PERL/C2/Hash-in-Perl/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Perl ல் Hash குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:09 | Perl ல் Hash |
00:11 | ஒரு hash ன் element ஐ அணுகுதல் |
00:14 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00:16 | உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் |
00:21 | Perl 5.14.2 மற்றும் |
00:24 | gedit Text Editor |
00:26 | உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம். |
00:30 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Perl ல் Variableகள் மற்றும் Data Structureகள் குறித்த அறிவு இருக்க வேண்டும் |
00:38 | மேலும் commentகள், loopகள், conditional statementகள் மற்றும் Arrayகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று. |
00:46 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும். |
00:52 | Hash என்பது ஒழுங்கமைக்கப்படாத dataகளின் ஒரு தொகுப்பு ஆகும் |
00:56 | இது ஒரு key/மதிப்பு ஜோடி data structure |
00:59 | Hash keyகள் தனித்துவமானவை |
01:01 | இருப்பினும், Hash ல் மதிப்புகளின் பிரதிகளும் இருக்கலாம் |
01:05 | இது ஒரு hash ன் declaration. |
01:08 | hash லிருந்து ஒரு key ன் மதிப்பை எவ்வாறு பெறுவது என காண்போம் |
01:12 | ஒரு key ன் மதிப்பை அணுகுவதற்கான syntax |
01:17 | dollar hashபெயர் open curly bracket ஒற்றை மேற்கோள்களில் keyபெயர் close curly bracket |
01:26 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி hash ஐ புரிந்துகொள்வோம். |
01:31 | gedit ல் perlHash dot pl file ல் ஏற்கனவே code ஐ டைப் செய்துள்ளேன் |
01:37 | காட்டப்படும் code ஐ உங்கள் perlHash dot pl file ல் டைப் செய்க. |
01:42 | Perl ல் Hash... percentage குறியுடன் declare செய்யப்படுகிறது. |
01:47 | இவை hash ன் keyகள் ஆகும் |
01:49 | மேலும் இவை hash ன் மதிப்புகள் ஆகும் |
01:53 | குறிப்பு: hash ன் key ஐ அணுக, dollar குறியை பயன்படுத்த வேண்டும். |
01:59 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
02:02 | டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க |
02:08 | perl perlHash dot pl |
02:11 | பின் எண்டரை அழுத்தக. |
02:14 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும். |
02:19 | இப்போது hash லிருந்து keyகளை நீக்க மற்றும் சேர்க்க காண்போம் |
02:24 | key ஐ சேர்ப்பதற்கான syntax |
02:26 | dollar hashபெயர் open curly bracket |
02:30 | ஒற்றை மேற்கோள்களில் Keyபெயர் |
02:34 | close curly bracket equal to $மதிப்பு semicolon |
02:40 | key ஐ நீக்குவதற்கு delete dollar hashபெயர் open curly bracket |
02:46 | ஒற்றை மேற்கோள்களில் Keyபெயர் close curly bracket semicolon |
02:53 | இப்போது, ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்ளலாம். |
02:58 | hashKeyOperations dot pl file ல் code ஐ ஏற்கனவே டைப் செய்துள்ளேன். |
03:05 | இது hash ன் declaration |
03:08 | இந்த hash ல் இருந்து key களை சேர்ப்போம் நீக்குவோம் |
03:13 | இங்கே ஏற்கனவே உருவாக்கப்பட்ட hash க்கு ஒரு key ஐ சேர்க்கிறோம் |
03:18 | இது ஒரு variable க்கு ஒரு மதிப்பை assign செய்வது போன்றது. |
03:23 | key ஐ நீக்க delete keyword பயன்படுகிறது |
03:27 | இதை நீக்க அந்த key ஐ அனுப்ப வேண்டும். |
03:31 | file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக. |
03:35 | டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க |
03:40 | perl hashKeyOperations dot pl |
03:44 | பின் எண்டரை அழுத்துக |
03:47 | டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும். |
03:52 | hash keyகள் மற்றும் மதிப்புகளை வரிசைப்படுத்துவதை காண்போம் |
03:57 | key களை வரிசைப்படுத்துவதற்கான Syntax |
04:00 | sort அடைப்புகளில் keyகள் percentage hashபெயர் semicolon |
04:07 | அதேபோல, hash மதிப்புகளை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம் |
04:11 | sort அடைப்புகளில் மதிப்புகள் percentage hashபெயர் semicolon |
04:18 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி வரிசைப்படுத்தும் செயல்பாட்டை புரிந்துகொள்ளலாம். |
04:24 | gedit ல் sortHash dot pl க்கு வருவோம் |
04:30 | திரையில் காட்டப்படும் code ஐ உங்கள் sortHash dot pl file ல் டைப் செய்க. |
04:36 | இங்கே address ன் hash ஐ declare செய்துள்ளோம் |
04:41 | இங்கே, keyகளை வரிசைப்படுத்த keys function உடன் sort என்ற உள்ளடங்கிய function ஐயும் பயன்படுத்தியுள்ளோம். |
04:49 | இது hash keyகளை அகரவரிசைப்படி வரிசைப்படுத்தும். |
04:54 | அதேபோல, hash ன் மதிப்புகளுக்கும் sort function ஐ பயன்படுத்தலாம் |
04:59 | எண் keyகள் மற்றும்/அல்லது மதிப்புகளையும் வரிசைபடுத்தலாம் |
05:05 | file ஐ சேமித்து டெர்மினலுக்கு வரவும். |
05:09 | script ஐ இயக்க டைப் செய்க perl sortHash dot pl பின் எண்டரை அழுத்துக |
05:17 | டெர்மினலில் காட்டப்படுவதுபோல வெளியீடு இருக்கும். |
05:22 | இப்போது, hash ன் அனைத்து keyகள் மற்றும் மதிப்புகளை எவ்வாறு பெறுவது என காண்போம் |
05:27 | Perl அனைத்து hash keyகள் மற்றும் மதிப்புகளை பெற உள்ளடங்கிய function ஐ தருகிறது |
05:34 | hash ன் அனைத்து keyகளையும் பெற keys function பயன்படுகிறது |
05:40 | values function அனைத்து key களின் மதிப்புகளை தருகிறது |
05:46 | அதேசமயம் each function... hash மீது செயல்பட்டு hash லிருந்து key/மதிப்பு ஜோடியை திருப்புகிறது |
05:53 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இவற்றை புரிந்துகொள்வோம். |
05:57 | இதற்கு, இந்த டுடோரியலில் நாம் ஏற்கனவே உருவாக்கிய perlHash dot pl scriptஐ பயன்படுத்துவோம். |
06:07 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க; |
06:12 | இப்போது அந்த code ஐ புரிந்துகொள்வோம். |
06:15 | hash மீதான keys function, hash ன் அனைத்து key களையும் கொண்டிருக்கும் ஒரு array ஐ திருப்புகிறது |
06:22 | hash மீதான values function... hash ன் அனைத்து keyகளுக்கான மதிப்பை கொண்ட ஒரு array ஐ திருப்புகிறது. |
06:30 | each function... key/மதிப்பு ஜோடியை திருப்புகிறது. |
06:34 | இங்கே while loop ஐ பயன்படுத்தியுள்ளோம் |
06:36 | each function ஆல் திருப்பப்படும் இது hash ன் ஒவ்வொரு key/மதிப்பு ஜோடியின் மீதும் செயல்படும். |
06:43 | file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக. |
06:48 | இப்போது, script ஐ இயக்க டெர்மினலில் டைப் செய்க |
06:53 | perl perlHash dot pl |
06:58 | எண்டரை அழுத்துக |
07:01 | பின்வரும் வெளியீட்டை டெர்மினலில் காணலாம். |
07:05 | இப்போது hash மீது loop ஐ செயல்படுத்துவதற்கான மற்ற சில வழிகளை காணலாம் |
07:10 | hash ன் ஒவ்வொரு key மீதும் iterate செய்ய foreach loop ஐ பயன்படுத்தலாம். |
07:15 | பின் ஒரு key ன் மதிப்பு மீது சில செயல்பாடுகளை செயல்படுத்தலாம். |
07:20 | syntax திரையில் காட்டப்படுகிறது. |
07:24 | இங்கே foreach loop ன் ஒவ்வொரு iteration னும் hash லிருந்து key ஐ $variable க்கு assign செய்யும் |
07:32 | பின் அது மதிப்பை பெற அல்லது சில செயல்பாடுகளை செயல்படுத்த அந்த $variable ஐ பயன்படுத்தும். |
07:40 | அதேபோல, திரையில் காட்டப்படுவதுபோல hash மதிப்புகள் மீதும் செயல்படுத்தலாம். |
07:47 | உதாரண ப்ரோகிராமைக் காண்போம். |
07:49 | எனவே gedit ல் loopingOverHash dot pl க்கு வருகிறேன் |
07:55 | பின்வரும் code ன் பகுதியை உங்கள் loopingOverHash dot pl ல் டைப் செய்க |
08:02 | இந்த code ன் பகுதி hash ன் ஒரே ஒரு key ஐ திருப்புகிறது |
08:07 | இங்கே, |
08:09 | முதல் முறை dollar key ($key).... key ஆக Department ஐ கொண்டிருக்கிறது |
08:15 | foreach ன் அடுத்த iteration ல், Name key திருப்பப்படுகிறது. |
08:21 | குறிப்பு: Hash என்பது ஒழுங்கமைக்கப்படாத dataகளின் ஒரு தொகுப்பு. |
08:26 | எனவே, திருப்பப்படும் keyகள்.... hash ஐ உருவாக்கும்போது வரையறுக்கப்பட்ட வரிசையில் இருக்காது |
08:33 | அதேபோல values மீதான loop உம் வேலைசெய்கிறது. |
08:38 | file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக. |
08:41 | பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க |
08:46 | perl loopingOverHash dot pl |
08:50 | எண்டரை அழுத்துக |
08:53 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது. |
08:59 | சுருங்கசொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
09:01 | உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி Perl ல் Hash மற்றும் |
09:03 | hash ன் element களை அணுகுதல் |
09:08 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
09:11 | மாணவரின் பெயரை ஐ key ஆகவும் |
09:15 | அவரின் சதவீதத்தை மதிப்பு ஆகவும் கொண்ட hash ஐ declare செய்க. |
09:18 | keys, values மற்றும் each function ஐ பயன்படுத்தி hash மீது loop செய்க |
09:24 | பின் ஒவ்வொரு மாணவரின் சதவீதத்தையும் அச்சடிக்கவும். |
09:29 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:32 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:37 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:49 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:53 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:02 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:06 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:15 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:26 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
10:30 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |