Java/C3/Static-Blocks/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Static blocks குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது: static blocks |
00:10 | static blocksஐ எவ்வாறு declare செய்வது மேலும் static blocksஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதாகும். |
00:16 | இதற்கு நாம் பயன்படுத்துவது::Ubuntu 14.04 JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1 |
00:26 | இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும் |
00:34 | மேலும் Javaவில் instance variables, static variables மற்றும் static methods பற்றி அறிந்திருத்தல் வேண்டும். |
00:43 | தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அடையலாம். |
00:48 | static blocks குறித்து கற்கலாம் |
00:52 | ஒரு Static block பொதுவாக static variableகளின் மதிப்புகளை initialize செய்ய பயன்படுகிறது. |
00:59 | ஒரு static block, static keywordஇனால் declare செய்யப்படுகிறது. |
01:03 | ஒரு Class, memoryஇல் ஏற்றப்படும் போது, Static blockகள் செயல்படுத்தப்படுகின்றன |
01:08 | ஒரு programஇல் static blockகள் இருந்தால், அவை constructorகளுக்கு முன்னதாக செயலாக்கப்படுகின்றன |
01:14 | Static blockஇனுள் நாம் instance variableகளை அணுக முடியாது |
01:19 | இப்போது Eclipseக்கு சென்று, StaticBlockDemoஎனும் புதிய project ஐ உருவாக்குவோம். |
01:26 | Projectஇனுள், Static Blockகளின் பயன்பாட்டினை விளக்க தேவையான classகளை உருவாக்குவோம். |
01:33 | src folderஇல் right click செய்து, New-> Class ஐ click செய்யவும். |
01:38 | Classஇன் பெயரை StudentEnroll என type செய்து, Enter சொடுக்கவும். |
01:44 | இப்போது StudentEnroll classஐ குறித்துக் காட்டும் வகையில், பின்வரும் codeஇனை type செய்க. |
01:49 | count மற்றும் orgname ஆகிய இரண்டு static variableகள் இருப்பதை கவனிக்கவும். |
01:54 | இப்போது Source -> ஐ click செய்து Generate Constructor using Fields என்பதை தேர்ந்தெடுக்கவும் |
02:00 | உருவாகிய codeஇலிருந்து super keyword ஐ நீக்கவும். |
02:04 | constructor ஒவ்வொரு முறை செயலாக்கப்படும் போதும், நமக்கு தகவல் printஆகும்படி செய்ய வேண்டும் |
02:09 | எனவே constructorஇனுள், பின்வரும் codeஇனை type செய்க “Constructor invoked”. |
02:15 | இப்போது variableகளின் மதிப்புகளை print செய்ய, showData( ) எனும் methodஇனை இந்த classஇல் இணைப்போம். |
02:21 | எனவே பின்வரும் codeஇனை type செய்யவும். |
02:23 | இப்போது count மற்றும் orgnameஇன் மதிப்புகளை initialize செய்ய, ஒரு static blockஇனை இணைப்போம். |
02:29 | பின்வரும் codeஇனை type செய்க. |
02:32 | orgname மற்றும் count variableகள் , static variableகள் ஆகும். |
02:36 | static keyword எனும் முன்சேர்க்கையுடன், curly bracketகளுக்குள் உள்ள இந்த குறியீடுகளின் தொகுப்பே, static block ஆகும் |
02:42 | இந்தstatic block, count மற்றும் orgnameஇன் மதிப்புகளை முறையே 100 மற்றும் IITM என initialize செய்கிறது. |
02:51 | “static block-1 is invoked” என்பதை print செய்ய, பின்வரும் code இனை static blockஇனுள் type செய்க. |
02:58 | இப்போது main methodஐக் கொண்ட இன்னொரு classஇனை இணைப்போம். |
03:03 | எனவே default packageஇன் மீது right click செய்து, New-> Class என்பதை click செய்து, பெயரை Demo என type செய்யவும். |
03:11 | Classஇனுள் , நமக்கு main method உள்ளது. |
03:15 | Main methodஐ உருவாக்க main என type செய்து, பின்னர் Ctrl+spaceஐ அழுத்தவும். |
03:21 | StudentEnroll classக்கான ஒரு object ஐ உருவக்குவோம். |
