Joomla/C2/Common-mistakes-and-uninstalling-Joomla/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:55, 8 June 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | வணக்கம் . local server ல் Joomla ஐ நிறுவும்போது செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் Joomla ஐ Uninstall செய்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:11 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :
Joomla ஐ நிறுவும்போது செய்யும் பொதுவான தவறுகள் அந்த தவறுகளுக்கான தீர்வு மற்றும் Joomla ஐ எப்படி uninstall செய்வது. |
00:23 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
Ubuntu Linux 14.04, Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP. |
00:41 | இந்த tutorial ஐ பின்பற்ற , உங்கள் கணினியில் XAMPP மற்றும் Joomla நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:49 | உங்களுக்கு Joomla நிறுவுதல் செயல்முறை பற்றிய அறிவும் இருக்க வேண்டும். |
00:54 | இல்லையெனில் spoken tutorial website ல் , Joomla series ல் அதற்கான tutorial களை பார்க்கவும். |
01:02 | முதலில் , நான் எனது கணினியில் XAMPP ஐ தொடங்குகிறேன். |
01:06 | Ctrl + Alt + T key களை அழுத்தி terminal ஐ திறக்கவும். |
01:12 | மாற்றாக, launcher bar ல் உள்ள “Terminal” icon ஐ click செய்யலாம். |
01:17 | XAMPP ஐ தொடங்க type செய்க sudo space slash opt slash lampp slash lampp space start Enter.ஐ அழுத்தவும் |
01:28 | இது administrative password ஐ கேட்கும். |
01:31 | நான் எனது administrative password ஐ type செய்து Enter ஐ அழுத்துகிறேன். |
01:36 | இப்பொது நமது XAMPP இயங்கிக்கொண்டிருக்கிறது. |
01:39 | ஒருவர் செய்யும் முதல் தவறு என்னவெனில் வெவ்வேறு directory ல் Joomla ஐ extract செய்வது. |
01:45 | XAMPP page ஐ திறக்க, browser க்கு சென்று http colon double slash localhost என type செய்து enter ஐ அழுத்தவும். |
01:55 | திரையின் இடது பக்கத்தில் உள்ளmenu ல் , phpinfo() ஐ click செய்யவும். |
02:00 | Ctrl +F key களை அழுத்தி DOCUMENT underscore ROOT ஐ தேடவும். |
02:07 | அது Apache Environment table ல் இருக்கும். |
02:11 | DOCUMENT underscore ROOT ன் மதிப்பு slash opt slash lampp slash htdocs அல்லது slash var slash www ஆக இருக்கும் . |
02:24 | எனது கணினியில் அது slash opt slash lampp slash htdocs ஆகும் |
02:30 | Joomlaஐ, apache DOCUMENT underscore ROOT directory ல் extract செய்ய வேண்டும் என்பதை குறித்துக்கொள்ளவும் . |
02:37 | இல்லையென்றால், இது installation setting pageஐ காட்டாது |
02:43 | ஒருவர் செய்யும் இரண்டாவது பொதுவான தவறு என்னெவெனில் output buffering ON ஆக இருப்பது. |
02:49 | நிறுவல் அமைப்பில் மூன்றாவது படியில் output buffering ஆனது OFF என குறிக்கப்பட வேண்டும். |
02:55 | இது பரிந்துரைக்கப்பட்ட setting ஆகும், தேவையான setting அல்ல. |
02:59 | முன்னிருப்பாக இது 'OFF' ஆக இருக்கும். |
03:03 | output buffering , ON ஆக இருந்தால் நிறுவல் வெற்றிகரமாக தொடரும். |
03:08 | எனினும், வலைத்தளம் பின்னர் மிகவும் மெதுவாக இருக்கலாம். |
03:12 | சில சந்தர்ப்பங்களில், இந்த படிநிலையில் நிறுவல் தடைசெய்யப்படலாம். |
03:17 | ஒருவேளை அது ON ஆகியிருந்தால், apache installation ல் php.ini ஐ edit செய்வதன் மூலம் அதை turn OFF செய்யலாம். |
03:24 | Terminal window க்கு சென்று locate space php dot ini என type செய்வதன் மூலம் php.ini ஐ கண்டறியவும் பிறகு Enter ஐ அழுத்தவும். |
03:37 | இதற்கு பல முடிவுகளை நாம் பெறலாம். |
03:40 | etc directory உள் php.ini ஐ உடைய ஒரு முடிவு இருக்கும். |
03:48 | இந்த directory 'opt' directory உள்ள 'lampp' directory உள் உள்ளது. |
03:54 | இதைதான் நாம் edit செய்ய வேண்டும். |
03:57 | எனது கணினியில் , அந்த file க்கான path slash opt slash lampp slash etc slash php.ini ஆகும். |
04:07 | இந்த file ஐ Gedit text editor ல் திறக்க type செய்க sudo space gedit space slash opt slash lampp slash etc slash php dot ini . |
04:23 | admin password கேட்கப்பட்டால், enter செய்யவும். |
04:27 | password கேட்கும் போதெல்லாம் enter செய்யவும். |
04:32 | Gedit என்பது Ubuntu Linux ல் preload செய்யப்பட்ட முன்னிருப்பான text editor ஆகும். |
04:37 | மாற்றாக , உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம். |
04:42 | File திறந்தவுடன், output underscore buffering ஐ தேடவும். |
04:48 | நாம் பெறும் முதல் தேடல் முடிவு comment செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த முடிவுக்கு செல்வோம். |
04:54 | நாம் தேடும் text இங்கே உள்ளது. |
04:57 | output underscore buffering = 4096 ஐ output underscore buffering = off என மாற்றவும். |
05:05 | Control + S key களை அழுத்துவதன் மூலம் நாம் file ஐ சேமிக்கலாம். |
05:09 | நாம் Gedit editor ல் இருந்து வெளியேறலாம். |
05:12 | மாற்றத்தை பிரதிபலிப்பதற்காக நாம் XAMPP ஐ restart செய்யவேண்டும். |
05:16 | terminal க்கு சென்று type செய்க sudo space slash opt slash lampp slash lampp space restart |
05:25 | Enter ஐ அழுத்தவும் |
05:27 | ஆகவே நாம் அடுத்த படிக்கு செல்லலாம். |
05:30 | நாம் செய்யும் மூன்றாவது தவறு என்னெவென்றால் configuration file க்கு no write permission ஐ வைத்திருப்பது. |
05:36 | நிறுவுதலின் கடைசி படியில் , “Your configuration file or directory is not writable or there was a problem creating the configuration file” என்று கூறும் ஒரு error ஐ நீங்கள் பெறலாம். |
05:48 | நாம் Joomla folder க்கு write permission ஐ கொடுக்க தவறும்போது இது நிகழும். |
05:53 | இந்த error வந்தால், நீங்கள் text box உள் சில text களை பெறுவீர்கள். |
05:58 | Control + C key களை பயன்படுத்தி நாம் இந்த text ஐ copy செய்யலாம். |
06:02 | இந்நிலையில் , configuration.php என்ற புதிய file ஐ நாம் உருவாக்கி text ஐ அதனுள் paste செய்யலாம். |
06:09 | joomla folder உள் configuration.php ஐ உருவாக்க touch command ஐ நாம் பயன்படுத்தலாம். |
06:16 | command prompt ல் type செய்க sudo space touch space slash opt slash lampp slash htdocs slash joomla slash configuration dot php. |
06:32 | Enter ஐ அழுத்தவும். |
06:34 | பிறகு type செய்க sudo space gedit space slash opt slash lampp slash htdocs slash joomla slash configuration dot php.' |
06:46 | Enter ஐ அழுத்தவும். |
06:49 | இது Gedit text editor ல் file ஐ திறக்கும். |
06:52 | copy செய்யப்பட்ட text ஐ இந்த file உள் paste செய்யலாம். |
06:56 | left bracket question mark php என்பது line ன் முதலில் இருக்கிறதா பிறகு content சரியாக உள்ளதா என்று உறுதி செய்ய file ஐ சரிபார்க்கவும். |
07:08 | Control + S key களை அழுத்துவதன் மூலம் configuration.php ஐ சேமிக்கவும். |
07:14 | பிறகு நாம் Gedit editorல் இருந்து வெளியேறலாம். |
07:17 | Joomla நிறுவுதலுக்காக configuration.php ஐ நாம் கொண்டுள்ளோம். |
07:22 | இப்போது, Joomla நிறுவுதலின் பொது ஒருவர் செய்யும் நான்காவது தவறை காணலாம். |
07:27 | இது Finish step ல் installation folder ஐ நீக்காமல் இருப்பது . |
07:32 | இந்த படியின் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்திக்கூற முடியாது. |
07:36 | இது மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்றாகும். |
07:39 | ஆகவே , folder நீக்கபட்டுவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும். |
07:42 | இந்த படியில் உங்களுக்கு error வந்தால் , நீங்களே folder ஐ நீக்க வேண்டும். |
07:47 | எனக்கு error வந்துள்ளது. ஏனெனில் linux superuser ஆக log-in நான் செய்யவில்லை மற்றும் எனக்கு delete permission கிடையாது. |
07:56 | ஆகவே, நாம் terminal க்கு செல்லலாம். |
07:59 | நாம் joomla' folderல் இருந்து Joomla installation folder ஐ நாமாகவே நீக்க வேண்டும் . |
08:04 | இது கட்டாயமானதாகும். ஆகவே , type செய்க cd slash opt slash lampp slash htdocs slash joomla |
08:14 | Enter ஐ அழுத்தவும். |
08:16 | பிறகு type செய்க sudo space rm space minus rf space installation forward slash |
08:25 | Enter ஐ அழுத்தவும். |
08:27 | நாம் இப்போது Joomla ஐ வெற்றிகரமாக நிறுவிவிட்டோம். |
08:30 | இதை சரிபார்க்க browser க்கு சென்று type செய்க http colon double slash localhost slash joomla |
08:40 | நாம் நம்முடைய webpage ஐ காணலாம். |
08:43 | நாம் இப்போது Joomla ஐ uninstall செய்வது பற்றி பார்க்கலாம். |
08:46 | நாம் முதலில் Joomla extract செய்யப்பட்ட folder ஐ நீக்க வேண்டும். |
08:51 | ஆகவே, நான் terminal க்கு சென்று sudo space rm space minus rf space forward slash opt slash lampp slash htdocs slash joomla slashஎன type செய்கிறேன். |
09:07 | Enter ஐ அழுத்தவும். |
09:09 | இப்போது type செய்க cd forward slash opt slash lampp slash htdocs slash joomla |
09:17 | இது folder நீக்கப்பட்டுவிட்டதா என்று சரிபார்ப்பதற்காகும். |
09:20 | நீங்கள் பார்ப்பது போல், directory இருக்காது. |
09:24 | நாம் பிறகு database மற்றும் user களை நீக்கலாம். |
09:28 | இந்த படி Joomla ஐ முழுமையாக uninstall செய்யும். |
09:33 | நான் முதலில் browser க்கு சென்று http colon double slash localhost slash phpmyadmin என type செய்கிறேன். |
09:44 | நான் Users tab ஐ click செய்து பிறகு Joomla-1 எனும் user ஐ தேர்வு செய்கிறேன். |
09:50 | கீழே , Drop the databases that have same names as the users எனும் option ஐ click செய்யவும். |
09:57 | அது You are about to DESTROY a complete database! Do you really want to execute DROP DATABASE? என கேட்கும். OK ஐ click செய்யவும். |
10:07 | இப்பொது கீழே வலது பக்கம் GO button ஐ click செய்யவும். |
10:11 | நாம் நமது localhost ல் இருந்து Joomla ஐ வெற்றிகரமாக uninstall செய்துவிட்டோம். |
10:16 | நாம் கற்றதை நினைவு கூருவோம் . இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla ஐ நிறுவும்போது மற்றும் Joomla ஐ uninstall செய்யும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் அதன் தீர்வுகள். |
10:28 | நாம் பயிற்சிக்கு வருவோம். |
10:30 | Joomla ஐ நிறுவவும். Joomla ஐ Uninstall செய்யவும், Joomla உண்மையில் Uninstall செய்யப்பட்டுவிட்டதா என சரிபார்த்து மீண்டும் நிறுவவும். |
10:41 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. |
10:46 | உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் ,அதை தரவிறக்கி காணவும். |
10:51 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
10:59 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:03 | Spoken Tutorial Project க்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. |
11:10 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |