Java/C3/Exception-Handling/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:26, 11 December 2017 by Venuspriya (Talk | contribs)
00:01 | Exception Handling குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது: Exception ; Checked மற்றும் Unchecked Exceptions ; try-catch block மற்றும் finally block களைக் கொண்டு exceptionகளைக் கையாள்வது |
00:20 | இதற்கு நாம் பயன்படுத்துவது::Ubuntu 14.04 JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1 |
00:32 | இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும் |
00:39 | தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அறியலாம். |
00:45 | ஒரு programஐ செயல்படுத்தும் போது எற்படும் எதிர்பராத நிகழ்வு, exception ஆகும். |
00:52 | இது programஇன் இயல்பான ஓட்டத்தில் குறுக்கிடுவதுடன், அசாதாரண terminationஐ விளைவிக்கிறது. |
01:00 | exceptionகள் ஏற்படுவதன் அடிப்படையில், unchecked exceptions மற்றும் checked exceptions என வகைப்படுத்தப்படுகின்றன. |
01:08 | இப்போது eclipseஐ திறந்து, ExceptionDemo எனும் புதிய projectஐ உருவாக்குவோம். |
01:16 | இந்த projectஇனுள், exception handlingஐ விளக்குவதற்கு தேவையான classகளை உருவாக்குவோம். |
01:24 | Marks எனும் புதிய classஐ உருவாக்குவோம் |
01:28 | இப்போது Marks classஐ குறிப்பதற்கு, பின்வரும் codeஇனை type செய்யவும் |
01:34 | இந்த program, marks arrayஇல் store செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களின் மதிப்பெண்களை print செய்யும் |
01:41 | இந்த programஐ run செய்து, outputஐ சரி பார்க்கலாம். |
01:45 | arrayஇல் உள்ள மதிப்புகள் அச்சிடப்பட்டு வருகின்றன என்பதை நாம் காணலாம். |
01:50 | இல்லாத ஒரு ' array element 'ஐ அணுக முயற்சித்தால், என்ன நடக்கும் என்று பார்க்கலாம் |
01:57 | இப்போது பின்வரும் codeஇனை type செய்யவும் |
02:00 | நமது arrayஇல் 5 elementகளே உள்ளன என்பதை அறிவோம்.. |
02:04 | ஆனால் இந்த statement இல், நாம் index 50 எனும் இல்லாத elementஐ அணுக முயற்சிக்கிறோம். |
02:12 | இப்போது இந்த programஐ run செய்யலாம் |
02:15 | வரி எண் 7இல் “ArrayIndexOutOfBoundsException“ என பிழை காண்பிக்கப்படுகிறது. |
02:25 | இந்த தகவல் exceptionஇன் விவரங்களான, exceptionஇன் வகைப்பாடு, அது எங்கே ஏற்பட்டது மேலும் இதர தகவல்களையும் குறிப்பிடுகின்றது |
02:35 | இந்த பிழைக்கு பிறகு program நிறுத்தப்படுவதால், print statement செயல்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவும் |
02:42 | இது Unchecked exceptionக்கான உதாரணமாகும். |
02:46 | Unchecked exceptions இயக்கப்படும் போது, சரி பார்க்கப்படுவதால், அவை Runtime exception என்றும் அழைக்கப்படுகின்றன |
02:54 | ஒரு எண்ணை பூஜியத்தால் வகுப்பது, இல்லாத array elementஐ அணுகுவது போன்ற programming bugs மற்றும் logical errorகளை அவை கையாள்கின்றன. |
03:07 | இப்போது try catch block மூலம் exception ஐக் கையாள்வது பற்றி கற்போம். |
03:13 | try blockஇனுள் உள்ள codeஇன் இந்த பகுதி, ஒரு exception ஐ உருவாக்க முடியும் |
03:19 | இதற்கு தொடர்புடைய catch block, exceptionஇன் விவரங்களை .'object eஇல் பெற முடியும். |
03:26 | catch blockஇனுள், பிழை தகவல்களைக் காண்பிப்பதற்கு அல்லது பிழையிலிருந்து மீள்வதற்கான codeஇனை எழுதலாம் |
03:34 | இப்போது eclipseக்கு மாறுவோம் |
03:37 | முதலில் இதுபோன்ற exceptionக்கு காரணமான code அருகில் ஒரு try blockஐ சேர்க்கலாம். |
03:44 | இப்போது நாம் தொடர்புடைய ஒரு catch blockஐ சேர்க்க வேண்டும் |
03:48 | இப்போது பின்வரும் codeஇனை type செய்யவும் |
03:51 | இங்கே “Array Overflow Exception occurred” எனும் ஒரு தனிப்பயனாக்க செய்தியை print செய்கிறோம் |
03:57 | அடைப்புக்குறிகளுக்குள், ArrayIndexOutOfBoundsExceptionக்கான உதாரணத்தை உருவாக்கியுள்ளோம் |
04:05 | ArrayIndexOutOfBoundsException வகைப்படும் exceptionகளை, இந்த block கைப்பற்ற முடியும். |
04:11 | இப்போது programஐ run செய்வோம். |
04:14 | பிழை தகவல் print ஆகியுள்ளதைக் காணலாம் |
04:18 | இந்த முறை, marks array print ஆகுவதும், செயல்படுத்தப்படுகின்றது |
04:24 | இவ்வாறு exceptionகளைக் கையாளலாம். |
04:27 | அடுத்து பல catch blockகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம் |
04:32 | பல்வேறு வகையான exceptionகள், ஒரு block மூலம் எழுப்பப்படும் போது அவற்றைப் பயன்படுத்தலாம். |
04:38 | try blockஇனுள் பின்வரும் codeஇனை type செய்யவும். |
04:42 | codeஇன் இந்த வரி, ஒரு array elementஐ பூஜ்யத்தால், அதாவது aஇன் மதிப்பால் வகுக்கிறது |
04:49 | எனவே முதலில் ஒரு ArithmeticException எழுப்பப்படுகிறது. |
04:53 | இப்போது ArithmeticExceptionஐக் கையாள இன்னொரு catch blockஐ இணைப்போம் |
04:58 | எனவே தற்போதுள்ள catch blockற்கு அடுத்து பின்வரும் codeஇனை type செய்யவும். |
05:03 | மீண்டும் programஐ run செய்யலாம் |
05:06 | இந்த முறை, "Arithmetic Exception occurred" எனும் பிழை முதலில் கண்டறியப்பட்டுள்ளதால், தகவல் print ஆகியுள்ளது. |
05:13 | try catch block இன் வெளியே உள்ள மீதமுள்ள codeஇன் பகுதி செயல்படுத்தப்படுகின்றது. |
05:19 | அடுத்து checked exceptionsஐ பற்றி பார்ப்போம் |
05:23 | Compile timeஇன் போது Checked exceptions சரி பார்க்கப்படுகின்றன. |
05:27 | எனவே programஐ run செய்வதற்கு முன்பு, அவற்றைக் கையாள வேண்டும் |
05:31 | எடுத்துக்காட்டாக: இல்லாத ஒரு fileஐ அணுகுவது அல்லது network மெதுவாக இயங்கும் போது, network systemஐ அணுகுவது. |
05:41 | இப்போது Eclipseக்கு மாறி, MarksFile எனும் புதிய classஐ உருவாக்குவோம் |
05:47 | main methodஐ சேர்ப்போம். |
05:50 | இப்போது கணினியில் உள்ள ஒரு fileஐ படிக்க வேண்டும். |
05:54 | எனவே பின்வரும் codeஇனை type செய்யவும். |
05:57 | இங்கு FileReader object fr , null என initialize செய்யப்பட்டுள்ளது |
06:03 | FileReader objectஐ பயன்படுத்தி ஒரு fileஐ அணுகவோ, படிக்கவோ முடியும் |
06:08 | Eclipse ஒரு பிழையை காண்பிக்கும். |
06:11 | பிழையை திருத்த, அதை click செய்து, import FileReader java dot io என்பதை double click செய்யவும். |
06:19 | FileReader class, java dot io packageஇலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது |
06:25 | நாம் package மற்றும் அதன் பயன் பற்றி விவரமாக, பிந்தைய tutorialஇல் கற்கலாம். |
06:31 | Home folderஇல் உள்ள Marks எனும் fileஐ அணுகுவதற்கு frஐ அனுமதிக்க, பின்வரும் codeஇனை type செய்யவும் |
06:40 | இங்கு காட்டப்பட்டுள்ள தடம், கணினியின் home folderக்கு என மாற்றம் செய்யப்பட வேண்டும். |
06:46 | இப்போது ஒரு பிழை தோன்றுகிறது. Codeஇன் இந்த வரி FileNotFoundExceptionஐ உருவாக்கக் கூடும் என்பதை அது குறிக்கிறது |
06:55 | Errorஇல் click செய்து , Surround with try/catch என்பதை double click செய்யவும். |
07:00 | Eclipse தானாகவே try catch blockஐ புகுத்தி, பிழையை திருத்துவதை நாம் காணலாம். |
07:08 | எனவே இது checked exception என்பதை புரிந்து கொள்கிறோம். |
07:12 | அடுத்து finally blockஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் |
07:16 | பின்வரும் codeஇனை type செய்யவும். |
07:18 | finally block பொதுவாக try-catch blockஐ பின்பற்றும். |
07:22 | இந்த blockஇல் உள்ள code, exception ஏற்பட்டாலும் இல்லாவிடினும், செயல்படுத்தப்படுகிறது. இது print statementஐக் கொண்டுள்ளது. |
07:32 | இப்போது finally blockஇனுள் உள்ள file குறிப்பினை மூடலாம். |
07:37 | எனவே type செய்க, fr dot close |
07:40 | இப்போது இது IOException ஐ எழுப்பலாம் என்பதை Eclipse குறிக்கிறது |
07:45 | எனவே errorஇல் click செய்து Surround with try/catch என்பதை double click செய்யவும். |
07:51 | இப்போது programஐ run செய்யலாம். |
07:54 | FileNotFoundException எனும் தகவல் print ஆகியுள்ளதைப் பார்க்கலாம். |
07:59 | ஏனெனில் Marks எனும் பெயரில் நமது home folderஇல் file ஏதும் இல்லை |
08:04 | fr இன்னும் பூஜ்ய மதிப்பையே குறிப்பதால் நாம் ஒரு NullPointerException ஐக் கூட காணலாம் |
08:12 | ஆனால் finally blockஇனுள் உள்ள print statement செயல்படுத்தப்படுவதை நாம் காணலாம். |
08:18 | இப்போது Marks எனும் text fileஐ home folderஇல் உருவாக்கலாம் |
08:23 | நீங்கள் windows பயன்படுத்தினால், உங்கள் local driveஇல் text fileஐ உருவாக்கி, அதன் தடத்தைக் குறிப்பிடுங்கள் |
08:29 | எடுத்துக்கட்டாக இவ்வாறு குறிப்பிடலாம் D:\\Marks.txt |
08:37 | இப்போது programஐ மீண்டும் run செய்யலாம். |
08:40 | Marks file உருவான பின், exceptionகள் ஏதும் இல்லையென்பதை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம் |
08:46 | மேலும் “Inside finally block” print ஆகியுள்ளது. |
08:50 | fr எனும் FileReader Object மூடப்படுகின்ற cleanup operationஉம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. |
08:58 | இதன் மூலம் இந்த tutorialஇன் முடிவுக்கு வருகிறோம். |
09:02 | சுருக்கமாகப் பார்ப்போம். |
09:04 | இந்த tutorialஇல் நாம் கற்றது: Exception ; Checked மற்றும் Unchecked Exceptions ; try-catch block மற்றும் finally block களைக் கொண்டு exceptionகளைக் கையாள்வது |
09:17 | ஒரு பயிற்சியாக, NullPointerException எனும் மற்றொரு Runtime Exceptionஐக் கற்கவும் |
09:24 | இந்த tutorialஇன் Assignment தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ள Demo.java என பெயரிட்ட Java programஐப் பார்க்கவும் |
09:31 | இந்த codeஐ run செய்யும் போது, ஒரு exception எழுப்பப்படும். |
09:35 | Exceptionற்கு காரணமான codeஐக் கண்டறியவும். |
09:40 | try-catch block பயன்படுத்தி அதை சரி செய்யவும். |
09:43 | கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள். |
09:54 | Spoken Tutorial திட்டக்குழு, spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய mail எழுதவும்... |
10:09 | இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும். |
10:20 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா,குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
... நன்றி. |