C-and-C++/C3/Loops/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:54, 3 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial லில் நாம் கற்கபோவது,
00:10 for loop, while loop மற்றும்
00:13 do…while loop. இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம்.
00:17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.
00:21 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது
00:24 Ubuntu இயங்குதளம் version 11.04
00:28 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1.
00:34 loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:38 வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது.
00:44 நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
00:48 while loop, do…..while loop மற்றும் for loop
00:52 முதலில் while loop உடன் ஆரம்பிக்கலாம்.
00:56 ஒரு while loop... condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது
01:01 அதன் அமைப்பு while bracketகளினுள் condition
01:03 bracketகளினுள் statement block
01:07 இப்போது do….while loopக்கு செல்வோம்
01:09 ஒரு do..while loop... condition மதிப்பிடப்படுவதற்கு முன் ஒருமுறையாவது இயக்கப்படுகிறது.
01:15 அதன் அமைப்பு
01:17 do bracketகளினுள் statement block
01:20 bracketக்கு பின் while bracketகளினுள் condition
01:23 condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம்.
01:27 இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம்
01:32 code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன்.
01:35 அதை திறக்கிறேன்.
01:37 நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க.
01:41 இப்போது while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம்.
01:47 இப்போது code ஐ விவரிக்கிறேன்.
01:49 இது header file.
01:51 main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம்.
01:59 இது நம் while loop.
02:02 while loopன் condition... x is less than or equal to 10.
02:06 இங்கே x ன் மதிப்பு yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது.
02:10 கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது.
02:15 பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம்
02:18 இங்கு x அதிகரிக்கப்படுகிறது.
02:20 அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது.
02:25 இது நம் return statement.
02:27 இப்போது programஐ இயக்கலாம்.
02:30 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம்.
02:39 எழுதுக gcc space while dot c space hyphen o space while
02:45 Enter ஐ அழுத்துக
02:47 எழுதுக ./while. Enter ஐ அழுத்துக
02:52 வெளியீடு காட்டப்படுகிறது.
02:54 இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம்.
02:57 windowஐ மறுஅளவாக்குகிறேன்.
03:00 இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0
03:04 இது நம் while condition.
03:06 இங்கே x 10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு 0 முதல் 10 வரை இருக்கும்
03:15 பின் சேர்க்கிறோம் y plus x அதாவது 0 plus 0 பெறுவது 0.
03:22 yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0.
03:27 பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும்
03:33 பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,
03:44 y அதாவது 0 plus x அது 1. 0 plus 1... 1 ஆகும்.
03:50 மதிப்பு 1 என அச்சடிக்கிறோம்.
03:53 மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.
03:55 இப்போது x ன் மதிப்பு 2.
04:01 மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும்.
04:11 மதிப்பை 3 என அச்சடிப்போம்.
04:13 இதேபோல அது x 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும்
04:20 இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம்
04:24 இங்கே நம் program
04:26 நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க
04:31 இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது.
04:35 எனவே do...while loopக்கு செல்வோம்
04:38 இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது.
04:44 xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது.
04:52 logic... while program ல் உள்ளது போலவே
04:55 இப்போது programஐ இயக்குவோம்
04:58 terminalக்கு வருவோம்
05:00 எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக
05:08 எழுதுக dot slash do. Enter ஐ அழுத்துக
05:12 வெளியீடு நம் while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும்
05:16 இப்போது do...while loopன் வேலையைக் காணலாம்.
05:20 window ஐ மறுஅளவாக்கலாம்
05:22 இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0
05:25 அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0
05:29 இப்போது y ன் மதிப்பு 0.
05:31 மதிப்பு 0 என அச்சடிப்போம்
05:33 பின் x 1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும்.
05:42 loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம்.
05:45 எவ்வாறாயினும் condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம்.
05:52 இப்போது, 1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம்
05:56 condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம்.
06:00 இப்போது 0 plus 1.
06:02 பின் y ன் மதிப்பை 1 என அச்சடிப்போம்
06:05 மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.
06:08 இப்போது x ன் மதிப்பு 2.
06:11 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம்
06:15 இங்கு மீண்டும் வருவோம்
06:17 பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2... 3
06:20 y ன் மதிப்பை 3 என அச்சடிப்போம்
06:23 இதுபோலவே x ன் மதிப்பு 10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும்
06:30 இது நம் return statement.
06:33 இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும்
06:38 while loop ல் condition... semicolon உடன் முடியாது.
06:43 இப்போது இந்த programகளை C++ ல் இயக்குவதைக் காணலாம்
06:48 இது C++ல் நம் while program.
06:52 logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே
06:56 சில மாறுதல்கள் உள்ளன. stdio.h இடத்தில் iostream header file
07:04 இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம்
07:16 while loop ன் அமைப்பு நம் C program போன்றதே.
07:21 program ஐ இயக்குவோம்
07:23 terminal க்கு வருவோம்
07:25 prompt ஐ துடைப்போம்
07:28 இயக்க எழுதுக g++ space while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக
07:38 எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக
07:43 நம் வெளியீடு C ல் while program போன்றதே என காணலாம்.
07:48 C++ ல் do... while program ஐ காண்போம்
07:52 Text editor க்கு வருவோம்
07:54 இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன. header file, using statement மற்றும் cout function
08:03 மீதி இருப்பது அதேபோலவே
08:06 programஐ இயக்குவோம்.
08:08 terminalக்கு வருவோம்
08:10 எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக
08:19 எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக
08:23 வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம்.
08:28 இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம்
08:32 நம் text editorக்கு வருவோம்
08:35 இங்கே xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில்.
08:41 Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம்
08:44 terminalக்கு வருவோம். promptஐ துடைப்போம்
08:47 programஐ இயக்குவோம்.
08:50 மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும்.
08:54 மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும்.
08:57 வெளியீடு காட்டப்படுகிறது.
08:59 சில 0களை காண்கிறோம், ஏனெனில் loop ல் முடிவுறும் condition இல்லை.
09:07 இது infinite loop எனப்படும்
09:10 கணினி செயற்படாமல் போவதற்கு Infinite loop காரணமாகலாம்.
09:14 அதனால் program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும்.
09:21 நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம்.
09:25 எழுதுக x++ பின் ஒரு semicolon.
09:28 Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம்.
09:31 terminalக்கு வருவோம்.
09:33 மேல் அம்புக்குறியை அழுத்துக
09:38 ஆம் இது வேலைசெய்கிறது
09:40 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
09:43 நம் slideகளுக்கு வருவோம்.
09:45 சுருங்கசொல்ல
09:47 இந்த tutorial லில் நாம் கற்றது,
09:51 while loop உதாரணமாக. while( x is less than or equal to 10)
09:54 do….while loop
09:56 உதாரணமாக. do statement block மற்றும்
09:59 முடிவில் while condition
10:01 பயிற்சியாக
10:03 for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக
10:07 0 முதல் 9 வரை
10:10 for loopக்கான syntax
10:12 for( variable initialization; variable condition;பின் variable increment or decrement)
10:20 இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும்
10:24 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:27 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
10:30 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:33 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:42 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10:47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:58 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:02 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst