STEMI-2017/C2/Introduction-to-Maestros-Device/Tamil
Time | Narration |
00:01 | வணக்கம். Maestros STEMI Kit குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
Maestros STEMI Kitன் componentகள், மற்றும் அதன் நோக்கங்கள். |
00:16 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு-
1. Maestros STEMI Kit தேவை. |
00:22 | இந்த kitன் Hospital Model, பின்வருவனவற்றை கொண்டிருக்கும்
ஒரு உலோக உறையினுள் ஒரு Android Tab ஒரே கருவியினுள், Maestros Deviceஉடன், NIBP, ECG மற்றும் SPO2 monitor Wi-Fi Printer தள்ளுவண்டி மற்றும் Power Strip |
00:46 | இந்த kitன் Ambulance Model, பின்வருவனவற்றை கொண்டிருக்கும்
ஒரு உலோக உறையினுள் ஒரு Android Tab, ஒரே கருவியினுள் NIBP உடன்ECG மற்றும் SPO2 monitor , மற்றும் ஒரு Power Strip |
01:05 | Ambulance Modelக்கு Wi-Fi Printer கிடையாது, மேலும் அது தள்ளுவண்டியின் மேல் ஏற்றப்பட்டிருக்காது. |
01:13 | Ambulance Modelலில், Tabன் உலோக உறை, ஒரு clampஉடன் ஏற்றப்படுகிறது. |
01:20 | HP Tablet தான் data entry கருவி. அதனுள் உள்ளவை-
Tabன் மேல் ஒரு power button கீழே, 2 micro USB portகள் மற்றும் ஒரு HDMI port |
01:36 | 2 USB portகளில், வலது கடைசியில் இருக்கும் port, Tabஐ charge செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
01:44 | Android Tabஐ பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றில் charge செய்யலாம்
standard Micro USB charger அல்லது Maestros Deviceல் இருந்து தொங்கும் USB cable. |
01:58 | இந்த cableஐ பயன்படுத்துவதினால், தன்னை charge செய்து கொள்ள, Tab, Maestros Deviceல் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும். |
02:06 | Tabஐ power pointல் plug செய்து charge செய்வதை தவிர்க்கவே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. |
02:15 | மாறாக, Tab, charge செய்யப்படும் போது, கருவியை எடுத்துக் கொண்டு செல்லலாம். |
02:21 | Tab, ஒரு உலோக உறையினால், Maestros Deviceஉடன் இணைக்கப்படுகிறது. |
02:27 | Tabஉம், Maestros Deviceஉம் தனித்தனி கருவிகள் ஆகும். |
02:32 | ஆனால், அவற்றை உலோக உறை சுற்றியுள்ளதால், அவை ஒரு unitஆக இயங்குகின்றன. |
02:39 | Maestros Device 5 Portகளை பெற்றுள்ளது
Charge செய்யும் port,ECG port, BP port, SPO2 port மற்றும், Temp |
02:51 | இது இடது பக்கத்தில் charge செய்யும் portஉடன் ஒரு power பட்டனையும் |
02:57 | வலது பக்கத்தில், ECG, BP மற்றும் SPO2ஐயும் பெற்றிருக்கும் |
03:04 | இடது பக்கத்தில், இரண்டு பச்சை கலந்த மஞ்சள் நிறம் காட்டும் LEDகளையும், Maestros Device பெற்றிருக்கும்.
Maestros Device இயக்கப்பட்டவுடன் ஒரு LED எரியும், மற்றும், கருவி charging modeல் இருக்கும் போது மற்றொன்று எரியும் |
03:23 | இப்போது, Non Invasive Blood Pressure unit, அதாவது, NBIP unitஐ காண்போம். |
03:32 | B.P cuff இரண்டு பகுதிகளைப் பெற்றுள்ளது, B.P cuff cable மற்றும் extension cable. |
03:39 | முதலில், B.P cuff cable ஐ, extension cableஉடன் இணைக்கவும். |
03:46 | பின், extension cableன் மற்றொரு முனையை, B.P portஉடன் இணைக்கவும். |
03:52 | முன்பு கூறியது போல், இது Maestros Deviceன் கீழ் இடது மூலையில் உள்ளது. |
04:00 | இப்போது, B.P எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். |
04:05 | அடுத்து, நாம் SPO2 unitஐ காண்போம்.
SPO2 cable இரண்டு பகுதிகளைப் பெற்றுள்ளது- extension cable, மற்றும் SPO2 probe |
04:18 | காட்டப்பட்டுள்ளபடி, extension cableஐ, SPO2 probeஉடன் இணைக்கவும். |
04:24 | இணைக்கப்படுகின்ற cableகளை பாதுகாக்க, ஒளி புகக்கூடிய மூடியினால் அதை மூடவும். |
04:31 | extension cableன் மற்றொரு முனை, Maestros Deviceஉடன் இணைக்கப்பட வேண்டும். |
04:38 | Maestros Deviceன் மேல் இடது பக்கத்தில் இருக்கும் portஉடன் அதை இணைக்கவும். |
04:45 | இப்போது, SPO2ஐ அளவிட நாம் தயாராக உள்ளோம். |
04:50 | அடுத்து, நாம் ECG unitஐ காண்போம். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Maestros Deviceன் மேல் இடது பக்கத்தில் இருக்கும் ECG portஐ, ECG cable உடன் இணைக்கவும். |
05:04 | Connector headன் இரு பக்கங்களிலும் உள்ள screwக்களை இறுக்கி இணைப்பை பாதுகாக்கவும். |
05:11 | இப்போது, ஒரு ECGஐ எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். |
05:15 | சுருங்கசொல்ல. |
05:16 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Maestros STEMI Kitஉடன் வரும் பல்வேறு unitகள்
மற்றும் அவற்றை Maestros Deviceஉடன் எப்படி இணைப்பது. |
05:29 | STEMI INDIA
'லாப நோக்கில்லா' ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், அதற்கான சிகிச்சையை, அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும் மேலும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
05:44 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
06:00 | இந்த டுடோரியல்
STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, IIT Bombay ஆல் பங்களிக்கப்பட்டது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |