CellDesigner/C2/Installation-of-CellDesigner-on-Linux/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:20, 12 March 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | வணக்கம். Installation of CellDesigner on Linux OS குறித்த tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த tutorialஇல், நாம் கற்கப் போவது, CellDesigner 4.3ஐ தரவிறக்கம் செய்து, Ubuntu Linux Operating Systemஇல் install செய்வது மேலும் |
00:18 | CellDesignerஇன் draw area வில், ஒரு Compartment ஐ உருவாக்குவது பற்றியாகும். |
00:23 | இங்கு நான் பயன்படுத்தியிருப்பது, Ubuntu Operating System 14.04 ,CellDesigner version 4.3 ,Java version 1.7 |
00:35 | இந்த tutorialஐத் தொடர, Linux Operating Systemஇல் அடிப்படை செயல்பாடுகள் பற்றி கற்றிருக்க வேண்டும். |
00:42 | தெரியாவிட்டால், தகுந்த Linux tutorialsஐ, www.spoken-tutorial.org websiteஇல் காணவும். |
00:51 | CellDesignerஐ install செய்ய, உங்கள் web browserஐத் திறந்து, இங்கு காண்பிக்கப்பட்டுள்ள URLக்கு செல்லவும். |
01:00 | வலது புறமிருக்கும் Download CellDesigner button மீது click செய்யவும். |
01:07 | ஒரு புதிய web-page திறக்கப்படும். |
01:09 | கீழே scroll செய்து, Downloadஐக் காண்க. |
01:13 | Download for Linux 64 bit மற்றும் Download for Linux 32 bit ஆகியவை காட்டப்படுகின்றன. |
01:20 | இப்போது, இந்தக் கணினியின் OS type விவரங்களை எப்படி அறிவது என்று பார்க்கலாம். |
01:26 | இதற்கு கணினியின் மேல் வலது மூலையில் இருக்கும், System Settings icon மீது click செய்யவும். |
01:34 | கிளிக் செய்தவுடன், System Settings பக்கம் திறக்கிறது. |
01:40 | System panelஇன் கீழ், 'Details' icon மீது double click செய்யவும். |
01:48 | இங்கு 'Details' எனும் புதிய window திறக்கிறது. உங்கள் கணினியின் ‘OS type’, 64-bit அல்லது 32-bit, எது என்பதை சரிபார்க்கவும். |
02:00 | என்னுடையது 64 bit கணினியாகும். இப்போது, இந்த windowவை மூடி விட்டு, browserக்குத் திரும்புவோம். |
02:07 | உங்களுடையது 32 bit கணினியாக இருந்தால், 32 bit versionஐ தரவிறக்கவும். |
02:14 | நான் Download for Linux 64 bit இணைப்பினை click செய்கிறேன். |
02:19 | உடனே, ஒரு புதிய window திறக்கப்படுகிறது. |
02:22 | நான் ஒரு புதிய user என்பதால், நான் First Time User என்பதை click செய்து தேர்வு செய்கிறேன். |
02:26 | பின்னர் Continue மீது click செய்யவும். |
02:29 | இப்போது, சில தனிப்பட்ட விவரங்களை நிரப்பும்படி கேட்கப்படுகிறது. |
02:33 | இவற்றை நிரப்பிய பின், Download buttonஐ click செய்யவும். |
02:37 | ஒரு dialog box திறக்கிறது. இங்கு Save File buttonஐ click செய்யவும். |
02:44 | இணைய வேகத்தைப் பொறுத்து இதற்கு சிறிது நேரம் ஆகலாம். |
02:49 | File பதிவிறக்கம் ஆனவுடன், Ctrl+Alt+Tயை ஒன்றாக அழுத்துவதன் மூலம் terminalக்கு செல்லுங்கள். |
02:58 | என்னுடைய default Downloads folderஇல், ஏற்கனவே fileஐ பதிவிறக்கம் செய்து விட்டேன். |
03:04 | எனவே, முதலில் அந்த folderக்கு செல்கிறேன். cd space Downloads என type செய்து, Enter அழுத்தவும். |
03:15 | ls என type செய்து, Enter அழுத்தவும் |
03:20 | நாம் பதிவிறக்கம் செய்த file இங்கு உள்ளது. |
03:25 | நீங்கள் 32 bit installerஐ பதிவிறக்கம் செய்திருந்தால், fileஇன் பெயர் 64க்கு பதிலாக 32 எனக் கொண்டிருக்கும். |
03:32 | இங்கிருந்து நீங்கள் 32 bit installer fileஇன் பெயரை terminal commandகளில் பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள். |
03:39 | இப்போது நாம், fileக்கான அனுமதியை மாற்ற வேண்டும். எனவே, |
03:43 | sudo space chmod space 777 space hyphen capital R space CellDesigner hyphen 4.3 hyphen linux hyphen x64 hyphen installer.run |
04:08 | என type செய்து Enter அழுத்தவும் |
04:12 | கேட்கப்படும் போது, admin passwordஐ type செய்து, Enter அழுத்தவும் |
04:19 | இப்போது நாம் dot forward slash CellDesigner hyphen 4.3 hyphen linux hyphen x64 hyphen installer.run என type செய்து Enter அழுத்துவுதன் மூலம், fileஐ run செய்யலாம். |
04:39 | Setup wizard dialog box திறக்கப்படுகிறது. |
04:43 | Next button மீது click செய்யவும். |
04:47 | I accept the agreement என்பதை click செய்து, Next மீது சொடுக்கவும். |
04:54 | CellDesigner install செய்யப்பட வேண்டிய directoryயை, Installation Directory dialog காட்டும். |
05:00 | அது /home/<your username>/CellDesigner4.3 எனக் காட்டும். Next மீது சொடுக்கவும். |
05:10 | அது Ready to Install எனக் கூறுகிறது. திரும்ப Next மீது சொடுக்கவும். |
05:17 | Installation தொடங்கப்படும். |
05:20 | அது முடிந்தவுடன், ‘View Readme File’ என்பதை தேர்வுநீக்கம் செய்து, Finish button மீது சொடுக்கவும். |
05:29 | Ctrl + Alt + T keyகளை அழுத்துவதன் மூலம், நாம் இப்போது புதிய terminalஐத் திறக்கலாம். |
05:34 | ls என type செய்து Enter அழுத்தவும். |
05:39 | நாம் இங்கு runCellDesigner4.3 fileஐக் காணலாம். |
05:44 | CellDesignerஐத் திறக்க நாம் இந்த fileஐ இயக்க வேண்டும். |
05:48 | எனவே dot forward slash runCellDesigner4.3 என type செய்து Enter அழுத்தவும். |
06:00 | நமது Linux இயந்திரத்தில், இப்போது CellDesigner window திறக்கப்பட்டுள்ளது. |
06:05 | Main menu barஐ நம்மால் சரியாகக் காண முடியவில்லை என்பதை கவனிக்கவும். அதனைக் காண்பிக்க செய்வதற்கு, system settingsஐ மாற்ற வேண்டும். |
06:15 | கணினியின் மேல்வலது மூலையில் உள்ள 'System Settings' icon மீது click செய்யவும். |
06:23 | Click செய்தவுடன், System Settings பக்கம் திறக்கப்படுகிறது. |
06:28 | 'Personal panel இன் கீழ், 'Appearance' மீது double-click செய்யவும். |
06:34 | 'Appearance' எனும் window திறக்கப்படுகிறது. |
06:38 | 'Look' tabஇன் கீழ், Themeற்கு செல்லவும். |
06:43 | 'Theme' boxஇல் உள்ள drop-down menuவில் இருந்து, 'Radiance'ஐத் தேர்வு செய்த பின், windowவினை மூடவும் |
06:53 | Main menu bar இப்போது தெளிவாகத் தெரிவதை கவனிக்கலாம். அடுத்து பார்க்கலாம் |
07:01 | புதிய documentஐத் திறக்க, Fileஐ click செய்து, New மீது சொடுக்கவும் |
07:07 | மாறாக, menu barஇல் உள்ள New icon மீது click செய்யலாம். அல்லது Ctrl + N keyகளை அழுத்தலாம் |
07:16 | திரையில் New Document என்ற dialog box தோன்றி, fileக்கு பெயரிடுமாறு கூறுகிறது |
07:23 | 'Create and Edit' என fileஇன் பெயரை type செய்யவும் |
07:30 | Width 900 எனவும், Height 800 எனவும் அமைக்கவும். |
07:36 | கீழே உள்ள Ok buttonஐ சொடுக்கவும் |
07:40 | ஒரு தகவல் பெட்டி திறக்கிறது. |
07:43 | நாம் கொடுத்த பெயரில் அனைத்து இடைவெளிகளும், underscoreஆக மாறுகிறது. |
07:48 | எனவே நமது fileஇன் உண்மையான பெயர் 'Create underscore and underscore Edit'. Okவை சொடுக்கி, அடுத்து பார்க்கலாம் |
07:58 | மையத்தில் உள்ள வெள்ளைப்பகுதி, draw area ஆகும். |
08:02 | Menu bars, toolbars மற்றும் பல panelகள் குறித்து விவரமாகப் பிந்தைய tutorialகளில் கற்கலாம். |
08:09 | Toolbarஇல் இருந்து வேறு எந்த iconஐயும் தேர்வு செய்வதற்கு முன்னர், Select Mode iconஐ click செய்யவும். |
08:16 | இது தேர்வு கருவியாக செயல்படுகிறது. இந்த தேர்வு கருவி மூலம், நாம் draw areaவில் தேர்வு செய்தல், வரைதல் மற்றும் componentகளை நகர்த்தவும் செய்யலாம் |
08:25 | நாம் ஒரு componentஐ வரைவதற்கு முன்னர், Grid Snap மற்றும் Grid Visible, CellDesigner windowவில் இயங்குகின்றன என்பதை உறுதி செய்து கொள்வோம். |
08:35 | அதற்கு, main menu barஇல் Edit மீது click செய்யவும். |
08:39 | Scroll down செய்து, Grid Snap மீது click செய்யவும். |
08:43 | மீண்டும் Editற்கு சென்று, Grid Visible மீது click செய்யவும். |
08:49 | Grids, componentகளை draw areaவில் சரியாக ஒன்றுபடுத்த உதவுகின்றன. |
08:54 | இப்போது List மற்றும் Notes areaக்களின் நிலைகளில் மாற்றம் செய்வோம். |
08:59 | List area, Notes area மற்றும் Draw area பற்றி முந்தைய tutorialஇல் நாம் கற்றதை நினைவுகூறவும். |
09:06 | தெரியாவிட்டால், இத்தொடரில், முந்தைய tutorialகளைக் காணவும். |
09:12 | மேலும் தொடர்ந்து, List areaவின் இடத்தினை மாற்றலாம். |
09:15 | View optionக்கு சென்று, List இனை click செய்து, ‘Right’ optionஐத் தேர்ந்தெடுக்கவும். |
09:24 | இது ‘List’ இனை, draw areaவின் வலது புறத்திற்கு மாற்றும் |
09:30 | எல்லைக்கோடுகளை இழுப்பதன் மூலம், areaக்களின் அளவினை மாற்றலாம். |
09:35 | நான் எல்லைக்கோடு மீது cursorஐ வைக்கிறேன். |
09:38 | நீங்கள் ஒரு double headed arrowவினைப் பார்க்கலாம். அதனை இழுப்பதன் மூலம் draw area பகுதியை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். |
09:45 | நாம் draw areaவில் செயலாற்றுவது எவ்வாறு எனப் பார்க்கலாம். |
09:49 | அதற்கு முன், நாம் CellDesigner window வில் அனைத்து iconகளையும் காண முடிய வேண்டும். |
09:55 | அதற்கு, main menu barஇல் Viewவிற்கு செல்லவும். |
10:00 | Change Toolbar Visibleஐ click செய்து, Show All optionஐத் தேர்ந்தெடுக்கவும். |
10:09 | இப்போது CellDesigner windowவில் அனைத்து iconகளையும் காணலாம். அடுத்து பார்க்கலாம். |
10:17 | ஒரு cell அல்லது intracellular compartmentஐக் குறிப்பதற்கு, நாம் toolbarஇல் இருந்து Square iconஐ பயன்படுத்துவோம். எனவே அதனை click செய்யவும். |
10:28 | பின்னர் draw areaவில் click செய்யவும். Mouse buttonஐ விடுவிக்காமல், அதனை இழுத்து ஒரு சதுரம் வரைந்து, பின்னர் விடுவிக்கவும். |
10:38 | திறக்கப்படும் 'Property of Compartment' dialogஇல், Name இனை Cell என்றும், Size 1.0 எனவும் குறிப்பிட்டு, Ok click செய்யவும். |
10:52 | Name, compartmentஇன் கீழே தோன்றும். |
10:57 | Compartment nameஇன் நிலையைக் கூட நம்மால் மாற்ற முடியும். |
11:01 | அதனைச் செய்ய, இங்கு Cellஎனக் கருதப்படும் compartment nameஇனை தேர்வு செய்யவும் |
11:07 | இப்போது, அதை எங்கு வைக்க நினைக்கிறீர்களோ, அங்கே இழுத்து வைக்கவும். |
11:14 | நாம் Fileஐ சொடுக்கி, Save Asஐ click செய்து, இந்த fileஇனை save செய்வோம். |
11:22 | இப்போது உங்கள் fileஐ save செய்ய தகுந்த folderஐ தேர்வு செய்க. |
11:26 | நான் 'Desktopஇல் save செய்ய விரும்புகிறேன் |
11:28 | எனவே, நான் save செய்ய விரும்பும் folderஆன Desktop மீது double click செய்கிறேன். |
11:34 | பின்னர் கீழே வலதுபுறமுள்ள Ok button ஐ click செய்யவும். |
11:38 | திரும்ப, கீழே வலதுபுறமுள்ள Ok buttonஐ சொடுக்கவும். நமது file இப்போது save ஆகியது. |
11:46 | CellDesignerஐ மூட, Fileஐ click செய்து, Exitஐ சொடுக்கவும். |
11:52 | இப்போது நாம் fileஐ save செய்த folderக்கு செல்லலாம். எனவே நான் Desktop செல்கிறேன். இங்கு எனது file உள்ளது |
12:00 | File, .xml formatஇல் save ஆகியுள்ளதை கவனிக்கவும். இது defaultஆன file format ஆகும். |
12:08 | மேலும் இந்த fileஐ, CellDesignerஇல் மட்டுமே திறக்க முடியுமென்பதை கவனிக்கவும். |
12:12 | இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்:இந்த tutorialஇல் நாம் |
12:15 | CellDesigner version 4.3ஐ எவ்வாறு தரவிறக்கம் செய்து, Ubuntu Linux OS இல் install செய்வது, மேலும் CellDesigner இல் Compartment உருவாக்குவது பற்றி கற்றோம். |
12:27 | கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள். |
12:35 | Spoken Tutorial திட்டக்குழு,செய்முறை வகுப்புகள் நடத்துவதுடன், இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோர்க்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய mail எழுதவும்... |
12:45 | இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும். |
12:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . ...
நன்றி. |