LibreOffice-Suite-Base/C4/Database-Design-Purpose-OrganizeTables/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
---|---|
00:00 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த tutorial ல் database design மீதான பின்வருவனவற்றைக் கற்போம் |
00:09 | நம் database ன் நோக்கத்தைத் தீர்மானித்தல் |
00:12 | தேவையான தகவல்களைத் தேடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல் |
00:15 | தகவல்களை tableகளாக பிரித்தல் |
00:19 | Database Design என்றால் என்ன? |
00:21 | Database design என்பது database ன் விரிவான data மாதிரியை உருவாக்கும் செயல்முறை ஆகும் |
00:28 | நல்ல design உடன் , database ஆல் நவீனமாக, துல்லியத்துடன் முழுமையான தகவல்களைக் கொடுக்க முடியும் |
00:37 | அதாவது பல்வேறு நிலைகளில் நம் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும் |
00:43 | data processing மற்றும் reporting க்கு தேவைகளை அறிந்து |
00:48 | சுலபமாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியும் |
00:51 | database design செயல்முறை பின்வரும் படிகளைக் கொண்டது |
00:57 | நம் database ன் நோக்கத்தைத் தீர்மானித்தல் |
01:00 | தேவையான தகவல்களைத் தேடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல் |
01:04 | தகவல்களை tableகளாக பிரித்தல் |
01:07 | தகவல் itemகளை columnகளுக்கு மாற்றுதல் |
01:11 | primary keyகளை குறிப்பிடுதல் |
01:14 | table relationshipகளை அமைத்தல் |
01:17 | நம் design ஐ துல்லியபடுத்துதல் |
01:20 | normalization ruleகளை பயன்படுத்துதல் |
01:23 | கடைசியாக database ஐ சோதித்து இயக்கி பராமரித்தல் |
01:28 | சரி |
01:32 | நம் database ன் நோக்கத்தைத் தீர்மானிக்கும் முதல் படிக்கு போகலாம் |
01:35 | எளிய Library Application ஐ கருத்தில் கொள்வோம் |
01:38 | பொதுவாக ஒரு library புத்தகங்களைக் கொண்டிருக்கும் |
01:41 | இந்த புத்தகங்கள் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் |
01:45 | அதனால் புத்தகங்களின் பட்டியல் மற்றும் உறுப்பினர்களை பராமரிக்கவும் உறுப்பினர்களுக்கு புத்தகங்கள் கொடுத்தலைக் கண்காணிக்கவும் நமக்கு ஒரு Library application தேவை |
01:56 | நம் முதல் படி தேவையான தகவல்களை கண்டு ஒழுங்கமைத்தல் |
02:01 | database ல் பதிவு செய்ய நாம் சேகரிக்கும் அனைத்து வகை தகவல்களும் இங்கு உள்ளன |
02:09 | இப்போது Library application ன் நோக்கம் நமக்கு தெரியும். இங்கே itemகளை அடையாளம் காண்போம் |
02:17 | அவை புத்தகங்கள். |
02:19 | தலைப்பு, ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் விலை ஆகியவற்றை ஒரு புத்தகம் கொண்டிருக்கும் |
02:24 | ஆசிரியரின் பிறந்த தேதி அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் போன்ற தகவல்களையும் சேமிக்க முடியும் |
02:33 | வெளியீட்டாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி ஆகியவற்றையும் சேமிக்க முடியும் |
02:38 | மேலும் பெயர், தொலைபேசி மற்றும் முகவரி கொண்ட Library உறுப்பினர்களையும் சேமிக்கலாம் |
02:45 | எப்போது புத்தகம் உறுப்பினருக்கு கொடுக்கப்பட்டது, |
02:49 | book issue date, return date, actual return date மற்றும் checked in status ஆகியவையும் உள்ளன |
02:56 | இந்த தனிப்பட்ட itemகள் attributes எனப்படும் |
03:01 | ஒவ்வொரு attributes உம் table ல் ஒரு முக்கிய column ஐ குறிக்கிறது |
03:08 | இங்கே இம்மாதிரியான கேள்விகளை எழுப்பலாம்: |
03:12 | வெளியீட்டாளரால் library க்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் தகவல்களை எவ்வாறு சேர்ப்பது? |
03:20 | உறுப்பினர்களின் பட்டியலை எவ்வாறு பராமரிப்பது? |
03:25 | ஒரு உறுப்பினர் விலகுகிறார் அல்லது முகவரியை மாற்ற விரும்புகிறார் என்றால்? |
03:32 | இந்த தகவலை எப்படி update செய்வது, எப்போது உறுப்பினர் புத்தகத்தைத் திருப்புகிறார்? |
03:38 | எந்த வகையான அறிக்கையைத் தயாரிக்க விரும்புகிறோம்? |
03:42 | எந்த புத்தகம் வாசகர்கள் மத்தியில் அதிகமாக படிக்கப்பட்டது? |
03:46 | புத்தகங்களை வாங்கிய உறுப்பினர்களால் திருப்பித் தரப்படாத புத்தகங்களின் பட்டியலை எப்படி உருவாக்குவது? |
03:55 | இப்போது சில தகவல்களைக் கொண்டுள்ளோம். அவற்றை table களாக பிரிப்பதைக் காணலாம். |
04:02 | நம் தகவல் items அல்லது attributes ஐ major entities அல்லது subjects ஆக பிரிப்போம் |
04:11 | ஒவ்வொரு subject ம் பின் ஒரு table ஆக மாறும் |
04:14 | எனவே tableகளின் ஆரம்ப பட்டியல் திரையில் காணும் image போல் இருக்கும் |
04:21 | இங்கே காட்டப்படும் major subjects அல்லது entities என்பன books மற்றும் members. |
04:26 | எனவே இவற்றை இரண்டு tableகளில் ஆரம்பிக்கலாம், ஒன்று books க்காக மற்றொன்று members க்காக |
04:33 | இப்போது Books table ஐ விவரமாக பார்க்கலாம் |
04:37 | ஏற்கனவே விவரித்தது போல் இது 10 attributes அல்லது columnகளைக் கொண்டுள்ளது |
04:43 | Title, Author, Publisher, PublisherAddress, PublisherCity, PublisherPhone, PublishYear, Price, AuthorBirthDate மற்றும் AuthorCountry. |
04:58 | எப்படி data, table லில் காட்டப்படுகிறது என பார்க்கலாம் |
05:03 | ஒவ்வொரு row அல்லது record உம் புத்தகம் ஆசியரியர் மற்றும் வெளியீட்டாளர் போன்ற தகவல்களைக் கொண்டிருப்பதைக் கவனிக்கவும் |
05:13 | இப்போது இந்த design ல் இரண்டு குறைகள் உள்ளன. |
05:17 | ஒரே ஆசிரியர் அல்லது வெளியீட்டாளரைக் கொண்டு பல புத்தகங்கள் இருக்கலாம் |
05:23 | ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரின் தகவல்கள் பல முறை வருவதைக் கவனிக்கிறோம் |
05:31 | அது கணினியின் disk இடத்தை வீணடிக்கிறது |
05:34 | இரண்டாவது பிரச்சனை இந்த design ல் உள்ளது |
05:38 | இது database anomaliesஐ அறிமுகபடுத்தும் ஆபத்தில் இயங்குகிறது |
05:44 | இப்போது anomaly என்றால் என்ன? |
05:47 | இது database ன் ஒரு பிழை அல்லது முரண்பாடு ஆகும். |
05:53 | மூன்று வகை anomalies உள்ளன: |
05:57 | முதலாவது insertion anomaly எனப்படும், |
06:01 | இது புதிய record ஐ நுழைக்கும்போது நிகழும், |
06:06 | அல்லது மற்ற attributes இல்லாமல் ஒருசில attributes ஐ database னுள் நுழைக்கமுடியாத போது நிகழும் |
06:14 | உதாரணமாக, ஒரு புது வெளியீட்டாளர் Penguin இருப்பதாக கொள்வோம் |
06:21 | Penguin வெளியீட்டாளரின் ஒரே ஒரு புத்தகத்தையாவது நம் library பெறாதவரை நம் design அவ்வெளியீட்டாளரின் தகவல்களை நுழைக்க அனுமதிக்காது |
06:34 | இரண்டாவது deletion anomaly எனப்படும், |
06:39 | இது ஒரு record ஐ நீக்கும் போது நிகழும் |
06:43 | இங்கே database ல் ஒரு row அல்லது record ஐ நீக்குவது, நாம் நீக்க விரும்புவது தவிர மேலும் தகவல்களை நீக்குகிறது |
06:51 | உதாரணமாக, நம் library ல் Orient வெளியீட்டாளரின் ‘Paradise Lost’ தலைப்புகொண்ட ஒரே ஒரு புத்தம் உள்ளதை பார்க்கிறோம் |
07:01 | இப்போது இந்த முழு record ஐயும் நீக்கினால் நாம் Orient வெளியீட்டாளரின் அனைத்து தகவலையும் இழப்போம் |
07:10 | அதேபோல் ஆசிரியர் John Milton னின் தகவலையும் இழப்போம் |
07:16 | கடைசியாக Update Anomaly ஐ பார்ப்போம் |
07:21 | இது record ஐ update செய்யும்போது நிகழும் |
07:26 | உதாரணமாக Cambridge வெளியீட்டாளர் ஒரு புது முகவரியை கொண்டிருப்பதாக கொள்வோம் |
07:32 | இப்போது இந்த வெளியீட்டாளரின் Address column ஐ update செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது |
07:40 | இங்கே இரண்டு இடங்கள். |
07:43 | Cambridge ஆயிரம் புத்தகங்களை வழங்கியது எனில் அந்த ஆயிரம் record களுக்கும் நாம் முகவரியை மாற்ற வேண்டியுள்ளது |
07:54 | மேலும் நாம் தவறுதலாக ஒரு இடத்தில் மட்டும் மாற்றிவிட்டு மற்ற இடங்களில் மாற்ற மறக்கலாம் |
08:02 | இதனால் தகவலின் துல்லியத்தன்மை போகிறது அதன் மூலம் data ஒருமைப்பாடும் கெடுகிறது |
08:11 | இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்வது? |
08:14 | நாம் மீண்டும் design செய்யவேண்டும் அதனால் ஒவ்வொரு fact ஐயும் ஒரே ஒரு முறை பதிவு செய்கிறோம் |
08:20 | ஒரே தகவல் ஒரு இடத்திற்கு மேல் திரும்ப வந்தால் அந்த தகவலை தனி table ல் வைக்க வேண்டும் |
08:29 | எப்படி என காணலாம் |
08:31 | இப்போது Books table ஐ Books, Authors மற்றும் Publisher என பிரித்துள்ளோம் |
08:38 | ஒவ்வொரு table லிலும் entity அல்லது subject ன் facts சேமிக்கப்படுவதை கவனிக்கவும் |
08:47 | இவ்வாறே Publisher table ல் வெளியீட்டாளரின் தகவலை ஒரே ஒரு முறை பதிவு செய்ய முடியும் |
08:55 | அதேபோல் தனி Authors table கொண்டிருப்பது, ஆசிரியரின் தகவலை ஒரே ஒரு முறை பதிவு செய்ய அனுமதிக்கிறது |
09:04 | இந்த table களை Books table க்கு பின்னால் எவ்வாறு இணைப்பது என்பதை அடுத்த tutorial லில் காணலாம் |
09:12 | LibreOffice ல் Database Design ன் முதல் பகுதி இந்த tutorial உடன் முடிகிறது |
09:19 | இதில் நாம் கற்றது |
09:25 | நம் database ன் நோக்கத்தைத் தீர்மானித்தல் |
09:28 | தேவையான தகவல்களைத் தேடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல் |
09:32 | தகவல்களை tableகளாக பிரித்தல் |
09:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:58 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் பிரியா. நன்றி. |