STEMI-2017/C2/Introduction-to-Kallows-Device/Tamil
Time | NARRATION |
00:01 | வணக்கம். Kallows STEMI Kit குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
ECG leadகள், B.P. cuff மற்றும் SpO2ஐ பொருத்துவது, ECGஐ எடுப்பது, SpO2 மற்றும் Blood Pressure ஐ சரி பார்ப்பது |
00:22 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு Kallow's STEMI Kit தேவை. |
00:28 | STEMI Kit பின்வருவனவற்றை கொண்டிருக்கும்
ஒரு உலோக உறையினுள் ஒரு Android Tab, Mobmon Device 12.0, Bluetooth B.P monitor |
00:39 | ECG electrodes, SPO2 probe, Wi-Fi Printer மற்றும், Power strip |
00:48 | இது தான் Mobmon Device. |
00:52 | அது இடது பக்கத்தில் charging portஉடன், ஒரு power பட்டனையும் கொண்டிருக்கும். |
00:58 | மேலும், பின் புறத்தில், SpO2 மற்றும் ECG portகளை கொண்டிருக்கும். |
01:03 | Mobmon Deviceன் மேல் இருக்கும், ECG port ன் உள், cable head நுழைக்கப்பட வேண்டும். |
01:10 | இணைத்த பிறகு, இரு பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ள screwக்களை வைத்து இணைப்பை பாதுகாக்கவும். |
01:17 | அடுத்து, SPO2 probe பற்றி கற்போம். |
01:21 | இந்த probe பின்வரும் பாகங்களால் ஆனது.
1. Oximetry probe/cable மற்றும் 2. Sensor |
01:29 | இப்போது SPO2 probeஐ பொருத்தக் கற்போம். |
01:34 | Mobmon Deviceன் மேல் இருக்கும், SPO2 connectorஐ, Oximetry probe/cableக்கு இணைக்கவும். |
01:41 | இணைத்த பிறகு, இவ்வாறு அது தெரிய வேண்டும். |
01:45 | படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, நோயாளியின் விரல், sensorன் இறுதி வரை நுழைக்கப்பட வேண்டும். |
01:54 | Sensor siteஐ தேர்ந்தெடுக்கும் போது, பின்வருவனவற்றில் இருந்து விடுபட்ட ஒரு உச்ச நிலைக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
1. ஒரு arterial catheter, 2. blood pressure cuff 3. அல்லது intravascular infusion line. |
02:09 | Oximetry probe இணைப்புகளுக்கான வழக்கமான இடங்களாவன-
பெரியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு: கை விரல், கால் விரல் மற்றும் காது மடல். |
02:23 | * சிசுக்களுக்கு: பாதம் அல்லது உள்ளங்கை மற்றும் கால் பெருவிரல் அல்லது கட்டை விரல். |
02:31 | கவனிக்கவும்:* அதிகபட்ச காலமாக 4 மணி நேரத்திற்கு, reusable sensorகளை, அதே இடத்தில் பயன்படுத்தலாம். தோலின் நிலையை உறுதிப்படுத்த, அந்த இடம், அடிக்கடி சோதிக்கப்படுகிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
02:47 | ஈரமான அல்லது சேதமடைந்த sensorகளை பயன்படுத்த கூடாது . Electro surgery யின் போதோ அல்லது வேறு மின் கருவியை பொருத்தும் போதோ, அவை தீக்காயங்களை உண்டாக்கலாம். |
03:00 | SpO2 sensorஐ தவறாக பயன்படுத்தும் போதோ அல்லது பொருத்தும் போதோ, திசுவில் சேதம்/ தீக்காயம் உண்டாகலாம். |
03:08 | Sensorஐ பயன்படுத்தும் போதோ, இணக்கும் போதோ அல்லது துண்டிக்கும் போதோ, அதை தேவையில்லாமல் திருப்புவதோ அல்லது அதிகப்படியாக அழுத்தவோ கூடாது. |
03:20 | * Surgical lamp, bilirubin lamp, அல்லது சூரியன் போன்ற ஒளி மூலங்களில் இருந்து வரும் அதிகப்படியான வெளிச்சம், மற்றும் மிக இறுக்கமான sensor, ஆகியவற்றினால் pulse signalஐ இழக்கக் கூடும். |
03:37 | அடுத்து, Blood Pressure cuffஐ பொருத்தக் கற்போம். |
03:42 | Bluetooth deviceன் NIBP Connectorஐ, cuff connectorஉடன் இணக்கவும். |
03:49 | 1. நோயாளியின் மூட்டை அளவிட்டு, அதற்கான cuff sizeஐ தேர்ந்தெடுக்கவும். பொதுவான விதி, cuffன் அகலமானது, நோயாளியின் முழங்கை மற்றும் தோள்பட்டைக்கு இடையே உள்ள தூரத்தில், சுமார் மூன்றில் இரண்டு இருக்க வேண்டும். |
04:04 | 2. படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, நோயாளியின் இடது கையின் முழங்கை தமனியின் மேல் NIBP cuffஐ சுற்றவும். |
04:14 | 3. முறையான மேலாண்மைக்கு, NIBP cuff நோயாளியின் முட்டியின் மேல் இறுக்கமாக சுற்றப்பட வேண்டும். |
04:21 | Bluetooth BP Monitorஐ செயல்படுத்த, Start பட்டனை அழுத்தவும். |
04:26 | கவனிக்கவும்:
பின்வருவன போன்ற தவறான செயல்முறை அல்லது பயன்பாடு, தவறான அளவீடுகளுக்கு காரணமாகலாம்- நோயாளியின் மேல், cuffஐ தளர்வாக வைப்பது தவறான cuff sizeஐ பயன்படுத்துவது Cuffஐ இதயத்தின் அதே நிலையில் வைக்காமல் இருப்பது கசியும் cuff அல்லது குழாய் நோயாளியின் அதிகப்படியான அசைவு |
04:52 | SpO2 sensor மற்றும் B.P cuffஐ நோயாளியின் ஒரே மூட்டிற்கு இணைக்கக் கூடாது.
