KiCad/C2/Designing-circuit-schematic-in-KiCad/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:05, 15 March 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், “Kicadல் circuit schematicஐ வடிவமைத்தல்", குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:08 'PCB'ஐ வடிவமைப்பது சம்பந்தப்பட்ட வழிமுறைகளை காண்போம்.
00:12 முதல் படி, விரும்பிய circuitக்கான schematicஐ உருவாக்குவது.
00:16 இரண்டாம் படி, netlistஐ உருவாக்குவது.
00:19 மூன்றாம் படி, footprintளுடன், componentகளை map செய்வது.
00:22 மற்றும் நான்காம் படி, circuitக்கு, board layoutஐ உருவாக்குவது.
00:27 இந்த டுடோரியலில், முதல் படியைக் கற்போம்,
00:32 விரும்பிய circuitக்கான schematicஐ உருவாக்குவோம்.
00:35 இந்த டுடோரியலுக்கு நாம் பயன்படுத்துவது, Operating systemஆக, Ubuntu 12.04 உடன்
00:40 KiCad பதிப்பு 2011 hyphen 05 hyphen 25.
00:49 இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படை electronic circuitகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:56 இந்த டுடோரியலுக்கு, உதாரண circuitஆக, Astable multivibratorஐ நாம் பயன்படுத்துவோம்.
01:04 KiCadஐ தொடங்க- Ubuntu desktop screenன் மேல் இடது மூலைக்கு செல்லவும்.
01:08 முதல் icon, Dashhomeஐ க்ளிக் செய்யவும்.
01:12 Search barல், டைப் செய்க: 'KiCad', பின் Enterஐ அழுத்தவும்.
01:19 திரையில், KiCad main window தெரியும்.
01:22 Ubuntu 12.04ல், KiCadன் menu bar, Ubuntu desktopன், மேல் panelலில் தெரியும்.
01:30 புது projectஐ தொடங்க, முதலில் File, பிறகு New மீது க்ளிக் செய்யவும்.
01:35 உங்கள் projectக்கு ஒரு பெயரை கொடுக்கவும். உதாரணமாக, "project1".
01:42 Project, '.pro' extentionஉடன் சேமிக்கப்படுவதை கவனிக்கவும்.
01:47 சிறந்த பார்வைக்கு, இந்த windowஐ resize செய்கிறேன்.
01:52 உங்கள் project எங்கு சேமிக்கப்படுகிறது என்பதை கவனித்து, தேவையெனில், directoryஐ மாற்றவும்.
01:58 Saveஐ க்ளிக் செய்யவும்.
02:01 EESchemaஐ பயன்படுத்தி, KiCadல், Circuit schematics செய்யப்படுகின்றன.
02:06 KiCadல், 'EESchema'ஐ எப்படி தொடங்குவது என காட்டுகிறேன்.
02:10 KiCad main windowன், மேல் panelலில் இருக்கும் முதல் tab, 'EESchema' அல்லது schematic editor எனப்படும்.
02:19 'EESchema' tabஐ க்ளிக் செய்தால், schematic editor திறக்கும்.
02:23 Schematicஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ஒரு Info dialog-box தோன்றும்.
02:28 OKஐ க்ளிக் செய்யவும்.
02:32 Circuit schematicsஐ இங்கு உருவாக்குவோம்.
02:35 'EESchema' windowவின் வலது panelக்கு செல்லவும்.
02:38 Place a component பட்டனை க்ளிக் செய்யவும்.
02:42 இப்போது, வெற்று 'EESchema' windowஐ க்ளிக் செய்யவும்.
02:46 Component selection window திறக்கும்.
02:49 EESchema windowவில், 555 timer IC schematicஐ வைப்போம்.
02:56 Component selection windowவின், Name fieldல், "555" என டைப் செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
03:05 தேடுதலின் முடிவை, LM555N என அது காட்டும்.
03:11 இந்த முடிவைத் தேர்ந்தெடுத்து, OKஐ க்ளிக் செய்யவும்.
03:14 EESchema windowவில், componentன் schematic தெரியும்.
03:19 அது உங்கள் cursorஉடன் கட்டப்படும்.
03:22 சிங்கிள் க்ளிகினால், componentஐ, திரையின் நடுவில் வைக்கவும்.
03:27 சிறந்த பார்வைக்கு, Zoom in மற்றும் zoom out செய்ய, உங்கள் mouseன் scroll பட்டனை பயன்படுத்தவும்.
03:35 Zoom in மற்றும் zoom out செய்யப்பட வேண்டிய component மீது, cursorஐ வைக்கவும்.
03:39 Zoom in மற்றும் zoom out செய்ய, முறையே, 'F1' மற்றும் 'F2' keyகளையும் பயன்படுத்தலாம்.
03:46 '555 IC'ன் மீது, 'VCC மற்றும் 'GND' அதாவது, ground terminalஐ, நீங்கள், காணலாம் அல்லது காணாமலும் போகலாம்.
03:56 அதை, காணவில்லையெனில், EESchema windowவின், இடது panelக்கு சென்று,
04:00 Show hidden pins பட்டனை க்ளிக் செய்யவும்.
04:04 இப்போது, EESchema windowவில், ஒரு resistorஐ வைப்போம்.
04:09 Place a component option, நம்மால், முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது.
04:13 அதனால், EESchemaஐ க்ளிக் செய்தால், component selection windowஐ நீங்கள் காணலாம்.
04:21 Name fieldல், டைப் செய்க: 'r', பின் OKஐ க்ளிக் செய்யவும்.
04:26 EESchemaல் தோன்றும் Resistor schematic, உங்கள் cursorஉடன் கட்டப்படும்.
04:32 சிங்கிள் க்ளிகினால், EESchema மீது எங்கேனும், resistorஐ வைக்கவும்.
04:37 மேலும் இரு resistorகள் தேவைப்படுகின்றன.
04:39 Place a component பட்டனை பயன்படுத்தி, இரு resistorகளை பெறலாம்.
04:42 ஆனால், நம்மிடம் ஏற்கெனவே ஒரு resistor உள்ளதால், ஒரு componentஐ copy செய்யக் கற்போம்.
04:48 Componentஐ copy செய்ய, componentஐ ரைட்-க்ளிக் செய்து, Copy Componentஐ தேர்வு செய்யவும்.
05:01 Componentன் ஒரு copy, உங்கள் cursorஉடன் கட்டப்படும்.
05:05 சிங்கிள் க்ளிகினால், EESchemaல் எங்கேனும், resistorஐ வைக்கவும்.
05:11 Keyboard shortcut 'c'ஐ பயன்படுத்தி, இதை மேலும் விரைவாக செய்யலாம்.
05:16 இதற்கு, component மீது cursorஐ வைத்து, பின் 'c'ஐ அழுத்தவும்.
05:22 மீண்டும், அது cursorஉடன் கட்டப்படும்.
05:27 அதை வைக்க, ஒரு முறை க்ளிக் செய்யவும்.
05:30 Shift மற்றும்? (question mark) keyஐ அழுத்துவதன் மூலம், shortcutகளின் ஒரு பட்டியலை நாம் பெறலாம்.
05:36 Keyboard shortcutகளின் பட்டியல் இதோ.
05:40 இந்த windowஐ மூடவும்.
05:43 Component selection windowஐ திறக்க, EESchema windowஐ க்ளிக் செய்யவும்.
05:49 அடுத்து, நமக்கு, electrolytic மற்றும் ceramic என்று இரண்டு capacitorகள் தேவை.
05:53 Electrolytic capacitorஐ சேர்க்க, டைப் செய்க: "cp1", பின் OKஐ அழுத்தவும்.
06:00 Ceramic capacitorஐ சேர்க்க, டைப் செய்க: 'c', பின் OKஐ அழுத்தவும்.
06:06 'LED' எனப்படும் Light Emitting Diode ஒன்றும் நமக்கு தேவை.
06:10 Component selection windowவில், டைப் செய்க: led, பின் OKஐ அழுத்தவும்.
06:17 இப்போது, நமக்கு, மின்சார வழங்கல் , அதாவது, 'Vcc' மற்றும் Ground terminalகள் தேவை.
06:22 EESchemaவின் வலது panelலில், Place a power port பட்டனை க்ளிக் செய்யவும்.
06:29 Component selection windowஐ திறக்க, EESchema ஐ ஒரு முறை க்ளிக் செய்யவும்.
06:34 List All பட்டனை க்ளிக் செய்தால், பல்வேறு மின்சார குறியீடுகளின் பட்டியலை காணலாம்.
06:40 +5V (plus 5 volt)ஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
06:48 EESchema windowவின் மீது, சிங்கிள் க்ளிகினால், componentஐ வைக்கவும்.
06:52 அதே போல், ground terminalஐ பெற,
06:54 பட்டியலில் இருந்து, groundஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
07:01 Ground terminalஐ நான் தேர்வு செய்கிறேன்.
07:08 வெளிப்புற மின்சார வழங்கலை இணைக்க, நமக்கு, ஒரு connector தேவை.
07:14 Component selection windowஐ திறக்க, EESchema ஐ க்ளிக் செய்யவும்.
07:19 List All பட்டனை க்ளிக் செய்தால், ஒரு பட்டியலை காணலாம்.
07:24 Conn optionஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
07:31 கீழே வந்து, பட்டியலில் இருந்து, CONN_2ஐ தேர்வு செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
07:41 ஒரு இரண்டு terminal connector தோன்றும். அது உங்கள் mouse pointerஉடன் கட்டப்படும்.
07:48 அதை வைக்க, ஒரு முறை க்ளிக் செய்யவும்.
07:56 இப்போது, componentகளை, அதற்கான இடங்களுக்கு நகர்த்தி, அவற்றை ஒழங்குபடுத்துவோம்.
08:01 Componentகளை நகர்த்த, 'm' shortcut keyஐ பயன்படுத்துவோம்.
08:04 Componentஐ நகர்த்த, mouse-pointerஐ component அதாவது இங்கே 'resistor' மீது வைத்து, பின் 'm'ஐ அழுத்தவும்.
08:15 EESchemaவில், சிங்கிள் க்ளிக் செய்து, IC 555ன் வலது பக்கத்தில், இந்த resistorஐ வைப்போம்.
08:28 'LED'ஐ சுழற்றி, மேலும் அதை செங்குத்தாக வரிசைப்படுத்துவதற்கு, நாம், (keyboard) shortcut keyஐ பயன்படுத்துவோம்.
08:40 Circuit diagramன் படி, componentகளை, wire அல்லது சேர்த்திணைக்க கற்போம்.
08:45 Componentகளை சேர்த்திணைக்க தொடங்குவோம்.
08:48 EESchemaவின் வலது panelலில், Place a wire பட்டனை க்ளிக் செய்யவும்.
08:56 இப்போது, இரண்டு resistorகளை சேர்த்திணைப்போம்.
08:58 இரண்டு resistorகளின், nodeகளில் ஒன்றை க்ளிக் செய்து, wireஐ நாம் இணைப்போம்.
09:11 இப்போது, IC 555ன் ஏழாவது pinஐ, இரண்டு resistorகளையும் இணைக்கும், wireஉடன் இணைப்போம்.
09:18 முதலில், IC 555ஏழாவது pin மீதும், பின், இரண்டு resistorகளையும் இணைக்கும், wire மீதும் க்ளிக் செய்யவும்.
09:30 இது, nodeஆக தெரியும் ஒரு junctionஐ தானாகவே வடிவமைக்கும்.
09:35 நான் முன்பே componentகளை சேர்த்திணைத்து, சேமித்துவிட்டேன்.
09:39 நேரத்தை சேமிப்பதற்கு, முன்பே schematic ஆக்கப்பட்ட இதை, இப்போது திறந்து பயன்படுத்துகிறேன்.
09:44 File menuவிற்கு சென்று, Openஐ க்ளிக் செய்கிறேன்.
09:53 ஒரு Confirmation window திறக்கிறது. Yesஐ க்ளிக் செய்யவும்.
10:04 விரும்பிய directoryல் இருந்து, 'project1.sch'ஐ நான் தேர்வு செய்கிறேன்.
10:18 முதலில், window ஐ resize செய்கிறேன்.
10:22 பின், Openஐ க்ளிக் செய்கிறேன்.
10:33 முன்னர் உருவாக்கிய schematic இதோ.
10:36 இப்போது componentகளை annotate செய்யக் கற்போம்.
10:39 Annotation, ஒவ்வொரு componentக்கும் தனிப்பட்ட அடையாளத்தை கொடுக்கிறது.
10:43 Annotate செய்வது, componentகளின் மீதுள்ள கேள்விக் குறிகளுக்கு பதிலாக தனிப்பட்ட எண்களை வைக்கிறது.
10:50 EESchemaவின் மேல் panelலில், “Annotate schematic” பட்டனை க்ளிக் செய்யவும்.
10:58 இது Annotate Schematic windowஐ திறக்கும்.
11:02 இந்த windowவில், முன்னிருப்பான configurationஐ வைக்கவும்.
11:05 Annotation பட்டனை க்ளிக் செய்யவும்.
11:09 Annotate செய்யாத componentகளை மட்டுமே இது annotate செய்யும் என்று இது எச்சரிக்கும்.
11:13 OKஐ க்ளிக் செய்யவும்.
11:15 Annotate Schematic windowவின் மீதுள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும்.
11:20 Componentகளின் மீதுள்ள கேள்விக் குறிகளுக்கு பதிலாக தனிப்பட்ட எண்கள் வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
11:30 Fileஐ க்ளிக் செய்யவும்.
11:37 மேலும், இந்த schematicஐ சேமிக்க, Save Whole Schematic Projectஐ தேர்வு செய்யவும்.
11:43 Fileஐ க்ளிக் செய்து, Quitஐ தேர்வு செய்யவும்.
11:48 இது EESchema windowஐ மூடும்.
11:50 இப்போது KiCad main windowக்கு செல்லவும்.
11:53 Fileஐ க்ளிக் செய்து, Quitஐ தேர்வு செய்யவும்.
11:56 KiCadல் circuit schematicஐ உருவாக்குவது என்ற இந்த டுடோரியலின் நோக்கத்தை இது நிறைவு செய்கிறது.
12:01 இந்த டுடோரியலில் நாம் கற்றதை, சுருங்கசொல்வோம்.
12:07 Circuit schematicஐ உருவாக்குவதற்கு, KiCadல் EESchemaஐ பயன்படுத்துவது.
12:11 Circuit schematicன் annotation.
12:15 பின்வரும் பயிற்சியை முயற்ச்சிக்கவும்-
12:17 Component selection windowஐ பயன்படுத்தி, EESchemaவின் மேல், component 'Inductor'ஐ வைக்கவும்.
12:24 shortcut keyகளான, 'a', 'x' மற்றும் 'y'ஐ ஆராயவும்.
12:31 இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
12:35 அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
12:43 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
12:45 ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:48 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
12:52 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்
12:59 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
13:03 இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
13:09 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:
13:13 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
13:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.
13:25 குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst