Health-and-Nutrition/C2/Breast-conditions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:45, 3 August 2018 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search







Time
Narration
00:00 தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பக தன்மைகள் குறித்த இந்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கனமான வீங்கிய மார்பகங்கள் மற்றும் வீங்கிய, வலி கொண்ட மார்பகங்கள் பற்றி கற்கப்போகிறோம்.
00:13 முதலில் கனமான வீங்கிய மார்பகங்கள் பற்றி பார்ப்போம்.
00:17 பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு, 3 முதல் 5 நாட்களுக்குள், மார்பக வீக்கம் ஏற்படுகிறது.
00:23 அது, இரண்டு மார்பகங்களிலும், ஒரே நேரத்தில் ஏற்படுகிறது.
00:28 தாய், கனமான மார்பக வீக்கத்தை, பால் நிறைந்த மார்பகம் என நினைத்து, குழப்பிக்கொள்ளக் கூடாது.
00:33 இப்போது, மார்பக வீக்கம், மற்றும், பால் நிறைந்த மார்பகங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விவாதிப்போம்.
00:40 மார்பக வீக்கத்தில், மார்பகம், விறைத்து, வீங்கி, முழுமையாக பால் நிறைந்து, வலி கொடுக்கிறது.
00:46 இது பளபளப்பான தோற்றத்தையும், மேற்பரப்பில் பெருமளவில் புடைத்த நரம்புகளையும் காட்டுகிறது.
00:52 இதனால், 24 மணிநேரத்திற்கு மேலாக நீடிக்கும் காய்ச்சலால், தாய் பாதிக்கப்படலாம், மற்றும், குழந்தை பால் குடிப்பது கடினமாகிறது.
01:01 ஆனால், பால் நிறைந்த மார்பகங்கள் சாதாரணமாக இருக்கின்றன.
01:04 பால் நிறைந்த மார்பகங்கள், பெரிதாக தெரிந்தாலும், பளபளப்பான தோற்றத்தை கொடுப்பதில்லை.
01:10 பால் நிறைந்த மார்பகங்கள், வலி கொடுப்பதில்லை, மற்றும், அப்போது, காய்ச்சலும் இருப்பதில்லை.
01:17 இப்போது தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற, மார்பக வீக்கத்திற்கான காரணங்களை பற்றி விவாதிப்போம்.
01:23 மார்பக வீக்கம், பின்வரும் நிலைமைகளில் ஏற்படலாம் -
01:27 குழந்தை பிறந்தவுடன், தாய், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில்
01:32 குழந்தைக்கு, தாய், நேரத்திற்கு, தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில்,
01:36 தாய்ப்பால் கொடுக்கும் போது, தாயின் மார்பகத்தை குழந்தை, சரிவர பற்றிக்கொள்ளவில்லை எனில், மற்றும்,
01:42 தாய்ப்பால் கொடுப்பதை, தாய், திடீரென நிறுத்திவிடுகையில்.
01:47 இப்போது, மார்பக வீக்கத்திற்கு, எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்பதை பற்றி விவாதிப்போம்.
01:51 முதலில்- தாயை, சுத்தமான நீரில், கையை கழுவச் சொல்ல வேண்டும்.
01:56 பின், தாய், குழந்தையை, பார்க்க, சுவாசிக்க, மற்றும் தொடுவதற்கு ஏற்ப, குழந்தையை, தாய்க்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும்.
02:03 குழந்தை ஒத்துழைக்கவில்லை எனில், தாய், குழந்தையின் துணியை முகர்ந்து கொள்ளலாம்.
02:08 அதன் பிறகு, தாய், ஒரு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும்.
02:12 பின், 5 முதல்10 நிமிடங்களுக்கு, மார்பகங்களில், ஈரமான, சூடான துணியை வைக்கவும், அல்லது,
02:18 தாய், வெதுவெதுப்பான நீரில், ஒரு குளியல் எடுத்துக் கொள்ளலாம்.
02:21 அது, மார்பகங்களில் இருந்து, பால் வெளிவர உதவி புரியும்.
02:24 அதன் பின், தாய், ஓய்வெடுத்துக் கொள்ள, சுகாதார ஊழியர் கூற வேண்டும்- ஏனெனில், அதிக மன அழுத்தம், பால் வெளியேறுதலை பாதிக்கும், மற்றும்,
02:33 பால், வெளியில் வராது.
02:36 இப்போது, ​​ சுகாதார ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும், தாயின் கழுத்து, மற்றும், முதுகின் மேற்பகுதியில், மென்மையாக உருவி விட வேண்டும்.
02:43 அது, மார்பகங்களில் இருந்து, பால் வெளிவர உதவி புரியும்.
02:46 ஏனெனில், மார்பகம், மற்றும், முதுகின் மேற்பகுதிக்கு செல்வதற்கான, நரம்பு ஒன்றேயாகும்.
02:52 பின், தாய், தன் மார்பகங்களை, வட்ட வடிவத்தில், மெதுவாக தடவி கொடுக்க வேண்டும்.
02:57 தடவி கொடுப்பது, தாய்க்கு இதமாக இருப்பதுடன், பால் வெளியேற்றுதலை மேம்படுத்திக் கொடுக்கும்.
03:03 இவை அனைத்தும் ஆக்ஸிடோசின்னின் வெளியீட்டிற்கு உதவி புரியும்.
03:07 இது, ஆக்ஸிடோசின் ரிபிளக்ஸ், அல்லது, லெட்-டௌன் ரிபிளக்ஸ் (reflex) எனப்படுகிறது.
03:12 ஆக்ஸிடோசின் என்பது, மார்பகத்தில் இருந்து, பால் வெளிவர உதவி புரியும், ஒரு ஹார்மோன் ஆகும்.
03:17 பின், தாய், ஏரோலாவை மென்மையாக்க, மார்பகத்தை தன் கை மூலம் அழுத்தி சிறிதளவு பாலை, வெளியேற்ற வேண்டும்.
03:23 இது, குழந்தை, மார்பகத்தை சரியாக பற்றிக்கொள்ள உதவி புரியும்.
03:27 தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய், ஏரோலாவை சுற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
03:33 பிறகு- தாய், ஏரோலாவை, குழந்தையின் வாய்க்கு, எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், குழந்தைக்கு மார்பகத்தை தானே பற்றிக்கொள்ள கடினமாக இருக்கும்.
03:43 இரண்டு மார்பகங்களில் இருந்தும், தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும்.
03:46 ஒவ்வொரு பாலூட்டல் இடைவெளியிலும், தாய், ஈரமான குளிர்ந்த துணியை 5ல் இருந்து 10 நிமிடங்களுக்கு மார்பகத்தின் மீது வைக்க வேண்டும், அல்லது,
03:54 மார்பகங்களில், குளிர்ந்த முட்டைக்கோஸ் இலைகளை வைத்துக் கொள்ளலாம்.
03:58 இந்த முட்டைக்கோஸ் இலைகளை, குளிர்சாதன பெட்டி, அல்லது மண் பானையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
04:04 இது, நீர்கோர்த்த மென்மையான மார்பக வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
04:09 பின், தாய், அடிக்கடி, தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
04:13 இப்போது, மார்பக வீக்கத்தை, எப்படி தவிர்ப்பது என்று கற்போம்.
04:17 முதலில், குழந்தையின் பசி அறிகுறிகளை தாய் புரிந்துகொள்ள முயற்சிக்கவும், அதாவது- நெளிதல்
04:25 அதிகரிக்கின்ற ரூடிங் ரிபிளக்ஸ் அதாவது
04:28 குழந்தை தன் கன்னத்தை அல்லது வாயைத் தொட்ட எதையுமே நோக்கித் தன் தலையை திருப்பிக் கொள்ளுதல்
04:36 தன் விரல்களை சப்புதல்.
04:39 கடைசியில், குழந்தை அழத் தொடங்குகிறது.
04:43 குழந்தை, எப்போதெல்லாம், ஆரம்ப பசியின் அறிகுறிகளை காட்ட தொடங்குகிறதோ, அப்போதெல்லாம், குழந்தை அழும் வரை காத்திராமல், பாலூட்டவும்.
04:50 குழந்தை, சரியாக மார்பகத்தை பற்றிக்கொண்டுள்ளதா, மற்றும் பசியாரிக் கொண்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
04:55 ஒரு மார்பகத்தில் முழுவதுமாக பால் கொடுத்துவிட்டு, பின், அடுத்த மார்பகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவு கொள்க.
05:02 அடுத்து, மாஸ்டிடிஸ் எனப்படும், மற்றொரு மார்பக நிலைமையை பற்றி கற்போம்.
05:08 இந்நிலைமையில், மார்பகத்தின் ஒரு பகுதி, சிவந்து, வீங்கி, கனமாகிவிடும்.
05:14 தாய், கடுமையான வலி, காய்ச்சல் மற்றும் நோய்வாய்ப்படுகிறார்.
05:18 பல தாய்மார்கள் முதல் 6 வாரங்களில், மாஸ்டிடிஸ்ஐ அனுபவிக்கின்றனர்.
05:22 ஆனால் பாலூட்டலின் போது, இது எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
05:27 இதை சில நேரங்களில் மார்பக வீக்கம் என குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
05:31 எனினும், வீக்கம், ஒரு மார்பகம் முழுவதையும், அல்லது இரண்டு மார்பகங்களையும் பாதிக்கிறது.
05:37 ஆனால், மாஸ்டிடிஸ், மார்பகத்தின் ஒரு பகுதி, மற்றும், பொதுவாக, ஒரு மார்பகத்தை மட்டுமே பாதிக்கிறது.
05:44 மாஸ்டிடிஸ், வீக்கம் அடைந்த ஒரு மார்பகத்தில் உருவாகி பின்னர் பால் நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்.
05:51 இப்போது, பால் நாள அடைப்புக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், அவை எவ்வாறு, மாஸ்டிடிஸ்ஆக, உருவாகின்றன, என்பதை பற்றி விவாதிப்போம்.
05:59 ஒரு மார்பகத்தின் பகுதியிலிருந்து, பால் வெளியேற்றப்படாமல் இருப்பதே, பிளாக்ட் டக்ட் என்கின்ற நிலைமை ஆகும்.
06:04 வழக்கமாக இந்த பால் நாளம், கெட்டியான பாலால் தடுக்கப்பட்ட, மார்பகத்தின் பகுதியாகும்.
06:11 இது, கட்டி உருவாகுவதற்கு வழிவகுக்கிறது. இந்த கட்டி மென்மையாகவும், அதன் மேலிருக்கும் தோல், சிவப்பாகவும் இருக்கும்.
06:20 பால் நாள அடைப்பு, மற்றும், மார்பக வீக்கம், பால் வெளியேறுதலை நிறுத்துகிறது, அல்லது குறைக்கிறது.
06:24 பால் நாள அடைப்பு, மற்றும் மார்பக வீக்கத்தில், மார்பகத்தின் ஒரு பகுதியில், பால் தங்கி இருந்தால், அது ஸ்டேஸிஸ் எனப்படுகிறது.
06:32 இந்த ஸ்டேஸிஸ் அகற்றப்படாவிட்டால், அது, மார்பகத் திசுக்களில், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அது நாண்- இபெக்ட்டிவ் மாஸ்டிடிஸ் எனப்படுகிறது.
06:42 சில நேரங்களில், மார்பகத்திற்கு, பாக்டீரியாவால் தொற்று ஏற்படுகிறது. அது இபெக்ட்டிவ் மாஸ்டிடிஸ் எனப்படுகிறது.
06:51 பின்வரும் நிலைமைகளில், வெடிப்பு மூலம், பாக்டீரியா எளிதில் உள்ளே நுழையும்:
06:56 அதாவது மார்பகத்தில் வெடிப்பு, சிகிச்சை அளிக்கப்படாத மாஸ்டிடிஸ், மற்றும், தாமதமான சிகிச்சை.
07:06 கவனிக்கவும்: சிகிச்சை அளிக்கப்படாத மாஸ்டிடிஸ், மார்பகக் கட்டிக்கு வழி வகுக்கிறது.
07:11 இப்போது, மாஸ்டிடிஸ்க்கான காரணங்களை பற்றி விவாதிப்போம்.
07:15 மாஸ்டிடிஸ்க்கான முதல் மற்றும் முன்னணி காரணம், போதிய அளவு பாலூட்டுதல் இல்லாததே ஆகும்.
07:21 வேலைக்கு செல்லுகின்ற ஒரு பெண்ணாக இருந்தால், அடிக்கடி தாய்ப்பாலூட்டுவது சவாலாகிவிடுகிறது.
07:27 போதிய அளவு பாலூட்டுதல் இல்லாததற்கு காரணம், தாய், அல்லது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமலும் இருக்கலாம்.
07:33 இரண்டாவது, மார்பக காம்பில் பாலூட்டினால், மார்பகத்தில் இருந்து முழுவதுமாக குழந்தையால் பால் குடிக்க முடியாது
07:40 மூன்றாவது, பால் அதிகமாக சுரத்தல்.
07:43 நான்காவது, குழந்தைக்கு சீக்கிரமாக தாய்ப்பாலை நிறுத்துதல்- இங்கு, குழந்தை, தாய்ப்பாலைத் தவிர, மற்ற உணவுகளையும் சாப்பிடுகிறது.
07:59 ஐந்தாவது, இறுக்கமான ஆடைகள்- தாய் இறுக்கமான ஆடைகளை பயன்படுத்தினால், குறிப்பாக இரவுகளில் தாய் இறுக்கமான ப்ரா அணிந்தால், அது மார்பகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது, பால் நாளங்களை தடுக்கக் கூடும்.
08:03 ஆறாவது மன அழுத்தம் - தாய், ஏதேனும், மன அழுத்த நிலைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால், அது, பால் வெளியேற்றுதலை பாதிக்கும்.
08:12 ஏழாவது, மார்பககாம்பு வெடிப்பு- மார்பக திசுவுக்குள், பாக்டீரியா நுழைய, இது வழிவகுக்கிறது, மற்றும், மாஸ்டிடிஸ்க்கும், இது வழிவகுக்கலாம்.
08:22 மாஸ்டிடிஸ்க்கான சிகிச்சை முறையை பார்ப்போம்.
08:26 முதலில், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து பின், சிகிச்சையை தொடங்கவும்.
08:31 பாலூட்டும் முன், தாய், வெதுவெதுப்பான, ஈரத்துணியால் மார்பகத்தை அழுத்த வேண்டும்.
08:35 அல்லது, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
08:37 பாதிக்கப்பட்ட மார்பகத்திலிருந்து, முதலில், தாய்ப்பாலூட்ட தொடங்க வேண்டும்.
08:42 அது வலியை அதிகரித்தாலோ, அல்லது, பால் வெளியேற்றுதலை பாதித்தாலோ, பாதிக்கப்படாத மார்பகத்துடன் தொடங்கவும்.
08:50 அடிக்கடி, தாய்ப்பாலூட்டுதல் அவசியம் என்பதை நினைவில் கொள்க.
08:55 மார்பகக்காம்பு அல்லது ஏரோலாவின் மீது காயம் இல்லையெனில், தாய், பாதிக்கப்பட்ட பக்கத்திலிருந்து, தாய்ப்பாலூட்டலாம்.
09:04 மாஸ்டிடிஸ் மார்பகத்திலிருந்து ஒரு தாய், குழந்தைக்கு பாலூட்டும் போதெல்லாம்,
09:09 குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதால் , தொற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என குழந்தையிடம் தாய் கண்காணிக்க வேண்டும், என்பதை நினைவில் கொள்க.
09:17 ஏனெனில், பாதிக்கப்பட்ட பக்கத்திலிருந்து வருகின்ற தாய்ப்பால், பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும்.
09:24 மார்பகத்தை மென்மையாக அழுத்தி விடுவது, பால் வருவதை அதிகரிக்கும்,
09:28 இது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மார்பகக்காம்பை நோக்கிய, ஒரு மென்மையான அழுத்தமாக இருக்க வேண்டும்.
09:34 மற்றும் தாய், போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
09:37 அறிகுறிகள் கடுமையாக இருந்தால், அவர் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
09:40 மார்பகக் கட்டிகளை அகற்ற, அறுவை சிகிச்சை, மற்றும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவை.


09:47 இவைகளைத் தவிர, தாய், தன் உடலை தளர்த்தி, மூச்சை, ஆழமாகவும், சீராகவும் விட, முயற்சி எடுக்க வேண்டும்.
09:55 லெட்-டௌன் ரிபிளக்ஸ்ஐ தொடங்குவதற்கு உதவ, இனிமையான இசையை கேட்டுக்கொண்டே, உங்கள் குழந்தையைப் பற்றி நினைத்துக் கொள்ளவும்.
10:04 மாஸ்டிடிஸ்ஐ தவிர்க்க, குழந்தை, மார்பகத்தை சரியாக பற்றிக்கொள்வது அவசியம் என்பதை நினைவில் கொள்க.
10:09 அது, பால் நாள அடைப்பை தவிர்ப்பதால், குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்.
10:14 இந்த அனைத்து மார்பக நிலைகளையும் தடுப்பதற்கான வழிகள்- குழந்தை மார்பகத்தை சரியாக பற்றுதல் , குழந்தையை சரியான நிலையில் வைத்தல், மற்றும், முறையான தாய்ப்பாலூட்டுதல்.
10:24 இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பக தன்மைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
10:31 இந்த டுடோரியலில், மார்பக வீக்கம் மற்றும் மாஸ்டிடிஸ் பற்றி நாம் கற்றோம்.
10:37 இந்த டுடோரியல், Spoken Tutorial திட்டம், IIT Bombay ஆல் வழங்கப்பட்டுள்ளது.
10:43 Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இதைப்பற்றிய மேலும் தகவல்கள், இந்த இணைப்பில் உள்ளன.
10:56 இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
11:03 இந்த டுடோரியல், “Maa aur Shishu Poshan Project”.ன் ஒரு பகுதியாகும்.
11:07 இந்த டுடோரியலுக்கான domain reviewerகள் - Dr. Rupal Dalal, எம்.டி குழந்தை மருத்துவ அறிவியல், மற்றும், Dr. Taru Jindal, எம்.எஸ் மகப்பேறு மருத்துவம் மற்றும், மகளிர் நோய் மருத்துவவியல்.
11:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது…… நன்றி.

Contributors and Content Editors

Debosmita, Venuspriya