Linux/C2/Working-with-Regular-Files/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | Linux ல் working with regular files குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
0:07 | Files மற்றும் directoryகள் சேர்ந்து Linux File System ஐ வடிவமைக்கின்றன |
0:13 | ஏற்கனவே முன் tutorial லில் directory களுடன் வேலை செய்வதை கண்டோம் . அதை இந்த website ல் காணலாம். |
0:25 | இந்த tutorial லில் regular files ஐ கையாளுவதைப் பார்க்கலாம். |
0:31 | ஏற்கனவே ஒரு tutorial லில் cat command ஐப் பயன்படுத்தி file ஐ உருவாக்குவதை பார்த்திருக்கிறோம். தகவல்களுக்கு இந்த website ஐக் காணவும். |
0:46 | ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு file ஐ பிரதி எடுப்பதைப் பார்க்கலாம். அதற்கு cp command உள்ளது |
0:55 | அந்த command இன் பயன்பட்டைப் பார்க்கலாம். |
1:00 | ஒரு file ஐ பிரதி எடுக்க, type செய்க. cp space ஒன்று அல்லது மேற்பட்ட [OPTION]... space SOURCE file ன் பெயர் space destination file ன் பெயர் DEST. |
1:15 | ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுக்க, எழுதுவோம். cp space ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [OPTION]... பிரதி எடுக்க விரும்பும் files ன் SOURCE ன் பெயர்... மற்றும் அந்த files, பிரதி எடுக்கப்படவேண்டிய destination DIRECTORY ன் பெயர். |
1:34 | ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். terminal ஐத் திறப்போம் |
1:42 | /home/anirban/arc/ ல் test1 என்ற file ஐ ஏற்கனவே வைத்துள்ளோம். |
1:49 | test1 ல் உள்ளதைப் பார்க்க type செய்வோம். $ cat test1 enter ஐ அழுத்தவும் |
2:00 | நாம் test1 ல் பார்க்கும் உள்ளடக்கத்தை test2 என்ற file க்கு பிரதி எடுக்க, எழுதுவோம் $ cp test1 test2 enter ஐ அழுத்தவும் |
2:22 | இப்போது file, பிரதி எடுக்கப்படுகிறது . |
2:25 | test2 என்ற file இல்லையானால் முதலில் அது உருவாக்கப்படுகிறது பிறகு test1 ன் உள்ளடக்கம் அதனுள் ஒட்டப்படுகிறது. |
2:35 | ஏற்கனவே அந்த file இருந்தால் அது overwrite செய்யப்படுகிறது. பிரதி எடுத்த file ஐக் காண $ cat test2 enter செய்க |
2:52 | உங்களால் different directories ல் இருந்தும் files ஐ பிரதி எடுக்க முடியும். உதாரணமாக type செய்க $ cp /home/anirban/arc/demo1 /home/anirban/demo2 enter செய்க |
3:31 | இது என்ன செய்கிறது எனில் file demo1 ஐ source diretory /home/anirban/arc/ ல் இருந்து destination directory /home/anirban ன் file demo2 க்கு பிரதி எடுக்கிறது |
3:51 | demo2 அங்கிருக்கிறது எனக் காண type செய்க ls space /home/anirban enter செய்க |
4:13 | scroll up செய்து demo2 இருப்பதைக் காணலாம் |
4:19 | screen ஐ clear செய்வோம் |
4:25 | அந்த file அதே பெயரில் destination directory ல் வேண்டும் என்றால், file பெயரைக்குறிப்பிடாமல் இருக்கலாம். உதாரணமாக |
4:35 | Type செய்க $ cp /home/anirban/arc/demo1 /home/anirban/ enter செய்க |
5:03 | இது மீண்டும் /home/anirban/arc/ directory ல் இருக்கும் file demo1 ஐ /home/anirban directory க்கு demo1 என்ற பெயரிலேயே பிரதி எடுக்கும் |
5:20 | முன் போல demo1 ஐப் பார்க்க type செய்க ls /home/anirban enter செய்க |
5:33 | இங்கே மீண்டும் scroll up செய்து demo1 file இருப்பதைப் பார்க்கலாம். |
5:40 | மீண்டும் screen ஐ clear செய்வோம் |
5:48 | மற்றொரு உதாரணம் destination file name கொடுக்கத் தேவையில்லாத போது ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுத்தல் |
5:56 | நாம் 3 file கள் test1 test2 test3 என home directory ல் வைத்திருப்பதாக கொள்வோம் |
6:04 | type செய்வோம் $ cp test1 test2 test3 /home/anirban/testdir enter செய்க |
6:27 | இது 3 file களையும் test1,test2 மற்றும் test3 ஐ /home/anirban/testdir directory க்கு அவற்றின் பெயர்கள் மாறாமலே பிரதி எடுக்கும் |
6:41 | இந்த file கள் பிரதி எடுக்கப்பட்டதைக் காண type செய்க ls /home/anirban/testdir enter செய்க |
7:03 | test1,test2 மற்றும் test3 இந்த directory ல் இருப்பதைக் காணலாம் |
7:10 | cp க்கு நிறைய optionகள் உள்ளன . இங்கே அவற்றில் மிக முக்கியமாவற்றைப் பார்க்கலாம். |
7:18 | முதலில் slide களுக்குச் செல்லலாம். |
7:23 | அந்த option களுள் -R முக்கியமான ஒன்று. இது அந்த மொத்த directory structure லும் recursive பிரதி எடுக்க பயனாவது |
7:33 | ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் |
7:38 | testdir directory யின் அனைத்து உள்ளடக்கத்தையும் test directory க்கு பிரதி எடுக்க முயற்சிக்கலாம். |
7:48 | அதற்கு type செய்வோம் cp testdir/ test enter செய்க |
8:02 | நீங்கள் output message ஐ பார்க்கலாம் |
8:06 | வழக்கமாக சில உள்ளடக்கத்தை வைத்திருக்கும் directory ஐ cp command பயன்படுத்தி பிரதி எடுக்க முடியாது |
8:14 | ஆனால் -R option ஐ பயன்படுத்தி செய்யலாம் |
8:19 | இப்போது type செய்வோம் cp -R testdir/ test enter செய்க |
8:36 | இப்போது பிரதி எடுக்கப்பட்ட directory ஐக் காண type செய்க ls enter செய்க |
8:47 | நாம் test directory இருப்பதைக் காணலாம். screen ஐ clear செய்வோம் |
8:57 | test ல் உள்ள உள்ளடக்கத்தைக் காண type செய்க test enter செய்க |
9:08 | test directory ன் உள்ளடக்கத்தைக் காணலாம் |
9:13 | இப்போது slide களுக்குத் திரும்ப செல்கிறோம் |
9:16 | ஒரு file மற்றொரு file க்கு பிரதி எடுக்கப்படும்போது அந்த file ஏற்கனவே இருந்தால் அது overwrite செய்யப்படும் என தெரியும் |
9:25 | இப்போது தவறுதலாக முக்கியமான file ஐ overwrite செய்கிறோம் என்றால்? |
9:30 | இது போல் ஏதும் நடக்காமல் தடுக்க -b option உள்ளது |
9:36 | இது இருக்கும் ஒவ்வொரு destination file க்கும் ஒரு backup ஐ உருவாக்குகிறது |
9:41 | நாம் -i(interactive)option யும் பயன்படுத்தலாம். இது எப்போதும் destination file ஐ overwrite செய்யும் முன் நம்மை எச்சரிக்கும் |
9:54 | இப்போது mv command வேலை செய்வதைப் பார்க்கலாம் |
9:59 | இது file களை இடமாற்ற பயனாவது. அது எப்படி பயனாகிறது? |
10:04 | இது முக்கியமான இரு பயன்களைக் கொண்டுள்ளது. |
10:07 | இது ஒரு file அல்லது directory ஐ rename செய்ய பயனாகிறது |
10:11 | ஒரு group of files ஐ மற்றொரு directory க்கு மாற்றவும் பயனாகிறது |
10:17 | mv நாம் ஏற்கனவே பார்த்த cp போலவேதான் . அதனால் mv ஐ எப்படி பயன்படுத்த முடியும் என சீக்கிரமாக காணலாம். |
10:29 | terminal திறந்து type செய்க $ mv test1 test2 enter செய்க |
10:43 | இது ஏற்கனவே home directory ல் உள்ள file test1 ஐ test2 என மாற்றும் |
10:52 | test2 ஏற்கனவே இருந்தால் இது overwrite செய்யப்படும் |
11:00 | file overwrite செய்யப்படும் முன் நமக்கு எச்சரிக்கை வேண்டுமானால் |
11:05 | mv command ல் -i option ஐப் பயன்படுத்தலாம். |
11:10 | anirban என்ற மற்றொரு file ஐ வைத்துள்ளதாக கொள்வோம்.இந்த file யும் test2 என மாற்ற விரும்புகிறோம் |
11:20 | type செய்வோம் mv -i anirban test2 enter செய்க |
11:32 | நாம் பார்ப்பது போல ஒரு எச்சரிக்கை கொடுத்து test2 overwrite செய்யப்பட வேண்டுமா எனக் கேட்கிறது |
11:41 | y ஐ அழுத்தி enter ஐ அழுத்தினால் , அந்த file overwrite செய்யப்படும் |
11:49 | cp போல mv ஐயும் ஒன்றுக்கும் மேற்பட்ட file களுடன் பயன்படுத்தலாம். ஆனால் இங்கே destination ஒரு directory ஆக இருக்க வேண்டும் |
11:58 | தொடர்வதற்கு முன்னால் screen ஐ clear செய்யலாம். |
12:03 | abc.txt, pop.txt மற்றும் push.txt என 3 fileகளை home directory ல் வைத்திருப்பதாக கொள்வோம் |
12:14 | அவை இருப்பதைக் காண type செய்க ls enter செய்க |
12:21 | இங்கே fileகள் pop.txt,push.txt மற்றும் abc.txt உள்ளன. screen ஐ clear செய்வோம் |
12:36 | இப்போது இந்த 3 fileகளையும் testdir directory க்கு மாற்ற விரும்புகிறோம் |
12:46 | அதற்கு type செய்க mv abc.txt pop.txt push.txt destination folder ன் பெயர் testdir enter செய்க |
13:14 | அவற்றைப் பார்க்க type செய்க ls testdir enter செய்க |
13:20 | abc, pop மற்றும் push.txt fileகளை நீங்கள் பார்க்கலாம் |
13:27 | mv ன் சில option களைப் பார்க்கலாம். முதலில் slide களுக்குத் திரும்ப போகலாம் |
13:37 | பிறகு mv command உடன் இருக்கும் -b அல்லது –backup option... destination ல் ஒவ்வொரு file யும் overwrite செய்யப்படும் முன் backup எடுக்கும் |
13:48 | நாம் ஏற்கனவே பார்த்த எந்த destination file யும் overwrite செய்யும் முன் -i option நம்மை எச்சரிக்கும் |
13:58 | அடுத்தது rm command. இது file களை நீக்கப் பயன்படுகிறது |
14:06 | terminal க்கு திரும்பச் சென்று type செய்க ls testdir |
14:15 | அதில் ஒரு file faq.txt ஐப் பார்க்கலாம். இதை நீக்க வேண்டும் எனக் கொள்வோம் |
14:23 | அதற்கு type செய்க $ rm testdir/faq.txt enter செய்க |
14:37 | இந்த command file faq.txt ஐ /testdir directory யில் இருந்து நீக்கும் |
14:46 | உண்மையில் அந்த file நீக்கப்பட்டதா இல்லையா எனப் பார்க்க... மீண்டும் அழுத்தவும் ls testdir enter செய்க |
15:00 | நீங்கள் அந்த file faq.txt ஐ பார்க்க முடியாது |
15:05 | நீங்கள் rm command ஐ ஒன்றுக்கும் மேற்பட்ட file களுடனும் பயன்படுத்தலாம் |
15:10 | testdir directory யில் இரண்டு file கள் உள்ளன abc2 மற்றும் abc1 |
15:17 | இந்த files abc1 மற்றும் abc2 ஐ நாம் நீக்க வேண்டும் என்றால் . |
15:23 | அதற்கு type செய்வோம் rm testdir/abc1 testdir/abc2 enter செய்க |
15:45 | இது files abc1 மற்றும் abc2 ஐ testdir directory யில் இருந்து நீக்குகிறது |
15:53 | அவை நீக்கப்பட்டிருப்பதைக் காண மீண்டும் type செய்க ls testdir abc1 மற்றும் abc2 ஐ பார்க்க முடியாது |
16:07 | மேலும் போகு முன் screen ஐ clear செய்யலாம் |
16:14 | இப்போது மீண்டும் slide களுக்குப் போகலாம் |
16:18 | சுருங்க சொல்ல நாம் கற்றது |
16:20 | ஒரே ஒரு file ஐ நீக்க எழுதுவது rm மற்றும் file ன் பெயர். |
16:27 | ஒன்றுக்கும் மேற்பட்ட file களை நீக்க எழுதுவது rm மற்றும் நீக்க வேண்டிய file களின் பெயர் |
16:34 | இப்போது rm command ன் சில optionகளைப் பார்க்கலாம் . |
16:40 | சில சமயம் பாதுகாக்கப்பட்ட file ஐ rm command ஆல் நீக்க முடியாது. அப்போது அந்த file ஐ கட்டாயப்படுத்தி நீக்க -f option ஐ நாம் பயன்படுத்தலாம் |
16:57 | மற்றொரு பொதுவான option -r. இந்த option எங்கே பயனுள்ளதாக இருக்கிறது என பார்க்கலாம். |
17:07 | terminal க்குத் திரும்ப போகலாம் |
17:12 | rm command ஐ வழக்கமாக directory களை நீக்க பயன்படுத்துவதில்லை, அதற்கு பயனாவது rmdir command. |
17:21 | ஆனால் rmdir command ஒரு directory காலியாக இருந்தால் மட்டுமே நீக்கும். |
17:27 | அதிக subdirectory களையும் file களையும் கொண்ட directory ஐ நீக்க வேண்டுமானால்? |
17:35 | அதற்கு rm command ஐ முயற்சிக்கலாம் |
17:38 | type செய்வோம் rm மற்றும் நாம் நீக்க விரும்பும் directory testdir enter செய்க |
17:47 | rm command ஐ testdir directory ஐ நீக்க பயன்படுத்த முடியாது என்ற output message ஐ பார்க்கலாம் |
17:55 | ஆனால் -r மற்றும் -f option களை சேர்த்தோமேயானால் அதை நீக்க முடியும் |
18:03 | rm -rf testdir enter செய்க |
18:16 | இப்போது testdir directory வெற்றிகரமாக நீக்கப்பட்டது |
18:22 | இப்போது slide களுக்குத் திரும்பச் சென்று அடுத்த command ஐப் பார்க்கலாம் |
18:27 | cmp command. |
18:29 | சில சமயம் இரண்டு file களும் ஒன்றா என சோதிக்க வேண்டியிருக்கும். அப்படியானால் அவற்றில் ஒன்றை நீக்கலாம் |
18:37 | கடைசி பதிப்பில் இருந்து அந்த file மாற்றப்படுள்ளதா என பார்க்கவும் விரும்பலாம் |
18:44 | இவற்றுக்காகவும் மற்றும் பல காரணங்களுக்காகவும் cmp command ஐப் பயன்படுத்தலாம் |
18:49 | இது இரண்டு file களையும் byte வாரியாக ஒப்பிடுகிறது |
18:54 | file1 மற்றும் file2 ஐ ஒப்பிட எழுதுவோம் cmp file1 file2. |
19:03 | இரண்டு file களின் உள்ளடக்கங்கள் ஒத்திருந்தால் message ஏதும் காட்டப்படாது. |
19:11 | prompt மட்டும் அச்சிடப்படும் |
19:14 | உள்ளடக்கங்களில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் முதல் வேறுபாட்டின் இடம் terminal லில் அச்சிடப்படும் |
19:25 | cmp எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். home directory ல் sample1 மற்றும் sample2 என இரண்டு file கள் வைத்திருக்கிறோம் |
19:35 | அவற்றினுள் இருப்பதைக் காணலாம் |
19:38 | Type செய்க cat sampe1 Enter செய்க. இது “This is a Linux file to test the cmp command” என்ற text ஐ வைத்துள்ளது |
19:50 | மற்றொரு file sample2 text ஐ வைத்திருக்கும். அதை காண type செய்வோம். cat sample2 enter செய்க |
20:00 | இது வைத்திருக்கும் text “This is a Unix file to test the cmp command.” |
20:06 | இப்போது இந்த இரண்டு file களுக்கும் cmp command ஐ பயன்படுத்தலாம் |
20:11 | எழுதுவோம் cmp sample1 sample2 enter செய்க |
20:23 | sample1 மற்றும் sample2 file களுக்கு இடையே சுட்டிக்காட்டப்பட்ட முதல் வேறுபாட்டை பார்க்கலாம். |
20:32 | மேலே போகு முன் screen ஐ clear செய்யலாம் |
20:38 | அடுத்து நாம் பார்க்கபோகும் command wc |
20:43 | இந்த command ஒரு file ன் வரிகள் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்ட பயன்படுகிறது |
20:50 | sample3 என்ற file ஐ நம் home directory யில் வைத்துள்ளோம் |
20:56 | இதன் உள்ளடக்கத்தைக் காணலாம், அதற்கு type செய்வோம். cat sample3 enter செய்க |
21:05 | இது sample3 file ன் உள்ளடக்கம் |
21:10 | இப்போது இந்த file லில் wc command ஐப் பயன்படுத்தலாம் |
21:14 | அதற்கு எழுதுவோம் wc sample3 enter செய்க |
21:25 | இந்த file 6 வரிகள், 67 வார்த்தைகள் மற்றும் 385 எழுத்துக்கள் கொண்டிருப்பதாக இந்த command காட்டுகிறது |
21:38 | இவைதான் file களுடன் வேலை செய்ய உதவும் சில commandகள் |
21:43 | இன்னும் பல commandகள் உள்ளன. மேலும் நாம் பார்த்தது போல ஒவ்வொரு command ம் பல option களை வைத்துள்ளன |
21:51 | man command ஐப் பயன்படுத்தி அவற்றை மேலும் பார்க்க பரிந்துரைக்கிறேன் |
22:00 | இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம் |
22:04 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
22:17 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
22:34 | தமிழாக்கம் பிரியா. நன்றி |