இது தேவையில்லாத எச்சரிக்கை மணிகளை தவிர்க்கும் |
05:03 | NIBPஐ அளவிடும் போது, cuffன் குழாய் அடைப்படாமல் அல்லது சிக்கல் இல்லாமல் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
05:12 | இறுதியாக, ECG leadகளை பொருத்தக் கற்போம். |
05:18 | நன்கு தோலை தயார் செய்து முறையாக electrodeஐ வைப்பதன் மூலம், தரமான ECG rhythmஐ பெற முடியும். |
05:27 | நோயாளியை நன்கு தயார் செய்வதற்கு, பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
1. Electrodeன் இடத்தை துடைத்து, மார்பின் மேற்பரப்பு முடியை நீக்கவும். |
05:37 | 2. வெளிப்புற epidermal layerஐ நீக்க, spiritஐ வைத்து மென்மையாக துடைக்க, தோல் சிறிது சிவக்கும்.
3. Electrodeன் இடத்தை காய விடவும். |
05:50 | 4. Electrodeன் மேற்பரப்பில் காய்ந்த gel இருந்தால், அதை நீக்கவும்.
5. தட்டையான, தசை இல்லாத மற்றும் முடி இல்லாத பகுதிகளில், electrodeகளை வைக்கவும். |
06:01 | 6. நல்ல தரமான( அதாவது, நன்கு கடத்தும்) புதிய gelஐ பயன்படுத்தவும்.
7. நன்கு கடத்த, Electrodeன் மேற்பரப்பின் மீது, போதுமான அளவு gelஐ தடவவும். |
06:15 | கவனிக்கவும்:
1. Electrodeகள், leadகள் மற்றும் cableகளின் கடத்தும் பகுதிகள் எதுவும் வேறு எந்த கடத்தும் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளாதவாறு உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
06:27 | 2. சேதமடைந்த electrode leadகளை பயன்படுத்த கூடாது. |
06:31 | 3. Electrodeகள் தளர்வாக பொருத்தப்படாமல் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். இது சிக்கல்களை உண்டாக்கி, மேலும், இதய rhythmன் எச்சரிக்கை மணிகளை ஒலித்து, முடிவற்ற சிரமத்தை தரும். |
06:43 | இப்படித் தான் electrodeகளை வைக்க வேண்டும்.
RA : Right intraclavicular area, LA : Left intraclavicular area |
06:56 | V1 : Sternumன் வலது எல்லையில் இருக்கும் நான்காவது intercostal space
V2 : Sternumன் இடது எல்லையில் இருக்கும் நான்காவது intercostal space |
07:10 | V3 : V2 மற்றும் V4க்கு இடையே உள்ள ஐந்தாவது விலா எலும்பு
V4 : இடது midclavicular வரியின் மேலுள்ள ஐந்தாவது intercostal space |
07:22 | V5 : ஐந்தாவது intercostal left anterior axillary line
V6 : ஐந்தாவது intercostal left midaxillary line |
07:36 | RL : Inguinal ligamentக்கு சிறிது மேலுள்ள வலது கீழ் abdominal quadrant
LL : Inguinal ligamentக்கு சிறிது மேலுள்ள இடது கீழ் abdominal quadrant |
07:53 | Power cord டும், patient cable உம், ஒன்றுக்கு ஒன்று குறுக்கே செல்லாமல் உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
07:59 | பக்கத்தில் உள்ள on/off பட்டனை தேர்ந்தெடுத்து, Mobmon deviceஐ இயக்கவும். |
08:05 | ECGஐ காண, ECG live steam பக்கத்தில், STEMI deviceன் மேல் இருக்கும் ECG tabஐ க்ளிக் செய்யவும். |
08:15 | சுருங்கசொல்ல. |
08:16 | இந்த டுடோரியலில் நாம் கற்றது:
ECG leadகள், BP cuff மற்றும் SpO2 probeஐ பொருத்துவது ECGஐ எடுப்பது SpO2 மற்றும் blood pressure ஐ சரி பார்ப்பது |
08:31 | STEMI INDIA
'லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், அதற்கான சிகிச்சையை, அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும் மேலும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
08:45 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, spoken-tutorial.org |
09:00 | இந்த டுடோரியல்
STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, IIT Bombay ஆல் பங்களிக்கப்பட்டது இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி |