம்
10.18 semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம்
10.24 Save ஐ சொடுக்கவும்.
10.26 Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
10.33 program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்


10.41 வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும்.
10.49 compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது


10.49 slideகளுக்கு திரும்புவோம்.
10.57 இப்போது பயிற்சி
10.59 "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக
11.03 printf statement ல் “\n” சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க.
11.09 இத்துடன் இந்த tutorial முடிகிறது
11.12 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial


11.18 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11.22 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11.32 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
11.38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

11.48 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11.51 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst