Gedit-Text-Editor/C2/Handling-Tabs/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 14:48, 31 January 2018 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
00:01 | gedit Text editor ல் Handling tabs குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:04 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: tabகளை Add, move, re-order மற்றும் close செய்தல் |
00:13 | Browse செய்ய மற்றும் file களை திறக்க Side Panel ஐ பயன்படுத்துதல். |
00:19 | *Line number களை நுழைத்தல்
text ஐ Wrap செய்தல். |
00:22 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
Ubuntu Linux 14.04 operating system மற்றும் gedit 3.10 |
00:32 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:38 | gedit Text editor ஐ திறப்போம் . |
00:42 | Default ஆக gedit Text editor , Untitled Document 1 என்ற பெயருடைய ஒரு tab ஐ கொண்டுள்ளது. |
00:49 | இப்போது டுட்டோரியலை இடைநிறுத்திவிட்டு, screen ல் காட்டப்பட்டுள்ள code ஐ type செய்க. |
00:56 | இது ஒரு C language program ஆகும். |
00:58 | நாம் program ஐ save செய்யலாம். |
01:01 | Keyboard ல் Ctrl + S key களை ஒன்றாக அழுத்தவும். |
01:06 | Save dialog-box ல், sample dot c என்ற பெயரை enter செய்க. |
01:11 | extension ‘c’ என்பது, இது C language program என்பதை குறிக்கிறது. |
01:16 | நீங்கள் சேமிக்க விரும்பும் folder ஐ தேர்வு செய்யுங்கள். |
01:20 | நான் Desktop தேர்வுசெய்து Save button ஐ click செய்கிறேன். |
01:25 | Tab ன் பெயர் sample dot c என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும். |
01:29 | நீங்கள் file ஐ சேமித்த பிறகு, program ல் பல வண்ணங்களை கவனித்தீர்களா? |
01:35 | இது ஏனெனில், 'gedit Text editor, type செய்யப்பட்ட code ஐ C program என்று அடையாளம் காண்கிறது. |
01:42 | நாம் இனிவரும் டுட்டோரியல்களில், syntax highlighting பற்றி அதிகம் காண்போம். |
01:47 | status bar, 'C' க்கு மாறியிருப்பதையும் கவனிக்கவும். |
01:52 | Window ன் பெயர் sample dot c' என்று மாறியிருப்பதையும் நாம் காணலாம். |
01:57 | புதிய tab ஐ சேர்க்க, Main menu வில் File மற்றும் New ஐ click செய்யவேண்டும். |
02:04 | Document ல் sample.c க்கு வலது பக்கம், Untitled Document 1 என்ற பெயருடைய புதிய tab உருவாகியிருக்கும். |
02:12 | மீண்டும், window வில் மேலே உள்ள தலைப்பு Untitled Document 1 என்று மாறியிருக்கும். |
02:18 | ஆகவே, செயல்பாட்டில் உள்ள tab ன் பெயர், window வின் தலைப்பாக காட்டப்பட்டுள்ளது. |
02:23 | இப்போது, புதிய tab ஐ திறக்க மற்றொரு வழியை கற்கலாம். |
02:27 | Toolbar ல் New icon ஐ click செய்யவேண்டும். |
02:31 | Untitled Document 2 என்ற மற்றொரு tab உருவாக்கப்பட்டிருக்கும். |
02:35 | Tab களின் எண்கள் 1 ல் இருந்து தொடங்கி, திறக்கப்படும் ஒவ்வொரு புதிய tab க்கும் ஒவ்வொன்றாக உயரும். |
02:43 | அதனால் இந்த tab ன் எண் 2 என கொடுக்கப்பட்டிருக்கும். |
02:47 | இதே முறையில் மேலும் இரண்டு புதிய document களை நாம் உருவாக்கலாம். |
02:52 | இப்போது, நமக்கு sample.c ஐயும் சேர்த்து மொத்தம் 5 tab கள் உள்ளன. |
02:58 | இந்த tab களுக்கு இடையே நாம் எப்படி செல்வது. |
03:01 | Tab bar ன் இரண்டு முனைகளிலும் ஒரு முக்கோண button இருப்பதை கவனிக்கவும். |
03:07 | நீங்கள் இந்த button களை tab களுக்கு செல்ல பயன்படுத்தலாம். |
03:12 | 'Sample.c என்ற document தெரியும்வரை, இடதுபக்க முக்கோண button ஐ click செய்யவேண்டும். |
03:19 | Tab களை எப்படி மூடுவது ? அது மிகவும் சுலபம். |
03:22 | Main menu வில், File மற்றும் Closeஐ click செய்யவும். |
03:27 | மாற்றாக, tab ல் 'X' button ஐ மட்டும் click செய்யலாம். |
03:32 | இதேபோல், Untitled Document 2 மற்றும் 3 ஐ மூடலாம். |
03:39 | ஆகவே, நம்மிடம் sample dot c, Untitled Document 1 மற்றும் Untitled Document 4 ஆகியவை இருக்கும். |
03:47 | இப்போது, மேலும் இரண்டு புதிய document களை சேர்ப்போம். |
03:52 | அந்த இரண்டு புதிய tab களும் Untitled Document 2 மற்றும் 3 என பெயரிடப்படும். |
03:57 | Document கள், கீழே கட்டப்பட்டுள்ளபடி வரிசைப்படுத்தப்பட்டு எண்ணிடப்படும். |
04:03 | Gedit ன் குறைந்த பதிப்புகளில், வரிசைப்படுத்துதல் வேறுபட்டிருக்கலாம் |
04:08 | அத்தகைய வேறுபாடுகள் பதிப்புகளில் வரலாம், கற்பவர் அவற்றை கையாள தயாராக இருக்கவேண்டும். |
04:15 | இப்போது நாம் tabகளை மாற்றியமைப்போம். |
04:18 | முதலில்,'Untitled Document1 ஐ தேர்வுசெய்யவும். |
04:21 | இடதுபக்க mouse button ஐ அழுத்தி sample.c file ன் இடது பக்கத்தில் விட வேண்டும். |
04:27 | இடது mouse-button ஐ விட்டு விடவும். |
04:30 | Tab மாற்றியமைக்கப்பட்டிருக்கும். |
04:33 | இதேபோல் tab 2 மற்றும் 4 ஐ மாற்றியமைப்போம். |
04:38 | அடுத்து, tab ஐ வேறு window க்கு நகர்த்த கற்கலாம். |
04:42 | முதலில், நாம் நகர்த்த விரும்பும் sample.c என்ற tab ஐ தேர்வு செய்யவும். |
04:47 | பிறகு, tab ன் மேல் right-click செய்து 'Move to New Window ஐ தேர்வு செய்யவேண்டும்.' |
04:52 | Sample.c புதிய window வில் திறக்கும். |
04:56 | நாம் sample.c ல் இருந்து Untitled Documents என்ற மற்ற window க்கு, மாறுவோம். |
05:02 | 'Main menu க்கு சென்று View பின் Side Panel ஐ click செய்யவும். |
05:07 | 'Side Panel, windowன் இடது பக்கம் திறக்கும். |
05:12 | Side panel ல் ,document களின் அனைத்து பெயர்களையும் நாம் பார்க்கலாம். |
05:17 | அவற்றின் வரிசை, window panel ல் தோன்றும் வரிசைப்படியே அமைந்திருக்கும். |
05:22 | Side panel ல் Untitled Document 2 ஐ click செய்க. |
05:27 | அந்த document இப்போது செயல்பாட்டில் இருக்கும். |
05:31 | 'gedit Text editor window ல் உள்ள document களை, முதலில் செய்ததுபோல் நாம் மாற்றியமைப்போம். |
05:37 | 'Untitled Document 4 Tab ஐ click செய்க. |
05:40 | File ஐ click செய்து, இழுத்து கடைசி tab க்கு பிறகு விட வேண்டும். |
05:46 | Document ன் வரிசை, side panel லிலும் மாறியிருப்பதை கவனிக்கவும். |
05:52 | Side panel ஐ மூட, மேலே வலது பக்கம் 'X' button ஐ click செய்தால் போதும். |
05:58 | gedit Text editor file ல் குறிப்பிட்ட வரிசை எண்ணிற்கு எப்படி செல்வது என்பதை கற்போம். |
06:04 | sample.c file க்கு திரும்புவோம். |
06:07 | Main menu ல் Search மற்றும் Go to Line ஐ click செய்க. |
06:12 | gedit Text editor windowவின் மேல் வலது மூலையில், Go to Line dialog-box தோன்றுகிறது. |
06:20 | Dialog -box ல், எண் 8 ஐ enter செய்து பிறகு Enter keyஐ அழுத்தவும் |
06:26 | Cursor , எண் 8 க்கு செல்கிறது. status bar ல் உள்ள வரிசை எண்ணும் 8 என்றிருப்பதை காணலாம். |
06:33 | ஆனால், text, வரி எண்ணோடு காட்டப்பட்டால், cursor ஐ கண்டுபிடிப்பது சுலபமாக இருக்கும். |
06:40 | Code ன் வரி எண்களை காட்ட, Main menu வில் Edit மற்றும் Preferences ஐ தேர்வு செய்யவும். |
06:47 | gedit Preferences dialog-box தோன்றும். |
06:50 | View tab ஐ click செய்க. |
06:52 | Display line numbers option ல் checkmark ஐ வைக்க வேண்டும். |
06:56 | Highlight current line option ல் checkmark ஐ வைக்க வேண்டும்.Close button ஐ click செய்க. |
07:04 | Code ன் வலது பக்கம் வரி எண்கள் காட்டப்படுவதை கவனிக்கவும். |
07:09 | மேலும் cursor காட்டப்படும் வரி, bold ல் இருக்கும். |
07:14 | அடுத்து நாம் text wrapping ஐ பற்றி கற்கலாம். |
07:18 | Program ல் உள்ள code ன் வரி , gedit Text editor window ஐ விட நீளமானதாக இருக்கலாம். |
07:24 | ஆகவே, text ன் மொத்த வரியையும் படிப்பது கடினமானதாகும். |
07:29 | Text wrapping, text ஐ window வின் அளவிற்குள் மூட உதவும். |
07:34 | sample.c program க்கு திரும்புவோம். |
07:37 | Main menu வில், Edit ஐ click செய்த பிறகு Preferences ஐ click செய்யவும். |
07:43 | Enable text wrapping என்ற option, default ஆக check செய்யப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். |
07:50 | அந்த box ஐ uncheck செய்யவேண்டும். Close button ஐ click செய்க. |
07:55 | Program ன் இறுதியில் code ன் ஒரு வரியை நான் சேர்க்கிறேன். |
08:00 | Text ன் நீளம் window வின் நீளத்தை விட அதிகம் இருப்பதை கவனிக்கவும். |
08:05 | இப்போது, நாம் Enable text wrapping' option ஐ check செய்வோம். |
08:10 | Text, window க்கு பொருந்தும் வகையில் தெளிவாக மூடப்பட்டிருக்கும். |
08:15 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம். |
08:20 | இந்த டுட்டோரியலில் நாம் கற்றது,
tabகளை Add, move, re-order மற்றும் close செய்தல். |
08:26 | Browse செய்வதற்கும் file ஐ திறப்பதற்கும் side panel ஐ பயன்படுத்துதல். |
08:30 | * வரிசை எண்களை நுழைத்தல் Text ஐ wrap செய்தல். |
08:34 | உங்களுக்கான வேலை, இதோ. |
08:37 | gedit Text Editor ல் 5 புதிய tab களை உருவாக்கவும். |
08:41 | One, Two, Three, Four மற்றும் Five என அவற்றை சேமிக்கவும். |
08:47 | இப்போது, அவற்றை Three, Two, One, Five மற்றும் Four என்று மறுவரிசைப்படுத்தவும். |
08:54 | Side Panel ஐ திறக்கவும். |
08:56 | 'Side Panel ல், file Five ஐ click செய்து சில text களை enter செய்யவும். |
09:01 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:08 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:17 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:21 | இந்த டுட்டோரியலில் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:26 | கேள்விகள் எழும் நிமிடம் மற்றும் நொடியை தேர்வுசெய்யவும். உங்களது கேள்வியை சுருக்கமாக கேட்கவும். |
எங்களது குழுவில் உள்ள ஓருவர் அதற்க்கு பதிலளிப்பார் | |
09:36 | Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. |
09:43 | இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
09:48 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |