Health-and-Nutrition/C2/Football-hold-for-breastfeeding/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:46, 23 March 2018 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 பாலூட்டுவதற்கான Football பிடிப்பு முறை குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த tutorialல் நாம் கற்கபோவது- குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்ற சரியான பாலூட்டும் பிடிப்பு முறையை தேர்ந்தெடுத்தல்
00:15 பாலூட்டும் முன் தாய் செய்யவேண்டியவை மற்றும் Football பிடிப்பு முறைக்கான படிப்படியான வழிமுறைகள்.
00:23 இதை ஆரம்பிக்கலாம்.
00:24 உலகம் முழுவதும் பல்வேறு பிடிப்பு முறைகளை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுக்கிறார்கள்.
00:31 முன் டுடோரியலில் சொன்னது போல, தாய்க்கும் சேய்க்கும் பாலூட்டுவதற்கான சிறந்த பிடிப்பு முறையானது பாலூட்டி முடிக்கும் வரை தாயும் சேயும் வசியாக இருப்பதே ஆகும்.
00:48 குழந்தை தாயின் மார்பகத்துடன் சேர்த்து அணைத்து போதுமான அளவு பால் பெறுமாறு இருக்க வேண்டும்
00:56 Football பிடிப்பு என்ற ஒருவகை பிடிப்பு முறை பற்றி கற்போம்.
01:01 Football பிடிப்பு முறையானது, குறிப்பாக பின்வரும் தாய்மார்களுக்கு சிறந்ததாகும்: அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடைப்பெற்றிருந்தால்
01:08 பெரிய மார்பகங்கள் இருந்தால்
01:10 சிறிய அல்லது குறைப்பிரவத்தில் குழந்தை பிறந்திருந்தால்
01:14 அல்லது இரட்டைக் குழந்தைகள் இருந்தால்.
01:15 பாலூட்டுவதற்கு முன், தாய் தன் கைகளை சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும்
01:22 பின்னர் சுடவைத்து குளிர்விக்கப்பட்ட நீரை அருந்த வேண்டும்.
01:27 பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 750 முதல் 850 மில்லி லிட்டர் வரை பாலை உற்பத்தி செய்கிறார்கள்.
01:34 அதனால், அவர்கள் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
01:38 அடுத்து, தாயின் நிலை பற்றி காண்போம்.
01:43 தாய் தரையில் அல்லது கட்டிலில் கால்களை மடக்கி உட்கார வேண்டும்.
01:48 அல்லது நாற்காலியில் பாதங்கள் தரையில் படியுமாறு உட்கார வேண்டும்.
01:51 நாற்காலி உயரமாக இருந்தால் காலுக்கு சிறிய நாற்காலியோ அல்லது தலையணையோ வைத்து உட்கார வேண்டும்.
02:02 உட்காரும் போது, முதுகு நேராக உள்ளதா என கவனிக்கவும் - இத முதுகு வலியை தவிர்க்கும்
02:09 தோள்கள் தூக்கியோ அல்லது வளைத்தோ இல்லாமல் தளர்ந்து இருக்கவேண்டும்
02:13 பாலூட்டி முடிக்கும் வரை இவ்வாறே தளர்ந்து இருக்க வேண்டும்.
02:19 தாய் தான் பாலூட்டவிருக்கும் மார்பகத்திற்கு பக்கமாக 3 4 தலையணைக்களை வைக்க வேண்டும்
02:26 மேல் இருக்கும் தலையணை, மற்ற தலையணைகளுக்கும் தாயின் தொடைக்கும் குறுக்கே சமமாக இடையே இருக்க வேண்டும்
02:32 தாய் பாலூட்டவிருக்கும் மார்பகத்தை திறந்து வைக்க வேண்டும்.
02:38 மார்பகத்தை உள்ளாடை அல்லது ரவிக்கை கொண்டு அழுத்தம் கொடுக்க கூடாது.
02:45 வசதியாக உட்கார்ந்த பிறகு, குழந்தையை தூக்க வேண்டும்.
