LaTeX/C2/LaTeX-on-Windows-using-TeXworks/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:43, 4 August 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு .
00:07 இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது,
00:09 MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது
00:11 TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentகளை எழுதுவது.
00:15 விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ configure செய்வது.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் Windows7 இயங்குதளம், மற்றும் MikTeX 2.9ஐ பயன்படுத்துகிறேன்.
00:27 இப்போது, TeXworks ன் முக்கிய அம்சங்களை காண்போம்.
00:31 இது எல்லா platformகளிலும் இயங்கக்கூடியது.
00:33 அது ஒரு pdf readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது.
00:36 அது இந்திய மொழி typesettingஐ ஆதரிக்கிறது.
00:39 TeXworksஐ தொடங்கும் முன், MikTeXஐ நாம் நிறுவ வேண்டும்.
00:44 MikTeX, Windowsக்கான தொடர்புடைய programகள், மற்றும், TeX அல்லது LaTeXன், ஒரு up-to-date செயலாக்கம் ஆகும்.
00:52 Windows மீது, LaTeX ல், அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது.
00:58 மேலும், TeXworks, MikTeX நிறுவுதலுடன் வரும், ஒரு முன்னிருப்பான editor ஆகும்.
01:04 www.miktex.org இணையதளத்திற்கு செல்லவும்.
01:10 பரிந்துரைக்கப்பட்ட MikTeX installerக்கு Download linkஐ க்ளிக் செய்யவும்.
01:15 இது MikTeX installer ஐ download செய்யும்.
01:18 அதை download செய்து Desktopல் சேமிக்கவும்.
01:22 அது, 154 mega byteகளைக் கொண்ட, ஒரு பெரிய file ஆகும்.
01:25 அதனால், download செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும்.
01:27 நான் ஏற்கனவே இந்த fileஐ download செய்துள்ளேன்.
01:32 நிறுவுதலைத் தொடங்க, இந்த fileஐ , டபுள்-க்ளிக் செய்யவும்.
01:36 Check boxஐ க்ளிக் செய்து, Nextஐ க்ளிக் செய்யவும்.
01:40 எல்லா முன்னிருப்பான optionகளையும் தேர்வு செய்யவும்.
01:43 நிறுவுதலுக்கு, 5ல் இருந்து, 10 நிமிடங்கள் வரை எடுக்கும்.
01:47 எனது கணினியில், நான் MikTeX ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன்.
01:50 அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை.
01:54 உங்கள் கணினியில், MikTeX ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன்,
01:58 MikTeXஉடன் வரும், TeXworks editorஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.
02:03 Windows Start பட்டனை க்ளிக் செய்யவும்.
02:07 All Programsஐ க்ளிக் செய்யவும்.
02:09 MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும்.
02:12 TeXworksஐ க்ளிக் செய்யவும்.
02:15 TeXworks editor திறக்கும்.
02:18 ஏற்கனவே உள்ள ஒரு LaTeX documentஐ நான் திறக்கிறேன்.
02:21 Fileஐ க்ளிக் செய்து, பின், Openஐ க்ளிக் செய்து, directoryஐ தேர்வு செய்கிறேன்.
02:28 பின், "hello.tex" fileஐ திறக்கிறேன்.
02:32 இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext, வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம்.
02:37 இது syntax highlighting எனப்படுகிறது.
02:41 இது, user content மற்றும் LaTeX syntaxஐ வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது.
02:47 LaTeX syntax, highlight செய்யப்படவில்லை எனில், பின்வருவதை செய்யவும்.
02:52 TeXworks windowவில், Menu barல் இருக்கும், Format பட்டனை க்ளிக் செய்யவும்.
02:58 Syntax Colouringஐ தேர்வு செய்து, பின், LaTeXஐ க்ளிக் செய்யவும்.
03:03 ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு LaTeX document ஐ உருவாக்கும் போதும், syntax highlighting ஐ TeXworks, பயன்படுத்த வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும்.
03:10 Menu barல், Editஐ க்ளிக் செய்து, பின், Preferencesஐ க்ளிக் செய்யவும்.
03:16 Editor tabல், Syntax Colouringக்கான optionகளை கொடுக்கின்ற, dropdown பட்டனை க்ளிக் செய்யவும்.
03:22 LaTeXஐ தேர்வு செய்து, பின், OKஐ க்ளிக் செய்யவும்.
03:26 இவ்வழியில், syntax highlighting, பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரயோகப்படுத்தப்படும்.
03:32 இப்போது நமது LaTeX document ஐ, compile செய்ய நாம் தயாராக உள்ளோம்.
03:36 Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும்.
03:42 Errorகள் இல்லாமல், document compile செய்யப்பட்டவுடன், அதன் விளைவாக வருகின்ற, 'pdf' திறக்கப்படும்.
03:49 இந்த pdf reader, TeXworksஉடன் வருவதை கவனிக்கவும்.
03:53 இது, compile செய்யப்பட்ட pdf documentஐ காட்ட, TeXworksஆல் பயன்படுத்தப்படுகின்ற, முன்னிருப்பான pdf reader ஆகும்.
03:59 இப்போது, ஒரு Beamer documentஐ compile செய்வோம்.
04:02 நாம் நிறுவியுள்ள, MikTeX setupல், Beamer package முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை.
04:08 இதன் பொருள், நாம் அதை,
04:10 வேறு sourceல் இருந்து download செய்து, நமது தற்போதைய MikTeX distribution க்கு, அதை சேர்க்க வேண்டும்.
04:15 விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன.
04:19 ஒரு வழி, ஒரு LaTeX document ஐ நாம் compile செய்யும் போது, அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் .
04:24 இந்த LaTeX document க்கு, உங்கள் MikTeX distribution ல் கிடைக்காத ஒரு package தேவை.
04:31 மற்றொரு வழி, MikTeXன் package managerஐ பயன்படுத்தி, manualஆக ஒரு packageஐ தேர்வு செய்து, நிறுவுவது.
04:37 முதல் methodஐ காண்போம்.
04:40 நாம் ஒரு LaTeX document ஐ திறந்து, compile செய்வோம். அதற்க்கு, MikTeX இணையத்தில் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும்.
04:47 முதலில், TeXworks editorஐ மூடவும்.
04:51 'Tex file' ஐ , administrator சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும்.
04:56 Start பட்டனை க்ளிக் செய்யவும்.
04:59 பின், All programsஐ க்ளிக் செய்யவும்.
05:02 MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும்.
05:05 TeXworksஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Run as Administratorஐ தேர்வு செய்யவும்.
05:11 இது, TeXworks editor ஐ, administrator சலுகைகளோடு ஆரம்பிக்கும்.
05:16 இப்போது, Fileஐ க்ளிக் செய்யவும்.
05:19 பின், Openஐ க்ளிக் செய்யவும்.
05:21 beamer.tex fileஐ தேர்வு செய்யவும்.
05:24 Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும்.
05:29 ஒரு Package Installation dialog box திறக்கும்.
05:33 beamer.cls என்ற விடுபட்ட packageஐ நிறுவச் சொல்லி அது கேட்கும்.
05:38 இந்த dialog box ல் இருக்கும், Change பட்டனை க்ளிக் செய்யவும்.
05:43 Change Package Repository dialog box திறக்கும்.
05:47 Packages shall be installed from the internet optionஐ தேர்வு செய்யவும்.
05:52 Connection Settingsஐ க்ளிக் செய்யவும்.
05:55 Proxy settingகளை configure செய்ய, அது உங்களைத் தூண்டும்.
05:59 நீங்கள் ஒரு proxy network ல் இல்லையெனில், Use proxy server check box ஐ, check செய்யாமல் விடவும்.
06:06 நான் ஒரு proxy network ல் இருப்பதால், check box ஐ க்ளிக் செய்து, option ஐ enable செய்கிறேன்.
06:12 நான் proxyன் address ஐ enter செய்கிறேன்.
06:16 நான் proxy Port எண்ணை enter செய்கிறேன்.
06:19 அதற்கு தொடர்புடைய check boxஐ க்ளிக் செய்து, Authentication required option ஐ நான் enable செய்கிறேன்.
06:25 OKஐ க்ளிக் செய்து, பின், Nextஐ க்ளிக் செய்யவும்.
06:30 அது, proxy username மற்றும் passwordஐ என்னிடம் கேட்கும்.
06:34 நான் தகவலை enter செய்து, OKஐ க்ளிக் செய்கிறேன்.
06:39 பல்வேறு Remote Package Repositoryகளின் ஒரு பட்டியலை அது காட்டும்.
06:44 அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, Finishஐ க்ளிக் செய்யவும்.
06:48 Installஐ க்ளிக் செய்யவும்.
06:51 அது, beamer.cls packageஐ நிறுவும்.
06:55 மீண்டும், Package Installation dialog box திறக்கும்.
07:00 pgfcore.sty என்ற விடுபட்ட packageஐ நிறுவ, அது தூண்டும்.
07:06 அந்த optionஐ நீங்கள் uncheck செய்யலாம். Packageகளை நிறுவுவதற்கு முன்பு, எப்போதும் இந்த dialogueஐ காட்டவும்.
07:12 இதை நீங்கள் செய்தால், MikTeX, ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது, மீண்டும் உங்களை தூண்டாது.
07:19 Installஐ க்ளிக் செய்யவும்.
07:21 மேலும் விடுபட்ட packageகள் ஏதேனும் இருந்தால், உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும்.
07:31 நிறுவுதல் முடிந்தவுடன், அது compilationஐ முடித்து, 'pdf' outputஐ திறக்கும்.
07:38 நாம் வெற்றிகரமாக ஒரு Beamer documentஐ compile செய்துவிட்டதை நீங்கள் காணலாம்.
07:42 இப்போது, விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம்.
07:47 Windows Start பட்டனை க்ளிக் செய்யவும்.
07:50 All Programsஐ க்ளிக் செய்யவும்.
07:53 MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும்.
07:55 Maintenance (Admin)ஐ க்ளிக் செய்யவும்.
07:58 Package Manager (Admin)ஐ க்ளிக் செய்யவும்.
08:02 கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும்.
08:07 இப்போது, இந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
08:10 இந்தப் பட்டியலில், ஆறு coloumnகள் உள்ளன.
08:13 அவை, Name, Category, Size, Packaged date, Installed on date மற்றும் Title ஆகும்.
08:21 "Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும்.
08:25 இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள், நிறுவப்படாதவைகளாகும்.
08:32 ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம்.
08:36 உதாரணத்திற்கு, "abc" என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன்.
08:41 நான் packageஐ தேர்வு செய்தவுடன், மேல் இடது பக்கத்தில் இருக்கும் plus பட்டன், enable செய்யப்படுகிறது.
08:48 Plus பட்டன் தான் install பட்டன்.
08:51 Plus பட்டனை க்ளிக் செய்யவும்.
08:53 நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window ஒன்று திறக்கும்.
09:00 Proceed'ஐ க்ளிக் செய்யவும்.
09:04 ஒரு proxy network இணைப்பை நான் configure செய்துள்ளதால், proxy username மற்றும் passwordக்கு, அது என்னைத் தூண்டும்.
09:11 எனது username மற்றும் passwordஐ நான் டைப் செய்கிறேன்.
09:14 OKஐ க்ளிக் செய்யவும்.
09:16 நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன் முன்னேற்றத்தை, காட்டுகின்ற window ஒன்று திறக்கும்.
09:23 Remote server connectivity பிரச்சனைகளினால், விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download செய்வதில் அது தோல்வி அடையலாம்.
09:29 அப்படி நடந்தால், package repositoryஐ மாற்றி, மீண்டும் முயற்சிக்கவும்.
09:34 தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம்.
09:39 Closeஐ க்ளிக் செய்யவும்.
09:41 Package பட்டியல், refresh செய்யப்படும்.
09:44 Package "abc"க்கு, "Installed on" columnல், 11 செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும்.
09:52 Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX டுடோரியலை, இது நிறைவு செய்கிறது.
09:58 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
10:00 MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது.
10:02 TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentஐ எழுதுவது.
10:06 விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ, இரண்டு வழிகளில் configure செய்வது.
10:11 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
10:14 அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:17 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
10:21 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10:23 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:27 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
10:30 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:36 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
10:40 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:48 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:59 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Priyacst