PHP-and-MySQL/C2/Embedding-PHP/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | HTML code இல் Php code ஐ எப்படி embed செய்வது என்பதை குறித்த சிறு tutorial இது. |
0:14 | உதாரணமாக நான் Php tag களை உருவாக்கி என் பெயரை இங்கே echo out செய்யவேண்டுமானால்... |
0:23 | இதை இயக்கி.... ஒரு file மீது சொடுக்குவோம், வெறும் Alex கிடைக்கிறது. |
0:30 | உதாரணமாக, நான் இங்கு HTML ஐ இதனுள் embed செய்து echo out செய்கையில் Alex என்பதை கொஞ்சம் தடிமனாக்கலாம். |
0:38 | நான் இதையே நேர்மாறாகவும் செய்யலாம்.... |
0:45 | முதலில் ஒரு HTML page ஐ உருவாக்கலாம். இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். |
0:52 | இங்கு ஒரு Php tag அடி துவக்கி... Alex என echo out செய்து ... Php tag களுக்கு வெளியே வந்து bold ஐ துவக்கி... அதை Php tag முடிந்தபின் முடிக்கிறேன். |
01:13 | இப்போதும் அதேதான் நடக்கிறது. பக்கத்தை ரெப்ரெஷ் செய்தாலும் மாற்றமில்லை. |
01:20 | இதை underline என மாற்ற Alex underline செய்யப்பட்டது |
01:26 | ஆகவே நாம் இரு வகையிலும் செய்யலாம். HTML code ஐ echo வின் உள்ளே வைப்பதா இல்லையா என்பது உங்கள் விருப்பம். ஆனால் அவற்றுக்கு இன்னும் அதிக பயன்கள் உள்ளன. |
01:39 | HTML உங்களுக்கு தெரியுமெனில் , input tag ஒரு template tag என உங்களுக்குத்தெரியும். |
01:48 | ஆகவே text என்போம்.. இதன் பெயர் name .. value equal to Alex |
01:56 | refresh செய்ய இங்கே text box இருக்கிறது.. அதனுள் Alex . இப்போது Php ஐ பயன்படுத்தி get variable header ஐ பிடித்து இந்த மதிப்பை நம் input value ஆக்கலாம்.. |
02:14 | உண்மையிலேயே இது ஒவ்வொரு text box இன் மதிப்புக்குள்ளும் posted variables இருக்க வேண்டிய இடங்கள் - form submission மற்றும் error checking போன்றவற்றுக்கு பயனுள்ளது. |
02:30 | get tutorial ஐ நீங்கள் இன்னும் பார்க்கவில்லையானால் அவசியம் அதை பாருங்கள். |
02:38 | இதை சில வரிகள் கீழே கொண்டு வர.... இந்த code வெற்றிகரமாக இன்னும் இயங்குகிறது; ஏனெனில் அது ஒப்பான அடிப்படையிலே வேலை செய்கிறது. |
02:48 | இங்கே காண்பது அங்கே உள்ளதேதான், அதை கொஞ்சம் கீழே தள்ளலாம். பின் என் Php text ஐ இங்கே எழுதுகிறேன். |
02:58 | இது சிரிப்பூட்டும் பழுப்பு நிறத்தில் இருக்கும்! ஏன் எனில் இது Php highlighting; இதை இது புரிந்து கொள்ளாது. |
03:08 | சரி நான் வெறுமே Alex என echo out செய்கிறேன். |
03:12 | இது ஒற்றை வரி அடிப்படையில் வேலை செய்வதால் அனைத்தையும் ஒரு வரியில் அடக்கலாம். இதை இங்கே embed செய்ய embedding முடிந்தது. |
03:25 | refresh செய்ய value of Alex கிடைக்கிறது. இப்போது நாம் Php ஐ HTML value வினுள் echo out செய்கிறோம். |
03:35 | ஆகவே நம் value வினுள்ளே Php code ஐ இங்கே பயன்படுத்துகிறோம். |
03:40 | நான் dollar underscore get ஐ demonstrate செய்கிறேன். single quotes பயன்படுத்த மறக்க வேண்டாம். |
03:50 | name எனச்சொல்லி பின் refresh செய்ய.. |
03:55 | ஒன்றும் நடக்கவில்லை. name=Alex என type செய்ய Alex உள்ளே கிடைக்கிறது. |
04:04 | name=Kyle என type செய்ய Kyle உள்ளே கிடைக்கிறது. |
04:11 | அடிப்படையில் நீங்கள் எந்த Php code ஐயும் அதனுள் embed செய்யலாம். |
04:16 | Php info என்று echo செய்துப்பாருங்கள். சிரிப்பூட்டும் விஷயம் நடக்கும்! |
04:28 | இதுவே Php info document இன் HTML code |
04:33 | ஆகவே அங்கே ஏராளமான கோட் தெரிகிறது. |
04:37 | இங்கே நாம் உள்ளே Php உடன் வேலை செய்கிறோம். உண்மையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது single மற்றும் double quotes மட்டுமே! |
04:46 | இதுவே embedding Php code inside HTML code குறித்த basic tutorial |
04:53 | இது பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நன்றி. |