03:25 | s1எனும் object ஐ உருவாக்க பின்வரும் codeஇனை type செய்க |
03:29 | இப்போது மதிப்புகளை print செய்ய showData methodஐ செயலாக்கம் செய்வோம் |
03:33 | Type செய்க s1.showData() semicolon |
03:38 | இப்போது Demo programஐ run செய்யலாம் |
03:41 | static block, constructorக்கு முன்னதாகவே செயலாக்கப்பட்டுள்ளதைக் காணலாம் |
03:46 | static blockஇல் உள்ள வரையறைக்கேற்ப count மற்றும் orgnameஇன் மதிப்புகள் initialize ஆகியுள்ளது |
03:53 | இப்போது StudentEnroll classக்கு திரும்புவோம். |
03:57 | இப்போது static blockஇனுள் idஇன் மதிப்பை initializeசெய்யும் போது என்ன ஆகும் என்பதைப் பார்ப்போம் |
04:03 | Static blockஇனுள் type செய்க, id equals IT01 semicolon |
04:10 | இங்கே ஒரு பிழை காட்டப்படுகின்றது |
04:13 | instance variableஐ static block இனுள் அணுக முடியாது என்பதை அது குறிக்கிறது |
04:19 | இப்போது இந்த வரியை செயலிழப்பு செய்ய comment செய்து தொடர்வோம். |
04:25 | Slides க்கு திரும்புவோம் |
04:27 | ஒரு class பல static blockகளைக் கொண்டிருக்கலாம் |
04:30 | அந்த வகையில், அவை source codeஇல் தோன்றும் வரிசையில்,ஒரு முறை மட்டுமே அழைக்கப்படுகின்றன |
04:37 | அதை சரிபார்க்க Eclipseக்கு மாறவும் |
04:40 | இங்கு உள்ள static blockகற்கு அடுத்து மற்றொன்றை சேர்ப்போம் |
04:45 | பின்வரும் codeஇனை type செய்க |
04:47 | இந்த static block, count மற்றும் orgnameஇன் மதிப்புகளை முறையே 200 மற்றும் IITB என initialize செய்கிறது. |
04:57 | static blockஇனுள் பின்வரும் code இனை type செய்க. |
05:01 | இப்போது Demo programஐ run செய்யலாம் |
05:04 | outputஇலிருந்து, முதல் static blockற்கு அடுத்து, இரண்டாமாவது செயல்படுத்தப்படுவதை சரி பார்க்கலாம் |
05:10 | static variableகளான count மற்றும் orgnameஇன் மதிப்புகள், இரண்டாவது static blockஆல் புதுப்பிக்கப்படுகின்றன. |
05:18 | அவை முறையே 200 மற்றும் IITB. |
05:22 | சுருக்கமாகப் பார்ப்போம், |
05:24 | இந்தtutorialஇல் நாம் கற்றது: static block என்றால் என்ன?
அவற்றை எவ்வாறு declare மற்றும் define செய்வது; மேலும் static blockகளை எப்போது அழைப்பது மற்றும் செயலாக்கம் செய்வது |
05:37 | பயிற்சிக்கு, Static Methods இன் பயிற்சியையே தொடரவும். |
05:44 | நீங்கள் Static Methods பயிற்சியை முடித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். |
05:48 | முன்பு போல, CarService class ஐ, இந்த slideகளில் குறிப்பிட்டுள்ளது போல் வடிவமைக்கவும் |
05:54 | instance variableகள் மற்றும் static variableகளைக் கண்டறியவும். |
05:58 | instance variableகளுக்கான மதிப்புகளை initialize செய்ய, ஒரு constructor ஐ define செய்யவும் . |
06:03 | static variableகளின் மதிப்புகளை initialize செய்ய ஒரு static blockஐ define செய்யவும் |
06:08 | மேலும் main methodஐக் கொண்ட Demo classஐ உருவாக்கவும் . |
06:12 | Main methodஇனுள், CarServiceக்கான சில objectகளை உருவாக்கி, show( ) methodஇனை செயலாக்கவும். |
06:19 | கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். |
06:24 | அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள். |
06:27 | Spoken Tutorial திட்டக்குழு,
spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
06:38 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
06:42 | இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. |
06:48 | மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும். |
06:52 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி. |