LibreOffice-Suite-Base/C4/Database-Design-Primary-Key-and-Relationships/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | நம் முந்தைய tutorial, Database Design ன் தொடர்ச்சியே இந்த tutorial. |
00:10 | இங்கே பின்வருவனவற்றைக் கற்போம் |
00:13 | 4. தகவல் itemகளை columnகளுக்கு மாற்றுதல் |
00:17 | 5. primary keys ஐ குறிப்பிடுதல் |
00:20 | 6. table relationship களை அமைத்தல் |
00:23 | கடைசி tutorial லில், எளிய Library application க்கு database design செயல்முறையை ஆரம்பித்தோம் |
00:30 | முதலில் Library database ஐ கட்டமைப்பதற்கான நோக்கத்தை தீர்மானித்தோம். |
00:36 | பின் library பற்றிய தகவல்களை கண்டுபிடித்தல் மற்றும் ஒழுங்கமைக்கும் செயல்முறையைத் தொடர்ந்தோம் பின் |
00:44 | இந்த தகவல்களை Table களாக பிரித்தோம் |
00:49 | அவ்வாறு Library database ல் Books, Authors, Publications மற்றும் Members ஆகிய நான்கு table களைக் கண்டுபிடித்திருந்தோம் |
01:00 | இப்போது தகவல் item களை column களாக மாற்றும் அடுத்த படிக்கு போகலாம் |
01:07 | ஒவ்வொரு table லிலும் சேமிக்க விரும்பும் தகவல் item ஐ முடிவு செய்வோம் |
01:13 | நாம் முன்னரே கண்டுபிடித்த ஒவ்வொரு தகவல் item மும்... ஒரு field ஆக மாறி table லில் column ஆக காண்கிறது |
01:23 | திரையில் காட்டப்பட்ட image போல Books table... 5 columnகளை கொண்டுள்ளது. அவையும் fields எனப்படும் |
01:31 | ஒரு row அல்லது record அதனுடைய column த்தில் ஒரு புத்தகத்தின் தகவலை மட்டுமே கொண்டுள்ளது |
01:40 | அதேபோல் Authors table ல் உள்ள ஒவ்வொரு record உம் ஒரு ஆசிரியர் பற்றிய தகவலை மட்டுமே கொண்டுள்ளது |
01:49 | மேலும் Publishers table ல் உள்ள ஒவ்வொரு record உம் ஒரு வெளியீட்டாளர் பற்றிய தகவலை மட்டுமே கொண்டுள்ளது |
01:58 | இப்போது இந்த column களை நம் தேவைகளுக்கு ஏற்ப மேலும் துல்லியப்படுத்தலாம் |
02:04 | உதாரணமாக, Author name ஐ First Name மற்றும் Last Name என பிரிக்கமுடியும், இதனால் இந்த column கள் மூலம் தேடலாம் அல்லது அடுக்கலாம் |
02:17 | tableகளில் தனி column களாக கணக்கீடுகளின் தீர்வை சேமிக்க வேண்டியதில்லை |
02:24 | ஏனெனில் எப்போது தீர்வை நாம் காண நினைத்தாலும் Base ஆல் கணக்கீடுகளை செயல்படுத்த முடியும் |
02:31 | இப்போது நமக்கு tables மற்றும் columns பற்றி நன்கு தெரியும், அடுத்து primary keys ஐ குறிப்பிடுவதைக் கற்போம் |
02:41 | primary key என்றால் என்ன? |
02:44 | table ல் சேமித்த ஒவ்வொரு row ஐயும் தனிப்பட்டமுறையில் அடையாளம் காணும் ஒரு column அல்லது பல column களைக் ஒவ்வொரு table உம் கொண்டிருக்கும் |
02:54 | இது போன்ற ஒரு column அல்லது பல columnகள் table ன் primary key எனப்படும் |
03:00 | இது Book Id அல்லது Author Id போல பெரும்பாலும் தனிப்பட்ட அடையாள எண் ஆகும் |
03:08 | பல tableகளில் இருந்து logical related data ஐ விரைவாக தொடர்புபடுத்தி ஒன்றுசேர்த்து கொண்டுவர primary key fieldகளைப் பயன்படுத்தலாம் |
03:21 | மேலும் primary key ல் போலி மதிப்புகளும் கிடையாது |
03:26 | உதாரணமாக, நபர்களின் பெயர்களுக்கு primary key ஐ பயன்படுத்த முடியாது, ஏனெனில் பெயர்கள் தனித்துவமானவை அல்ல |
03:34 | இரண்டு நபர்கள் ஒரே பெயருடன் ஒரே table ல் இருக்கலாம் |
03:40 | அடுத்து primary key க்கு எப்போதும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும் |
03:45 | அது empty அல்லது Null எனில், அதை primary key ஆக எடுத்துக்கொள்ள முடியாது |
03:52 | Base தானாக உருவாக்கும் ‘AutoNumber’ ஐ column ன் data type ஆக அமைப்பதன் மூலம் எப்போதும் ஒரு மதிப்பை வைத்திருக்க primary key column ஐ அமைக்கமுடியும் |
04:09 | திரையில் காணும் image போல, பின்வருமாறு primary key ஐ நம் tableகளுக்கு அமைக்க முடியும் |
04:20 | Books table க்கு BookId, |
04:24 | Authors table க்கு AuthorId, |
04:28 | Publishers table க்கு PublishersId |
04:33 | அதேபோல், MemberId, Members table க்கு primary key ஆக இருக்கும் |
04:42 | கடைசியாக primary keys ஐ tableகளுக்கு அமைப்பதன் மூலம், Entity Integrity ஐ செயல்படுத்துகிறோம் |
04:52 | Entity Integrity, table க்குள் duplicate records இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது |
05:00 | ஒவ்வொரு record உம் table க்குள் unique ஆகவும் null ஆக இல்லை எனவும் அடையாளம்காணும் field ஐயும் இது உறுதிப்படுத்துகிறது |
05:10 | இப்போது நம்மிடம் இந்த 3 table களுக்கும் primary keys உள்ளன. relationships ஐ அமைப்பதன் மூலம் அவற்றை ஒன்றாக கொண்டுவரலாம் |
05:20 | இந்த கோட்பாட்டை Base ஆதரிப்பதால், Base ஒரு Relational Database Management System என அழைக்கப்படுகிறது, சுருக்கமாக RDBMS |
05:32 | relationships ல் சில வகைகள் உள்ளன. இப்போது அவற்றைக் காண்போம் |
05:37 | முதலில் One-to-Many relationship ஐ காணலாம் |
05:43 | இப்போது image ல் காணும் Books மற்றும் Authors tableகளை கருத்தில் கொள்வோம் |
05:49 | ஒரு புத்தகம் ஒரே ஒரு ஆசிரியரால் எழுதப்படுகிறது |
05:55 | இரண்டு அல்லது பலபேர் ஒரே புத்தகத்திற்கு இணைஆசிரியராக இருக்க முடியும் |
06:02 | ஆனால் நம் உதாரணத்திற்கு ஒரு புத்தகத்திற்கு ஒரு ஆசிரியர் என்றே நிறுத்திக்கொள்வோம். |
06:10 | நம் உதாரணத்துடன் தொடர்ந்து, ஒரு ஆசிரியர் பல புத்தகங்களையும் எழுதலாம் |
06:17 | எனவே Authors table ல் இருக்கும் ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் Books table ல் இருக்கலாம் |
06:28 | அதனால் இது ஒரு one-to-many relationship. |
06:32 | இதை நம் Library database ல் குறிக்கலாம் |
06:36 | Authors table க்கு primary key ஆக இருக்கும் Author Id ஐ எடுத்து Books table க்கு சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் |
06:46 | Books table ல் இருக்கும் Author Id, Foreign key எனப்படும் |
06:53 | அதேபோல் Publishers table க்கு primary key ஆக இருக்கும் Publisher Id ஐ Books table க்கு சேர்ப்பதன் மூலம் foreign key ஆக மாறும் |
07:06 | ஒரு column அல்லது columnகளின் தொகுப்பை பகிர்வதன் மூலம் database ல் one-to-many relationships ஐ குறிக்கலாம் |
07:17 | Foreign keys ஐ பயன்படுத்தி table relationships அமைக்கப்படும் |
07:23 | எனவே relationship ஐ உருவாக்க ஒரு table ன் primary key மற்றொரு table ன் foreign key ஆக குறிப்பிடப்படும் |
07:34 | அதன் மூலம் Referential integrity ஐ செயல்படுத்துகிறோம் |
07:39 | அதாவது table ல் ஒவ்வொரு foreign key மதிப்பும், தொடர்புடைய tableகளில் பொருந்தும் ஒரு primary key மதிப்பைக் கொண்டிருக்கும் |
07:50 | அடுத்து Many-to-Many relationship ஐ காணலாம் |
07:56 | இப்போது table design க்கு போகலாம் |
07:59 | ஒரு புத்தகம் library ன் பல உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படலாம் (பல பிரதிகள் உள்ளன எனக் கொள்க). |
08:09 | அதேபோல் ஒரு உறுப்பினர் பல புத்தகங்களை வாங்கலாம் (ஆம், பல புத்தகங்கள் உள்ளன எனக் கொள்க). |
08:17 | இங்கே பல உறுப்பினர்களுக்கு பல புத்தகங்களைக் கொடுக்கும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் |
08:25 | இது ஒரு Many-to-many relationship ஐ குறிக்கும் |
08:35 | எனவே Junction table என அழைக்கப்படும் மூன்றாவது table ஆன BooksIssued table ஐ உருவாக்குவதன் மூலம் இந்த many-to-many relationship ஐ நம் database ல் குறிப்பிடலாம் |
08:45 | மேலும் இங்கே , Books மற்றும் Members என்ற இரண்டு tableகளில் இருந்தும் primary keyகளை BooksIssued table னுள் நுழைக்கலாம் |
08:57 | அதனால், BooksIssued table ஒவ்வொரு புத்தகமும் உறுப்பினருக்குக் கொடுப்பதை பதிவுசெய்கிறது |
09:05 | மூன்றாவது junction table ஐ உருவாக்குவதன் மூலம், many-to-many relationships ஐ குறிப்பிடலாம் |
09:13 | கடைசியாக One-to-one relationship. |
09:18 | சிலசமயம் மிக அரிதாக data நிரப்பபடும் சில data க்கு குறிப்பிட்ட attributes அல்லது columns உள்ளன |
09:30 | ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் website address ஐ வைத்திருப்பதாக கொள்வோம். |
09:38 | Authors table ல் புது website column பெரும்பாலும் காலியாகவே விட்டு disk space ஐ குறைக்கலாம் |
09:47 | எனவே இந்த column ஐ supplemental table க்கு நகர்த்தலாம். அதன் primary key... Author Id போலவே இருக்கும் |
09:58 | supplemental table ன் ஒவ்வொரு record உம் main table ன் சரியாக ஒரு record உடன் ஒத்திருக்கும் |
10:06 | இதுவே One-to-one relationship. |
10:10 | நம் database ல் relationships ஐ அமைக்க கற்றோம் |
10:15 | LibreOffice Base ல் Database Design மீதான tutorials ன் இரண்டாம் பாகம் இத்துடன் முடிகிறது |
10:23 | இந்த tutorial லில் நாம் கற்றது |
10:28 | 4. தகவல் itemகளை columnகளுக்கு மாற்றுதல் |
10:32 | 5. primary keys ஐ குறிப்பிடுதல் |
10:34 | 6. table relationshipகளை அமைத்தல் |
10:38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:58 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |