Avogadro/C2/Create-Surfaces/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:08, 3 January 2018 by Venuspriya (Talk | contribs)
|
|
---|---|
00.01 | அனைவருக்கும் வணக்கம். Create surfaces குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00.07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, மூலக்கூறின் பண்புகளைப் பார்ப்பது, |
00.13 | partial charge கொண்டுள்ள அணுக்களை Label செய்வது |
00.17 | Van der waals surface ஐ உருவாக்குவது |
00.20 | electrostatic potential energy களைப் பொறுத்து surface இன் வண்ணத்தை மாற்றுவது. |
00.25 | இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS version. 14.04 |
00.31 | Avogadro version 1.1.1. |
00.35 | இந்த டுடோரியலைப் பின்பற்ற, Avogadro interface குறித்து பரிச்சயம் இருக்க வேண்டும். |
00.41 | அது தொடர்பான டுடோரியல்களுக்கு எங்கள் வலைதளத்தை பார்க்கவும். |
00.47 | இங்கே Avogadro window வை திறந்துள்ளேன். |
00.51 | Insert Fragment Library யில் இருந்து ஒரு butane மூலக்கூறை உள்ளே சேர்க்கவும். |
00.57 | Build menu வை கிளிக் செய்து Insert ->fragment ஐ கிளிக் செய்யவும். |
01:04 | alkanes folder ஐ டபுள் கிளிக் செய்து திறந்து butane.cml ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:11 | Insert பட்டனை கிளிக் செய்யவும். |
01:14 | dialog box ஐ மூடவும். |
01:17 | n-butane இன் மூலக்கூறு மாதிரி panel இல் காட்டப்படுகிறது. |
01:21 | Select menu வில் இருந்து Select none option ஐ தேர்வு செய்து ஏற்கனவே இருக்கும் தேர்வை நீக்கவும். |
01:26 | இனி மூலக்கூறின் பண்புகளைக் காணலாம். |
01:30 | View வை கிளிக் செய்து, Properties option ஐ தேர்வு செய்யவும். |
01:35 | sub-menu வில் இருந்து, Molecule Properties ஐ கிளிக் செய்யவும். |
01:39 | Molecule Properties window திறக்கிறது. இதில்IUPAC Molecule Name, Molecular weight, Chemical Formula, Dipole moment முதலிய தகவல்கள் இருக்கும். |
01:54 | OK வை கிளிக் செய்து விண்டோவை மூடவும். |
01:57 | இது போல அணுக்களின் பண்புகளைப் பார்க்க properties மெனுவில் இருந்து Atom properties optionஐ கிளிக் செய்யவும். |
02:04 | மூலக்கூறில் இருக்கும் அனைத்து அணுக்களைப் பற்றிய Element, Type, Valence, Formal charge தரவுகளைக் கொண்ட ஒரு பட்டியல் தோன்றும். |
02:17 | dialog boxஐ மூடவும் |
02:20 | பட்டியலில் இருந்து மற்ற பண்புகளான Angle, Torsion மற்றும் Conformer ஐ ஆய்ந்தறியவும். |
02:27 | மூலக்கூறில் partial charge உள்ள அணுக்களை எப்படி label செய்வது என்று தெரிந்து கொள்வோம். |
02:33 | Display settings ஐ கிளிக் செய்யவும். Display Types லிஸ்டில் இருந்து, Label என்ற checkbox ஐ குறியிடவும். |
02:43 | Label check box இன் வலது பக்கம் உள்ள Spanner symbol மீது கிளிக் செய்க. |
02:48 | Label Settings விண்டோ திறக்கிறது. |
02:51 | atom labels text drop down இல் இருந்து Partial charge option ஐ கிளிக் செய்யவும். இப்போது மூலக்கூறில் உள்ள அனைத்து அணுக்களும் partial charge ஆக label இடப்பட்டுள்ளது. |
03:01 | partial charge இன் பரவல், carbon அணுக்களின் வேதிவினைகளைக் கணிக்க பயன்படுகிறது. |
03:07 | அணுக்களை partial charge ஆக labeling செய்வதன் மூலம் Inductive effect ஐ விளக்க முடியும். |
03:14 | ஒரு hydrogen க்கு பதிலாக chlorine ஐ வைப்போம். carbon சங்கிலியில் உள்ள partial charge மதிப்பில் ஏற்படும் மாறுதல்களைக் கவனிக்கவும். |
03:22 | inductive effect இன் காரணமாக chlorine அணுக்களின் அருகில் இருக்கும் carbonகள் அதிக நேர்மின் தன்மை அடைகிறது. |
03:28 | நம்மால் பிணைப்புகளையும் label செய்ய முடியும். bond labels text box இன் மீது கிளிக் செய்யவும். |
03:35 | drop-down menu பிணைப்புகளை label செய்யும் optionகளைக் கொண்டுள்ளது. |
03:39 | bond length இன் மீது கிளிக் செய்யவும். எல்லா பிணைப்புகளுக்குமான bond lengths, panel இல் காட்டப்படுகிறது. |
03:46 | label களின் வண்ணத்தை மாற்ற, வண்ணங்கள் நிரப்பப்பட்டுள்ள பெட்டிகளின் மீது கிளிக் செய்யவும். |
03:51 | Select atoms label color விண்டோவில் தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து OK buttonமீது கிளிக் செய்யவும். |
03:59 | நாம் X, Y மற்றும் Z direction இல் லேபிள்களை நகர்த்தலாம். |
04:04 | label shift மெனுவில் இருந்து. increment அல்லது decrement buttonகளை கிளிக் செய்யவும்
dialog boxஐ மூடவும். |
04:12 | Avogadroவின் மற்றொரு மிக உபயோகமான வசதி, பரப்புகளை உருவாக்கும் வசதியாகும். |
04:18 | extensions மெனுவில் பரப்புகளை உருவாக்கும் தேர்வு உள்ளது. |
04:24 | extensions மெனுவை கிளிக் செய்து, create surfaces option மீது கிளிக் செய்யவும். |
04:30 | திரையில் create surface dialog box தோன்றும். |
04:34 | Surface type drop-down இல் இரண்டு option கள் உள்ளன: Van der waals மற்றும் electro-static potential. |
04:42 | Electrostatic potential surfaces இன்னும் Avogadro வில் support செய்யப்படவில்லை. |
04:48 | Van der waals option ஐ தேர்வுசெய்யவும். Color By drop down இல் Nothing ஐ தேர்வுசெய்யவும். |
04:55 | Resolution ஐ Medium என அமைக்கவும் |
04:58 | Iso value ஐ zero என அமைக்கவும். Calculate பட்டனை கிளிக் செய்யவும். |
05:04 | Panel இல் van der waals surface காட்டப்படுகிறது. |
05:07 | dialog boxஐ மூடவும் |
05:11 | Van der waals surface என்பது ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறுடன் எந்தெந்த பரப்புகளில் வினைபுரியும் என்று காட்டுவதாகும். |
05:19 | surface settings ஐ மாற்ற: அந்தந்த பரப்புகளுக்குரிய spanner symbol இன் மீது கிளிக் செய்யவும். |
05:26 | surface setting dialog box திறக்கிறது. slider ஐ இழுத்து opacityயை சரிசெய்யவும். |
05:34 | Render drop-down இல் Fill, lines மற்றும் points முதலிய பல்வேறு தோற்ற அமைப்புகளை தேர்வு செய்ய முடியும். |
05:42 | முன்னிருப்பாக fill தேர்ந்தெடுக்கப்படும். |
05:45 | பரப்பின் வண்ணத்தை மாற்ற: positive option க்கு அடுத்து இருக்கும் வண்ணம் நிரப்பப்பட்ட பெட்டியை கிளிக் செய்யவும். |
05:52 | அடிப்படை வண்ண அட்டவணையில் இருந்து ஒரு வண்ணத்தை தேர்வு செய்ய அதன் மேல் கிளிக் செய்து OK ஐ கிளிக் செய்யவும். |
06:00 | Create surface விண்டோவில் அடுத்ததாக Color by drop-down இல் இருந்து Electrostatic potential ஐ தேர்வு செய்யவும் |
06:07 | resolutionஐ medium என அமைக்கவும். Iso value வை 0.02 க்கு அமைக்கவும்.
|
06:14 | Iso value ஐ குறைவாக அமைப்பதால் மென்மையான பரப்பு கிடைக்கும். |
06:18 | Calculate button ஐ கிளிக் செய்யவும் |
06:21 | Panel இல் நாம் 1-chloro butane இன் பரப்பை காண்கிறோம், இது அந்த மூலக்கூறில் உள்ள அணுக்களின் electro-static potential valueகளுக்கு தகுந்தவாறு வண்ணமிடப்பட்டுள்ளது |
06:31 | Electrostatic potential surface மூலக்கூறின் charge distributionகளை காட்டுகிறது |
06:37 | இது மூலக்கூறின் எதிர்வினையைக் கணிக்க பயன்படுகிறது. |
06:42 | முன்னிருப்பாக அதிக electronegativity உள்ள பரப்புகள் சிவப்பு வண்ணத்திலும் குறைந்தவை நீல வண்ணத்திலும் காட்டபட்டிருக்கும் |
06:49 | இங்கே இன்னும் சில electro-static potential surfaces உள்ள மூலக்கூறுகளின் மாதிரிகள் உள்ளன. |
06:56 | Aniline மற்றும் cyclohexylamine. |
07:00 | cyclohexylamine இல் உள்ள Nitrogen இன் electron density, aniline ஐ விட அதிகமாக localize ஆகியுள்ளது |
07:08 | எனவே cyclohexylamine ஒரு வலிமையான காரமாகும். |
07:12 | அனைத்தையும் நினனவு கூர்வோம். இந்த டுடோரியலில் நாம் கற்றுக்கொண்டது .மூலக்கூறின் பண்புகளை தெரிந்துகொள்வது |
07:20 | partial charge உள்ள அணுக்களை Label செய்வது. |
07:24 | Van der waals surface ஐ உருவாக்குவது |
07:27 | electrostatic potential energies க்கு தகுந்தவாறு வண்ணமிடுவது ஆகியவை. |
07:33 | பயிற்சிக்காக acetaldehyde மற்றும் formamide இன் வினைத்திறனை electro-static potential surfaceஐப் பயன்படுத்தி ஒப்பிடுக |
07:43 | partial charge உள்ள அணுக்களை Label செய்யவும் |
07:47 | சரியாக செய்து முடிக்கப்பட பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும் |
07:51 | சிகப்பில் காட்டப்பட்டுள்ள எதிர்மின் ஆற்றல் acetaldehyde இன் oxygen அணுவின் மீது அதிகமாக localize ஆகியுள்ளது. |
07:58 | எதிர்மின் ஆற்றல் formamide இல் அதிகமாக delocalize ஆகியுள்ளது |
08:02 | எனவே Acetaldehyde தான் Formamide ஐ விட அதிக வினைத்திறன் வாய்ந்தது. |
08:07 | இந்த வீடியோ Spoken tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. உங்களிடம். நல்ல bandwidth இல்லையெனில் இதை பதிவிறக்கி பார்த்துக்கொள்ளலாம். |
08:15 | நாங்கள் spoken tutorialகளை பயன்படுத்தி workshop நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம். நீங்கள் இந்த இமெயில் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம் |
08:22 | இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது. |
08:29 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி. |