Linux/C3/The-sed-command/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். sed - stream editor ஐ பற்றிய spoken tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial இல் நாம் sed command ஐ பயன்படுத்துவுது பற்றி பார்ப்போம். |
00:11 | சில உதாரணங்களின் மூலம் அதை பார்ப்போம். |
00:14 | இந்த வீடியோவை பதிவு செய்ய |
00:16 | நான் பயன்படுத்துவது Ubuntu Linux version 12.04 Operating System
GNU BASH version 4.2.24 ஐ. |
00:26 | GNU bash version 4 அல்லது அதற்கு மேல் உள்ள version களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். |
00:34 | இதை எளிதாக பயன்படுத்துவதற்கு |
00:36 | Linux terminal ஐ பற்றிய அடிப்படை அறிந்திருக்க வேண்டும். |
00:39 | அதற்குறிய பயிற்சிகளுக்கு எங்கள் website ஐ அணுகவும்: http://spoken-tutorial.org |
00:45 | முதலில் Sed ஐ பற்றிய அறிமுகத்தை பார்போம். |
00:48 | Sed என்பது ஒரு stream editor. |
00:51 | sed ஒரு குறிப்பிட்ட file location இல் உள்ள சில text pattern களை அடையாளம் காண்கிறது. |
00:58 | அதில் display அல்லது சில editing function களைச் செய்கிறது. |
01:02 | Editing function களான Insertion, substitution மற்றும் deletion போன்றவை பொருத்தமான text pattern களில் நடைபெறுகின்றன |
01:10 | சில எடுத்துக்காட்டுகளுடன் அதை காண்போம். |
01:13 | Sed command ஐ பயன்படுத்தி print செய்வது எப்படி என பார்ப்போம். |
01:19 | என் home directory இல் seddemo.txt என்னும் file உள்ளது. |
01:24 | அதன் contents ஐ பார்ப்போம். |
01:26 | இந்த file இல் roll no, name, stream, marks, pass அல்லது fail மற்றும் stipend amount கள் போன்ற entries உள்ளன. |
01:39 | தற்போது நமக்கு இரண்டாவது line ஐ print செய்ய வேண்டும் எனில் |
01:44 | Ctrl + alt + t keys களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்க வேண்டும். |
01:53 | அதற்கு பின் இவ்வாறு type செய்க |
01:55 | “sed” பின் ஒரு space, Single quotes இன் இடையே ‘2p’ அதன் பின் ஒரு space அடுத்து seddemo.txt. |
02:03 | Enter ஐ அழுத்தவும். |
02:06 | இங்கே 2 என்பது இரண்டாம் line என்று அதன் location ஐ குறிக்கும். |
02:11 | ”P” printing என்கிற செயல்பாட்டை குறிக்கும். |
02:16 | இப்போது output ஐ பாருங்கள். |
02:18 | அந்த மொத்த file இல் இரண்டாவது line மட்டும் இரு முறை வந்துள்ளதை பார்ப்போம். |
02:25 | இதுவே p யின் default ஆன behaviour ஆகும். |
02:29 | இப்போது இரண்டாவது line ஐ மட்டும் print செய்ய |
02:33 | type செய்க ”Sed” space -n space ஐ அழுத்தி Single quotes இன் இடையே ‘2p’ அதன் பின் ஒரு space பின் seddemo.txt |
02:44 | Enter ஐ அழுத்தவும். |
02:46 | இரண்டாவது line மட்டும் print ஆவதை பாருங்கள். |
02:51 | ‘-n’ ஆனது silent mode ஐ குறிக்கும். அது தேவையில்லாத output களை தடுத்துவிடும். |
02:58 | எந்த line இல் எந்த மாற்றம் வேண்டும் என்கிற location ஐ அந்த command இல் கொடுத்திருப்போம் |
03:03 | நமக்கு இரண்டாவது line ஐ தேர்வு செய்ய வேண்டும் |
03:07 | P என்பது நாம் செய்ய இருக்கும் action அதாவது printஐ குறிக்கும் குறியீடாகும். |
03:12 | seddemo.txt என்பது file பெயரைக் குறிக்கும். |
03:18 | இது Sed command னுடைய பொதுவான syntax ஆகும். |
03:21 | இப்போது file இன் கடைசி line ஐ print செய்வோம். |
03:26 | Prompt ஐ clear செய்து |
03:29 | type செய்க: ”Sed” space -n space Single quotes ன் உள் $p அடுத்து ஒரு space பின் seddemo.txt |
03:42 | Enter ஐ அழுத்தவும். இறுதி line மட்டும் print ஆனதை பாருங்கள். |
03:49 | சரி, நாம் மீண்டும் text editor க்கு வருவோம். |
03:51 | நமக்கு 3 வது முதல் 6 வது வரையிலான line களை print செய்திட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
03:57 | terminal க்கு சென்று |
04:00 | type செய்க: ”Sed” space -n space Single quotes ன் உள் 3,6p அதன் பின் ஒரு space seddemo.txt |
04:14 | Enter ஐ அழுத்தவும். |
04:16 | இப்போது நம்முடைய output இல் மூன்றாவது முதல் ஆறாவது line வரை வருவதை பாருங்கள். |
04:21 | எந்த action ஐ யும் எதிர்மறையாக மாற்ற ஆச்சரியக்குறியை அந்த action யிற்குரிய குறியீட்டிற்கு முன்பாக சேர்க்கவும். |
04:28 | உதாரணமாக மூன்றாவது மற்றும் ஆறாவது line ஐ தவிர மற்ற அனைத்தையும் print செய்ய type செய்க
“Sed” space -n space Single quotes ன் உள் 3,6!p |
04:44 | single quotes இற்கு பிறகு, ஒரு space ஐ விட்டு seddemo.txt |
04:51 | Enter ஐ அழுத்தவும். |
04:53 | அதற்கான Output தெரிவதை பாருங்கள். |
04:56 | நமது slides இற்கு திரும்புவோம். |
04:58 | Line addressing மற்றும் context addressing. |
05:03 | இது வரையில், குறிப்பிட்ட line இல் எப்படி action களை எடுப்பது என்பதை பார்த்தோம். |
05:09 | இதுவே line addressing எனப்படும். |
05:12 | Address ஆனது line களின் எண்கள் மூலம் அறியப்படும். |
05:15 | இது ஒரு வகையான addressing. |
05:18 | மற்றொரு வகையின் பெயர், context addressing. |
05:22 | இது குறிப்பிட்ட சொல்லையோ அல்லது context ஐ யோ உடையதான ஒரு line. |
05:28 | அத்தகைய குறிப்பிட்ட சொற்களை உடைய line இல் action களை மேற்க்கொள்ள context addressing பயன்படும். |
05:36 | வழக்கமாக உபயோக படுத்தப்படும் குறியீடுகளை பயன்படுத்தலாம். |
05:39 | அதற்கான உதாரணத்தை பார்போம். |
05:42 | மீண்டும் நமது text editor இற்கு வந்து |
05:44 | நமக்கு Computer எனும் சொல்லை உடைய line களை print செய்ய வேண்டும் எனில் |
05:50 | Terminal க்கு வந்து |
05:53 | இப்படி type செய்யவும்: Sed space -n space Single quotes ன் உள் /[cC]omputers/p ஒரு space ஐ விட்டு seddemo.txt |
06:20 | Enter ஐ அழுத்தவும். |
06:23 | Computer என்னும் சொற்களை உடைய line கள் print ஆனதை பார்க்கலாம். |
06:28 | சதுர அடைப்பு குறிக்குள் pattern ஐ தெரிவு செய்ய வேண்டும். |
06:31 | அப்படி செய்வதன் மூலம் பொருத்தமான pattern களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமே தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம். |
06:36 | Pattern ஐ தெரிவு செய்யும் பொழுது இரண்டு front slash களின் இடையில் type செய்யப்பட வேண்டும் . |
06:43 | இதை File களில் print செய்வதற்கு w option ஐ பயன்படுத்தலாம். |
06:50 | இதற்கு |
06:52 | type செய்க: “Sed” space -n space Single quotesன் உள் /[cC]omputers/w space computer_student.txt, Single quote ஐ அடுத்து ஒரு space ஐ விட்டு seddemo.txt |
07:18 | பின் Enter ஐ அழுத்தவும். |
07:21 | இப்போது pattern னோடு பொருந்தும் line களும் computer_student.txt எனும் file இற்கு மாறியிருக்கும். |
07:27 | அதன் Content களை காண்பதற்கு type செய்க |
07:31 | cat space computer_studio.txt |
07:38 | Enter ஐ அழுத்தவும் |
07:42 | இப்போது entries களை காண்கிறோம் .
நாம் கொடுக்கப்போகும் pattern களை பொருத்து வெவ்வேறு file களிலும் நம்மால் எழுத முடியும். |
07:50 | Prompt ஐ clear செய்த பின் |
07:52 | type செய்க ”sed” space -n space -e space single quotesன் உள் /electronics/w space electro.txt/ Single quote ஐ அடுத்து ஒரு space ஐ விட்டு மீண்டும் –e space பின் single quotes ன் உள் ‘/civil/w space civil.txt’ இறுதியில் ஒரு space விட்டு seddemo.txt |
08:24 | Enter ஐ அழுத்தவும் |
08:28 | இங்கே –e என்னும் குறியீடு பல வழிகளை ஒருங்கே செயல்படுத்த வழிவகுக்கும். |
08:34 | இது electro.txt மற்றும் civil.txt என இரு file களை உருவாக்கும் . |
08:41 | அதில் இருப்பது என்ன என்பதை தெரிந்துகொள்ள type செய்க
|
08:43 | cat பின் ஒரு space விட்டு electro.txt |
08:49 | electronics எனும் சொல்லை உடைய பல entries ஐ இது காட்டும். |
08:54 | civil file களின் contents களை காண type செய்க |
08:58 | cat space civil.txt |
09:01 | Enter ஐ அழுத்தவும். |
09:03 | இப்போது Civil எனும் சொல்லை உடைய entries களை காட்டும். |
09:08 | இன்னும் பல command களை வேறொரு tutorial இல் பார்க்களாம். |
09:12 | அதிலும் இதே program பயன்படுத்தப் படும் |
09:14 | இந்த tutorial இன் இறுதி கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். |
09:18 | மீண்டும் நம் slide இற்கு சென்று |
09:20 | இது வரை நாம் பார்த்ததை நினைவு கூர்வோம். |
09:22 | இந்த tutorial இல் நாம் கற்றவை
Sed |
09:25 | Sed ஐ பயன்படுத்தி print செய்வது
Line addressing |
09:27 | Context addressing |
09:30 | நீங்கள் உங்களின் பயிற்சிக்காக |
09:32 | seddemo.txt file ஐ பயன்படுத்தி |
09:35 | முறையே ஆறு முதல் பன்னிரெண்டாம் வரையுள்ள record களை print செய்ய முயற்சிக்கவும் |
09:40 | கீழே கொடுக்கப் பட்டுள்ள link இல் |
09:42 | Spoken tutorial project ஐ பற்றிய தகவலை சுருக்கமாக பார்க்கலாம். |
09:46 | உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் இதை download செய்தும் பார்க்கலாம். |
09:51 | Spoken tutorial team ஆனது |
09:53 | Spoken Tutorialகளை பயன்படுத்தி Workshops களை நடத்துகிறது. |
09:55 | Online test களில் பங்கேற்று தேர்ச்சி ஆனவர்களுக்கு certificates வழங்குகிறது. |
10:00 | மற்ற விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:07 | Spoken Tutorial Project ஆனது Talk to a Teacher project இன் ஒரு பகுதி ஆகும். . |
10:11 | இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
10:18 | இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த website ஐ காணவும் http://spoken-tutorial.org\NMEICT-Intro . |
10:25 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர் தியாகராஜன், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி!! |