LaTeX/C2/Report-Writing/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:51, 28 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 LaTeXல் Report Writing, குறித்த spoken tutorialக்கு நல்வரவு. இதை, நான் “latex” அல்லாமல், “latek” என்று உச்சரிக்கிறேன்.
00:13 இந்த டுடோரியலில், ஒரு documentஐ எழுதக் கற்போம்.
00:19 குறிப்பாக, ‘report’ மற்றும் ‘articleclassஐ பயன்படுத்த, sectionகளை உருவாக்க, sectionகளின் numberingஐ Automate செய்ய, Table of contents, மற்றும், title pageஐ உருவாக்கக் கற்போம்.
00:38 10,000 ரூபாக்கும் குறைவான நமது laptopல், இந்த டுடோரியலிலை நான் உருவாக்குகிறேன்.
00:44 மேலும், நான், Ubuntu Linux, TeXworks மற்றும் LaTeXஐ பயன்படுத்துகிறேன்.
00:51 நீங்கள், TeXworksஐ, Windows , அல்லது Mac ல் பயன்படுத்தலாம்- வழிமுறை ஒன்றே ஆகும்.
00:57 TeXworks இல்லாமலும், LaTexஐ தனியே பயன்படுத்தலாம்.
01:02 மிகவும் விலை உயர்ந்த Linux computerகளையும் பயன்படுத்தலாம்
01:07 இதை கற்க தேவையான முன்நிபந்தனைகளாவன: LaTeXஐ அறிமுகப்படுத்தும் ஸ்போகன் டுடோரியல்கள், report dot tex file, இந்த டுடோரியலை பயிற்சி செய்ய தேவையான side-by-side method.
01:23 மேலுள்ளவற்றின் தகவல்கள், எங்கள் வலைத்தளம் spoken tutorial dot org ல் இருக்கின்றன:.
01:32 நான் TeXworks windowவிற்கு செல்கிறேன்.
01:36 report.tex fileஐ நான் ஏற்கனவே திறந்துவிட்டேன். இந்த fileஐ தரவிறக்கி, என்னுடன் சேர்ந்து பயிற்சி செய்யவும்.
01:44 Font ன் அளவாக 12 pointஐயும், ‘a4 paper’ மற்றும் ‘article’ classஐயும் நான் பயன்படுத்துகிறேன்.
01:55 'Usepackage' command வழியாக, marginகளை அமைக்க, geometry packageஐ நான் பயன்படுத்துகிறேன்.
02:02 ஒவ்வொரு commandன் தொடக்கத்திலும், ஒரு reverse slash வர வேண்டும்.
02:07 இதை நான் வெளிப்படையாக கூறமாட்டேன் எனினும், நீங்கள், reverse slashஐ வைக்க மறக்கக் கூடாது.
02:13 அதே போல், நான் வெளிப்படையாக braceகளை குறிப்பிடமாட்டேன் எனினும், நீங்கள் அதை பயன்படுத்த வேண்டி வரலாம்.
02:20 வீடியோவில் செய்யப்பட்டிருப்பதை, அப்படியே செய்யவும்.
02:25 Usepackage command, square bracketகளினுள், optional parameterகளை கொண்டிருக்கிறது.
02:31 Packageன் பெயர், braceகளினுள் இருக்கிறது.
02:35 Horizontal மற்றும் vertical marginகள் ஒவ்வொன்றையும், நான் 4.5 cmக்கு அமைத்துள்ளேன்.
02:41 "TexWorks" windowன் மேல் இடது மூலையைப் பார்க்கவும்.
02:47 ஒரு வேளை, pdfLaTeX, முன்பே தேர்வு செய்யப்படவில்லை எனில், pull down menuல் இருந்து, அதை தேர்ந்தெடுக்கவும்.
02:55 இடது பக்கத்தில், arrowஉடன் கூடிய ஒரு பச்சை நிற வட்டம் இருக்கிறது.
02:59 Arrowஐ க்ளிக் செய்து, fileஐ compile செய்யவும்.
03:04 நமக்கு கிடைக்கும் ‘report.pdf’ file, வலது பக்கத்தில் காட்டப்படுகிறது.
03:09 Output fileலில், பின்வரும் titleகளை காணவும்- section, sub-section மற்றும் sub-sub-section.
03:18 Source fileலில் இருக்கும், identical commandகளை பயன்படுத்தி, இவை உருவாக்கப்படுகின்றன.
03:23 'pdf' fileலில், இந்த section titleகளின், தனித்துவமான அம்சங்களை கண்காணிக்கவும்.
03:30 இந்த titleகளின் அளவுகள், விகிதாசாரத்திலும், தானாகவும் உருவாக்கப்படுகின்றன.
03:37 மேலும், section title, எல்லாவற்றிலும் பெரியது, மற்றும், sub-sub-section title, எல்லாவற்றிலும் சிறியது ஆகும்.
03:45 Source fileலில், வெற்று வரிகள் இருந்தாலும், output, அப்படியே இருக்கும்.
03:50 இங்கு ஒரு வரியை நீக்குகிறேன். Compile செய்கிறேன்.
03:55 இங்கு எந்த மாற்றமும் இல்லை.
03:57 இப்போது காகிதத்தின் அளவை, a5க்கு மாற்றுகிறேன்.
04:02 Outputல், ஒவ்வொரு வரியின் அகலத்தையும் இது குறைக்கும்.
04:06 முன்பு செய்தது போல், textஐ compile செய்கிறேன்.
04:10 Outputஐ தெளிவாக காண, control +ஐ அழுத்தி, அதை பெரிதாக்குகிறேன்.
04:17 அதை நடுவே கொண்டு வருகிறேன்.
04:20 மீதமுள்ள இந்த டுடோரியலுக்கு, நாம் a5 paperஐ மட்டுமே பயன்படுத்துவோம். வேண்டுமெனில், அதை a4க்கு நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
04:28 நான் fileஐ சேமிக்கவில்லை என்பதை கவனிக்கவும். ஏனெனில், compilationக்கு பிறகு, TexWorks, தானாகவே fileஐ சேமிக்கிறது.
04:37 Fontன் அளவை, சிறியதான 10 pointக்கு மாற்றி compile செய்வோம்.
04:44 Fontன் அளவு சிறியதாகிவிட்டது- என்ன ஆச்சரியம்? ஆனால், விகிதாசார அளவிடல் மற்றும் இடைவெளி, அப்படியே இருக்கின்றன.
04:54 Fontஐ மீண்டும் 12 pointக்கு , மாற்றுகிறேன்.
04:59 இப்போது, section titleகளின், மற்றொரு முக்கிய அம்சத்தை காண்போம்.
05:04 அது section எண்களை தானாக உருவாக்குதல் ஆகும்.
05:09 இதை மேலும் விளக்க, 'Inserted section’ எனும் ஒரு புது sectionஐ நான் சேர்க்கிறேன்.
05:18 Compilationக்கு பிறகு, sequenceல், சரியான எண்ணுடன் இது, இங்கு தோன்றுகிறது. இப்படி, LaTex, எண்ணிடலையும், தானே கவனித்துக் கொள்கிறது.
05:29 toc” extensionஉடன் கூடிய file மூலமாக, LaTeX, table of contentsஐ உருவாக்குகிறது.
05:36 Table of contents என்ற ஒரு வார்த்தையை இங்கு நான் சேர்க்கிறேன்.
05:42 Compile செய்கிறேன்.
05:44 Outputல், ‘Contents’ என்கிற வார்த்தை மட்டும் தோன்றுகிறது.
05:50 நான் மீண்டும் compile செய்கிறேன்.
05:53 Table of contentsல், பக்க எண்களுடன் எல்லா titleகளும் இப்போது உள்ளன.
05:59 சரியான பக்க எண்களைப் பெற, அதை மூன்றாவது முறையாக compile செய்ய வேண்டும்.
06:05 ஏன் மூன்று முறை? பயிற்சியை காணவும்.
06:09 Table of contents’ என்ற ஒரு வார்த்தை மட்டுமே தேவைப்படுகிறது.
06:14 என்ன ஒரு அற்புதத் திறன் LaTexல்!
06:17 LaTeX பராமரிக்கும், “toc” extensionஉடன் கூடிய file வழியாக இதை அடைய முடிகிறது.
06:24 Titleகளில் செய்யப்படும் மாற்றங்களுடனும், இந்த multi pass compilation செயல்முறை வேலை செய்கிறது.
06:30 Section titleஐ, ‘Modified section’க்கு மாற்றுகிறேன்.
06:36 அதை compile செய்கிறேன். Table of Contents மாறாது.
06:42 இந்த சிக்கலை தீர்க்க, அதை மீண்டும் ஒரு முறை compile செய்கிறேன்.
06:46 இப்போது, நம்மிடம் மாற்றப்பட்ட section உள்ளது.
06:49 இந்த documentக்கு ஒரு titleஐ உருவாக்குவோம். இங்கு, அதாவது, ‘begin document’க்கு முன்பு இதை நான் செய்கிறேன்.
06:57 பின்வருமாறு, ஒரு ‘title’, ‘Author’ன் தகவல், மற்றும் ‘date’ஐ நான் உருவாக்குகிறேன்.
07:13 அதனால், இந்த மூன்று commandகளை நான் சேர்த்துள்ளேன்.
07:17 இவைகள் வருகின்ற வரிசையோ, அல்லது, இவைகள் வரும் இடமோ, ஒரு பொருட்டல்ல.
07:22 ஆனால், இவை, begin document commandக்கு முன்பு வர வேண்டும்.
07:26 எல்லா commandகளிலும், reverse slashஐ மறக்க வேண்டாம்.
07:31 இங்கு, double slash என்பது, அடுத்த வரி ஆகும். அதை compile செய்கிறோம்.
07:38 ‘pdf’ fileலில் எந்த மாற்றங்களும் இல்லை.
07:42 ஏனென்றால், இந்த தகவலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று LaTexக்கு நான் கூறவில்லை.
07:47 அதனால், ஒரு வார்த்தை, ‘make title’ commandஐ, ,'begin document'க்கு பின்பு நான் சேர்க்கிறேன்.
07:55 அதை compile செய்கிறேன்.
07:58 Outputல், நான் இந்த commandஐ வைத்த இடத்தில், title தோன்றும்.
08:03 அதாவது, documentன் தொடக்கத்தில்.
08:07 இப்போது, இந்த documentன் classஐ, articleல் இருந்து, reportக்கு மாற்றுவோம்.
08:15 அதே நேரத்தில், இந்த commandஐ வைத்து, ஒரு chapterஐ வரையறுக்கிறோம்: 'Chapter First Chapter'.
08:24 Report styleக்கு, குறைந்தபட்சம் ஒரு chapter தேவைப்படுகிறது.
08:27 அதை compile செய்து, outputஐ காண்போம்.
08:31 Ouputல், மாற்றங்களை கவனிக்கவும்.
08:35 எண்கள் இல்லாத முழு பக்கத்தில், title தோன்றும்.
08:40 பக்க எண் 1உடன் கூடிய ஒரு முழு பக்கத்தில், contentsஉம் தோன்றும்.
08:47 இங்கே இடைநிறுத்தி, 'Contents'ல் எவ்வளவு entryகள் தவறாக உள்ளன என கண்டுபிடிக்கவும்.
08:54 அடுத்த பக்கத்திற்கு செல்வோம். Chapter தொடங்கும் முறையை கவனிக்கவும்.
09:00 எவ்வளவு மேன்மையான அம்சங்களை உங்களால் அடையாளம் காண முடிகிறது? நீங்கள், குறைந்தபட்சம் ஐந்தை கண்டுபிடிக்க வேண்டும்.
09:08 இரண்டாவது முறையாக அதை compile செய்வோம்.
09:12 Contents பக்கம், இப்போது, சரியான தகவலை கொண்டிருப்பதை காணவும். பக்க எண்கள் இப்போது சரியாக உள்ளன.
09:21 ‘New Chapter’ எனும் ஒரு chapterஐ சேர்ப்போம்.
09:32 அதை compile செய்யவும்.
09:34 அதை மீண்டும் ஒரு முறை compile செய்து, அது ஒரு புது பக்கத்தில் வருவதை காண்கிறேன்.
09:47 இந்த புது chapterக்கு முன், appendix commandஐ சேர்க்கவும்.
09:53 Compilationக்கு பிறகு, “Appendix” என்ற வார்த்தை தோன்றுவதை நீங்கள் காணபீர்கள்.
09:59 Chapter எண் A ஆகும்.
10:02 இப்போது, slideகளுக்கு செல்வோம்.
10:05 இந்த டுடோரியலில் நாம் கற்றதை சுருங்கசொல்ல
10:08 LaTexல் ஒரு documentஐ எழுதுவது, chapter மற்றும் section titleகளை தானாக உருவாக்குவது, Table of contentsன் எண்ணிடலை தானியக்கச் செய்வது, title page மற்றும் Appendixஐ உருவாக்குவது.
10:21 உங்களுக்கான சில பயிற்சிகளை தருகிறேன்.
10:24 இந்த பயிற்சி, a4 paper மற்றும் letter paper மீதானதாகும்.
10:29 வீடியோவை இடைநிறுத்தி, slideஐ படித்து, பின் பயிற்சியை செய்யவும்.
10:35 இந்த பயிற்சி, font size மீதானது.
10:41 இது report dot toc மீதானது.
10:47 இது compilationகளின் எண்ணிக்கை மீதானது.
10:52 இது Table of Contentsன் இடத்தின் மீதானது.
10:59 இந்த பயிற்சி, 'report' மற்றும் 'article'லில், 'chapter' commandன் பயன்பாடு மீதானது.
11:07 இந்த பயிற்சி, 'report' classல், 'appendix' commandன் விளைவு மீதானது.
11:15 இது, முந்தைய பயிற்சி போல, ஆனால், 'article' classலில்.
11:22 இது, geometry packageன் மீதானது.
11:27 இந்த பயிற்சி, பொதுவாக LaTeX classes மீதானது.
11:34 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:38 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
11:46 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:53 இந்த Spoken Tutorialலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருக்கிறதா?
11:56 இந்த வலைத்தளத்தை பார்த்து உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும்.
12:03 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
12:09 இந்த டுடோரியல் மீதான குறிப்பிட்ட கேள்விகளுக்கு, ஸ்போகன் டுடோரியல் forum உள்ளது.
12:13 அதில், தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை எழுப்பாதீர்கள்.
12:19 இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பங்கள் குறைவதனால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
12:28 ஸ்போகன் டுடோரியல்களில் சேர்க்கப்படாத தலைப்புகளுக்கு, இந்த முகவரியில், stack exchangeஐ பார்க்கவும்.
12:35 LaTex மீதான கேள்விகளுக்கு, இது ஒரு சிறந்த இடமாகும். எங்களுடைய செய்முறை வகுப்புகள் மற்றும் சான்றிதழ்கள் மீதும் உங்களுக்கு கேள்விகள் இருக்கலாம்.
12:45 இதற்கு, இந்த மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
12:50 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
12:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst