LibreOffice-Suite-Writer/C4/Using-track-changes/Tamil
From Script | Spoken-Tutorial
TIME | NARRATION |
00:00 | அனைவருக்கும் வணக்கம். |
00:03 | LibreOffice Writer இல் 'Track changes while Editing a document' குறித்த Spoken tutorial க்கு நல்வரவு |
00:09 | இதில் document களை Writerஇல் peer review செய்வதை பார்க்கலாம் |
00:15 | இருப்பிலுள்ள ஒரு document ஐ திறக்கலாம். |
00:18 | 'Record Changes' option ஐ பயன்படுத்தி peer review செய்து குறிப்புகளை தருவதை காணலாம். |
00:25 | வசதி என்னவென்றால் review செய்பவர் குறிப்புகள் எழுதலாம்; text ஐ சேர்க்கலாம், நீக்கலாம், மாற்றலாம்; இவை அத்தனையும் document இல் தெளிவாக காண்பிக்கப்படும். |
00:40 | இவற்றை சுலபமாக காணும் ஆசிரியர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம், நிராகரிக்கலாம்; இப்படி திருத்தங்களை மீண்டும் எழுதும் வேலையின்றி குறிப்புகளை உள்ளிடலாம். |
00:52 | பைலை சேமிக்கும்போது இந்த குறிப்புகளும் சேர்த்து சேமிக்கப்படும். |
00:56 | ஆகவே எப்படி செய்வது என்று பார்க்கலாம். |
01:01 | இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 .மற்றும் Libre Office Suite version 3.3.4. |
01:09 | இந்த tutorial இல் ஏற்கெனெவே உருவாக்கி சேமித்த சில document களை பயன்படுத்துவேன். அவை - |
01:16 | Seven-reasons-to-adopt-FOSS.odt Government-support-for-FOSS-in-India.odt |
01:24 | Writer ஐ துவக்க Applications - Office and LibreOffice Writer என முறையே சொடுக்குக. Seven-reasons-to-adopt-FOSS.odt ஐ திறக்கவும். |
01:40 | 'record changes' option ஐ செயலாக்க |
01:43 | EDIT → CHANGES சென்று RECORD option ஐ checkசெய்யவும். |
01:52 | SHOW option ஐயும் check செய்க. இது எந்த பின்வரும் மாறுதல்களையும் தெளிவாக காட்டும். |
02;00 | document இல், இரண்டாம் point ஐ உள்நுழைக்கலாம். |
02:05 | point எண் 2 சென்று type செய்யலாம். |
02;08 | Linux is a virus resistant operating system since each user has a distinct data space and cannot directly access the program files. |
02:35 | Enter செய்க. நடப்பு point எண் இரண்டு - point எண் 3 ஆகிவிட்டது. |
02:41 | உள்ளிட்ட text வேறு நிறத்தில் இருப்பதை காணுங்கள். |
02:45 | text மீது சொடுக்கியை வைக்க செய்தி தெரிகிறது. |
02:50 | “Inserted Sriranjani:” உள்நுழைத்த தேதி, நேரம். |
02:55 | இப்படி document இல் குறிப்பெழுதியவர் அடையாளம் காட்டப்படுகிறார். இந்த பெயர் எங்கிருந்து வந்தது? கணினியில் LibreOffice நிறுவப்பட்ட போது கொடுத்த பெயரே இது. |
03:07 | முதல் வரியில் “avalable” சொல்லின் எழுத்துப்பிழையை திருத்தவும். திருத்தத்தை காணலாம். |
03:16 | முதல் point ஐ நீக்குவோம் - |
03:18 | “It can be installed on all computers without restriction or needing to pay license fees to vendors”. |
03:30 | நீக்குதல் என்பது வரியை உண்மையில் நீக்கவில்லை. ஆனால் நீக்க பரிந்துரை செய்யப்பட்டதாக குறிக்கிறது. |
03:39 | text மீது சொடுக்கியை வைக்க ஒரு செய்தி தெரிகிறது. |
03:43 | “Deleted Sriranjani:” நீக்கிய தேதி, நேரம். |
03:48 | இப்படி இருப்பில் உள்ள ஒரு document இல் text ஐ சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் போன்ற மாற்றங்களை செய்யலாம். |
04:00 | ஒரே document ஐ ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களும் கூட திருத்தலாம். |
04:03 | LO Writer இவற்றை வெவ்வேறு நிறங்களில் காட்டும். இதனால் யார் திருத்தி உள்ளார்கள் என சுலபமாக கண்டுகொள்ளலாம். |
04:12 | சந்தேகமானால் சொடுக்கியை text மேல் வைக்க குறிப்பில் விவரங்கள் காட்டப்படும். |
04:18 | என் சக பணியாளர் குரு திருத்திய ஒரு document ஐ திறந்து இதை காட்டுகிறேன். |
04:26 | “Government-support-for-FOSS-in-India.odt” என்னும் text ஆவண கோப்பை திறப்போம். |
04:34 | document இல் பல சேர்க்கைகள், அடித்தல் திருத்தங்களை காணலாம். |
04:41 | சொடுக்கியை text மேல் வைக்க குறிப்பில் அடித்தல் திருத்தங்களை Guru செய்தார் என காட்டப்படுகிறது. |
04:51 | அடியில் ஒரு point ஐ சேர்க்கலாம் “CDAC, NIC, NRC-FOSS are institutions of Government of India which develop and promote FOSS” |
05:17 | இந்த உள்நுழைவின் நிறம் குரு செய்த மாற்றங்களுக்கான நிறத்திலிருந்து வித்தியாசமானது. |
05:23 | சொடுக்கியை இந்த உள்நுழைவின் மேல் வைக்க “Inserted: Sriranjani” என்ற செய்தி காட்டப்படுகிறது. |
05:28 | இப்படியாக ஒரு document உருவாக்கியவரின் கைக்கு மீண்டும் போய் சேரு முன் பலர் திருத்தங்களை செய்யலாம். |
05:34 | document ஐ சேமிக்காமல் மூடுவோம். |
05:44 | இப்போது ஆசிரியர் மறு ஆய்வாளரின் திருத்தங்களை எப்படி ஒப்புக்கொள்வதோ நிராகரிப்பதோ செய்யலாம் என பார்க்கலாம். |
05:49 | “Government-support-for-FOSS-in-India”,document இல் நான்தான் ஆசிரியர் என்றும் குரு செய்த திருத்தங்களை ஒப்புக்கொள்வதோ நிராகரிப்பதோ செய்யப்போகிறேன் எனலாம். |
06:11 | point 2 க்குப்போய் நீக்கப்பட்ட text 'reasons' மீது வலது சொடுக்குகிறேன். பின் 'Accept Change' என்பதையும் சொடுக்குகிறேன். |
06:22 | text நீங்கி மறு ஆய்வாளர் கொடுத்த மாற்றம் ஏற்கப்பட்டது. |
06:27 | 'needs' என்ற உள்நுழைத்த text ஐ வலது-சொடுக்குக; 'Accept Change' ஐயும் சொடுக்குக. |
06:34 | text சாதாரணமாகி விட்டது. இதைத்தான் மறு ஆய்வாளர் பரிந்துரைத்தார். |
06:39 | இப்படியாக, மறு ஆய்வாளர் தரும் உள்நுழைவு, நீக்கம் ஆகிய எல்ல திருத்தங்களையும் ஆசிரியர் ஒப்புக்கொள்ள முடியும். |
06:48 | point 1 க்கு சென்று நீக்கப்பட்ட “The OpenOffice document standard has been notified under this policy” வரி மீது வலது சொடுக்குக. 'Reject change' ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:01 | text சாதாரணமாகி விட்டது. அதாவது பரிந்துரை ஆசிரியரால் நிராகரிக்கப்பட்டது. |
07:08 | point 5 க்கு சென்று “Government Schools in these states and in Orissa, Karnataka and Tamil Nadu learn Linux” வரி மீது வலது சொடுக்குக. 'Reject change' ஐ தேர்ந்தெடுக்கவும். இது மறு ஆய்வாளர் உள்நுழைத்த வரிகளை நீக்கிவிட்டது. |
07:26 | இப்படி மறு ஆய்வாளர் தரும் உள்நுழைவு, நீக்கம் - எல்லா திருத்தங்களையும் ஆசிரியர் ஒப்புக்கொள்ளவோ நிராகரிக்கவோ முடியும். |
07:33 | இறுதியாக, ஒப்புக்கொள்ளல், நிராகரிப்பு எல்லாம் முடிந்த பின் EDIT >> CHANGES சென்று 'Record', 'Show' option களை குறி நீக்கவும். |
07:55 | குறி நீக்கிய பின் திருத்தம் தனியாக குறிக்கப்பட மாட்டாது. |
08:00 | மறு ஆய்வாளர்களின் மாற்றங்களை ஒப்புக்கொண்டோ நிராகரித்தோ முடிவு செய்தபின், ஆவண சேமித்தலை உறுதி செய்க. |
08:08 | இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. இறுதியாக பயிற்சி. |
08:15 | ஒரு document ஐ திறந்து சொற்பிழைகளை Record Changes பாங்கில் திருத்துக. |
08:24 | இங்கே ஏற்கெனெவே அந்த பயிற்சியை செய்து வைத்து இருக்கிறேன். |
08:30 | கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம். |
08:40 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:44 | இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
08:53 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. |
09:02 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:13 | மூல பாடம் IT for change.தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |