Gedit-Text-Editor/C2/Common-Edit-Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 18:34, 10 November 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | gedit Text editor ல் Common Edit Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, gedit ல் அடிக்கடி பயன்படுத்தும் editing functionகள். |
00:15 | Content ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது
Undo மற்றும் Redo actions கள் Text ஐ Search மற்றும் Replace செய்வது அகியவற்றைப் பற்றி காண்போம். |
00:25 | நமது document ஐ Print செய்வது பற்றியும் நாம் காண்போம். |
00:29 | இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
Ubuntu Linux 14.04 operating system , gedit 3.10 |
00:39 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு, உங்களுக்கு ஏதேனும் operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:44 | gedit Text editor ஐ திறக்கலாம். |
00:48 | நாம் முன்பே உருவாக்கிய Students.txt எனும் file ஐ திறப்போம். |
00:55 | Open என்று பெயரிடப்பட்ட icon ஐ click செய்வதன் மூலம் அதை திறக்கலாம். |
01:01 | இது ஏற்கனவே இருக்கும் file ஐ திறக்கும் ஒரு shortcut icon. |
01:06 | ' Open Files என்ற ஒரு dialog box தோன்றும். |
01:09 | Desktop folder ஐ வலது கை பக்கம் select செய்ய வேண்டும். |
01:12 | Students.txt file ஐ தேர்ந்தெடுத்து Open ஐ click செய்யவும். |
01:17 | இப்போது text ஐ எப்படி cut, copy மற்றும் paste செய்வது என காண்போம். |
01:22 | முதலில் , cut அல்லது copy செய்ய வேண்டிய text ஐ தேர்ந்தேடுக்க வேண்டும். |
01:27 | நான் பைலில் உள்ள முதல் மூன்று மாணவர்களின் விவரங்களை cut செய்ய விரும்புகிறேன். |
01:32 | முதல் மூன்று மாணவர்களின் விவரங்களை தேர்ந்தேடுக்க cursor ஐ அந்த மூன்று line கள் முழுவதும் இழுக்க வேண்டும். |
01:39 | இப்போது text தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. |
01:42 | நாம் Toolbar ல் உள்ள Cut icon ஐ பயன்படுத்தலாம் அல்லது Main menu ல் Edit பின் Cut ஐ தேர்ந்தெடுக்கலாம். |
01:51 | மாற்றாக Ctrl + X key களை ஒன்றாக அழுத்தி text ஐ cut செய்யலாம். |
01:58 | தேர்தெடுத்த text, file ல் இல்லை என்பதை கவனிக்க வேண்டும் . |
02:03 | அந்த text நீக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் |
02:08 | அது computer இன் memory ல், clipboard என்ற பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது. |
02:13 | Clipboard , cut அல்லது copy செய்யப்பட்ட content களை சேமிக்கும். |
02:18 | Content ,paste செய்யப்படும்வரை அல்லது மற்ற content, copy ஆகும்வரை தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும். |
02:25 | gedit ல் இருந்து வெளியே வந்தவுடன், Clipboard ல் உள்ள content நீக்கப்பட்டுவிடும். |
02:31 | ' gedit டிற்கு திரும்புவோம். |
02:34 | இப்போது இந்த text ஐ ஒரு புதிய document ல் paste செய்யலாம். |
02:38 | From the Main menu, click File and New .
Main menu வில், File மற்றும் New ஐ click செய்யவும். |
02:42 | gedit window வில் Untitled Document 1 என்ற பெயருடன் ஒரு புதிய document தோன்றும். |
02:47 | இப்போது, Main menu வில் இருந்து Edit மற்றும் Paste ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:53 | Alternately, we can press Ctrl + V keys together to paste the text.
மாற்றாக, Ctrl + V key களை ஒன்றாக அழுத்தி, text ஐ paste செய்யலாம். |
03:00 | அல்லது Toolbar ல் Paste icon ஐ பயன்படுத்தலாம். |
03:04 | Students dot txt ல் உள்ள text இந்த document ல் paste செய்யப்பட்டிருக்கும். |
03:11 | Students.txt tab ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:14 | இப்போது எஞ்சியுள்ள மாணவர்களின் விவரங்களை தேர்ந்தெடுத்து அவைகளை copy செய்யவேண்டும். |
03:20 | Main menu வில், Edit மற்றும் Copy ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
03:24 | Content ஐ copy செய்ய keyboard shortcut ஆன ' Ctrl + C ஐயும் பயன்படுத்தலாம். |
03:30 | Copy செய்யப்பட்ட text இன்னும் தெரிவதை கவனிக்கவும். |
03:34 | இந்த textம் clipboard ல் சேமிக்கப்பட்டிருக்கும். |
03:38 | Untitled Document 1 என்ற tab ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
03:42 | மூன்றாவது line னிற்கு பிறகு, cursor ஐ வைத்து Enter ஐ அழுத்தவேண்டும். |
03:46 | இப்போது, context menu க்கு வலது பக்கம் click செய்து Paste ஐ select செய்யவேண்டும். |
03:52 | ஒரு குறிப்பிட்ட location ல், content, paste செய்யப்பட்டிருக்கும். |
03:56 | gedit டில் content ஐ , cut, copy' மற்றும் paste செய்ய, இது சுலபமான மற்றும் பயனுள்ள வழியாகும். |
04:04 | அடுத்து , Undo ' மற்றும் Redo option களை பார்ப்போம். |
04:07 | gedit Text editor ,ஒரு file ல் செய்யப்பட்ட எந்த மாற்றத்தையும் Undo செய்வதற்கு அனுமதிக்கிறது. |
04:13 | அடிப்படையில் , இது document இல் செய்யப்பட்ட கடைசி மாற்றத்தை அழிக்கிறது. |
04:18 | நீங்கள் ஏதேனும் தவறு செய்து அதை ' Undo செய்ய விரும்பினால், இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். |
04:23 | ' Ctrl + Z என்பது, Undo செய்வதற்கான keyboard shortcut ஆகும். |
04:27 | Undo விற்கு எதிர், Redo ஆகும். |
04:31 | Redo command , Undo action ஐ தலைகீழாகுகிறது. |
04:35 | Shift + Ctrl + Z என்பது , Redo விற்கு, keyboard shortcut ஆகும். |
04:41 | இப்போது gedit Text editor க்கு மாறுவோம். |
04:44 | "Right click செய்து "Undo" ஐ தேர்க" |
04:47 | Copy மற்றும் paste செய்யப்பட்ட text, இனிமேல் தோன்றாது. |
04:52 | copy-paste இன் செயல் தவிர்க்கப்பட்டிருக்கும். |
04:56 | திரும்பவும் ஒருமுறை undo செய்வோம்.இம்முறை , Ctrl + Z key களை ஒன்றாக அழுத்தவும் . |
05:04 | இப்போது cursor, மூன்றாவது line னிற்கு வந்திருப்பதைக் காணலாம். |
05:09 | இப்போது முந்தைய செயல் தவிர்க்கப்பட்டிருக்கும். |
05:13 | திரும்பவும் right-click செய்து Undo ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். |
05:17 | நாம் முன்பே paste செய்த மூன்று line களும் தோன்றாது. |
05:23 | Undo icon ஐ, Toolbar ரில் இருந்தும் பயன்படுத்தலாம். |
05:28 | இதுபோல் அனைத்து செயல்களையும் நாம் undo செய்யலாம். |
05:34 | இப்போது text டிற்கு திரும்புவது எப்படி ? |
05:38 | அது சுலபமானது ! Right-click செய்து Redo ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
05:42 | இப்போது, நமது செயல்களை மீண்டும் ஒரு முறை redo செய்யலாம். |
05:45 | இம்முறை, Shift + Ctrl + Z key களை அழுத்தவும். |
05:50 | நாம் Toolbar ல் உள்ள Redo icon ஐயும் பயன்படுத்தலாம். |
05:55 | நமக்கு text மீண்டும் கிடைத்துவிட்டது. |
05:57 | இப்போது Students.txt file ல் உள்ள மாணவர்களின் விவரங்கள் மட்டும் gedit window வில் copy ஆகியுள்ளதைக் காணலாம். |
06:06 | அடுத்து, Search மற்றும் Replace option களை காணலாம் . |
06:10 | நூறு வரிகளை உடைய file ல் , குறிப்பிட்ட ஒரு சொல்லை மட்டும் தேடுவது கடினமானதாகும். |
06:17 | Search function, மொத்த document டில் உள்ள ஒரு சொல் அல்லது சொல்லின் நிகழ்வுகளை தேட அனுமதிக்கிறது. |
06:24 | gedit Text editor க்கு திரும்புவோம். |
06:28 | நான் முன்பே உருவாக்கிய school.txt எனும் document ஐ திறக்கிறேன். |
06:34 | school.txt file, இந்த tutorial ன் Codefile என்ற இணைப்பில் கிடைக்கும். |
06:40 | அந்த text document ஐ தரவிறக்கி பயன்படுத்தவும். |
06:44 | இந்த document ல் நான் ஒரு குறிப்பிட்ட சொல்லை தேட விரும்புகிறேன். |
06:48 | அதற்கு, Main menu, வில் Search பிறகு Find ஐ click செய்ய வேண்டும். |
06:53 | மாற்றாக, Ctrl + F key களை ஒன்றாக அழுத்தவும். |
06:58 | அல்லது , Toolbar ல் Search for text icon ஐ பயன்படுத்தலாம். |
07:02 | Window ன், மேல் வலதுபக்க மூலையில், Find box திறக்கும். |
06:07 | Find Box ல் , School எனும் சொல்லை type செய்க. |
07:11 | school எனும் சொல் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டிருப்பதை கவனிக்கவும். |
07:18 | school என்ற சொல்லின் முதலில் வருவது, பழுப்பு நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும். |
07:24 | இப்போது Find box ன் மேல் cursor வைத்து mouse' ல் right-click செய்யவும். |
07:29 | தோன்றுகிற list ல் உள்ள option களில் Match Case ஐ click செய்யவேண்டும். |
07:34 | Only one word matches the case option. That is, capital 'S' in the word School. .
ஒரே ஒரு சொல் மட்டும் case option னுடன் பொருந்துகிறது. அது School எனும் சொல்லில் உள்ள capital 'S' |
07:41 | மீண்டும் cursor ஐ Find box ன் மீது வைத்து mouse ல் right-click செய்ய வேண்டும்.
Match Case option ஐ நீக்குக. |
07:50 | இப்போது, Main menu வில் Search ஐ click செய்து, பிறகு Replace ஐ click செய்க. |
07:56 | மாற்றாக, Ctrl + H key களை ஒன்றாக அழுத்தலாம். அல்லது Toolbar ல் , Search for and replace text icon ஐ பயன்படுத்தலாம். |
08:08 | Replace dialog-box தோன்றும். |
08:11 | Search for field ல் type செய்க, "schools" பிறகு Enter ஐ அழுத்தவும். |
08:17 | Replace with box ல் type செய்க,"colleges". Match entire word only check-box ல் குறியிடவும். |
08:26 | schools என்ற அனைத்து சொற்களும், மஞ்சள் நிறத்தில் highlight செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். |
08:31 | Replace button ஐ click செய்க. |
08:34 | இது முதலில் வரும் schools என்ற வார்த்தைக்கு பதிலாக colleges என்று மாற்றும் |
08:39 | schools என்ற அனைத்து வார்த்தைகளையும் colleges என்று மாற்ற Replace All button ஐ click செய்க. |
08:46 | Window ஐ மூட Close button ஐ click செய்யவேண்டும். |
08:50 | gedit Text editor , நாம் type செய்யும் போதே தேட அனுமதிக்கும். |
08:56 | Find box ஐ திறக்க, Ctrl மற்றும் F key களை ஒன்றாக அழுத்தவும். |
09:01 | இப்போது Find box ல் "Students" என்று type செய்க. |
09:06 | S என்ற எழுத்தை type செய்யும்போது cursor, document டில் S என்ற அனைத்து எழுத்துகளையும் highlight செய்வதை கவனிக்கவும். |
09:14 | Type செய்து முடிக்கையில் Students என்ற அனைத்து சொற்களும் highlight செய்யப்பட்டிருக்கும். |
09:20 | அடுத்து school.txt file ஐ எப்படி print செய்வது என்பதை பார்ப்போம். |
09:25 | Menu bar ல் File ஐ தேர்ந்தெடுத்து, பிறகு Print ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். |
09:30 | நாம் Toolbar ல் Print icon ஐயும் click செய்யலாம். |
09:35 | Print dialog-box தோன்றும். |
09:38 | Printer உங்கள் machine னோடு இணைக்கப்பட்டிருந்தால், அது Printer details ன் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும். |
09:44 | இந்த window வில் உள்ள tabகள் மற்றும் selectionகள், default configuration settingsக்கு தகுந்தவாறு இருக்கும். |
09:50 | உங்கள் document ஐ print செய்ய, கீழே வலது பக்கம் Print button ஐ click செய்யவும். |
09:55 | Printer configurationsகள் சரியாக இருந்தால், உங்கள் document, print செய்யப்படும். |
10:00 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம். |
10:05 | இந்த டுட்டோரியலில் நாம் கற்றது,
Cut, Copy மற்றும் Paste, Undo மற்றும் Redo, Search மற்றும் Replace text மற்றும் Print options கள். |
10:16 | இங்கே உங்களுக்கான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. |
10:19 | gedit ல், School.txt என்ற file ஐ திறக்கவேண்டும். |
10:23 | முதல் paragraph ஐ copy செய்து புதிய document டில் paste செய்யவும். |
10:27 | புதிய document ஐ SchoolNew.txt என்று சேமிக்கவும். |
10:32 | முதல் line ல் , "About School" என்று தலைப்பிடவும். மாற்றங்களை Undo செய்யவும். |
10:38 | File ன் content களில் உள்ள மாற்றங்களை கவனிக்கவும். |
10:42 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:49 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது |
10:54 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:58 | இந்த டுட்டோரியலில் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:03 | கேள்விகள் எழும் நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யுங்கள். |
11:07 | உங்களது கேள்வியை சுருக்கமாக கேட்கவும். எங்களது குழுவில் உள்ள ஓருவர் அதற்க்கு பதிலளிப்பார் |
11:13 | Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. |
11:20 | இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
11:25 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |