PHP-and-MySQL/C2/Common-Errors-Part-1/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே. |
0:07 | PHP programming இல் நிகழக்கூடிய வழக்கமான தவறுகளை சுட்டிக்காட்டப்போகிறேன். |
0:13 | பலதும் பார்த்தவுடனே புரிந்துவிடும். |
0:17 | 50% க்கும் மேலான தவறுகள் நீங்கள் எதையாவது பார்க்காமலோ அல்லது தவறி தப்பாக type செய்வதாலோ நிகழ்வதுதான். அல்லது எதையாவது விட்டிருப்போம். |
0:32 | இப்படி பலரும் செய்வது நிகழ்வதே. ஒரு semicolon ஐ விட்டுவிடுவது, கூடுதல் bracket .. இது போல பல... |
0:41 | இப்போது இங்கே சில பக்கங்களை உருவாக்கி இருக்கிறேன். இவை நீங்கள் அடிக்கடிப் பார்க்கக்கூடிய பிழைகள். |
0:47 | இந்த பட்டியல் முடியவில்லை. இவை வெறுமே அடிப்படையான பிழைகள் மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன. |
0:51 | ஒவ்வொரு பிழையாக காண நான் context editor ஐ தயார் செய்துள்ளேன். |
1:00 | முதலில் இந்த "html" ஐ விவரிக்கிறேன். |
1:06 | இங்கே நம் "echo" command இல் நிறைய html ஐ embed செய்து பயன்படுத்தி உள்ளேன். |
1:10 | இந்த page ஐ இயக்க இந்த error கிடைக்கிறது. |
1:17 | "Parse error" என்கிறது. இந்த message தெரிகிறது. |
1:21 | ஒரு comma அல்லது semicolon ஐ எதிர்பார்க்க வேண்டும் |
1:27 | அது ஒரு line number ஐ தருகிறது. இது எப்போது parse error காட்டினாலும் கூடவே line number ஐயும் காட்டும். |
1:34 | இங்கே காண்பது line 5. |
1:36 | இங்கே line 5 column 19 (Ln5, Col19); எனப்பார்க்கிறோம். |
1:45 | Line 5 இங்குள்ளது. |
1:46 | மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு தவறும் தென்படவில்லை. |
1:50 | php "echo" போன்ற command ஐ interpret செய்வது எப்படி எனில் starting point இங்குள்ள double quotes ... ending point இங்கே. ஆகவே இதுதான் start .. இதுதான் end. |
2:06 | என்ன நடக்கிறது என்றால் html ஐ embed செய்வதால், நடுவில் double quotes ஐ பயன்படுத்துகிறோம். அதனால் echo command இங்கு துவங்கி இங்கு முடிவதாக கொள்ளப்படுகிறது. |
2:21 | சரி, ஏன் இங்கு error கிடைத்தது எனில் இதுவே double quotes முதலில் வரும் இடம். இங்கே வரக்கூடாது. |
2:31 | technical ஆக php இதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இது இருத்தலாகாது. |
2:36 | ஆனால் அது expecting a semicolon என்று சொன்னது என்னவெனில் ஒரு echo வை முடிக்கும் போது நாம் semicolon ஐ பயன்படுத்துகிறோம். ஆகவே அது எதிர்பார்த்தது உள்ளது. |
2:49 | ஆனால் இதற்குப்பிறகும் இது குப்பையாக ஆகிவிட்டது! |
2:52 | ஆகவே நாம் செய்ய வேன்டியது இதற்கு பதில் single quotation mark ஐ ப்பயன்படுத்துவது. |
2:58 | சரி, சேமிக்கப்போனால் error on line 6 என்கிறது. ஏனெனில் பிழை ஆய்வு இப்போது அவ்வளவு தூரம் வந்துள்ளது. |
3:08 | ஆகவே நமக்கு line 6 இலோ அல்லது அதன் அருகிலோ மாறுதல் செய்ய வேண்டும் எனத்தெரியும். மேலே பார்க்கும் போது மற்றவை பல line error ஐ காட்டுவதில்லை என புரியும்.. |
3:19 | சரி, இதோ. நம் html code ஐ இயக்கிய பின் கிடைப்பது. Functionality எதுவுமே இல்லை. ஆனால் அதை பார்த்துவிட்டோம். |
3:28 | அடுத்து நான் செய்யப்போவது semicolon. இது இன்னொரு பொதுவாக நிகழும் பிழை. |
3:33 | இங்கே திரும்பிச்சென்று semicolon மீது சொடுக்கலாம். இங்கே ஒரு parse error உள்ளது - "expecting a semicolon". |
3:39 | ஏன் semicolon இங்கே எதிர்பார்க்கப்படுகிறது? code சரியாக இருப்பதாகத்தான் தெரிகிறது.. இங்கே ஒரு variable "Alex" உடன்.... இங்கு இன்னொரு variable "Alex" உடன். |
3:47 | இந்த variable களை நாம் ஒப்பிடுகிறோம். இங்கு double equals தேவை. |
3:52 | இந்த condition true எனில், இந்த message ஐ echo செய்வோம். |
3:55 | இங்கே போனால் - line no. 9. |
3:58 | தெளிவாக இது simple code. இது இன்னும் complex ஆக இருந்தால், line 9 ஐ கண்டு பிடிப்பது சிரமம். ஆனால் இது உண்மையில் line 9. |
4:07 | line 9 ஒரு தவறும் தெரியவில்லை. |
4:10 | ஆனால் ஏதோ ஒரு வழியில் இந்த line தவறாக இருக்கிறது. அது php பக்கங்களை single line basis இல் interpret செய்வதை சார்ந்தது. |
4:19 | இங்கே நாம் பார்க்கும் code அத்தகையதே |
4:23 | அது உண்மையில் compile ஆகி வேலை செய்யும்; ஆனால் இது கீழே இங்கே இருக்கிறது; இது மேலே இருப்பதேதான்; நாம் இதற்குப்பின்னும் ஒரு semicolon க்காக காத்திருக்கிறோம். |
4:34 | நாம் இதை செய்தால் இது இன்னும் செல்லுபடியாகும் கோட் தான். ஆகவே நான் ஒரு semicolon ஐ அங்கே சேர்க்கிறேன். கண்ணுக்கு அது அங்கே தெரியவேண்டும். |
4:42 | அதை இங்கே கீழே கொண்டுவரலாம். code ஐ திருப்பி இயக்குகிறேன். |
4:53 | இதோ, வெற்றிகரமாக page கிடைத்துவிட்டது. |
4:57 | தெளிவாக அதை மேலே இங்கே வைத்தாலும் அது செல்லுபடியாகும் code ஆகவே இருக்கும்... இதைப்போலவே. |
5:02 | ஆகவே php வேலை செய்யும் விதம் 'இந்த வரியில் ஒரு பிழை இருக்கிறது' என்பதல்ல. |
5:07 | அது சொல்வது இந்த வரியை இயக்க முடியாது. அது முன் வரியில் உள்ள பிழையால் இருக்கலாம். |
5:13 | ஆகவே இந்த வரியில் semicolon இல்லை என்பதால் இந்த வரியை இயக்க முடியாது. ஆகவே error on line 9 என அது திருப்பியது. அதை அங்கே பார்க்கலாம். |
5:29 | ஆகவே இரண்டு அடிப்படை பிழைகளை நாம் பார்த்தோம். |
5:33 | அது போன்ற பிழைகளை சந்தித்தால், பொதுவாக சோதிக்கவும்... வெறும் பிழை கிடைத்த வரியை மட்டுமல்ல. |
5:40 | முன்னும் பின்னும்.... ஓ பின்னும் அல்ல. முன்னே. பிழையை திருத்த முடியுமா என்று பாருங்கள். |
5:47 | தேவையானால் ஒவ்வொரு character யுமே சோதிக்கவும். |
5:50 | இது போன்ற பிழைகள் செய்த பலரிடமிருந்தும் எனக்கு மின்னஞ்சல் வருகிறது. அவர்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான விஷயம். |
5:56 | தாராளமாக கேளுங்கள்; ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலையை ஒரு தரத்துக்கு இரண்டு ... ஏன் மூன்று தரத்துக்குக்கூட சோதியுங்கள். |
6:04 | சரி. அடுத்த பகுதிகளில் மீதி பிழை பக்கங்களை பார்க்கலாம். விரைவில் சந்திப்போம். Spoken Tutorial project க்கு குரல் கொடுப்பது..... (Script அளிப்பு Antara Atrey) |