Linux-Old/C2/Synaptic-Package-Manager/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 02:08, 21 April 2013 by Pravin1389 (Talk | contribs)
Time | Narration |
---|---|
0:00 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:06 | இந்த டுடோரியலில் உபுன்டுவில் எப்படி அப்ளிகேஷன்களை ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜரை கொண்டு நிறுவுவது என்று பார்க்கலாம். |
0:17 | நான் இந்த டுடோரியலை விவரிக்க உபுன்டு 10.04 ஐ க்னோம் சூழ்நிலையில் பயன்படுத்துகிறேன். |
0:24 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்த மேலாளர் அனுமதி வேண்டும். |
0:29 | மேலும் இன்டர்நெட் இணைப்பு சரியாக வேலை செய்ய வேண்டும். இப்போது முதலில் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை திறக்கலாம். |
0:36 | இதை செய்ய ஸிஸ்டம்> அட்மினிஸ்ட்ரேஷன் சென்று ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மீது சொடுக்குங்கள். |
0:47 | இங்கு பாஸ்வேர்டை கேட்டு ஒரு உறுதிபடுத்தல் பெட்டி திறக்கும். |
0:55 | பாஸ்வேர்டை உள்ளிட்டு என்டர் ஐ தட்டலாம். |
1:06 | நாம் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை முதல் முறை பயன்படுத்தும் போது ஒரு அறிமுக உரையாடல் பெட்டி தோன்றுகிறது. |
1:13 | இந்த பெட்டியில் எப்படி ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது என்ற தகவல் உள்ளது. |
1:20 | நாம் அப்ளிகேஷன்களை நிறுவ ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரில் முதலில் ப்ராக்ஸி, ரெபாசிடரி ஆகியவற்றை அமைக்கலாம். |
1:29 | இதை செய்ய நாம் முதலில் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரின் சாளரத்தை திறக்கலாம். |
1:36 | செட்டிங் க்கு சென்று ப்ரிபெரன்சஸ் ஐ சொடுக்கவும். |
1:44 | திரையில் காணும் ப்ரிபெரன்சஸ் சாளரத்தில் பல டேப் கள் உள்ளன. ப்ராக்ஸியை அமைக்க நெட்வொர்க் இல் சொடுக்கலாம். |
1:55 | ப்ராக்ஸி செர்வரில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. நேரடி இணைப்பு - டிரக்ட் கனென்ஷன். மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷன். நான் இங்கு காட்டிய படி மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷனை பயன்படுத்துகிறேன். நீங்க உங்கள் தேர்வை அமைத்துவிட்டு ஆதன்டிகேஷன் பொத்தானை அழுத்தலாம்.ஹெச்டிடிபி ஆதன்டிகேஷன் சாளரம் திரையில் தோன்றுகிறது. |
2:21 | தேவையானால் யூசர் நேம் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிடுக. ஓகே மீது சொடுக்கவும். இப்போது அப்ளை மீது சொடுக்க மாறுதல்கள் செயலாகும். ஓகே மீது சொடுக்கி வெளியேறவும். |
2:38 | இப்போது மீண்டும் செட்டிங்க் க்கு போய் ரெபாசிடரிஸ் மீது சொடுக்கவும். |
2:46 | ஸாப்ட்வேர் சோர்சஸ் சாளரம் திரையில் தோன்றுகிறது. |
2:51 | உபுன்டு மென்பொருட்களுக்கு பல மூலங்கள் - சோர்சஸ் உள்ளன. டவுன் லோட் ப்ரம் என்ற கீழ் திறக்கும் மெனுவில் சொடுக்கி ரெபாசிடரிகள் பட்டியலை பார்க்க சொடுக்கி பொத்தானை அப்படியே பிடித்திருங்கள். |
3:05 | அதர் என்பதில் உலகம் முழுதும் உள்ள பல செர்வர்களின் பட்டியல் இருக்கிறது. |
3:12 | இந்த சாளரத்தை மூட கான்சல் பொத்தானை சொடுக்கவும். நான் செர்வர் ப்ரம் இந்தியா வை பயன்படுத்துகிறேன். இந்த ஸாப்ட்வேர் சோர்சஸ் சாளரத்தை மூட க்ளோஸ் பொத்தானை சொடுக்கவும். |
3:26 | இந்த கருவியை பயன்படுத்துவதை அறிய நான் விஎல்சி ப்ளேயரை நிறுவி காட்டுகிறேன். |
3:34 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை முதன் முறையாக பயன்படுத்தினால் பாக்கேஜ்களை மீண்டும் பட்டியலிட வேண்டும். இதற்கு ரீலோட் பொத்தானை அழுத்துங்கள். இதற்கு சற்று நேரமாகும். இதோ இங்கே பேக்கேஜ் பட்டியல் இன்டர்நெட் மூலமாக இடமாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. |
3:59 | இந்த மறு ஏற்றம் முடிந்ததும் நாம் டூல்பார் இல் இருக்கும் வேக தேடல் பெட்டியில் விஎல்சி என டைப் செய்யலாம். |
4:14 | இதோ எல்லா விஎல்சி பொதிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. |
4:19 | விஎல்சி பேக்கேஜ் ஐ தேர்ந்தெடுக்க அதன் பக்கத்தில் இருக்கும் சிறு பெட்டியில் சொடுக்கி தோன்றும் மெனுவில் மார்க் பார் இன்ஸ்டாலேஷன் என தேர்ந்தெடுங்கள். |
4:34 | கூடுதலாக தேவையான ரெபாசிடரி பேக்கேஜ்களை காட்டும் ஒரு உரையாடல் பெட்டி திறக்கிறது. தானியங்கியாக இவற்றையும் நிறுவ மார்க் பொத்தானில் சொடுக்கவும். |
4:46 | கருவிப்பட்டைக்கு சென்று அப்ளை பொத்தானை சொடுக்கவும். |
4:52 | இப்போது தோன்றும் சாளரம் நிறுவப்போகும் பொதிகளின் சுருக்க விவரத்தை காட்டுகிறது. நிறுவலை துவங்க அப்ளை பொத்தானை சொடுக்கவும். |
5:05 | நிறுவல் நேரம் எத்தனை பொதிகள் நிறுவ வேண்டும், அவற்றின் அளவு என்ன என்பதை எல்லாம் பொருத்ததாகும். முன் போல் இது சற்று நேரமெடுக்கலாம். |
5:25 | நிறுவல் முடிந்ததும் டவுன்லோடிங் பேக்கேஜ் பைல்ஸ் என்ற சாளரம் மூடப்படும். |
5:43 | இப்போது மாற்றங்கள் செயலுக்கு வருவதை காணலாம். |
6:00 | விஎல்சி நிறுவப்பட்டுவிட்டது. ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் சாளரத்தை இப்போது மூடலாம். |
6:09 | இப்போது விஎல்சி ப்ளேயரை நிறுவியதை உறுதி செய்து கொள்ளலாம். |
6:15 | இதை செய்ய அப்ளிகேஷன்ஸ் > சௌன்ட் அன்ட் விடியோ க்கு போகலாம். விஎல்சி மீடியா ப்ளேயர் நிறுவப்பட்டுவிட்டது. இதே போல மற்ற அப்ளிகேஷன்களையும் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மூலம் நிறுவலாம். |
6:36 | சுருக்கமாக சொல்ல இந்த டுடோரியலில் நாம் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரில் எப்படி ப்ராக்ஸி மற்றூம் ரெபாசிடரிகளை அமைப்பது எப்படி ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மூலம் ஒரு பயன்பாடு அல்லது பேக்கேஜை நிறுவுவது என்று தெரிந்து கொண்டோம். |
6:51 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
7:19 | இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து பிரியா. |