BOSS-Linux/C3/The-grep-command/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Grep command குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial ல் grep command பற்றி கற்கலாம். |
00:09 | நாம் இதைச் சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம். |
00:12 | இந்த tutorial ஐப் பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது |
00:15 | Linux Operating System |
00:18 | மற்றும் GNU BASH version 4.2.24 |
00:22 | இந்த tutorial ஐ பயிற்சி செய்ய GNU bash version 4 அல்லது அதற்கு மேல் பரிந்துரைக்கப்படுகிறது |
00:30 | இதற்கு முன்னதாக Linux terminal அடிப்படைகளை அறிந்திருத்தல் அவசியம். |
00:34 | அது சார்ந்த tutorial களுக்கு இங்கே தரப்பட்டுள்ள எங்கள் இணையதளத்தை அணுகவும். |
00:39 | முதலில் regular expressions பற்றி அறியலாம். |
00:43 | Regular expressions என்பவை ஒரு line, paragraph அல்லது file ல் குறிப்பிட்ட pattern உள்ளதா என காண்பதற்கான pattern matching techniques |
00:54 | உதாரணமாக, ஒரு telephone directory ல் ஒரு தொலைபேசி எண்ணைத்தேட |
01:01 | அல்லது ஒரு paragraph ல் ஒரு keyword அல்லது line ஐ தேட நாம் grep command ஐப் பயன்படுத்தலாம். இப்பொழுது grep ற்கு செல்வோம். |
01:08 | grep, ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட pattern களை ஒன்று அல்லது பல வரிகளில், பத்திகளில் அல்லது file ல் தேடுகிறது. |
01:15 | File ன் பெயர் தரப்படாவிட்டால் grep, pattern களை standard input ல் தேடுகிறது. |
01:22 | File ன் பெயரைக் காணவில்லையெனில் grep, pattern களை standard input ல் தேடுகிறது. |
01:28 | நான் இப்பொழுது grepdemo.txt எனும் demo file மூலம் grep ன் பயன்பாடுகளை விளக்குகிறேன். |
01:35 | File ல் உள்ள content களைப் பார்ப்போம். |
01:37 | இது 13 entry களைக் கொண்ட ஒரு file. |
01:41 | ஒவ்வொரு entry யிலும் 6 field கள் உள்ளன, அவை roll number, name, stream, marks, மற்றும் stipend amount. |
01:50 | ஒவ்வொரு field உம் ஒரு கோடினால் பிரிக்கப்பட்டுள்ளது, அது delimiter என்றழைக்கப்படுகிறது'. |
01:55 | grep வேலை செய்யும் விதம் பற்றி பார்ப்போம். |
01:58 | உதாரணமாக, நாம் computers stream ல் உள்ள மாணவர்கள் யார் என அறிய grep command ஐப் பயன்படுத்த வேண்டும். |
02:04 | இதற்கு terminal ஐத் திறக்கவும். |
02:07 | இப்பொழுது terminal ல் type செய்யவும்: |
02:09 | grep, space இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் computers இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் space grepdemo .txt |
02:18 | Enter ஐ அழுத்தவும். இப்பொழுது இது computers எனும் stream ல் உள்ள entry களை பட்டியலிடும். |
02:25 | இப்பொழுது original file ல் உள்ள result களை ஒப்பிடவும். |
02:29 | மீண்டும் நமது text editor க்கு வருக. |
02:31 | Zubin உடைய entry ஐ பட்டியலிடவில்லை என காண்கிறோம். |
02:37 | இது ஏன்? ஏனெனில், “grep” தேடியது small c ஐ உடைய computers எனும் pattern ஐ. |
02:43 | ஆனால் Zubin க்கு உரிய stream, Computers ல் capital C உள்ளது. |
02:48 | pattern matching, case sensitive பண்புடையது. |
02:51 | அதை case insensitive உடையதாக்க, grep உடன் minus i (-i) option ஐப் பயன்படுத்த வேண்டும். |
02:58 | இப்பொழுது மீண்டும் terminal க்கு வந்து type செய்யவும்: grep, space, (minus) i, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் computers இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் space, grepdemo.txt |
03:12 | Enter ஐ அழுத்தவும். இது தற்பொழுது நான்கு entry களையும் பட்டியலிடும். |
03:17 | இதன்மூலம் நாம் பார்த்தது, grep நாம் கொடுக்கும் pattern உடன் பொருந்தக்கூடிய வரிகளை மட்டும் files ல் இருந்து பட்டியலிடும் என்பது. |
03:23 | இதைத் தலைகீழாகவும் செய்யலாம். |
03:26 | Pattern உடன் பொருந்தாத வரிகளையும் grep மூலம் பட்டியலிட முடியும். |
03:32 | அதற்கு minus v எனும் option நம்மிடம் உள்ளது. |
03:35 | உதாரணமாக, நாம் தேர்ச்சி பெறாத மாணவர்களுடைய entry களை திரட்டவேண்டும். |
03:40 | நம்மால் இந்த result ஐ மற்றொரு file ல் சேமிக்க முடியும். |
03:43 | அதற்கு, type செய்க: grep, space, minus iv, space இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் pass, இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் space, grepdemo.txt, space, greater than குறியீடு, space, notpass.txt |
04:02 | Enter ஐ அழுத்தவும். File இன் contentஐ காண type செய்க: cat, space, notpass.txt |
04:11 | Enter ஐ அழுத்தவும். Output காண்பிக்கப்படுகிறது. |
04:15 | இப்பொழுது prompt ல் type செய்யவும்: |
04:17 | grep space minus i space இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின், space grepdemo.txt |
04:28 | Enter ஐ அழுத்தவும். இது வேறாக உள்ளது. |
04:30 | இது தேர்ச்சிபெறாத ஆனால் result முழுமைபெறாத மாணவர்களைக் கொண்டிருக்கும். |
04:37 | file ல் பட்டியலிடப்பட்டுள்ள entry களின் வரிசை எண்ணைக் காண்பதற்கு minus n' option உள்ளது |
04:46 | Prompt ஐக் clear செய்வோம். |
04:49 | இப்பொழுது type செய்க: grep, space, -in, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின், space, grepdemo.txt |
05:01 | Enter ஐ அழுத்தவும். |
05:03 | வரிசை எண் காண்பிக்கப்படுகிறது. |
05:06 | இதுவரை கண்ட pattern கள் ஒற்றை வார்த்தை உடையவை. |
05:10 | பல வார்த்தை உடைய pattern களையும் பெற முடியும். |
05:13 | ஆனால் pattern முழுவதும் மேற்கோள் குறிகளுக்குள் வர வேண்டும். |
05:17 | அதனால் type செய்க, 'grep, space, minus i, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் ankit, space, saraf இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின், space, grepdemo.txt |
05:29 | Enter ஐ அழுத்தவும். |
05:31 | நம்மால் ankit saraf உடைய record ஐ காணமுடியும். |
05:35 | நம்மால் multiple file களிலும் pattern களைப் பெற முடியும். |
05:39 | இதற்கு type செய்க: grep, space, minus i, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் grepdemo.txt, space, notpass.txt |
05:55 | Enter ஐ அழுத்தவும். Output காண்பிக்கப்படுகிறது. |
05:59 | Multiple file களுடன் entry ஐப் பெற்ற file ன் பெயரையும் grep பதிவுசெய்கிறது. grepdemo.txt மற்றும் notpass.txt. |
06:10 | இவை notpass.txt உடைய record கள் மற்றும் இவை grepdemo.txt உடைய record கள். |
06:18 | நமக்கு 'number of matches அல்லது count மட்டும் வேண்டுமெனில். |
06:23 | அதற்கு, நம்மிடம் minus c, option உள்ளது. |
06:27 | அதனால் type செய்க:, grep, space, minus c, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் capital F, space, grepdemo.txt |
06:40 | Enter ஐ அழுத்தவும். |
06:42 | இது நமக்கு matched line களின் எண்ணிக்கைக்கான count ஐக் காட்டுகிறது. |
06:46 | இது இந்த tutorial ன் நிறைவுப்பகுதிக்கு நாம் வந்துவிட்டோம் |
06:51 | சுருக்கமாக காண்போம். |
06:53 | இந்த tutorialல் நாம் கற்றது: |
06:55 | ஒரு file ன் content களை காண்பது உதாரணம் cat, filename |
06:59 | ஒரு குறிப்பிட்ட stream ன் entry களை பட்டியலிடுவது. உதாரணம grep, computers, grepdemo.txt |
07:06 | Case களைப் புறக்கணிப்பது. உதாரணம் grep -i, computers, grepdemo.txt |
07:14 | Pattern உடன் பொருந்தாத Line கள். உதாரணம் grep -iv, pass, grepdemo.txt |
07:22 | Entry களுடன் வரிசை எண்களைப் பட்டியலிடுவது. உதாரணம் grep -in, fail, grepdemo.txt |
07:31 | Result ஐ மற்றொரு file ல் சேமிப்பது. உதாரணம் grep -iv, pass, grepdemo.txt > notpass.txt |
07:41 | மற்றும் count ஐத் தெரிந்துகொள்வது. உதாரணம் grep -c, Fail, grepdemo.txt. |
07:48 | Assignment ஆக -E, + and ? போன்ற மற்ற command களை அறிந்துகொள்ள முயலவும். |
07:56 | கீழே கொடுக்கப்பட்டுள்ள link ல் இருக்கும் video வைப் பார்க்கவும். |
07:58 | அது Spoken Tutorial project உடைய சுருக்கமாகும். |
08:01 | உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில், download செய்து பார்க்கவும். |
08:05 | Spoken Tutorial project குழு workshopகள் நடத்துகிறது |
08:11 | Online தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குகிறது. |
08:14 | மேலதிக விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும் |
08:21 | Spoken Tutorial Project ஆனது Talk to a Teacher project ன் ஒரு பகுதி. |
08:25 | இது National Mission on Education through ICT, MHRD, Government of India ன் ஆதரவு பெற்றது. |
08:32 | இந்த Mission பற்றிய கூடுதல் தகவல்கள் கீழ் கண்ட இணைப்பில் உள்ளன. |
08:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சதீஷ், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி. |