Java/C3/Java-Interfaces/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:58, 23 November 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Java Interfaces ஐ பற்றிய Spoken tutorial ற்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில், நாம் பார்க்க இருப்பவை: * Interfaces ஐ உருவாக்குதல்
00:10 * Implementation class ஐ உருவாக்குதல் * Interface இன் பயன்பாடு.
00:16 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது:

Ubuntu 12.04 JDK 1.7 மற்றும் Eclipse 4.3.1

00:28 இந்த டுடோரியலைப் பின்பற்ற, Javaமற்றும் Eclipse IDEஆகியவற்றின் அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
00:36 Javaவின் Subclassingமற்றும் Abstract classes பற்றின புரிதலும் வேண்டும்.
00:42 அதற்குரிய Java tutorialகளுக்கு, காட்டப்பட்டுள்ள website இல் பார்வையிடவும்.
00:48 முதலில் Interfaceஎன்பது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
00:52 ஒரு Interface ஆனது Abstract method கள் மற்றும் static data memberகள் ஆகியவற்றைக் பெற்றிருக்கும்.
00:58 இது body அல்லாத பல methodகளின் signatureகளை define செய்கிறது
01:04 இது Interfaceஎன்னும் keyword ஐ மூலம் declare செய்யப்படுகிறது.
01:08 இப்போது, Eclipse இற்கு சென்று InterfaceDemo என்கிற புதிய project ஐ உருவாக்குவோம்.
01:15 இங்கே, நாம் Interface களின் பயன்பாட்டை விளக்க, தேவையான classes மற்றும் ’‘‘Interface ஐ முதலில் உருவாக்குவோம்.
01:24 src folder இல் right click செய்து New > Interface ஐ click செய்யவும்.
01:30 Animal என பெயரிட்டு Enter ஐ அழுத்தவும்.
01:34 இங்கு Interface என்னும் keyword ஆனது ஒரு Interface ஐ define செய்ய பயன்படுகிறது.
01:39 திரையில் காட்டப்படும் code ஐ இப்போது type செய்க.
01:43 இங்கே, Interfaceஇன் பெயர் Animal
01:46 இது மூன்று abstract method களான talk(), see()மற்றும் move()ஐ கொண்டுள்ளது
01:52 Interface இல் உள்ள அத்தகைய method கள் அனைத்தும் மறைமுகமாக Public மற்றும் abstract களாகும்.
01:59 ஒரு Interface ஆனது constant variable declaration களையும் கொண்டிருக்கக்கூடும்.
02:04 இங்கே, Constant string value mammal என்பது, type1 variable க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
02:12 மற்றும் reptiles, type2 variable இற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
02:16 Interfaces இல் define செய்யப்பட்ட அனைத்து constant value களும்மறைமுகமாக public, static மற்றும் final ஆகும்.
02:25 அடுத்து நாம் ஒரு Interface க்கான implementation class ஐ சில உதாரணங்களோடு பார்ப்போம்.
02:32 இங்கே, Human என்னும் ஒரு class, Animal Interfaces ஐ implement செய்யக்கூடியதாகும்.
02:38 எனவே, இது talk(), see() மற்றும் move() போன்ற method களுக்கு implementation ஐ வழங்க வேண்டும்.
02:45 ஒரு class ஆல் பல interface களை implement செய்ய முடியும்.
02:49 உதாரணத்திற்கு, Human class ஆனது Animals மற்றும் Action என இரண்டு interface களை implement செய்கிறது.
02:57 குறிப்பாக syntax இல் பயன்படுத்தப்பட்டுள்ள comma operator என்பது பல்வேறு interface களை கண்டறியக் கூடியதாகும்.
03:04 இப்போது இந்த class ஆனது Animal மற்றும் Action interface களில் உள்ள அனைத்து abstract method களுக்கும் implementationகளை கொடுக்க வேணடும்.
03:13 இந்த figure ஒரு implement relation ஐ குறிக்கிறது.
03:18 Animal class ஆனது ஒரு Interface ஆகும்.
03:22 Human மற்றும் Snake class இரண்டும் implementation class களாகும்.
03:28 Human class ஆனது talk(), see() மற்றும் move() போன்ற method களுக்கு அதற்கே உரிய implementation களை வழங்குகிறது.
03:36 அதேபோல் Snake class ஆனது talk(),see() மற்றும் move() ற்கான method களுக்கு அதற்கே உரிய implementation களை வழங்குகிறது.
03:45 ஒரு sample program உடன் interfaces ன் பயன்பாட்டை புரிந்து கொள்வோம்.
03:50 default package இல் right click செய்து, Human என்ற class ஐ உருவாக்கவும்.
03:56 இப்போது, ​​இதை Animal interface இன் implementation class ஆக மாற்ற type செய்க: implements Animal.
04:04 இப்போது, Eclipse IDE இல் ஒரு error வருவதை நாம் காணலாம்.
04:09 Animal Interface இற்கு ஒருimplementation ஐ வழங்க வேண்டும் என்பதை இந்த error குறிப்பிடுகிறது.
04:15 இந்த error ஐ எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம்.
04:19 இப்போது talk(), see() மற்றும் move() method களை define செய்யலாம்.
04:23 எனவே, type செய்க:: public void talk( ) curly brackets இட்டு அதற்குள் மீண்டும் type செய்க: System.out.println quotes க்குள் "I am a human and I belong to".
04:37 Animal Interface இல் declare செய்யப்பட்டstatic, final variable type1 இற்கான மதிப்பை இப்போது பயன்படுத்தலாம்.
04:45 எனவே type செய்க: + Animal.type1+ quotes க்குள் "family" அடுத்து semicolon கொடுக்கவும்.
04:54 See () method ஐ இப்போது implement செய்யலாம்.
04:57 எனவே, type செய்க: public void see( ) curly brackets க்குள் System.out.println பின் quotes க்குள் "I can see all colors" semicolon.
05:11 move() method யையும் define செய்ய வேண்டும்.
05:14 எனவே, type செய்க: public void move( ) curly brackets க்குள் System.out.println அடுத்து quotes க்குள் "I move by walking" அதன் பின் semicolon.
05:29 குறிப்பு: அனைத்து method களையும் implementation செய்தவுடன் error கள் மறைந்துவிடுகிறது
05:34 Snake class ஐ எப்படி define செய்வதென பார்ப்போம்.
05:38 நான் ஏற்கனவே எனது project இல் அதை உருவாக்கியிருக்கிறேன்


05:42 உங்கள் project இல் snake class ஐ உருவாக்கவும், அடுத்து பின்வரும் code ஐ type செய்யவும்.
05:49 இப்போது நாம் code ஐ காணலாம்.
05:52 talk(), see() மற்றும் move() போன்றனவாகிய Animal interface ன் அனைத்து method களுக்கும் இந்த class இலும் implement செய்யப்பட்டுள்ளது.
06:01 இங்கே, talk () method ஆனது I am a snake and I belong to என print செய்திடும்.
06:07 Animal.type2 மதிப்பானது print செய்திடப்பட்டு அதன் பின்னர் family .
06:13 இங்கே, see() method ஆனது “I can see only in black and white” என print செய்திடும்.
06:19 அடுத்து move () method ஆனது "I move by crawling" என print செய்யும்.
06:23 குறிப்பாகHuman class தனக்கேயுரிய implementation களை talk(), see() மற்றும் move() method களுக்கு வழங்கி இருக்கிறது.
06:31 இதேபோல் Snake class தனக்கே உரிய talk(), see() மற்றும் move() method களை அதற்கு ஏற்ற முறையில் implementation களை கொண்டுள்ளது.
06:39 இப்போது, ​​ default package இல் right-click செய்து, new> class என்பதைக் click செய்து, பெயரை ‘‘‘Demo என type செய்யுங்கள்.’‘‘
06:47 இந்த class இன் உள்ளே main method இருக்கும்.
06:51 எனவே, main என type செய்து பின்னர் main method ஐ உருவாக்க ctrl + space அழுத்தவும்.
06:58 திரையில் வரும் code ஐ type செய்ய வேண்டும்.
07:01 இந்த line இல், நாம் Animal Interface ஐ பயன்படுத்தி Human class ஐ instantiate செய்கிறோம்.
07:07 இங்கு இதைAnimal h equals new Human() என represent செய்கிறோம்;
07:14 இப்போது இந்த object ஐ பயன்படுத்தி வெவ்வேறு method களை h.talk(); h.see(); h.move(); என அழைக்கலாம்
07:26 அடுத்து, நாம் Animal Interface ஐ பயன்படுத்தி Snake class ஐ instantiate செய்வோம்.
07:31 இங்கு காட்டியபடி இந்த objectஐ பயன்படுத்தி வெவ்வேறு method களை செலுத்தலாம்.
07:38 இப்போது, ​​இந்த Demo project ஐ run செய்வோம்.
07:41 எனவே, Demo class' மீது right click செய்து Run as > Java Application என தேர்ந்தெடுக்கவும்.
07:48 output ஐ இப்போது பார்க்க முடியும்.
07:52 human class object h ஐ பயன்படுத்தி talk(), see() மற்றும் move() ஆகிய method களால் இவை print செய்யப்பட்டன.
08:00 இதேபோல் Snake class object s ஐ பயன்படுத்தி talk(), see() மற்றும் move() ஆகிய method களால் இவை print செய்திடப்படுகின்றன.
08:08 இப்போது, Interface மற்றும் abstract class இற்கு இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்வோம்.
08:14 ஒரு Interfaceஇல் அனைத்து method களும்abstract களாகும்.
08:18 Interface இல் இருக்கக்கூடாதவை,
08:23 constructor கள், concrete method கள், static method கள் மற்றும்main method கள்.
08:28 ஆனால் ஒரு abstract classஆனது இதை எல்லாத்தையும் பெற்றிருக்க முடியும்.
08:32 interface இன் variable கள் static மற்றும் final ஆக இருக்க வேண்டும்.
08:38 abstract class இற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை.
08:43 நாம் இந்த tutorial இன் முடிவுக்கு வந்தவிட்டோம். இதுவரை பார்த்ததை சுருக்கமாக கூறுவோம்.
08:48 இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு Interface ஐ உருவாக்குதல்
08:53 * Implementation class ஐ உருவாக்குதல்
08:56 Interfaces களின் பயன்பாடு.
08:59 ஒரு பயிற்சியாக, brake () மற்றும் run () method களை கொண்ட ஒரு Vehicle Interface ஐ உருவாக்கவும்.
09:07 பின்வரும் methodகளைக் கொண்ட மற்றொரு Interface Fuelஐ உருவாக்கவும் : fill(String type,int quantity), pay(int quantity,int price).
09:19 Vehicle மற்றும் Fuel interfaceகளை implement செய்யக்கூடிய subclass car ஐ உருவாக்கவும்.
09:26 இதில், brake method’, Car Applies Power brake" என print செய்ய வேண்டும் .
09:30 run method, "Car is running on 4 wheels" என print செய்ய வேண்டும்
09:35 இதேபோல் fill() method கொண்டு, fuel இல் உள்ள type யையும் quantity யையும் print செய்யலாம்
09:41 உதாரணமாக: 10 Litres of petrol.
09:44 pay() method ஆல் செலுத்தப்பட வேண்டிய fuel இன் விலையை print செய்யலாம். உதாரணமாக: Pay Rs. 640
09:53 இன்னொரு sub class Bikeஐ உருவாக்குங்கள் இது Vehicle மற்றும் Fuelஆகிய interface கள் இரண்டையும் மீண்டும் implement செய்கிறது.
10:00 இங்கே, brake method ஆனது "Bike Applies hand brake" என print செய்யலாம்.
10:05 run method ஆனது “Bike is running on 2 wheels” என print செய்யலாம்.
10:10 அடுத்து, முன் கூறியபடி fill() மற்றும் pay() method களை implement செய்யவும்.
10:15 இறுதியாக முடிவுகளை சரிபார்க்க main method ஐ கொண்டிருக்கும் ஒரு Demo class ஐ உருவாக்கவும்.
10:21 பின்வரும் website இல் உள்ள வீடியோ spoken tutorial project ஐ சுருக்கமாக காட்டுகிறது. அதை தரவிறக்கி பார்க்கவும்
10:29 spoken tutorial திட்ட குழுவானது spoken tutorialகளை பயன்படுத்தி workshop களை நடத்துகிறது.

மற்றும் online testகளில் நடத்தி தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்களை அளிக்கிறது.

10:38 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
10:41 spoken tutorial திட்டத்திற்கு NMEICT, MHRD, இந்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது.
10:48 இந்த பணி பற்றிய மேலும் தகவல்களை காட்டப்பட்டுள்ள link இல் காணலாம்.
10:52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst