GIMP/C2/Adjusting-Colours-with-Curves-Tool/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:53, 6 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:24 வணக்கம். GIMP tutorial க்கு நல்வரவு.
00:26 இன்றைய tutorial... raw converting பற்றியது அல்ல. ஆனால் ஒரு real show ஐ செய்யும்போது புதிய coding பற்றியது. மேலும் கடைசி tutorial ல் இருந்து சில பிழைகளை சரிசெய்தல்
00:40 இந்த படத்தைப் பற்றி சிலது சொல்ல விரும்புகிறேன்.
00:44 show ஐ பதிவுசெய்யும் போது சில கூடுதல் மாற்றங்களை செய்துள்ளேன்.
00:50 நீங்கள் பார்ப்பதுபோல கடல் சற்று மங்கியுள்ளது. இது சாம்பல் நிறத்திலும் அதில் அதிகமாக தெளிவற்றும் இருக்கிறது. sea layer ஐ இங்கே செயல் நீக்கும் போது ... மற்ற layerகள்....., கடலில் சில விளக்கம் இருப்பதைக் காணலாம்.
01:17 layer mask ஐ பார்க்கும்போது.... நான் layer mask ஐ பயன்படுத்திய பின் காட்டவிரும்பிய பகுதி பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் இருப்பதைக் காணலாம்
01:30 எனவே இந்த படியை மீண்டும் செய்யலாம்.
01:37 sea layer ஐ நீக்கி.... background layer ஐ ஒரு பிரதி எடுத்துள்ளேன்.
01:44 இந்த layer ஐ sea என பெயரிடுகிறேன். இந்த layer ஐ sky க்கு கீழேயும் land layerக்கு மேலேயும் வைக்கிறேன்.
01:57 நான் வைத்திருந்த layer உடன் வேலைசெய்திருக்க முடியும். ஆனால் நான் நல்ல முடிவை பெற்றிருக்க முடியாது. ஏனெனில் கடலை சற்று கருமையாக்க நான் curves tool ஐ பயன்படுத்தியிருந்தேன்.
02:10 அதனுடன் அந்த layer ல் இருந்த பெரும்பாலான நிற தகவல்களை நான் அழித்துள்ளேன். இங்கே இந்த வழியில் நல்ல முடிவைப் பெறுவேன்.
02:24 இப்போது ஒரு layer mask ஐ மீண்டும் sea layerக்கு சேர்க்கிறேன், gray scale copy of layer ஐ பயன்படுத்துகிறேன். அதை சேர்க்கிறேன்.
02:35 Show layer mask மீது சொடுக்கி அந்த layer mask ஐ edit செய்கிறேன்.
02:41 Curves tools ஐ பயன்படுத்துவேன். இதை கீழே இழுப்பதன் மூலம் அதே வழிமுறைகளை மீண்டும் செய்வேன். ஆனால் இம்முறை இந்த மேல் வளைவை மேலே இழுக்கிறேன்.
03:01 இப்போது கடல் மற்றும் வானம் உள்ள பகுதி கிட்டத்தட்ட வெள்ளையாகவும் நிலப்பகுதி கிட்டத்தட்ட கருப்பாகவும் கொண்ட layer mask ஐ கொண்டுள்ளோம்.
03:12 சில விடுபட்ட அமைப்புகளை சரிசெய்ய இங்கே brush tool ஐ தேர்கிறேன். பெரிய brush ஐ இங்கே தேர்கிறேன். கருப்பு நிறத்தில் நிலப்பகுதியை வரைய ஆரம்பிக்கிறேன்.
03:30 sea layer ஐ கருப்பு நிறத்தில் வரைய எனக்கு விருப்பம் இல்லை. எனவே foreground மற்றும் background நிறங்களை மாற்றுகிறேன்.
03:39 பின் கடல் பகுதிக்கு சென்று வெள்ளை நிறத்தில் வரைய ஆரம்பிக்கிறேன். இதை சற்று மிருதுவாக செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
03:56 இங்கே இந்த பகுதி... இது முற்றிலும் நன்றாக இருந்தது என நினைக்கிறேன். ஆனால் அதை பின்பு சரிசெய்ய முடியும்.
04:04 எனவே ஒரு மிருதுவான brush ஐ தேர்ந்தெடுக்கலாம். இந்த விளிம்பை நன்றாக பெறுவதைக் காண்க.
04:21 show layer mask ஐ தேர்வு நீக்கும் போது.... இங்கே கடலுக்கும் நிலத்துக்கும் இடையில் ஓரத்தில் காட்சியில் நீட்சியைக் காணலாம்
04:32 படத்தை பெரிதாக்கலாம். Layer mask உம் அந்த layer உம் ஒன்றாக வேலை செய்யாத இடத்தில் halo ஐ காணலாம். பிறகு இதனுடன் வேலை செய்வேன்.
04:50 இப்போது shift + ctrl + E ஐ அழுத்தி மீண்டும் முழுபடத்தையும் காணலாம்.
04:58 curves tool ஐ தேர்ந்தெடுத்து..... layer mask ஐ தேர்ந்தெடுத்துள்ளேனா என சோதிக்கிறேன். முழுபடத்தையும் காண sky layer ஐ சேர்க்கிறேன். இப்போது படத்தினுள் சொடுக்கி வளைவுகளுடன் விளையாடுவோம்.
05:28 இப்போது கடலுக்கும் நிலத்துக்கும் இடையே halo மறைவதைக் காணலாம். ஆனால் கடல் இப்போது சற்று மங்கியுள்ளது.
05:40 ஆனால் இங்கே வளைவை மேலே இழுத்து தெளிவான கடலை இங்கே பெறுகிறேன்.
05:52 இதை அதிகமாக செய்யக்கூடாது என நினைக்கிறேன்.
06:07 கடல் மீது சூரிய ஒளியைக் காணலாம், மேகங்களின் நிழல், அலைகளின் பல்வேறு வடிவங்கள் மற்றும் சற்று நீல நிறம்... இது கடல் மீது இருக்க வேண்டும் என்பதால்.
06:22 வானத்தின் விளிம்பில் பிரகாசமாக இருப்பததில் ஒரு பிரச்சனை உள்ளது. ஏனெனில் வானம் மேலே மிக பிரகாசமாக உள்ளது. பின்வரும் படிகளில் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
06:41 சரி, curves tool ன் விளைவை opacity slider மூலம் சரிசெய்ய முடியும். ஒரு நல்ல விளைவுக்கு இதை சற்று குறைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
06:58 John Arnoldன் broadcast லிருந்து ஒரு குறிப்பு.... இது சொல்வது... முடிந்தவரை முழு அளவிற்கு போக வேண்டும். பின் slider ல் குறைக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் குறைக்கும்போது effect ஐ காண இது மிக சுலபமானது
07:17 பின் சரியான அளவை சுலபமாக முடிவு செய்யலாம்.
07:22 இந்த பகுதியில் அதிகமாக செய்துள்ளேன் என நினைக்கிறேன். எனவே slider ஐ குறைக்கிறேன். இது சரி என நினைக்கிறேன்.
07:36 அடிவானத்தின் மீது எங்கிருந்து பிரகாசம் வருகிறது?
07:40 sky layer ஐ தேர்வுநீக்கி சோதிக்கிறேன். ஆனால் அது இதனால் அல்ல.
07:46 எனவே sea layer ஐ தேர்வுநீக்குகிறேன். இது sea layer ஆல் நடக்கிறது.
07:52 இங்கே இந்த பகுதியை கருமையாக்க வேண்டும்.
07:55 அதை செய்ய gradient tool ஐ பயன்படுத்துகிறேன்.
07:59 layer mask ஐ தேர்கிறேன். இப்போது tool box லிருந்து gradient tool ஐ தேர்கிறேன். நிலப்பகுதியை வெள்ளையிலும் வானம் பகுதியை கருப்பிலும் வைத்திருக்க விரும்புகிறேன். மேலும் இங்கே விளிம்பும் வேண்டும்.
08:21 gradient முழு வெள்ளையில் ஆரம்பித்து கருப்பில் முடிகிறது.
08:29 எனவே இந்த பகுதியை பெரிதாக்குகிறேன். gradient tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். இங்கே ஆரம்பிக்கிறேன்.
08:38 இந்த கோட்டை உருவாக்கும்போது ctrl key மற்றும் இடது mouse button ஐ அழுத்துகிறேன். ஒரு நேர்க்கோட்டைப் பெற இழுக்கிறேன். இங்கே button ஐ இழுக்கிறேன்.
08:53 இது வேலை செய்ததைக் காண்க, அடிவானத்தின் பிரகாசம் மறைந்தது. நிலத்தின் layer mask உம் மறைந்ததைக் காணலாம்.
09:06 முழுப்படத்தையும் காணலாம். நம் அனைத்து editகளும் மறைந்ததைக் காணலாம்.
09:18 எனவே அடிவானத்துடன் வேலைசெய்ய இது ஒரு நல்ல வழி இல்லை. எனவே இந்த படியை இங்கே undo செய்கிறேன்.
09:27 இப்போது முதலில் rectangle ஐ தேர்ந்தெடுக்கிறேன். layer mask தேர்ந்தெடுக்கப்படுகிறதா என சோதிக்கிறேன். பின் வானம் பகுதியில் செவ்வகத்தை வரைகிறேன்.
09:41 இப்போது செவ்வகத்தை வரையும் போது அதனுள் edit வேலையை செய்ய முடியும். layer mask ன் மீதிப் பகுதி பாதிக்கப்படாது.
09:54 இப்போது மீண்டும் அதே வழிமுறைகளை செய்கிறேன்.
10:00 இங்கே பிரகாசமான பகுதியை பெரிதாக்குகிறேன். layer mask ஐ தேர்கிறேன்.
10:07 மேலே கருப்பும் கீழே வெள்ளையும் வேண்டும், எனவே இங்கிருந்து ஆரம்பிக்கிறேன், நேராக தொடுவானத்திற்கு செல்கிறேன். இப்போது கடல் மட்டும் வெள்ளையாகவும் நிலம் மற்றும் வானம் கருப்பாகவும் இருப்பதைக் காணலாம்.
10:33 Shift + ctrl + A, அனைத்து selectionகளையும் நீக்குகிறது, shift +ctrl + E முழுப்படத்திற்கு செல்கிறது. இப்போது மிக நன்றாக உள்ளது.
10:52 land layer க்கு செய்தது போலவே அதே வழியில் sky layer ஐ edit செய்ய விரும்புகிறேன்.
11:01 sky layer ஐ இரண்டாக்கவும். பின் overlay mode க்கு மாறவும்.
11:08 இது அதிகமாக உள்ளது. எனவே opacity slider ஐ சற்று குறைக்கிறேன். வானத்தில் சற்று அதிக contrast ஐ பெறுகிறோம்.
11:22 இப்போது படம் கிட்டத்தட்ட தயார் என நினைக்கிறேன். ஒன்றைத் தவிர.
11:29 இங்கே வீட்டின் இந்த சுவர் மிக கருமையாக உள்ளது.
11:33 இது dodging மற்றும் burning க்கான சூழ்நிலை ஆகும்.
11:38 Dodgging மற்றும் burning என்பது போட்டோ பிலிம் கால சொற்கள். இருட்டறையில் enlarger மற்றும் photographic paper க்கு இடையில் enlarger ன் விளக்கொளியில் உங்கள் கை paper போல ஏதேனும் ஒன்றை வைத்து படத்தை dodge செய்ய முடியும். burning அதற்கு எதிர்மறையானது.
12:02 அங்கே காகிதத்தில் குறிப்பிட்ட வடிவில் துளையை இட்டு படத்தின் மற்ற சில பகுதிகளுக்கு சற்று வெளிச்சத்தை தவிர்க்கலாம்.
12:15 எப்போது எந்த படி செய்யப்பட்டது என கண்டறிய இது முற்றிலும் கடினமான வழிமுறை. அதற்கு அதிகமான காகிதத்தாள்கள் தேவை. அந்த செயல்முறையை நீங்கள் பார்க்க விரும்பினால் Well Photographer திரைப்படத்தை பார்க்க பரிந்துரைக்கிறேன்.
12:36 இந்த திரைப்படம் James பற்றியது. இருட்டறை காட்சி இல்லாமல் கூட இது ஒரு திகிலூட்டும் திரைப்படம்.
12:45 இந்த படத்தை உங்களுக்கு மிகவும் பரிந்துரைக்கிறேன்.
12:49 இப்போது dodgging மற்றும் burning செயல்முறையைக் காண்போம்.
12:52 இங்கே tool box ல் dodge மற்றும் burn tool உள்ளது. ஆனால் மீண்டும் layer ல் வேலைசெய்ய விரும்புகிறேன்.
13:02 மேலும் ஒரு layer ஐ சேர்க்கிறேன். இதை white ல் நிரப்புகிறேன்.
13:09 colour channel க்கு சென்று 50% ஐ சாம்பல் நிறத்துக்கும் மற்ற channel களில் 128% ஐயும் வைக்கிறேன்.
13:21 இந்த சாம்பல் நிறம் 50% சாம்பல். Layer mode ஐ overlay க்கு மாற்றுகிறேன். ஏதும் நடக்கவில்லை என்பதைக் காணலாம்.
13:35 இப்போது நிறங்களை கருப்பு வெள்ளையாக மாற்றி... ஒரு brush ஐ தேர்கிறேன்.
13:45 brush அளவு சரியாக உள்ளது. ஆனால் opacity tool ஐ 30% அல்லது அதுபோல குறைக்கிறேன் .
13:55 இப்போது நான் வைத்திருக்கும் புது layer தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதை உறுதிசெய்க. foreground நிறத்தை வெள்ளையாகவும் background நிறத்தை கருப்பாகவும் மாற்றுக. இங்கே சுவரை வரைய ஆரம்பிக்கிறேன்.
14:19 அழுத்தம் கொடுக்கப்பட்டதன் விளைவை காணலாம். சுவரின் பக்கவாட்டுப் பகுதி பிரகாசமாக்கப்படுகிறது.
14:36 இந்த செயல்முறை dodgging எனப்படும். ஏனெனில் photographic paper மீது விளக்கொளியை வைக்கிறேன். அதனால் சுவர் பிரகாசமாக்கப்படுகிறது.
14:49 இங்கே layer ஐ பார்க்கும்போது... இங்கே வெள்ளைப் பகுதியைக் காணலாம். படத்தின் மற்ற சில பகுதிகளும் சற்று வெள்ளையாக இருக்கலாம்.
15:03 உதாரணமாக கடற்கரைக்கு அருகில் உள்ள பாறைகள்.
15:09 படத்தை பெரிதாக்குவது சிறந்த வழி. இப்போது சுவரை பிரகாசமாக்கியுள்ளதை காண முடிகிறது. JPEG compression ன் போது அதன் அமைப்பு கிட்டத்தட்ட போய்விட்டது.
15:25 ஆனால் நிறத்தை மாற்றுவதன் மூலம் அதை சரிசெய்யமுடியும். அதற்கு shortcut key ‘X’. இங்கே சற்று கருப்பாக்கலாம்.
15:44 opacity slider ஐ சற்று கீழே இழுக்க வேண்டும். இது சரியாக உள்ளது.
15:54 தொடுவானம் மிக வெள்ளையாக உள்ளது என நினைக்கிறேன். எனவே அந்த பகுதியை வரைய brush ன் வட்ட அளவை சரிசெய்கிறேன். படத்தின் அந்த பகுதியை கருப்பாக்க கருப்பு நிறத்தை பயன்படுத்துகிறேன்.
16:34 ‘x’ key ஐ அழுத்தி நிறத்தை மாற்றி படத்தில் வேலை செய்ய முடியும். அதை சற்று கருப்பாக்கலாம்.
16:53 இது அதிகம் என நினைக்கிறேன். அங்கே என்ன செய்தேன் என உறுதியாக எனக்கு தெரியவில்லை.
17:00 எனவே படியை undo செய்கிறேன்.
17:03 ஒரு layer ஐ உருவாக்கி அதை மிதமான சாம்பலாக மாற்றி ஒவ்வொரு channel க்கும் 128% ஐ அமைத்து layer mode ஐ Overlay ஆக மாற்றிய தொழில்நுட்பத்தை நீங்கள் காணமுடியும்.
17:17 மிதமான சாம்பல் மற்றும் Overlay mode ஒன்றும் செய்யவில்லை. படத்தினுள் கருப்பு அல்லது வெள்ளையில் வரைய முடியும்.
17:26 வெள்ளையில் வரையும்போது படத்தை சற்று வெள்ளையாகவும் கருப்பில் வரையும்போது சற்று கருப்பாகவும் மாற்றுகிறோம்.
17:36 இப்போது உண்மையில் இந்த படம் editing உடன் முடிக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
17:42 இன்று நான் செய்த edit களில் சில தவறுகளை நீங்கள் கண்டுபிடித்தால் ஒழிய மீண்டும் நான் இதில் வேலை செய்ய மாட்டேன்.
17:53 இதை இன்னும் முடிக்கவில்லை என நினைக்கிறேன். அந்த layer க்கு dodge and burn என பெயரிடுக.
18:10 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
18:13 கருத்துக்களை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.org க்கு எழுதவும். மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க
18:33 இதில் உங்களுக்கு பிடித்தவை, எதை நான் மேலும் சரியாக செய்திருக்க முடியும், எதிர்காலத்தில் நீங்கள் பார்க்க நினைப்பவை ஆகியவற்றை தெரிவிக்கவும்.
18:46 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.

Contributors and Content Editors

Priyacst, Ranjana