Health-and-Nutrition/C2/Breast-crawl/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:32, 15 June 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Breast crawl குறித்த spoken tutorial க்கு நல்வரவு .
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, breast crawl என்றால் என்ன
00:10 breast crawl க்கான வழிமுறைகள்
00:13 breast crawl ன் முக்கியத்துவம்
00:18 முதலில் breast crawl என்றால் என்ன என புரிந்துகொள்வோம்
00:23 ஒரு குழந்தை உணவு உண்ணும் ஒரு உள்ளுணர்வு நடத்தையுடன் பிறக்கிறது.
00:28 பிரசவம் ஆனவுடன் தாயின் வெற்று வயிற்றின் மேல் குழந்தையை வைக்க......., குழந்தை மார்பகத்தை கண்டறிந்து....... பால் குடிக்க தொடங்கும்.
00:40 இந்த முழு செயல்முறை 'Breast Crawl’ எனப்படும்.
00:46 குறிப்பு, Breast crawl செயல்முறையை ஆரோக்கியமான குழந்தைகளுக்கு அதாவது சுகப்பிரசவம்....... அல்லது அறுவைசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு செய்யலாம்
00:58 பிறந்தவுடன் நன்றாக அழும் குழந்தைகளுக்கு செய்யலாம்.
01:03 ஆரோக்கியம் குன்றிய அதாவது குறைந்த உடல் எடை....... மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு Breast crawl ஐ செய்யக்கூடாது
01:15 இப்போது breast crawlன் செயல்முறையையும் பின்னர் அதன் முக்கியத்துவத்தையும் கற்போம்.
01:22 முதலில், பிரசவ அறையின் வெப்பநிலை சுமார் 26 degree Celsiusக்கு உள்ளதா என சோதிக்கவும்.
01:29 அடுத்தது குழந்தையை தாயின் வெற்று வயிற்றின் மேல் வைத்து சுத்தம் செய்வது.
01:35 குழந்தையின் கைகளை தவிர்த்து, உடலை ஒரு சுத்தமான உலர்ந்த துணியால் சுத்தம் செய்யவும்.
01:42 குழந்தையின் கைகளை ஈரமாகவே வைக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க.
01:46 குழந்தையின் சருமத்தில் உள்ள பாதுகாப்பு வெள்ளைப் பூச்சை நீக்க கூடாது.
01:53 இது வானிலை குளிராக இருந்தால் குழந்தையைப் பாதுகாக்கும்.
01:56 குழந்தையை துடைத்தப்பிறகு அந்த ஈரத்துணியை எடுக்கவும்
02:01 அதன் பின் பிரசவப் பணிப்பெண் தொப்புள் கொடியின் துடிப்பை கவனிக்க வேண்டும்.
02:08 அதன் துடிப்பு நின்றவுடன், தொப்புள் கொடியை துண்டிக்க வேண்டும்.
02:13 அடுத்து, குழந்தையின் வயிறு தாயின் வயிற்றை தொடுமாறு குழந்தையை தாயின் வெற்று வயிற்றின் மேல் மாற்றி வைக்க வேண்டும்.
02:22 குழந்தையின் தலை தாயின் கழுவாத மார்பகங்களுக்கு இடையே இருக்க வேண்டும்.
02:26 குழந்தையின் வாய் தாயின் மார்பகத்திற்கு கீழே இருக்க வேண்டும்.
02:30 இப்போது குழந்தை breast crawlக்கான சரியான நிலையில் உள்ளது.
02:37 பிறந்த குழந்தைக்கு முன்னே நகர்வது மிகவும் இயற்கையானது என்பதால் குழந்தை சுலபமாக தாயின் மார்பகத்தை நோக்கி தவழுகிறது.
02:46 அடுத்து செய்யவேண்டியது- தாய் மற்றும் குழந்தையை கதகதப்பாக வைக்க அவர்களை ஒரு உலர்ந்த துணியால் மூடிவது ,
02:54 குழந்தையின் தலையில் ஒரு தொப்பியை வைக்கவும்.
02:57 அடுத்தடுத்து வரும் படங்களில் நாம் தொப்பி மற்றும் துணியை காட்டவில்லை என்பதை குறித்துக்கொள்க
03:04 இது breast crawlன் போது குழந்தையின் நிலையை சரியாக உற்றுநோக்க நமக்கு உதவும்
03:10 துணியால் குழந்தையை மூடியப்பிறகு தாயின் கையால் குழந்தையின் முதுகை தாங்கிபிடிக்க சொல்ல வேண்டும்.
03:18 breast crawlக்கு உதவும் குழந்தையின் திறன்கள் பற்றி காண்போம்,
03:24 குழந்தை பிறந்த பிறகு மிகவும் எச்சரிக்கையுடனும் உள்ளுணர்வுடனும் இருக்கும்.
03:29 குழந்தையின் சுத்தப்படுத்தப்படாத கைகளின் வாசம், அவளின் உழிழ்நீர் சுரப்பை தூண்டும்.
03:35 மேலும் குழந்தையின் குறைந்த பார்வையால் தாயின் முகம் மற்றும் areolaஐ மட்டும் பார்க்க முடியும்
03:43 Areola என்பது மார்பககாம்பை சுற்றியுள்ள கருப்புநிற பகுதி ஆகும்.
03:47 முடிவாக, குழந்தை தன் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தாயின் மார்பகத்தை நோக்கி தவழ்ந்து நகர ஆரம்பிக்கும்.
03:57 இருப்பினும், சில குழந்தைகள் உடனே தவழும், சில குழந்தைகள் சில நேரம் எடுக்கும்.
04:04 மார்பகத்தை அடைந்த பிறகு குழந்தை முதலில் தன் கைகளால் மார்பகத்தை பிடிக்க முயற்சிக்கும்.
04:12 இந்த நிலையில், குழந்தை தன் முதல் பாலூட்டத்தை பெறும் வரை, தாயையும் குழந்தையையும் தொந்தரவு செய்யக்கூடாது.
04:20 இந்த செயல்முறையின் போது, தாய் மற்றும் பிரசவ பணிப்பெண் இருவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.
04:27 ஒரு குழந்தை தன் முதல் பாலூட்டத்திற்கு தாயின் மார்பகத்தை அடைய 30 முதல் 60 நிமிடங்கள் வரை எடுக்கலாம்.
04:35 பாலூட்டத்தை ஆரம்பிக்கும் போது குழந்தை தன் வாயை அகலமாக திறந்து தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைத்துக்கொள்ளும்.
04:45 பால் குடித்தப்பின் குழந்தையை அதே நிலையில் ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க வேண்டும்.
04:52 அவ்வாறு செய்வது, தாய்க்கும் குழந்தைக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும்.
04:58 இருப்பினும் தாய் மருந்து ஏதேனும் எடுத்திருந்தால் மருத்தவரிடம் கலந்தாலோசிக்கவும்.
05:05 சில நேரங்களில் தாய் பிரசவம் முடிந்தவுடன் வேறொரு அறைக்கு மாற வேண்டியிருக்கலாம்.
05:13 அச்சமயங்களில், வேறொரு அறைக்கு மாறியப்பின்- ஏற்கனவே சொன்னது போல் குழந்தையை தாயின் வயிற்றுக்கு மேல் வைத்து தாய்க்கும் குழந்தைக்கும் இடையே தொடுஉணர்வைஏற்படுத்த வேண்டும்.
05:29 இப்போது அறுவைசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கான breast crawl பற்றி காண்போம்-
05:35 அதற்கு: குழந்தையை தாயின் வயிற்றின் மீது வைக்காமல் மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது குழந்தையின் கால்கள் தாயின் தலையை நோக்கி இருக்க வேண்டும்.
05:47 குழந்தையின் மார்பகம் மற்றும் வயிறு தாயின் தோள்களின் மேலும் வாய் மார்பகத்தின் மேலும் இருக்க வேண்டும்.
05:54 அறுவைசிகிச்சை அறையிலேயே, குழந்தை மார்பகத்தில் பால்குடிக்கும் நேரத்தை முடிந்தஅளவு அனுமதிக்க வேண்டும்
05:59 பிரசவத்திற்கு பின் தாய் சேய் தொடு உணர்வு என்பது குழந்தைப் பராமரிப்பில் மற்றவற்றை விட மிகவும் முக்கியம் என்பதை நினைவுக்கொள்க.
06:09 breast crawl முடிந்த பிறகுதான், பிரவசத்திற்கு பிறகான குழந்தை பராமரிப்பை ஆரம்பிக்கவேண்டும் என்பதை குறித்துக்கொள்க.
06:17 இப்போது, ஒரு பிறந்த குழந்தைக்கான breast crawl ன் முக்கியத்துவத்தைக் காண்போம்,
06:23 Breast crawl மூலம், colostrum எனப்படும் முதல் பாலை குழந்தை பெற முடிகிறது
06:29 இது மஞ்சள் கலந்த அடர்த்தியான பால் ஆகும்.
06:33 பிரசவத்திற்கு பிறகு, குழந்தை பால் குடிக்கும் ஒவ்வொரு பாலூட்டத்தின் போதும் colostrum ன் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது.
06:43 குழந்தை - முதல் நாளில் 5 மில்லி லிட்டர்களும்,
06:47 இரண்டாம் நாளில் 10 மில்லி லிட்டர்களும்,
06:50 மூன்றாம் நாளில் 25மில்லி லிட்டர்களும்,
06:53 நான்காம் நாளில் 40 மில்லி லிட்டர்களும், ஐந்தாம் நாளில் 55 மில்லி லிட்டர்களும் ஒவ்வொரு பாலூட்டத்திலும் ஒவ்வொரு மார்பகத்திலும் பெறும்.
07:05 புதிதாக பிறந்த குழந்தைக்கு இது போதுமானது.
07:09 அதனால் colostrumஐ தவிர வேறு எதையும் குழந்தைக்கு கொடுக்க கூடாது.
07:15 Colostrum என்பது ஒரு குழந்தைக்கு முதல் தடுப்புமருந்தாக கருதப்படுகிறது. இதில் குழந்தையின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் நோய்த்தொற்றை தடுக்கும் புரதங்கள் உள்ளன.
07:27 இது தாயின் பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு கிடைக்கும் முதல் ஆற்றல் மூலமாகும்,
07:33 Colostrum ஆனது இரத்தத்தில் குறைந்த glucose அளவையும் தடுக்கிறது.
07:37 இது ஒரு குழந்தையின் உடலின் மற்ற இயக்கங்களை பராமரிக்க உதவுகிறது.
07:42 இது ஆரோக்கியமான மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது
07:46 இது குழந்தை தன் முதல் மலத்தை கழிக்க உதவுகிறது.
07:50 Breast crawl முறை, குழந்தை தாயுடன் ஒட்டி இருப்பதால் குழந்தையை கதகதப்பாக வைக்கிறது
07:57 குழந்தை தாயின் மார்பகத்துடன் எவ்வாறு நன்றாக இணைவது என்பதை தானாகவே கற்கிறது.
08:04 தாயின் ஆரோக்கியமான bacteriaஐ Breast crawl குழந்தைக்கு பரப்புகிறது,
08:08 இந்த bacteria குழந்தையின் குடலில் நுழைந்து தொற்றுகளைத் தடுக்கிறது.
08:13 இறுதியில் இது குழந்தையின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கிறது.
08:18 Breast crawl மேலும் குழந்தைக்கு அன்பையும் பாதுகாப்பையும் கொடுத்து தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை ஆரம்பிக்கிறது.
08:29 breast crawl மூலம் தாய்க்கும் நன்மை இருக்கிறது
08:34 குழந்தையின் காலின் நகர்வுகள் தாயின் கருப்பைக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த அழுத்தம், கருப்பை சுருக்கத்திற்கும் நஞ்சுக்கொடி நீக்கத்திற்கும் உதவுகிறது
08:45 பாலுட்டத்தை ஆரம்பிப்பது தாயின் உடலில் oxytocin ஐ அதிகரிக்கிறது
08:51 oxytocin அதிகரிப்பது நஞ்சுக்கொடி நீக்கத்திற்கும் உதவுகிறது.
08:56 எனவே, breast crawl ஆனது ரத்தப்போக்கை குறைத்து தாய்க்கு anaemia ஐ தடுக்கிறது.
09:03 Anaemia என்பது ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் நிலையாகும்
09:08 இது தாய்க்கு சோர்வையும் பலவீனத்தையும் கொடுக்கும்.
09:13 எனவே, breast crawl ஆனது தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் பயன்தரும் இயற்கையான முறையாகும்,
09:21 இத்துடன் breast crawl மீதான இந்த டுடோரியல் முடிகிறது.
09:26 இந்த டுடோரியலில் நாம் கற்றது, breast crawl என்றால் என்ன
09:30 breast crawl க்கான வழிமுறை மற்றும் breast crawl ன் முக்கியத்துவம்
09:37 இந்த டுடோரியல், Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது
09:43 Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
09:49 இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்.
09:54 இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
10:01 இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும். இந்த tutorialக்கான domain reviewer, Dr. Rupal Dalal, MD Pediatrics. Dr. Taru Jindal, Ms obstetricks மற்றும் Gynaecology.
10:12 இந்த tutorial, உணவியலாளர் Rajani Sawant மற்றும் animator Arthi anbalagan ஆல் உருவாக்கப்பட்டது.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி.

Contributors and Content Editors

Debosmita, Venuspriya