GIMP/C2/Questions-And-Answers/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:23 | GIMP tutorial க்கு நல்வரவு . |
00:25 | வடக்கு ஜெர்மனி Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:31 | இன்றைய tutorial கேள்வி பதில் பதிப்பாக இருக்கும் என கூறியிருந்தேன். எனவே சில செய்திகளுடன் ஆரம்பிக்கலாம். |
00:40 | gimpusers.com பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். GIMPன் video podcast பற்றிய சிறப்பான செய்தியை அவர்கள் கொண்டுள்ளனர். ஆனால் podcast பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கிறேன். |
00:55 | எனவே download பக்கத்திற்கு சென்று.... இங்கே gimp 2.4.0 வெளியிடப்பட்டு windows க்கு கிடைக்கிறது என காணலாம். apple Macintosh க்கும் உள்ளது என நினைக்கிறேன். என்னுடையது தவிர பல linux systemகளுக்கு source உள்ளது. |
01.19 | ஏனெனில் தேவையான சில library களுடன் Ubuntu ஆல் சமாளிக்க முடியவில்லை. |
01.27 | gimp 2.4.0 வந்துக்கொண்டிருக்கிறது. gimpusers.com ல் இருக்கும்போது, திரையில் இந்த பகுதியைக் காணவும். |
01.42 | இது இரு mailing list ன் mirror. இது gimp பற்றிய அதிக தகவல்களைத் தருகிறது. |
01.49 | முதலாவது gimp user mailing list. இதை படிக்க பரிந்துரைக்கிறேன். |
02:02 | gimp developer list என் புரிதலுக்கு மேலே உள்ளது. அநேகமாய் உங்களுக்கும் மேலே இருக்கும். |
02:12 | இங்கே ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு விவாதம் உள்ளது. அது பற்றி எனக்கு தெரியாது. |
02:20 | அதை இங்கே காணலாம். |
02:22 | இங்கே முதலாவது கேள்வி Alex Burs ஆல் கேட்கப்படுகிறது. அவர் sample point tab செய்தது என்ன என கேட்கிறார்? |
02:34 | எனக்கு அந்த கேள்வி புரியவில்லை |
02:38 | ஆனால் எனக்கு Alex ஐ தெரியும். ஏனெனில் அவர் உங்களுக்கு fileகளை கொடுப்பதில் எனக்கு உதவ முயற்சித்தார். மேலும் எனக்காக google site ஐ set up செய்தார். |
02:51 | இங்கே Tim Jedlicka விடமிருந்து பதில் உள்ளது. எனக்கு TIM ஐயும் தெரியும். ஏனெனில் Tim இணையத்தில் ஒரு பெரிய server ஐ கொண்டுள்ளார். இணையத்தின் வழியே ஒரு பெரிய pipe ஐயும் கொண்டுள்ளார். இங்கே நான் பயன்படுத்தும் file களை தரவிறக்க சாத்தியங்களை அமைக்கும் செயல்பாட்டில் இப்போது நாங்கள் இருக்கிறோம். |
03:14 | இதுபற்றிய தகவலை நான் அளிப்பேன். meetthegimp.org blogஐ காணவும். அங்கே ஒரு download icon ஐ கண்டால் பார்க்கவும். |
03:29 | இங்கே Tim... Alex ன் கேள்விக்கு பதிலளிக்கிறார். |
03:33 | இங்கே இருவரின் இந்த கேள்வி பதில் உரையாடலுக்கு நன்றி. |
03:40 | Tim எழுதுவது... நீங்கள் ctrl key ஐ பிடித்துக்கொள்ளவேண்டியது தவிர sample point... guides போலவே உருவாக்கப்படுகிறுது. cursor ஐ measurement bar ல் வைத்து... sample செய்ய விரும்பும் புள்ளியை இழுக்கும்போது ctrl key ஐ பிடிப்பதன் மூலம் ஒரு sample point ஐ உருவாக்க முடியும். |
04:03 | அங்கே மேலும் சில கேள்விகள் உள்ளன. அவற்றை பின்னர் பார்ப்போம். |
04:08 | அது பற்றி நான் கேள்விபட்டதே இல்லை. அதை நான் முயற்சிக்க வேண்டும். |
04:13 | அதை செய்ய gimp ஐ ஆரம்பிக்கிறேன். அதில் ஒரு படத்தை ஏற்றுகிறேன். அது ஏற்கனவே உருவாக்கப்பட்ட My Ship in the Fog. |
04:25 | இப்போது இடப்பக்கத்தில் ruler க்கு செல்ல வேண்டும், ctrl key ஐ அழுத்தி ruler ஐ வெளியே இழுக்கிறேன். mouse cursor ஒரு eye dropper ஆக மாறுவதைக் காணலாம். ஒரு கோட்டிற்கு பதிலாக இரு கோடுகளைப் பெறுகிறேன். |
04:45 | mouse button மற்றும் ctrl key ஐ விடுவிக்கவும். அதன்மீது ஒரு புள்ளியை எண் ஒன்றுடன் பெறுகிறோம். |
04:54 | mouse button ஐ அழுத்தி ctrl key ஐ அழுத்தாமல் ruler ஐ வெளியே இழுக்கும்போது, இங்கே ஒரே ஒரு கோட்டைப் பெறுகிறேன். அது பொருட்களை ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது. |
05:09 | மேலே உள்ள ruler க்கும் அதே செயல்முறையை செய்ய முயற்சிப்போம். |
05:13 | ctrl key மற்றும் mouse button ஐ அழுத்தி.... ruler ஐ கிழே இழுத்து.... இங்கே அதை விடுவிக்கிறேன். |
05:20 | எனவே இங்கே எண் இரண்டு உள்ளது. எண் ஒன்று ஏற்கனவே உள்ளது. ஆனால் இங்கே dialog ஏதும் இல்லை. |
05:28 | எனவே tool options ஐ சொடுக்கவும். tool box லிருந்து color picker ஐ தேர்ந்தெடுக்கவும். ஆனால் இங்கே ஏதும் இல்லை. |
05:39 | ஆனால் files ல் ஒரு dialog குறிப்பிடப்பட்டிருந்ததை நினைவு கொள்க, எனவே file ல் சொடுக்கி, dialogs சென்று sample points என்ற dialog க்கு செல்க. |
05:53 | அதன் மீது சொடுக்கும்போது, இங்கே 1 மற்றும் 2 க்கு sample points ஐ பெற்றுள்ளோம். |
06:01 | படத்தில் பல புள்ளிகளுக்கு நிற தகவல்களை பெறுவதில் இது ஒரு முறை. |
06:10 | நிற தகவல்களை பெறுவதற்கு நல்ல வழி இப்போது எனக்கு தெரியும். |
06:17 | இங்கே pixel ஐ RGB க்கு மாற்றமுடியும். red, green, blue மற்றும் alpha க்கு மதிப்புகளை பெற்று சதவிகிதத்தில் காட்டப்படுகின்றன. |
06:32 | இங்கே pixelல்... நிறங்களின் உண்மை எண்மதிப்பைக் காண்கிறோம். RGB தேர்ந்தெடுக்கப்படும்போது இங்கே HTML க்காக Hex code ஐ காண்கிறோம். RGB ஐ HSV color model அல்லது CMYK color model ல் மாற்ற முடியும். அவைபற்றி பிறகு பார்க்கலாம். |
07:03 | அடுத்த கேள்வியும் நிறம் மற்றும் color picker பற்றியது. |
07:10 | color picker ஐ எடுத்து படத்தின் நிற தகவல்களை பெறலாம் என என் ‘Ship in the Fog’ podcast ல் குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே Glulio... முடிவு நிறத்தின் நிற தகவல்களை எவ்வாறு பெறுவது என கேட்கிறார். ஒரு layer ன் நிறத்தை அல்ல. |
07:36 | அதன் ஒரு வழியை... இப்போதுதான் நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் அதற்கு வேறு வழியும் உண்டு. |
07:42 | color picker ஐ தேர்ந்தெடுத்ததுள்ளேன். படத்துனுள் shift மற்றும் click ஐ அழுத்தும்போது, நடப்பு நிற தகவலைப் பெறுகிறேன், இங்கே கப்பல் மரங்கள் மற்றும் வானத்தையும் வெள்ளையில் காண்கிறோம். இது மிக திருப்பதிகரமான முடிவு இல்லை. |
08:02 | இது ஏனெனில் வெள்ளை background ஐ நான் தேர்ந்தெடுத்துள்ளேன். |
08:06 | எனவே layers dialog சென்று இதை dialog ல் உண்மை background layer க்கு மாற்றுகிறேன். இது நீங்கள் திரையில் காண்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிறம் என காணலாம். |
08:18 | layers dialog ல் sample merged என்ற தேர்வு உள்ளது. அதை செயல்படுத்தும்போது அனைத்து stack layerகளின் முடிவையும் பெறுகிறோம். sample merged உடன் color picker information ல், எந்நேரமும் foreground மாறிகொண்டிருப்பதைக் காணலாம். |
08:42 | sample merged செயலில் இருக்கும்போது அனைத்து layerகளின் முடிவையும் பெறலாம். |
08:54 | sample merged தேர்வை செயல்நீக்கும்போது நடப்பு layer இடமிருந்து மட்டும் நிற தகவல்களைப் பெறுகிறோம். இதை முன்னர் தெரிவிக்க மறந்துவிட்டேன். blue layer ஐ தேர்ந்தெடுக்கும்போது blue நிறத்தின் தகவலைப் பெறுகிறோம். |
09:13 | எனவே திரும்ப சென்று, sample merged ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்து layerகளின் முடிவை பெறுகிறோம். |
09:20 | இங்கே sample average என்ற மற்றொரு தேர்வு உள்ளது. அதை தேர்ந்தெடுக்கும்போது ஒரு பெரிய color picker ஐ பெற்று அந்த இடத்தில் அனைத்து pixelகளின் ஒரு சராசரியைப் பெறுகிறோம். |
09:37 | இது ஒவ்வொரு pixel க்கும் இடையே பெரிய வித்தியாசம் கொண்ட தெளிவில்லாத படங்களுக்கு நிற தகவல்களை பெறுவதற்கான நல்ல தேர்வு. |
09:54 | Glulio... GIMP க்கு மற்றொரு குறிப்பைக் கொண்டுள்ளார். |
09:58 | file பெயராக .xcf ஐ மட்டுமல்லாமல் xcf.pz2 அல்லது xcf.bz2 ஐ பயன்படுத்தலாம். gimp படத்தை compresse செய்து சிறிய file அளவில் தருகிறது. |
10.17 | இது windows இயங்குதளத்தில் வேலை செய்யுமா என எனக்கு தெரியாது. அதை நீங்கள் முயற்சிக்க வேண்டும். |
10:24 | file ஐ xcf.zip என பெயரிடுகிறீர்கள் எனில் அநேகமாய் windows இல் இது வேலை செய்யும். ஆனால் இது உண்மையா என எனக்கு தெரியாது. |
10:35 | யாராவது இது முயற்சித்து blog ல் போட வேண்டும். |
10:43 | மற்றொரு கேள்வி Dmitry இடமிருந்து வருகிறது. |
10:47 | அவர் கேட்பது... வேறு codec ஐ முயற்சிப்பதன் மூலம் video தரத்தை அதிகரிக்கிறேன் எனில்... . |
10:55 | ஆனால் இந்த codec H 264... இலவச பதிப்பில் linux க்கு கிடைக்கவில்லை. |
11:03 | ஒரு வணிகரீதியான பதிப்பு உள்ளது. ஆனால் அது எனக்கு விலை கட்டுப்படியாகாது.. |
11:08 | இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. என் வேலைகளை தரவேற்ற நான் பணம் செலுத்துகிறேன். அது அதிகமில்லை. ஆனால் இதற்காக நான் பணம் செலவிட விரும்பவில்லை. |
11:23 | ஆனால் உங்களுக்கான தரமிக்க கேள்வி ஒன்று உள்ளது. |
11:26 | இதை நான் 800/600 pixels ல் பதிவுசெய்கிறேன். 640/480 pixels ஆக இதன் அளவை குறைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொருவரும் இதை செய்கின்றனர். இவ்வழியில் இது apple tv மற்றும் அதுபோன்ற பலவற்றில் வேலைசெய்கிறது. |
11:44 | உங்களுக்கான என் கேள்வி.... உண்மை file அளவு 800/600 ஐ விரும்புகிறீர்களா? |
11:52 | படம் தெளிவாக உள்ளது. நன்றாக பார்க்க முடிகிறது. |
11:56 | fileகள் சற்று பெரிதாகின்றன. வெளியில் உள்ள மக்களால் இந்த பெரிய fileகளை உண்மையில் பார்க்க முடியாது . |
12:09 | 800/600 ல் ஒரு சோதனை file ஐ உருவாக்கி தரவேற்றுகிறேன், அநேகமாய் அதை நீங்கள் முயற்சித்து உங்கள் கருத்தை அளிக்கலாம். |
12:21 | இங்கே Rodrigo அனுப்பிய அடுத்த பின்னூட்டத்தால் நான் சந்தோஷமடைகிறேன். அவர் சொல்வது...., photoshop ஐ வாங்கக்கூடாது எனவும்... ஆனால் அவரின் graphic வேலைக்கு GIMP ஐ பயன்படுத்தவும் நினைக்கிறார். |
12:37 | மின்னஞ்சல் வழியாக Vitaly யிடமிருந்து ஒரு கேள்வியைப் பெற்றேன். அது சொல்வது... அழிக்க முடியாத வழியில் curves tool ஐ பயன்படுத்த ஏதேனும் வழி உண்டா? |
12:48 | இதற்கான பதில்... இல்லை... GIMP ல் இல்லை. |
12:51 | adjustment layer உடன் Photoshop இதை செய்யும். GIMP ல் வேலை செய்யும் பல programmerகள் இதை செயல்படுத்த முயற்சி செய்கின்றனர். |
13:03 | ஆனால் இதுவரை levels tool ஐ பயன்படுத்தி நிறங்களை மாற்றுகிறீர்கள் எனில்..., இந்த வழியில்... அதன் பிறகு நீங்கள் செய்த அனைத்து படிகளையும் undo செய்யாமல்... உங்கள் வேலையை undo செய்ய முடியாது. |
13:20 | Dudley இடமிருந்து மற்றொரு கேள்வி... இவர் tips from the top floor உடன் இங்கே என் podcast க்கு வந்துள்ளார். அவர் கணினியில் GIMP 2.2.17 ஐ நிறுவியுள்ளார். அவருக்கு 2.3 அல்லது 2.4 வெளியீடை நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில் அவை 2.2 தொடரை விட நல்லது. |
13:55 | மேலும் Novice to Professional இடமிருந்து Akkana Peck ன் ஒரு புத்தகம் Beginning GIMP பற்றி கேட்கிறார். இந்த புத்தகம் என்னிடம் உள்ளது. |
14:07 | இது உண்மையில் நல்ல புத்தகம். gimp ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது அதில் கொஞ்சம் தெரியும் எனில் பின் இது மிக நல்ல புத்தகம். புத்தகத்தில் செய்முறை பயிற்சி உள்ளது. |
14:19 | இந்த புத்தகத்தை வெகுவாக பரிந்துரைக்கிறேன் |
14:25 | இதை நீங்கள் வாங்க விரும்பினால்... அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் எனில்... blog இனுள் ஒரு இணைப்பைக் கொடுக்கிறேன். அங்கே தள்ளுபடியில் இந்த புத்தகத்தை வாங்கலாம். கடை உரிமையாளர் அதிலிருந்து கொஞ்சம் பணத்தைப் பெறுகிறார். |
14:43 | கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் என் வேலையை மீண்டும் நான் ஆரம்பித்த போது மிக அதிர்ச்சியடைந்தேன். அது சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் meet the gimp blogஐ windows கணினியில் internet explorer ல் முதல்முறை பார்த்தேன். |
15:04 | உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அனைத்து படங்களும் சேதமடைந்தும் எதுவும் frame களுக்குள் அடங்காமலும் அதுபோல பலவும் இருந்தன. |
15:17 | கடைசியாக இந்த tutorial லில் உங்களுக்கு ஒரு link tip ஐ தருகிறேன். |
15:23 | photo podcastக்கு photocast network ஒரு சிறந்த மூலம். நான் ஏற்கனவே உறுப்பினராக உள்ளேன். ஆனால் நான் இணையத்தளத்தில் இல்லை. |
15:37 | இணையதளத்தைப் பார்க்கவும், photocast network ன் உறுப்பினரால் உருவாக்கப்பட்ட ஒரு podcast உள்ளது. இது Focus ring எனப்படும். episode 8 வெளிவந்துள்ளது. |
15:52 | பின்னர் இங்கே இடப்பக்கம் Meet The Gimp காட்டப்படும். |
15:59 | ஒரு உதவி செய்யுங்கள். meet the gimp பற்றி பிறரிடம் சொல்லுங்கள், கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு எழுதவும். மேலும் விவரங்கள் http://meetthegimp.org ல் கிடைக்கும். |
16:22 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |