Drupal/C4/Hosting-a-Drupal-website/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | ஒரு Drupal websiteஐ host செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது - நமது websiteக்கு, நமது code மற்றும், databaseஐ , தயாராக வைப்பது |
00:13 | நமது Drupal website ஐ host செய்வது, மற்றும், இந்த websiteல், நமது local contentஐ, upload செய்வது |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது Ubuntu Linux 16.04 மற்றும் Firefox web browser |
00:28 | உங்களுக்கு விருப்பமான எந்த browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:32 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு ஒரு Internet connection |
00:37 | cPanel போன்ற ஒரு web hosting control panel, மற்றும், ஒரு domain name தேவை. |
00:43 | Drupalன் அடிப்படை பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். |
00:47 | இல்லையெனில், அதற்கான Drupal டுடோரியல்களுக்கு, பின்வரும் இணைப்பை காணவும். |
00:53 | முதலில், Drupal web hosting serviceகள் பற்றி கற்போம். |
00:57 | Godaddy, Bigrock மற்றும் HostCats போன்ற பல web hosting serviceகள் உள்ளன. |
01:06 | இவை, auto installer script உடன், cPanelஐ அடிப்படையாகக்கொண்ட, service providerகள். |
01:12 | இந்த service providerகளிடமிருந்து, spaceஐ வாங்க, ஒருவர், பணம் செலுத்த வேண்டும். |
01:17 | ஒரு websiteஐ host செய்ய, உங்கள் local Drupal websiteன், code மற்றும், database, உங்களுக்கு தேவைப்படும். |
01:24 | நாம் host செய்யப் போகும், நம் local Drupal websiteஐ திறப்போம். |
01:29 | முதலில், cache'ஐ clear செய்வோம். அதைச் செய்ய, Configuration menu'ஐ க்ளிக் செய்யவும். |
01:35 | Development'ன் கீழ், Performance option'ஐ க்ளிக் செய்யவும். |
01:40 | இங்கு, 'Aggregate CSS files மற்றும் Aggregate JavaScript files option'களில் இருந்து, checkmarkகளை நீக்கவும். |
01:48 | 'Save configuration button'ஐ க்ளிக் செய்யவும். |
01:52 | இப்போது, Clear all caches பட்டனை க்ளிக் செய்யவும். caches clear செய்யப்படுவதை நீங்கள் காணலாம். |
02:00 | இப்போது, நமது codeஐ , தயாராக வைப்போம். அதைச் செய்ய, File browserஐ திறக்கவும். |
02:06 | நாம் localஆக, Drupalஐ நிறுவிய folderக்கு செல்லவும். |
02:11 | இப்போது, apps -> drupal -> htdocs folderக்கு செல்லவும். |
02:16 | இந்த htdocs folderனுள், நமது local websiteன் code உள்ளது. இந்த folderஐ, compress அல்லது zip செய்வோம். |
02:25 | இதை நான், என் கணிணியில், Downloads folderல் சேமிக்கிறேன். |
02:30 | இப்போது, நமது code தயாராக உள்ளது. |
02:32 | அடுத்து, நம் databaseஐ தயாராக வைப்போம். நமது local websiteன், phpMyAdmin ஐ திறப்போம். |
02:41 | bitnami_drupal8 என்ற பெயருடைய databaseஐ க்ளிக் செய்யவும். |
02:46 | மேல் panelலில் இருக்கும், Export பட்டனை க்ளிக் செய்யவும். |
02:50 | பின், Custom என்ற Export methodஐ, தேர்வு செய்யவும். |
02:54 | Object creation options sectionனின் கீழ், Add DROP TABLE option மீது, ஒரு checkmarkஐ வைக்கவும். |
03:01 | Scroll down செய்து, Go பட்டனை க்ளிக் செய்யவும். |
03:06 | Fileஐ சேமிக்க, OK பட்டனை க்ளிக் செய்யவும். |
03:09 | முன்னிருப்பான Downloads folderஐ திறந்து, export செய்யப்பட்ட, sql file மற்றும் htdocs zip fileஐ காணவும். |
03:18 | அடுத்து, cPanelஐ அமைக்கக் கற்ப்போம். அதைச் செய்ய, Set Up பட்டனை க்ளிக் செய்யவும். |
03:25 | இங்கு, நமது domain பெயரை தேர்வு செய்ய வேண்டும். codingfordrupal.info என்ற domain பெயரை நான் ஏற்கெனவே வாங்கி விட்டேன். |
03:33 | உங்கள் சொந்த domain பெயரை, இங்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். |
03:37 | இந்த டுடோரியலின், “Additional Material” இணைப்பில், ஒரு domainஐ வாங்குவதற்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. |
03:43 | Next பட்டனை க்ளிக் செய்யவும். |
03:46 | இங்கு, ஒரு data centerஐ , நாம் தேர்வு செய்ய வேண்டும். நான் Asia மீது க்ளிக் செய்து, பின், Next பட்டனை க்ளிக் செய்கிறேன். |
03:53 | cPanel username ல், நாம் நமது usernameஐ கொடுக்க வேண்டும். |
03:58 | Passwordக்கு, Generate a password பட்டனை க்ளிக் செய்கிறேன். |
04:03 | உங்களுக்கு விருப்பமான எந்த usernameஐயும், passwordஐயும் , நீங்கள் டைப் செய்யலாம். |
04:07 | பிற்கால பயன்பாட்டிற்கு, login விவரங்களை, குறித்துக் கொள்ளவும். |
04:11 | பின், Next பட்டனை க்ளிக் செய்யவும். |
04:14 | இங்கு, நமது websiteஐ உருவாக்க, நமக்கு wordpress வேண்டுமா என்று அது கேட்கிறது. |
04:20 | நாம் ஒரு Drupal websiteஐ host செய்யப்போகிறோம். |
04:23 | அதனால், No, not now பட்டனை க்ளிக் செய்து, பின், Finish பட்டனை க்ளிக் செய்யவும். |
04:28 | Setupஐ நிறைவு செய்ய, இது சற்று நேரம் எடுக்கலாம். |
04:32 | Setup முடிந்தவுடன், இது போன்ற ஒரு windowஐ நாம் காண்போம். இங்கு, Manage பட்டனை க்ளிக் செய்யவும். |
04:40 | நமது cPanel main window, இப்போது திறந்துவிட்டது. நமது Website Name, IP Address ஆகியவற்றை நாம் காணலாம். |
04:48 | இந்த பக்கத்தை படித்து, optionகளை முற்றிலுமாக ஆராயவும். |
04:53 | அடுத்து, cPanelலில் ஒரு databaseஐ நாம் உருவாக்க வேண்டும். |
04:57 | File browserஐ திறந்து, நாம் Bitnami Drupal Stackஐ நிறுவிய folderக்கு செல்லவும். |
05:04 | இப்போது, apps -> drupal -> htdocs -> sites -> default -> settings.phpக்கு செல்லவும். |
05:13 | Settings.php file, ஒரு editorல் திறக்கும். |
05:18 | Fileன் இறுதி வரை scroll down செய்யவும். இங்கு, databaseன் விவரங்களை, நீங்கள் காணலாம். |
05:24 | cPanelலில் ஒரு databaseஐ உருவாக்க, இந்த விவரங்களை, நீங்கள் பயன்படுத்த வேண்டும். |
05:30 | cPanel main windowக்கு மாறவும். |
05:33 | Databasesல் கீழே இருக்கும், MySQL Database Wizardஐ க்ளிக் செய்யவும். |
05:37 | settings.php fileலில் இருந்து, databaseன் பெயரை copy செய்து, |
05:42 | அதை, MySQL Database Wizardல், database பெயராக paste செய்யவும். |
05:47 | Next Step பட்டனை க்ளிக் செய்யவும். |
05:50 | Username மற்றும் passwordஐ, copy செய்து, paste செய்யவும். |
05:55 | Create User பட்டனை க்ளிக் செய்யவும். |
05:57 | ALL PRIVILEGES option மீது, ஒரு checkmarkஐ வைக்கவும். |
06:01 | Next Step பட்டனை க்ளிக் செய்யவும். |
06:04 | Return to MySQL Databases ஐ க்ளிக் செய்யவும். |
06:08 | இங்கு, நாம் உருவாக்கிய database மற்றும் userஐ, காண முடியும். |
06:13 | அடுத்து, cPanelலில் Drupalஐ நிறுவக் கற்போம். மேல் panelலில் இருக்கும், Home பட்டனை க்ளிக் செய்யவும். |
06:21 | Web Applications, க்கு கீழ் இருக்கும், Drupalஐ க்ளிக் செய்யவும். |
06:24 | வலது பக்கத்தில் இருக்கும், install this application பட்டனை க்ளிக் செய்யவும். |
06:29 | Locationக்கு கீழ், domain பெயரை நீங்கள் காணலாம். |
06:33 | Versionக்கு கீழ், உங்கள் local கணிணியில் நீங்கள் நிறுவியுள்ள பதிப்பை தேர்வு செய்யவும். நான், 8.2.6ஐ தேர்வு செய்கிறேன். |
06:41 | Settingsக்கு கீழ் இருக்கும், administratorக்கு, நமக்கு விருப்பமான Username மற்றும் passwordஐ கொடுக்க வேண்டும். |
06:48 | பிற்கால பயன்பாட்டிற்கு, login விவரங்களை, குறித்துக் கொள்ளவும். |
06:52 | Advanced sectionல், database, email மற்றும் backupஐ நாம் set செய்யலாம். |
06:58 | Let me manage these settingsஐ நான் தேர்வு செய்கிறேன். |
07:02 | Database Managementல், Let me choose an existing database ஐ தேர்வு செய்யவும். |
07:07 | Database Nameல், நாம் முன்பு உருவாக்கிய databaseஐ தேர்வு செய்யவும். |
07:12 | Database Username மற்றும் Passwordல், settings.php fileலில் உள்ள அதே விவரங்களை கொடுக்கவும். |
07:19 | Table Prefixல், fieldஐ காலியாக வைக்கவும். |
07:23 | இப்போது, Install பட்டனை க்ளிக் செய்யவும். |
07:26 | நிறுவுதலுக்கு பிறகு, நமது websiteன் பெயரை இங்கு நாம் காண முடியும். அதை க்ளிக் செய்யவும். |
07:33 | நமது website, வெற்றிகரமாக host செய்யப்பட்டு விட்டது. |
07:36 | ஆனால், நமது local contentஉடன், அதை update செய்ய வேண்டும். இப்போது, இந்த websiteல், நமது local contentஐ upload செய்யக் கற்போம். |
07:45 | cPanel main windowக்கு மாறி, மேல் panelலில் இருக்கும், Home பட்டனை க்ளிக் செய்யவும். |
07:51 | cPanelலில் இருக்கும், File Managerஐ திறப்போம். |
07:55 | Web Root option, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். Go பட்டனை க்ளிக் செய்யவும். |
08:01 | இப்போது, நாம் public_html folderல் இருக்கிறோம். மேல் panelலில் இருக்கும், Upload பட்டனை க்ளிக் செய்யவும். |
08:09 | Browse பட்டனை க்ளிக் செய்து, Downloads folderல் இருந்து, htdocs.zip fileஐ தேர்ந்தெடுக்கவும். File, இப்போது, வெற்றிகரமாக upload செய்யப்பட்டுவிட்டது. |
08:19 | உங்கள் fileன் அளவு பெரியதாக இருந்தால், upload செய்வதற்கு, Filezilla அல்லது ஏதேனும் ஒரு SSH clientஐ பயன்படுத்தவும். |
08:27 | இப்போது, இந்த windowஐ மூடவும். |
08:29 | File Manager windowல், htdocs.zip fileக்கு சென்று, அதை க்ளிக் செய்யவும். |
08:36 | இப்போது, இந்த fileஐ extract செய்ய, மேல் panelலில் இருக்கும், Extract பட்டனை க்ளிக் செய்யவும். |
08:41 | popup windowவில், Extract File பட்டனை க்ளிக் செய்யவும். |
08:47 | File extract செய்யப்பட்டவுடன், htdocs folderஐ, டபுள்- க்ளிக் செய்யவும். |
08:52 | இப்போது, Sites folderக்கு செல்லவும். |
08:55 | இங்கு, default folderன், permissionஐ நாம் மாற்றுவோம். |
08:59 | அதைச் செய்ய, Permissions columnஐ க்ளிக் செய்து, அதை, 755க்கு மாற்றவும். இது, userக்கு, write permissionஐ கொடுக்கும். |
09:08 | பின், default folderக்கு சென்று, settings.php fileன், permissionsஐ மாற்றவும். |
09:16 | மீண்டும், Permissions columnஐ க்ளிக் செய்து, அதை, 600க்கு மாற்றவும். |
09:22 | settings.php fileஐ edit செய்வதற்கு, இது, userக்கு, write permissionஐ கொடுக்கும். |
09:29 | settings.php fileஐ திறக்க, மேல் panelலில் இருக்கும், Code Editor பட்டனை க்ளிக் செய்யவும். |
09:35 | Edit பட்டனை க்ளிக் செய்யவும். |
09:37 | Fileன் இறுதி வரை scroll down செய்யவும். இங்கு நாம், databaseன் விவரங்களை , காணலாம். |
09:43 | Unix_socket வரியை நீக்கவும். |
09:46 | இப்போது, மேல் panelலில் இருக்கும், Save Changes பட்டனை க்ளிக் செய்யவும். |
09:50 | மேல் panelலில் இருக்கும், Up One Level பட்டனை க்ளிக் செய்யவும். |
09:54 | மீண்டும், Up One Level பட்டனை க்ளிக் செய்யவும். இப்போது, இந்த contentஐ , public_html folderக்கு நாம் நகர்த்த வேண்டும். |
10:04 | Fileகள் மற்றும் folderகளை தேர்ந்தெடுக்க, Select All பட்டனை க்ளிக் செய்யவும். |
10:09 | மேல் panelலில் இருக்கும், Move பட்டனை க்ளிக் செய்யவும். |
10:12 | File pathல், htdocsஐ நீக்கவும். |
10:16 | Move Files பட்டனை க்ளிக் செய்யவும். |
10:18 | Side panelலில், public_html folder ஐ க்ளிக் செய்யவும். |
10:24 | இப்போது, public_html folderக்கு பதிலாக, நமது local websiteன் code, வைக்கப்பட்டுவிட்டது. |
10:32 | அடுத்து, நமது live websiteக்கு, நமது local database ஐ import செய்ய வேண்டும். அதைச் செய்ய, cPanel main windowக்கு மாறவும். |
10:41 | Databasesன் கீழ் இருக்கும், phpMyAdminஐ க்ளிக் செய்யவும். |
10:45 | Side panelலில், நாம் முன்பு உருவாக்கிய databaseஐ க்ளிக் செய்யவும். |
10:50 | மேல் panelலில் இருக்கும், Import பட்டனை க்ளிக் செய்யவும். |
10:54 | பின், Browse பட்டனை க்ளிக் செய்யவும். |
10:56 | இப்போது, local Drupal லில் இருந்து, export செய்த, sql fileஐ தேர்வு செய்யவும். |
11:02 | இறுதியாக, Go பட்டனை க்ளிக் செய்யவும். Sql file, வெற்றிகரமாக import செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
11:10 | இப்போது, browserல், ஒரு புது tabஐ திறந்து, address barல், உங்கள் domain பெயரை டைப் செய்யவும். நமது Drupal website , வெற்றிகரமாக host செய்யப்பட்டு விட்டது. |
11:20 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
11:24 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது- நமது websiteக்கு, நமது code மற்றும், databaseஐ , தயாராக வைப்பது, நமது Drupal website ஐ host செய்வது, மற்றும், இந்த websiteல், நமது local contentஐ, upload செய்வது. |
11:38 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:46 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:57 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
12:09 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஶீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |