Health-and-Nutrition/C2/Cross-cradle-hold/Tamil
|- |00:01 |பாலூட்டுவதற்கான Cross cradle பிடிப்பு முறை குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
|- |00:07 |இந்த tutorialல் நாம் கற்கபோவது- குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்ற சரியான பாலூட்டும் பிடிப்பு முறையை தேர்ந்தெடுத்தல்
|- |00:16 |பாலூட்டும் முன் தாய் செய்யவேண்டியவை
|- |00:20 | Cross cradle பிடிப்பு முறைக்கான படிப்படியான வழிமுறைகள்.
|- |00:24 |இதை ஆரம்பிக்கலாம்.
|- |00:26 |உலகம் முழுவதும் பல்வேறு பிடிப்பு முறைகளை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுக்கிறார்கள்.
|- |00:32 |தாய்க்கும் சேய்க்கும் பாலூட்டுவதற்கான சிறந்த பிடிப்பு முறையானது பாலூட்டி முடிக்கும் வரை தாயும் சேயும் வசியாக இருப்பதே ஆகும்
|- |00:43 |குழந்தை தாயின் மார்பகத்துடன் சேர்த்து அணைத்து போதுமான அளவு பால் பெறுமாறு இருக்க வேண்டும்
|- |00:51 |Cross cradle பிடிப்பு என்ற ஒருவகை பிடிப்பு முறை பற்றி கற்போம்.
|- |00:56 |Cross cradle பிடிப்பு முறையானது- குழந்தையின் உடலின் முழுக் கட்டுப்பாட்டுற்கும்
மார்பகத்தை தாங்குவதற்கும்
நன்றாக மார்பகம் குழந்தையின் வாயினுள் செல்வதற்கும் சிறந்த முறை ஆகும்.
|- |01:06 |பாலூட்டுவதற்கு முன், தாய் தன் கைகளை சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும்.
|- |01:12 |பின்னர் சுடவைத்து குளிர்விக்கப்பட்ட நீரை அருந்த வேண்டும்.
|- |01:16 |பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 750 முதல் 850 மில்லி லிட்டர் வரை பாலை உற்பத்தி செய்கிறார்கள்.
|- |01:24 |அதனால், அவர்கள் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
|- |01:29 |அடுத்து, தாயின் நிலை பற்றி காண்போம்.
|- |01:33 |தாய் தரையில் அல்லது கட்டிலில் கால்களை மடித்தவாறு உட்கார வேண்டும்.
|- |01:38 |அல்லது நாற்காலியில் பாதங்கள் தரையில் படியுமாறு உட்கார வேண்டும்.
|- |01:43 |நாற்காலி உயரமாக இருந்தால் காலுக்கு சிறிய நாற்காலியோ அல்லது தலையணையோ வைத்து உட்கார வேண்டும்.
|- |01:54 |உட்காரும் போது, முதுகு நேராக உள்ளதா என கவனிக்கவும் - இத முதுகு வலியை தவிர்க்கும்
|- |02:03 |தோள்கள் தூக்கியோ அல்லது வளைத்தோ இல்லாமல் தளர்ந்து இருக்கவேண்டும்
|- |02:08 |பாலூட்டி முடிக்கும் வரை இவ்வாறே தளர்ந்து இருக்க வேண்டும்.
|- |02:13 |தாய் பாலூட்டவிருக்கும் மார்பகத்தை திறந்து வைக்க வேண்டும்.
|- |02:19 |அதில் உள்ளாடை அல்லது ரவிக்கை கொண்டு அழுத்தம் கொடுக்க கூடாது.
|- |02:26 |வசதியாக உட்கார்ந்த பிறகு, குழந்தையை தூக்க வேண்டும்.
|- |02:31 |தாய் பாலூட்டவிருக்கும் மார்பகத்திற்கு எதிரான கையால் குழந்தையின் தலையை பிடிக்க வேண்டும்.
|- |02:39 |தாயின் அதே கையின் அக்குளில் குழந்தையின் கால்கள் இருக்க வேண்டும்.
|- |02:45 |இங்கு காட்டப்படும் தாய், தன் வலது மார்பகத்தில் பாலூட்டுகிறார். அதானால், குழந்தையின் கால்கள் அவரின் இடது அக்குளில் உள்ளது.
|- |02:57 |குழந்தையின் தலையின் அடிப்பாகத்தை பிடிக்க தாய் தன் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை பயன்படுத்துகிறார்.
|- | 03:05 |குழந்தையை தூக்க மேலும் ஆதரவு வேண்டுமெனில் தன் மடிமீது ஒரு தலையணையை வைத்துக்கொள்ளலாம்.
|- |03:15 |மார்பகத்தை குழந்தைக்கு அருகில் கொண்டுவர தாய் குனியக்கூடாது என்பதை நினைவு கொள்க.
|- |03:21 |இது வசதியாக இருக்காது. முதுகு வலியும் ஏற்படும்.
|- |03:26 |எப்போதும் நேராக அமர்ந்து குழந்தையை தூக்கியே மார்பகத்திற்கு கொண்டு வரவேண்டும்.
|- |03:33 |அடுத்து, தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் நிலையைக் காண்போம்.
|- |03:39 |தாயின் கட்டைவிரல் குழந்தையின் ஒரு காதின் பின்புறமும், மற்ற விரல்கள் மற்றொரு காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.
|- |03:46 | குழந்தையின் காதின் பின்புறத்தில் இருந்து விரல்களை கழுத்திற்கு நகர்த்தக் கூடாது.
|- |03:52 |தாயின் மணிக்கட்டு குழந்தையின் தோள்களுக்கு இடையே இருக்க வேண்டும்.
|- |03:56 |குழந்தையின் முதுகில் தாயின் கையால் அழுத்தத்தைக் கொடுக்க கூடாது.
|- |04:04 |இது குழந்தைக்கு பால் குடிக்கும்போது வசதியாக இருக்கும்.
|- |04:08 |அடுத்து, குழந்தையின் உடலை எவ்வாறு சரியாக வைப்பது என பார்ப்போம்.
|- |04:15 |குழந்தையின் வயிறு தாயின் உடலோடு சற்று அழுந்தி இருக்க வேண்டும்.
|- |04:20 |இதனால் மார்பகத்தை எட்ட குழந்தைக்கு கடினமாக இருக்காது.
|- |04:26 |மற்றும் குழந்தையின் வாய் நன்றாக மார்பத்துடன் இணையவும் எளிமையாக இருக்கும்.
|- |04:32 |அடுத்தது குழந்தையின் உடலை ஒழுங்கமைக்க கற்போம்.
|- |04:37 |நாம் சாப்பிடும் போது, எப்போதும நம் தலை, கழுத்து மற்றும் உடல் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
|- |04:43 |ஆனால், பாலூட்டும் போது, பல தாய்மார்களால் குழந்தையின் தலை ஒருபக்கமாக சாய்க்கப்படுகிறது.
|- |04:50 |இது குழந்தைக்கு வசதியாக இருக்காது.
|- |04:55 |பாலூட்டும் போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடல் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும்.
|- |05:01 |இதனால் குழந்தை எளிதாக பாலை விழுங்க முடியும்.
|- |05:05 |இப்போது குழந்தையின் உடலை வைப்பதற்கான மூன்றாவது விஷயத்தைக் காண்போம்.
|- |05:10 |தாய் குழந்தையின் முழு உடலையும் தாங்க வேண்டும்.
|- |05:14 |இல்லையெனில் குழந்தை மார்பகத்துடன் நன்றாக இணைய அதிகமான முயற்சி எடுக்க வேண்டிவரும்.
|- |05:22 |அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் தாடையின் நிலையைக் காண்போம்.
|- |05:28 |குழந்தையின் மூக்கு, மார்பக காம்பிற்கு நேராக இருக்க வேண்டும்.
|- |05:33 | தாடையானது மேல்நோக்கி மார்பகத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும்.
|- |05:38 |இது பாலூட்டும்போது areola ன் கீழ்பெரும்பகுதி குழந்தையின் வாயினுள செல்வதை உறுதிசெய்யும்.
|- |05:45 |இதனால், குழந்தை திறமையாக அதிகமாக பால் குடிக்க கீழ் தாடையை பயன்படுத்தும்.
|- |05:51 |குறிப்பு- Areola என்பது மார்பக காம்பை சுற்றி இருக்கும் கருப்பு பகுதி.
|- | 05:57 |இப்போது குழந்தை சரியான நிலையில் உள்து, அடுத்து மார்பகத்தை எவ்வாறு பிடிப்பது என காண்போம்.
|- |06:04 |மற்றொரு கையின் விரல்களை பயன்படுத்தி தாய் தன் மார்பகத்தை அடியில் U வடிவத்தில் பிடிக்க வேண்டும்.
|- |06:12 |படத்தில் காட்டப்படும் தாய் தன் வலது மார்பகத்தை பிடிக்க வலது கையை பயன்படுத்துகிறார். |- |06:19 |கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலைகளை புரிந்துகொள்ள, தாயின் வலது மார்பகக் காம்பை கடிகாரத்தின் மையமாக கற்பனைசெய்து கொள்க.
|- |06:31 |தாய் தன் வலது கட்டைவிரலை இந்த கடிகாரத்தில் 9 ல் வைக்க வேண்டும்.
|- |06:38 |வலது ஆட்காட்டி மற்றும் நடு விரல்களை 3 ல் வைக்க வேண்டும்.
|- |06:46 |விரல்களை எப்போதும் குழந்தையின் உதடுகளுக்கு இணையாக வைக்க வேண்டும்.
ஏன்?
|- |06:51 |இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.
|- |06:56 |வடாபாவ் அல்லது burgerஐ நாம் சாப்பிடும்போது, நமது வாயும் உதடுகளும் கிடைமட்டமாக திறக்கிறது.
|- |07:02 |வடாபாவ் அல்லது burgerஐ கடிக்க அதை கிடைமட்டாக பிடிக்கிறோம்.
|- |07:08 |இங்கே, கட்டைவிரல் மற்று மற்ற விரல்கள் உதடுகளுக்கு இணையாக வைக்கப்படுகிறது.
|- |07:12 |வடாபாவ் அல்லது burgerஐ செங்குத்தாக வைத்தால், அதை பெரியதாக கடிக்க முடியாது.
|- |07:19 |அதேபோல, குழந்தையின் உதடுகளின் திசையை கவனிக்கவும்.
|- |07:25 |இங்கு உதடுகள் செங்குத்தாக உள்ளன. எனவே, விரல்கள் மற்றும் கட்டை விரல்களை மார்பத்தின் மீது செங்குத்தாக வைக்க வேண்டும்.
|- |07:34 |இது areola ன் பெரும் பகுதி குழந்தையின் வாயினுள் செல்ல உதவும்.
|- |07:39 |குழந்தையின் உதடுகளுக்கு இணையாக இருப்பது தவிர, மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளியில் தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் இருக்க வேண்டும்.
|- |07:50 | வடாபாவ் அல்லது burgerஐ சாப்பிடும்போது, அதை மிக அருகில் வைத்தால் பெரிதாக கடிக்க முடியாமல் நமது விரல்கள் தடுத்து விடும்.
|- |08:00 |மிக தூரத்தில் வைத்தால், வாயில் வைக்க சரியான வடிவில் இருக்காது.
|- |08:07 |எனவே, பெரிதாக கடிக்க சரியான தூரத்தில் வைக்க வேண்டும்.
|- |08:12 |அதேபோல குழந்தைக்கும், இங்கு காட்டப்படுவது போல மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளி சரியானதாக இருக்கும்.
|- |08:20 |இந்த இடைவெளி, குழந்தையின் வாயில் areolaன் பெரும்பகுதி செல்ல தாயின் விரல்கள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும்
|- | 08:29 | மார்பக காம்பை மட்டும் தாய் அழுத்தக்கூடாது, அது குறைந்த அளவு பால் கொடுக்கும்
|- |08:35 | areola க்கு அடியில் இருக்கும் பால் சுரப்பிகளில் இருந்து பால் வெளிவர அதை அழுத்த வேண்டும்
|- |08:42 |குழந்தை நன்றாக மார்பகத்துடன் இணைந்திருக்க மார்பகத்தை சரியான அளவில் வைக்க வேண்டும்.
|- |08:49 |குழந்தையின் மூக்கு இருக்கும் மார்பகத்தின் பக்கத்தில் தாயின் கட்டைவிரல் மார்பக காம்பில் இருந்து 3 விரல் அளவு இடைவெளியில் இருக்க வேண்டும்.
|- |08:59 |மற்றும் குழந்தையின் தாடை இருக்கும் மார்பகத்தின் பக்கத்தில் தாயின் இரண்டு விரல்கள் மார்பக காம்பில் இருந்து 3 விரல் அளவு இடைவெளியில் இருக்க வேண்டும்.
|- |09:09 |மீண்டும் வடாபாவ் அல்லது burger உதாரணத்திற்கு செல்வோம்.
|- |09:13 |வடாபாவ் அல்லது burger ஐ சரியாக பிடித்த பிறகு, பெரிதாக கடிக்க அதை எப்போதும் அழுத்துகிறோம்.
|- |09:21 |அதேபோல, தாயும் தன் மார்பகத்தை கீழே சற்று அழுத்தி U வடிவத்தில் பிடிக்க வேண்டும்.
|- |09:28 |இது குழந்தையின் வாயில் மார்பகத்தின் பெரும்பகுதி செல்ல உதவும்.
|- |09:34 |ஆனால் தாய் தன் மார்பகத்தை V வடிவில் அழுத்தக்கூடாது என்பதை நினைவுகொள்க.
|- |09:39 |V வடிவ அழுத்தம், மார்பகத்தை குறைத்து மார்பக காம்பை மட்டும் வாயில் செலுத்தும்.
|- |09:45 |மார்பகத்தின் இருபுறமும் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் கொண்டு சமமான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
|- |09:52 |இல்லையெனில், மார்பக காம்பு ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்து சரியாக வாயினுள் செல்லாது.
|- |10:00 | மார்பகத்தை ஒருபக்கமாக அழுத்தி குழந்தைக்கு அருகில் கொண்டுவரக்கூடாது என்பதை நினைவு கொள்க.
|- |10:08 |எப்போதும் குழந்தையைதான் மார்பகத்திற்கு அருகில் கொண்டுசெல்ல வேண்டும்.
|- |10:12 |இப்போது, குழந்தை, Cross cradle பிடிப்பு முறையில் மார்பகத்தை வாயினுள் செலுத்தி பால் குடிக்க தயாராக உள்ளது.
|- |10:18 |சரியாக மார்பகத்தை வாயினுள் செலுத்துவதற்கான வழிமுறை இந்த தொடரின் மற்றொரு tutorialல் விளக்கப்படுகிறது.
|- |10:24 |குழந்தையின் வாயினுள் சரியாக மார்பகத்தை செலுத்தியபின், மார்பகம் கணமாக இல்லையெனில்- தாய் தன் கையில் இருந்து மார்பகத்தை விடுவித்து தன் கையை குழந்தையை தாங்க அடியில் கொண்டுவர வேண்டும்.
|- |10:40 |இந்த நிலையில், தாய் தன் இருகைகளையும் தன் உடலின் அருகில் கொண்டுவரவேண்டும்.
|- |10:46 |இது பால் கொடுக்கும்போது தாய்க்கு வசதியாக இருக்கும்.
|- |10:50 |இத்துடன் இந்த tutorial முடிகிறது.
|- |10:54 |இந்த tutorialல் நாம் கற்றது, குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்ற சரியான பாலூட்டும் பிடிப்பு முறையை தேர்ந்தெடுத்தல்
|- |11:03 |பாலூட்டும் முன் தாய் செய்யவேண்டியவை மற்றும் Cross cradle பிடிப்பு முறைக்கான படிப்படியான வழிமுறைகள்..
|- |11:09 |இந்த tutorial, Spoken Tutorial Project, IIT Bombay ஆல் பங்களிக்கப்பட்டது
|- |11:15 |Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
|- |11:23 |இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்.
|- |11:28 |இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
|- |11:34 |இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும்.
|- |11:39 |இந்த tutorialக்கான domain reviewer, Dr. Rupal Dalal, MD Pediatrics.
|- |11:45 |இந்த tutorialக்கான animation, Shital Joshiஆல் செய்யப்பட்டது.
|- | |இந்த tutorial, உணவியலாளர் Tasneem Shaikh ஆல் உருவாக்கப்பட்டது.
|- | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி.