Ngspice/C2/Operating-point-analysis-in-NGspice/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Ngspiceல் “Operating point analysis" குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:10 | operating point analysisஐ செய்வது |
00:13 | பின்வருவனவற்றில், ngspiceஐ பயன்படுத்தி, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்பது interactive mode command-line interface மற்றும் netlist fileலில் சேர்க்கப்பட்டுள்ளcommandscript. |
00:24 | இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04 Operating system மற்றும் ngspice பதிப்பு 23 |
00:33 | இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படைelectronic circuits பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:38 | அடிப்படை Ubuntu Linux மற்றும் shell commandகள் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். |
00:43 | காட்டப்பட்டுள்ள உதாரண circuitஐ பயன்படுத்துவோம். |
00:47 | Circuit மூன்று முக்கிய nodeகளை பெற்றுள்ளது- |
00:52 | a, b |
00:55 | மற்றும் c. |
00:57 | கூடுதலாக, reference அல்லது datum node எனப்படும் நான்காவது node, node “0” என குறிக்கப்பட வேண்டும். |
01:06 | இது எந்த circuitக்கும் கட்டாயமாகும். |
01:09 | Text editorல், முன்பு காட்டப்பட்டcircuit schematicக்கு தொடர்புடைய ngspice netlistஆகிய, "example1.cir" fileஐ திறப்போம். |
01:19 | இதை நான் முன்பே, gedit text editorல் திறந்து விட்டேன். |
01:27 | Netlist file, ".cir" extention உடன file சேமிக்கப்படுவதை கவனிக்கவும். |
01:32 | Voltage source, resistor மற்றும் current source போன்ற எல்லா componentகளையும் காணலாம். |
01:41 | மேலும், இவைகளை ஒன்றாக இணைக்கும் nodeகளி்ன் தகவலையும் காணலாம். |
01:46 | Netlist fileலில் சேர்க்கப்பட்டிருக்கும், ".op" command, operating point analysisஐ செய்ய பயன்படுத்தப்படுகிறது. |
01:54 | இப்போது, interactive mode-command-line interfaceஐ பயன்படுத்தி, இந்த circuitஐ simulate செய்து, மற்றும் Kirchoff's voltage lawஐ சரி பார்ப்போம். |
02:02 | Terminal வழியாக ngspiceஐ திறப்போம். |
02:06 | Ubuntu desktop screenன் , மேல் இடது மூலைக்கு செல்லவும். |
02:10 | Dash homeஐ க்ளிக் செய்யவும். |
02:13 | Search barல், எழுதுக : terminal, பின் Enterஐ அழுத்தவும். |
02:22 | இது, Terminal windowஐ திறக்கும். |
02:26 | இந்த Windowஐ resize செய்கிறேன். |
02:30 | இப்போது, netlist file "example1.cir", சேமிக்கப்பட்டுள்ள folderக்கு செல்கிறேன். |
02:38 | பின்வருமாறு இதைச் செய்கிறேன்: |
02:40 | Terminalலில், டைப் செய்க: cd space Desktop slash op hyphen analysis , பின் Enterஐ அழுத்தவும். |
02:55 | இப்போது, ngspice file ஐ simulate செய்வோம். |
02:59 | இதை எப்படி செய்வதெனக் காண்போம். |
03:01 | Terminalலில், டைப் செய்க: ngspice space example1.cir , பின் Enterஐ அழுத்தவும். |
03:17 | இங்கு, நாம், ngspice command line interfaceக்குள் நுழைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். |
03:23 | டைப் செய்க: run, பின் Enterஐ அழுத்தவும். |
03:28 | இது circuitஐ simulate செய்து, முடிவுகளை சேமிக்கும். |
03:33 | மேலுள்ள simulation முடிவுகளை பயன்படுத்தி, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்போம். |
03:39 | Kirchoff's voltage lawன் படி, வெளிப்புற loopஐ சுற்றியிருக்கும் voltage, dc voltage source V1ன் மதிப்புக்கு சமமாக இருக்க வேண்டும். |
03:51 | வெளிப்புற loopஐ சுற்றியிருக்கும் voltageஐ கணக்கிடவும். |
03:54 | இதற்கு, பின்வருவனவற்றை செய்வோம்: |
03:59 | Terminalலில், ngspice command line interfaceல், |
04:03 | டைப் செய்க: print space v of a comma b plus v of b comma c plus v of c, பின் Enterஐ அழுத்தவும். |
04:21 | இங்கு, v of a comma b , nodeகள் 'a' மற்றும் 'b'க்கு இடையே உள்ள, voltage dropஐ குறிக்கிறது. |
04:29 | Print command, அதன் வலது பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ள, கணக்கீடுகளின் முடிவுகளை காட்டுகிறது. |
04:36 | Terminalலில் கணக்கீடுகளின் முடிவுகளை கவனிக்கவும். |
04:39 | காட்டப்பட்டுள்ள படி, அது, 30 volt ஆகும். |
04:42 | இப்போது, DC voltage source V1, அதாவது v(a)ன் மதிப்பை கணக்கிடவும். |
04:50 | டைப் செய்க: print space v of a , பின் Enterஐ அழுத்தவும். |
05:00 | Terminalலில் கணக்கீடுகளின் முடிவுகளை கவனிக்கவும். |
05:04 | இரண்டு முடிவுகளும் சமமாக இருந்தால், Kirchoff's voltage law சரி பார்க்கப்பட்டு விட்டது. |
05:10 | இரண்டு voltageன் மதிப்புகளும் சமமாக இருப்பதனால், வெளிப்புற loopகளாகிய- a, b, c மற்றும் 0க்கு Kirchhoff's Voltage law சரி பார்க்கப்படுகிறது. |
05:21 | இப்போது, Netlist fileலில் சேர்க்கப்பட்டிருக்கும், command scriptஐ பயன்படுத்தி, இந்த circuitஐ simulate செய்து, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்போம். |
05:31 | மாற்றியமைக்கப்பட்ட netlist file example hyphen modified dot cir, இங்கு காட்டப்பட்டுள்ளது. |
05:40 | நீங்கள் காண்பது போல், command-line interfaceல் நாம் இயக்கிய எல்லா commandகளும், control statements.களாக, இந்த netlistல் சேர்க்கப்பட்டுள்ளன. |
05:50 | அதாவது, dot control மற்றும் dot endc statementகளுக்கு இடையே உள்ள statementகள். |
05:57 | Echo command, terminal windowவில், அதன் வலது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் textஐ echo செய்யும். |
06:04 | Netlistலில், print statementகளை, நாம் சேர்த்திருப்பதை நீங்கள் காணலாம். |
06:10 | இப்போது, மாற்றியமைக்கப்பட்ட netlist file, நாம் இயக்குவோம். |
06:14 | Ngspice simulator environmentன் உள்ளிருந்து, netlistஐ simulate செய்ய, source command பயன்படுத்தப்படுகிறது. |
06:22 | Terminalலில் டைப் செய்க: source space example hyphen modified dot cir, பின் Enterஐ அழுத்தவும். |
06:37 | இது simulationஐ run செய்து, KVLஐ சரி பார்ப்பதற்கு, முடிவுகளை நேரடியாக காட்டும். |
06:43 | முடிவுகள், முன்பு பார்த்ததற்கு ஒப்பாக இருப்பதைக் காணலாம். |
06:48 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
06:52 | Ngspice simulatorல் இருந்து வெளிவர, டைப் செய்க: quit, பின் Enterஐ அழுத்தவும். |
07:00 | இப்போது, இந்த டுடோரியலில் கற்றதை சுருங்க சொல்வோம். |
07:03 | இந்த டுடோரியலில் நாம் கற்றது- |
07:05 | கொடுக்கப்பட்டுள்ள ஒரு circuitன் operating point analysisஐ செய்வது |
07:09 | Netlist fileலில் சேர்க்கப்பட்டிருக்கும், command script', interactive mode-command line interface வழியாக, ngspiceஐ பயன்படுத்தி, Kirchoff's voltage lawஐ சரி பார்ப்பது. |
07:20 | இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
07:24 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
07:28 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும். |
07:32 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: |
07:34 | ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:38 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
07:41 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: contact at spoken hyphen tutorial dot org. |
07:47 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
07:52 | இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
07:59 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: |
08:02 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro. |
08:09 | கலந்து கொண்டமைக்கு நன்றி. |
08:11 | இந்த டுடோரியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். |
08:13 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது காஞ்சனா. |
08:19 | நன்றி. |