LibreOffice-Suite-Base/C2/Create-a-simple-form/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:04 | இந்த tutorial லில் LibreOffice Base இல் எளிய படிவங்களை காணலாம். |
00:09 | இங்கே கற்கப்போவது: form என்றால் என்ன? |
00:13 | form ஐ Wizard உதவியுடன் உருவாக்குவது எப்படி? |
00:17 | LibreOffice Base ஐ பயன்படுத்தி இது வரை ஒரு database உருவாக்குவது data வை சேமிக்கும் table களை உருவாக்குவது ஆகியவற்றை கண்டோம். |
00:27 | ஆனால் database table களில் data வை எப்படி உள்ளிடுவது ? |
00:33 | table களின் செல்களில் நேரடியாக data வை type செய்யலாம். இப்படி போன tutorial லில் செய்தோம். |
00:42 | குறைவான பிழை சாத்தியங்களுடன் data வை விரைவில் உள்ளிட வழி உண்டு. |
00:49 | அது forms மூலம் உள்ளிடுவது. form ஒரு front end. data வை உள்ளிடவும் திருத்தவும் உதவும் பயனர் இடைமுகம். |
01:00 | உதாரணமாக, ஒரு எளிய form ... table ல் உள்ள field களை கொண்டு இருக்கலாம். |
01:06 | உதாரணத்துக்கு முந்தைய tutorial லின் database ஐ பார்க்கலாம். |
01:15 | Books table லில் உள்ள field களை ஒரு எளிய form கொண்டிருக்கலாம். |
01:21 | Books table இல் இந்த form, data வை உள்ளிட பயன்படும். |
01:27 | form ஐ உருவாக்க கற்போம். |
01:33 | முதலில் LibreOffice Base program ஐ துவக்கலாம். |
01:38 | Base program திறந்து இல்லையானால், திரையில் இடது மூலையில் உள்ள ஸ்டார்ட் பட்டனை சொடுக்கவும். பின் All Programs, பின் LibreOffice Suite கடைசியாக LibreOffice Base. |
01:57 | இப்போது 'open an existing database file' தேர்வை சொடுக்கலாம். |
02:04 | 'Recently Used' drop down box யில் நம் library database தெரியவேண்டும். |
02:12 | இப்போது அதை தேர்ந்தெடுத்து Finish button மீது சொடுக்கலாம். |
02:17 | LibreOffice Base ஏற்கெனெவே திறந்திருந்தால்.. |
02:22 | மேலே பைல் மெனுவில் சொடுக்கி பின் Open மீது சொடுக்கி library database file ஆன library.odb ஐ திறக்கலாம். |
02:36 | மாற்றாக, பைல் மெனுவில் Recent Documents மீது சொடுக்கி library.odb ஐ தேர்ந்தெடுக்கலாம். |
02:48 | நாம் இப்போது library database இல் இருக்கிறோம். |
02:52 | இடது panel இல் உள்ள database பட்டியலிலுள்ள Forms iconஇன் மீது சொடுக்குவோம். |
03:01 | புதிய form ஐ உருவாக்க இரு வழிகள் உள்ளன. Form in Design View மற்றும் Use Wizard to create form. |
03:12 | இரண்டாம் தேர்வில் சொடுக்கலாம் - Use Wizard to create form. |
03:19 | LibreOffice Writer window போன்ற ஒரு புதிய window தோன்றுவதை பார்க்கிறோம். |
03:26 | 'Form Wizard' எனும் ஒரு pop up window வை அதன் மீது பார்க்கிறோம். |
03:33 | Books table ஐ அடிப்படையாக கொண்ட ஒரு form ஐ உருவாக்க இந்த Wizard இல் மேல் செல்வோம். |
03:40 | இடது பக்கம் கடக்க வேண்டிய 8 படிகளை காணலாம். |
03:46 | 'Field Selection' என்பது படி 1. |
03:53 | வலது பக்கம் drop down box யிலிருந்து tables or Queries என்பதில் tables ஐ தேர்ந்தெடுப்போம். |
04:03 | இதன் கீழ் இடது பக்கம் கிடைக்கக்கூடிய field களின் பட்டியல் ஒன்றை காணலாம். |
04:09 | வலது பக்கம் படிவத்திலுள்ள fields தெரிகின்றன. |
04:14 | தேவையான field களை மட்டும் படிவத்திற்கு நகர்த்துவோம். |
04:21 | இப்போதைக்கு இரட்டை அம்புள்ள பட்டனை சொடுக்கலாம். |
04:27 | இடது பக்கம் இருந்த எல்லா field களையும் வலது பக்கம் நகர்த்தி விட்டோம். |
04:35 | BookId புலம் தானியங்கியாக அதன் எண்களை உருவாக்குமாதலால் நமக்கு அது form இல் வேண்டாம்.. |
04:46 | ஆகவே அதை இடது பக்கம் நகர்த்திவிடலாம். |
04:51 | இதற்கு வலது பக்கமுள்ள BookId மீது சொடுக்கிய பின், பின் அம்புக்குறி பட்டனை சொடுக்கலாம். |
05:02 | சரி, அடுத்த படிக்கு போகலாம். கீழே உள்ள நெக்ஸ்ட் button ஐ சொடுக்குவோம். |
05:10 | படி 2. நாம் எளிய form ஐ உருவாக்குவதால் இதை தவிர்த்து நெக்ஸ்ட் button ஐ சொடுக்கி மேலே செல்வோம். |
05:21 | படி 5 : 'Arrange controls'. |
05:26 | பின் புல window வில் Books table Orange பின்புலத்தில் இருப்பதை பாருங்கள். |
05:35 | 'Arrangement of the Main form' என்று சொல்லும் லேபிளின் கீழே உள்ள நான்கு சின்னங்கள் மீது சொடுக்குவோம். |
05:44 | நாம் சொடுக்கிக்கொண்டு போகையில் , பின்புல window மாறிக்கொண்டே போகிறது. அதில் label கள், தலைப்பு, ஆசிரியர் ஆகியவற்றுக்கான text பெட்டிகள் மாறுகின்றன. |
05:57 | 'Columnar – Labels left' என்னும் முதல் அமைப்பை பயன்படுத்தலாம். அதற்கு முதல் icon ஐ சொடுக்கலாம். |
06:08 | இங்கே இடது பக்கம் label களும் வலது பக்கம் உரைப்பெட்டிகளும் ஒரு காகித form போலவே இருக்கின்றன. |
06:17 | மேலே செல்ல அடுத்து button ஐ சொடுக்கலாம். |
06:22 | 6 வது படி: 'Set data Entry'. |
06:29 | இப்போதைக்கு இதை தவிர்த்து அடுத்த படிக்கு போகலாம். |
06:34 | படி 7. 'Apply Styles'. |
06:36 | list box இல் உள்ள ஒவ்வொரு நிறத்தையும் சொடுக்க window வின் பின்புல நிறம் மாறுவதை கவனியுங்கள். |
06:45 | Ice Blue மீது சொடுக்கி, அதை தேர்வு செய்யலாம். |
06:50 | இப்போது கடைசி படி. |
06:53 | படி 8. இப்போது நாம் நம் படிவத்துக்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும். |
06:59 | நாம் சுயேச்சையாக பெயர் அமைக்கலாம். |
07:03 | ஆனால் ஒரு விவரமான பெயரை ‘Name of the form’ இன் கீழ் உள்ள உரைப்பெட்டியில் 'Books data Entry Form' என தரலாம். |
07:16 | இப்போது form ஐ உருவாக்கி விட்டோம். மேலே என்ன செய்வது? |
07:21 | முதலில் form உடன் வேலை செய்வோம். |
07:24 | form ஐ data வை உள்ளிட பயன்படுத்தலாம். |
07:29 | form இன் design ஐ மாற்ற 'Modify the form', ஐ பயன்படுத்தலாம். இதை பின்னால் காண்போம். |
07:37 | இப்போதைக்கு முடித்துவிட்டோம். ஆகவே கீழே உள்ள finish button மீது சொடுக்கலாம். |
07:44 | 'Books data Entry form' என்ற தலைப்பில் நமது முதல் எளிய form ஐ தயார் செய்து விட்டோம். |
07:54 | text boxes 'An autobiography', 'Jawaharlal Nehru' போன்ற மதிப்புகளால் நிரப்பப்பட்டுள்ளன என்பதை கவனிக்கவும். |
08:05 | இவை எங்கிருந்து வந்தன? |
08:08 | இவற்றை முந்தைய Base tutorial இல் நேரடியாக Books table இல் டைப் செய்தோம். |
08:17 | இப்போது இந்த form data வை உள்ளிட தயார். |
08:22 | tab விசைகளில் சொடுக்கி ஒவ்வொரு மதிப்பையும் காண்போம். |
08:27 | படிவத்தில் இரண்டாம் புத்தகத்தின் தகவலும் தலைப்பும் இப்போது 'Conquest of self' என்றிருக்கிறது.. |
08:37 | கீழே forms Navigation toolbarஇல் வலது பக்கம் காட்டும் கருப்பு முக்கோண iconஇன் மீது சொடுக்கி ஒவ்வொரு புத்தகத்தின் தகவல் எனப்படும் 'record' ஐயும் காணலாம். |
08:54 | record எண் 5 இல் 3 இங்கே காட்டப்படுவதைக் காணலாம். |
09:01 | கருப்பு முக்கோண iconஇன் மீது cursor ஐ வைக்க Base tool tips ஐ காட்டுவதை கவனிக்கவும்: |
09:09 | First Record, Previous Record, |
09:13 | Next Record, Last Record. |
09:16 | record கள் வழியே செல்ல இவற்றை பயன்படுத்தலாம். |
09:21 | இத்துடன் LibreOffice Base இல் எளிய forms குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
09:28 | நாம் கற்றது: form என்றால் என்ன ? form ஐ ஒரு wizard உதவியுடன் உருவாக்குவது எப்படி? |
09:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:47 | இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org. |
09:52 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:56 | தமிழாக்கம் கடலூர் திவா, வணக்கம். |