02:49 குழந்தையின் முதுகை தலையணை மீது வைக்க வேண்டும்
02:53 தாய் பாலூட்டவிருக்கும் மார்பகம் உள்ள அதே பக்க கையால் குழந்தையின் தலையை பிடிக்க வேண்டும்.
03:01 குழந்தையின் கால்கள், தாயின் அதே கையின் அக்குளின் வழியாக தலையணையின் மீது இருக்க வேண்டும்.
03:08 தாய் தன் இந்த கையையும் குழந்தையின் கால்களையும் தலையணையின் மீது வைக்க வேண்டும்
03:13 இங்கு காட்டப்படும் தாய், தன் வலது மார்பகத்தில் பாலூட்டுகிறார்.
03:18 அதனால், குழந்தையின் கால்கள் அவரின் வலது அக்குளின் வழியாக உள்ளது.
03:23 குழந்தையின் தலையின் அடிப்பாகத்தை பிடிக்க தாய் தன் வலது கையின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை பயன்படுத்துகிறார்.
03:31 மார்பகத்தை குழந்தைக்கு அருகில் கொண்டுவர தாய் குனியக்கூடாது என்பதை நினைவு கொள்க.
03:37 இது வசதியாக இருக்காது. முதுகு வலியும் ஏற்படும்.
03:42 எப்போதும் நேராக அமர்ந்து குழந்தையை தூக்கியே மார்பகத்திற்கு கொண்டு வரவேண்டும்.
03:48 அடுத்து, குழந்தையின் தலையை தூக்குவதற்கான தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலையைக் காண்போம்.
03:56 தாயின் கட்டைவிரல் குழந்தையின் ஒரு காதின் பின்புறமும், மற்ற விரல்கள் மற்றொரு காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.
04:03 குழந்தையின் காதின் பின்புறத்தில் இருந்து விரல்களை கழுத்திற்கு நகர்த்தக் கூடாது.
04:09 தாயின் மணிக்கட்டு குழந்தையின் தோள்களுக்கு இடையே இருக்க வேண்டும்.
04:13 குழந்தையின் முதுகில் தாயின் கையால் அழுத்தத்தைக் கொடுக்க கூடாது. இது குழந்தைக்கு பால் குடிக்கும்போது வசதியாக இருக்கும்.
04:23 அடுத்து, குழந்தையின் உடலை எவ்வாறு சரியாக வைப்பது என பார்ப்போம்.
04:27 குழந்தையின் முகம் தாயை பார்த்தவாறு இருக்க வேண்டும்
04:31 குழந்தையின் உடல் தாயின் உடலோடு சற்று அழுந்தி இருக்க வேண்டும்.
04:36 இருவருக்குமான இடைவெளி குறைவதால் மார்பகத்தை எட்ட குழந்தைக்கு கடினமாக இருக்காது.
04:41 மேலும் குழந்தையின் வாய் நன்றாக மார்பத்துடன் இணையவும் எளிமையாக இருக்கும்.
04:47 இரண்டாவது குழந்தையின் உடலை ஒழுங்காக வைப்பது.
04:51 நாம் சாப்பிடும் போது, எப்போதும நம் தலை, கழுத்து மற்றும் உடல் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
04:57 அதேபோல பால்குடிக்கும் போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடல் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்
05:06 இதனால் குழந்தை எளிதாக பாலை விழுங்க முடியும்.
05:10 இப்போது குழந்தையின் உடலை வைப்பதற்கான மூன்றாவது விஷயத்தைக் காண்போம்.
05:16 தாய் குழந்தையின் முழு உடலையும் தாங்க வேண்டும்.
05:22 இல்லையெனில் குழந்தை மார்பகத்துடன் நன்றாக இணைய அதிகமான முயற்சி எடுக்க வேண்டிவரும்.
05:30 அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் தாடையின் நிலையைக் காண்போம்.
05:34 குழந்தையின் மூக்கு, மார்பக காம்பிற்கு நேராக இருக்க வேண்டும்.
05:39 தாடையானது மேல்நோக்கி மார்பகத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும்.
05:44 இது பாலூட்டும்போது areola ன் கீழ்பெரும்பகுதி குழந்தையின் வாயினுள் செல்வதை உறுதிசெய்யும். இதனால், குழந்தை அதிகமாக பால் குடிக்க கீழ் தாடையை பயன்படுத்தும்.
05:55 குறிப்பு- Areola என்பது மார்பக காம்பை சுற்றி இருக்கும் கருப்பு பகுதி.
06:00 இப்போது குழந்தை சரியான நிலையில் உள்ளது, அடுத்து மார்பகத்தை எவ்வாறு பிடிப்பது என காண்போம்.
06:07 மற்றொரு கையின் விரல்களை பயன்படுத்தி தாய் தன் மார்பகத்தை C வடிவத்தில் பிடிக்க வேண்டும்.
06:15 படத்தில் காட்டப்படும் தாய் தன் வலது மார்பகத்தை பிடிக்க இடது கையை பயன்படுத்துகிறார்.
06:21 கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலைகளை புரிந்துகொள்ள, தாயின் வலது மார்பகக் காம்பை கடிகாரத்தின் மையமாக கற்பனைசெய்து கொள்க.
06:30 தாய் தன் இடது கட்டைவிரலை இந்த கடிகாரத்தில் 12 ல் வைக்க வேண்டும்.
06:35 இடது ஆட்காட்டி மற்றும் நடு விரல்களை 6 ல் வைக்க வேண்டும்.
06:42 விரல்களை எப்போதும் குழந்தையின் உதடுகளுக்கு இணையாக வைக்க வேண்டும்.
06:47 ஏன்? இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.
06:52 வடாபாவ் அல்லது burgerஐ நாம் சாப்பிடும்போது, நமது உதடுகள் கிடைமட்டமாக திறக்கிறது.
06:58 வடாபாவ் அல்லது burgerஐ பெரியதாக கடிக்க அதை கிடைமட்டாக பிடிக்கிறோம்.
07:03 இங்கே, கட்டைவிரல் மற்று மற்ற விரல்கள் உதடுகளுக்கு இணையாக வைக்கப்படுகிறது.
07:10 வடாபாவ் அல்லது burgerஐ செங்குத்தாக வைத்தால், அதை பெரியதாக கடிக்க முடியாது.
07:16 அதேபோல, குழந்தையின் உதடுகளின் திசையை கவனிக்கவும்.
07:21 இங்கு உதடுகள் கிடைமட்டமாக உள்ளன.
07:24 எனவே, விரல்கள் மற்றும் கட்டை விரல்களை மார்பத்தின் மீது கிடைமட்டமாக வைக்க வேண்டும்.
07:32 இது areola ன் பெரும் பகுதி குழந்தையின் வாயினுள் செல்ல உதவும்.
07:39 குழந்தையின் உதடுகளுக்கு இணையாக இருப்பது தவிர, மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளியில் தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் இருக்க வேண்டும்.
07:50 வடாபாவ் அல்லது burgerஐ சாப்பிடும்போது, அதை மிக அருகில் வைத்தால் பெரிதாக கடிக்க முடியாமல் நமது விரல்கள் தடுத்து விடும்.
08:00 மிக தூரத்தில் வைத்தால், வாயில் வைக்க சரியான வடிவில் இருக்காது.
08:07 எனவே, பெரிதாக கடிக்க சரியான தூரத்தில் வைக்க வேண்டும்.
08:13 அதேபோல குழந்தைக்கும், இங்கு காட்டப்படுவது போல மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளி சரியானதாக இருக்கும்.
08:21 இந்த இடைவெளி, குழந்தையின் வாயில் areolaன் பெரும்பகுதி செல்ல தாயின் விரல்கள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும்
08:31 மார்பக காம்பை மட்டும் தாய் அழுத்தக்கூடாது, அது குறைந்த அளவு பால் கொடுக்கும்
08:36 areola க்கு அடியில் இருக்கும் பெரிய பால் சுரப்பிகளில் இருந்து பால் வெளிவர அதை அழுத்த வேண்டும்
08:42 குழந்தை நன்றாக மார்பகத்துடன் இணைந்திருக்க மார்பகத்தை சரியான வடிவில் வைக்க வேண்டும்.
08:50 படத்தில் காட்டியுள்ளபடி, தாயின் கட்டை விரல் மார்பகத்திற்கு மேல் பக்கமாக இருக்க வேண்டும்
08:55 இரண்டு விரல்கள் மார்பகத்தின் கீழ் பக்கமாக இருக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க
09:01 மீண்டும் வடாபாவ் அல்லது burger உதாரணத்திற்கு செல்வோம்.
09:06 வடாபாவ் அல்லது burger ஐ சரியாக பிடித்த பிறகு, பெரிதாக கடிக்க அதை எப்போதும் அழுத்துகிறோம்.
09:12 அதேபோல, தாயும் தன் மார்பகத்தை சற்று அழுத்தி C வடிவத்தில் பிடிக்க வேண்டும்.
09:18 இது குழந்தையின் வாயில் மார்பகத்தின் பெரும்பகுதி செல்ல உதவும்.
09:23 ஆனால் தாய் தன் மார்பகத்தை கத்திரி வடிவில் பிடித்து அழுத்தக்கூடாது என்பதை நினைவுகொள்க.
09:30 கத்திரி வடிவ அழுத்தம், மார்பகத்தை குறைத்து மார்பக காம்பை மட்டும் வாயில் செலுத்தும்.
09:36 மார்பகத்தின் இருபுறமும் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் கொண்டு சமமான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
09:43 இல்லையெனில், மார்பக காம்பு மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ சாய்ந்து சரியாக வாயினுள் செல்லாது.
09:51 சிலநேரங்களில், தாய் தன் குழந்தையை வேறு நிலையில் பிடிக்க விரும்பலாம்
09:56 இந்த படத்தில் குழந்தை தாயை பார்த்தவாறு இல்லை
10:00 குழந்தையின் தலை, மார்பகத்தை நோக்கி கீழ் இருந்து அல்லாமல் மார்பகத்த்தின் பக்கமாக

கொண்டுவரப்பட்டுள்ளது

10:07 குழந்தையின் உதடுகள் இப்போது செங்குத்தாக உள்ளன. எனவே தாய் தன் மார்பகத்தை U வடிவில் பிடிக்குமாறு தன் விரல்களை வைக்க வேண்டும்
10:17 எந்த பாலூட்டும் முறையிலும், குழந்தையின் உதடுகள் உள்ள திசையில்தான், தாய் தன் மார்பகத்தை பிடித்திருக்கும் விரல்கள் மற்றும் கட்டை விரல் இருக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க.
10:28 இப்போது, குழந்தை, Football பிடிப்பு முறையில் மார்பகத்தை வாயினுள் செலுத்தி பால் குடிக்க தயாராக உள்ளது.
10:34 சரியாக மார்பகத்தை வாயினுள் செலுத்துவதற்கான வழிமுறை இந்த தொடரின் மற்றொரு tutorialல் விளக்கப்படுகிறது.
10:41 குழந்தையின் வாயினுள் சரியாக மார்பகத்தை செலுத்தியபின், மார்பகம் பெரியதாகவோ அல்லது கணமாக இல்லையெனில்- தாய் தன் கையில் இருந்து மார்பகத்தை விடுவித்து கொள்ளலாம்.
10:53 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10:57 இந்த tutorialல் நாம் கற்றது, குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்ற சரியான பாலூட்டும் பிடிப்பு முறையை தேர்ந்தெடுத்தல்
11:04 பாலூட்டும் முன் தாய் செய்யவேண்டியவை மற்றும் Football பிடிப்பு முறைக்கான படிப்படியான வழிமுறைகள்..
11:12 இந்த tutorial, Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது
11:18 Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
11:26 இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்.
11:30 இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
11:38 இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும்.
11:44 இந்த tutorialக்கான domain reviewer, Dr. Rupal Dalal, MD Pediatrics.
11:50 இந்த tutorial, உணவியலாளர் Tasneem Shaikh மற்றும் animator, Shital Joshi ஆல் உருவாக்கப்பட்டது.
 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி.

Contributors and Content Editors

Debosmita, Venuspriya