PERL/C3/Including-files-or-modules/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | PERL programல், Fileகள் அல்லது moduleகளை சேர்ப்பது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் PERL programming ல் பயன்படுத்தக் கற்கப்போவது: do, use மற்றும் require methodகள். |
00:16 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor. |
00:28 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:32 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:37 | இல்லையெனில், அதற்கான Perl டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும். |
00:44 | do()' method: மற்ற fileகளில் இருந்து, தற்போதைய script fileக்கு, source codeஐ சேர்க்க இவை எளிய வழிகள் ஆகும். |
00:53 | do() methodஐ பயன்படுத்த புரிந்து கொள்வோம். |
00:57 | உங்கள் text editorல் ஒரு புது fileஐ திறந்து, அதை datetime dot pl என பெயரிடவும். |
01:03 | datetime dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
01:09 | இப்போதிலிருந்து, terminalலில், ஒவ்வொரு commandக்கு பிறகும், Enter keyஐ அழுத்த நினைவு கொள்ளவும். |
01:15 | இப்போது codeஐ புரிந்து கொள்வோம். |
01:18 | தற்போதைய தேதியும் நேரமும், dollar datestring என்ற variableலில் சேமிக்கப்படுகின்றன. |
01:23 | இங்கு, ஒரு “Thank you” messageஐ திருப்பி கொடுக்கும், "msgThanks" என்ற function என்னிடம் உள்ளது. |
01:31 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
01:35 | அடுத்து, datetime dot pl என்ற இந்த fileஐ பயன்படுத்தும், மற்றொரு Perl programஐ காண்போம். |
01:43 | உங்கள் text editorல் ஒரு புது fileஐ திறந்து, அதை main dot pl என பெயரிடவும். |
01:49 | main dot pl file ல், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும் |
01:55 | இப்போது codeஐ விளக்குகிறேன். |
01:58 | இங்கு, முதல் வரி welcome messageஐ print செய்கிறது. |
02:03 | நாம் codeஐ பயன்படுத்த வேண்டிய இடத்திலிருந்து, fileன் பெயருடன் 'do()' method, call செய்யப்படுகிறது. |
02:09 | datetime dot pl fileன், $datestring variableலில், தற்போதைய தேதியும் நேரமும் சேமிக்கப்படுகின்றன. |
02:16 | மேலும், இறுதியில், அதே fileலில் இருந்து, msgThanks() functionஐ நாம் call செய்கிறோம். |
02:21 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
02:25 | Programஐ இயக்குவோம். |
02:27 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl main dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
02:34 | Terminalலில் outputஐ கவனிக்கவும். |
02:37 | அடுத்து, ஒரு Perl programல் require() method மற்றும் use() methodஐ பயன்படுத்த கற்போம். |
02:44 | பல Perl programகளில் பயன்படுத்தக் கூடிய, subroutineகளின் தொகுப்புகள் இருக்கும் போது, இந்த methodகள் பயன்படுத்தப்படுகின்றன. |
02:52 | Use() method, moduleகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்ப்படுகிறது. |
02:56 | Compilationன் போது இது சரிபார்க்கப்படுகிறது. |
02:59 | இதற்கு, file extension கொடுக்கத் தேவையில்லை. |
03:03 | Perl program மற்றும் moduleகள் இரண்டிற்கும் require() method பயன்படுத்தப்ப்படுகிறது. |
03:08 | அது, run செய்யப்படும் போது சரி பார்க்கப் படுகிறது. |
03:10 | அதற்கு, file extensionஐ தர வேண்டும். |
03:14 | Use methodன் syntax: use module name semicolon. |
03:20 | '.pm' extensionஉடன் முடியும் fileகள், Perl moduleகள் ஆகும். |
03:25 | Moduleகள் மூலமாக codeன் மறு பயன்பாடு செயல்படுத்தப்படுகிறது. |
03:30 | மற்ற( computer) languageகளின் உள்ளிருக்கும் libraryகளும், இவையும் ஒன்றே. |
03:35 | இப்போது, Perl codeல் ஒரு moduleஐ சேர்க்க, use methodஉடன் ஒரு எளிய programஐ காட்டுகிறேன். |
03:43 | உங்கள் text editorல் ஒரு புது fileஐ திறந்து, அதை sum dot pm என பெயரிடவும். |
03:49 | Sum dot pm லில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
03:55 | இங்கு, கொடுக்கப்பட்டுள்ள எண்களின் தொகுப்பின் தொகையை கணக்கிடும் ஒரு எளிய function என்னிடம் உள்ளது. |
04:01 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
04:05 | இந்த sum dot pm fileஐ பயன்படுத்தும், மற்றொரு Perl scriptஐ எழுதுவோம். |
04:11 | நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த app dot pl என்ற sample programஐ திறக்கிறேன். |
04:17 | App dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
04:22 | இப்போது codeஐ விளக்குகிறேன். |
04:25 | Module பெயருடன் use methodஐ முதல் வரி காட்டுகிறது. |
04:29 | இங்கு, Module பெயர் 'sum' ஆகும். |
04:33 | Sum dot pm fileலில், function total()க்கு, input parameterகளாக 1, 7, 5, 4, 9 pass செய்யப்படுகின்றன. |
04:44 | மீண்டும், அடுத்த வரியில், அதே functionக்கு input parameterகளாக 1 முதல் 10 வரை pass செய்கிறோம். |
04:52 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
04:56 | Programஐ இயக்குவோம். |
04:59 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl app dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
05:06 | Terminalலில் தெரியும் outputஐ கவனிக்கவும். |
05:10 | Use methodல் மேலும் பல optionகளைக் காண்போம். Text editorல் sum dot pmக்கு திரும்ப வருவோம் |
05:18 | Source codeன் தொடக்கத்தில், "use strict" semicolon, "use warnings" semicolon, என்ற வரிகளைச் சேர்க்கவும். |
05:27 | "Use strict" மற்றும் "use warnings" என்பன, Perlஐ கடுமையான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தும் compiler flagகள் ஆகும். |
05:35 | பொதுவான programming தவறுகளை தவிர்க்க இவை பயன்படுத்தப்படுகின்றன. |
05:39 | Use strict, programல் பயன்படுத்தப்படும் எல்லா variableகளையும் declare செய்ய userஐ கட்டாயப்படுத்துகிறது. |
05:45 | Errorகள் இருந்தால், use strict, இயக்கத்தை abort செய்யும். |
05:50 | Use warnings, எச்சரிக்கைகள் மட்டும் வழங்கி, இயக்கத்தை தொடரவிடும். |
05:56 | Variable $sum ஐ, myஆக declare செய்ய மறந்துவிட்டோம் என கொள்க. |
06:02 | அதே program இப்போது எப்படி இயக்கப்படுகிறது என்பதைக் காண்போம். |
06:06 | Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
06:09 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl app dot pl. |
06:15 | முடிவை இயக்காமல், program நிறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். |
06:21 | Terminalலில் தெரியும், முதல், வரிகளின் தொகுப்பு, “use strict”ஆல் உருவாக்கப்பட்டerror message கள் ஆகும். |
06:29 | கடைசி இரண்டும், abort messageகள் ஆகும். |
06:32 | Use method optionகள் இப்படி தான் வேலை செய்கின்றன. |
06:36 | அடுத்து, require methodஐ பயன்படுத்தும் ஒரு Perl programக் காண்போம். |
06:41 | நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த commonfunctions dot pl, என்ற sample programஐ திறக்கிறேன். |
06:48 | உங்கள் commonfunctions dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது codeஐ விளக்குகிறேன். |
06:57 | இங்கு, பொதுவாக பயன்படுத்தப்படும் functionகளின் தொகுப்பை காணலாம். |
07:01 | முதல் functionஆன, square(), ஒரு எண்ணின் squareஐ return செய்கிறது. |
07:06 | இரண்டாவது functionஆன, square underscore root(), ஒரு எண்ணின் square rootஐ return செய்கிறது. |
07:12 | அடுத்த functionஆன, random underscore number(), ஒரு random எண்ணை உருவாக்குகிறது. |
07:18 | கடைசி functionஆன, random underscore range(), குறைந்த எல்லை மற்றும் அதிக எல்லை உடைய எண்களுக்கு இடையே உள்ள ஒரு random எண்ணை உருவாக்குகிறது. |
07:26 | Fileன் இறுதியில், 1 semicolon (1;) தேவை என்பதை கவனிக்கவும். |
07:31 | இது ஏனெனில், ஒரு true மதிப்பை return செய்ய, fileலில் இறுதி expression, Perlக்கு தேவைப்படுகிறது. |
07:37 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
07:41 | அடுத்து, "require" methodஐ பயன்படுத்தி, இந்த subroutineகளை, call செய்ய, ஒரு Perl programஐ எழுதுவோம். |
07:48 | நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த callprogram dot pl, என்ற sample programஐ திறக்கிறேன். |
07:54 | உங்கள் fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். இப்போது codeஐ விளக்குகிறேன். |
08:02 | Perl codeஐ கொண்டுள்ள commonfunctions dot pl fileஐ , require படித்து, அதை compile செய்கிறது. |
08:09 | இந்த program, userக்கு 4 optionகளை தருகிறது. ஒரு நேரத்தில், user, ஒரு optionஐ தேர்வு செய்ய வேண்டும். |
08:17 | 1:(ஒன்று) , ஒரு எண்ணின் squareஐ கண்டுபிப்பதற்கு. |
08:20 | 2: இரண்டு, ஒரு எண்ணின் square rootற்காக. |
08:23 | 3: மூன்று, கொடுக்கப்பட்டுள்ள எல்லைக்குள், ஒரு random எண்ணிற்காக. 4: நான்கு, programஐ விட்டு வெளியேறுவதற்கு. |
08:29 | Option 1(ஒன்று)ஐ டைப் செய்தால், அது userஐ, ஒரு எண்ணை enter செய்ய கேட்கும். |
08:34 | அதன் மதிப்பு, $numberல் சேமிக்கப்படுகிறது. அந்த மதிப்பு, commonfunctions dot pl fileலில் உள்ள square() functionக்கு pass செய்யப்படுகிறது. |
08:44 | அந்த function, ஒரு எண்ணின் squareஐ return செய்கிறது. |
08:47 | Ouputஆக, print statement, ஒரு எண்ணின் squareஐ print செய்கிறது. |
08:52 | Option 2(இரண்டு)ஐ டைப் செய்தால், Ouputஆக, ஒரு எண்ணின் square root காட்டப்படுகிறது. |
08:58 | முந்தைய square() functionல் விளக்கப்பட்டுள்ளபடி இயக்கம் பின்பற்றப்படுகிறது. |
09:03 | Option3(மூன்று)ஐ டைப் செய்தால், கொடுக்கப்பட்டுள்ள எல்லைக்குள், ஒரு random எண், Ouputஆக காட்டப்படுகிறது. |
09:09 | இல்லையெனில், option (4) நான்காக இருந்தால், program வெளியேறுகிறது. குறிப்பிட்டுள்ள optionகளைத் தவிர வேறு தரப்பட்டு இருந்தால், print statement , “Incorrect option” எனக் கூறும். |
09:20 | இந்த programல், commonfunctions dot plல் இருந்து, நான்கில் மூன்று functionகளை மட்டுமே நாம் call செய்துள்ளோம் என்பதை கவனிக்கவும். |
09:28 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
09:31 | Programஐ இயக்குவோம். |
09:34 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl callprogram dot pl. |
09:41 | Output ஐ கவனிக்கவும். |
09:44 | வேறு optionஐ பயன்படுத்தி, மீண்டும் programஐ இயக்குகிறேன். |
09:49 | டைப் செய்க: perl callprogram dot pl. |
09:53 | இப்போது optionஐ மூன்று என enter செய்யவும். |
09:56 | Enter a lower range 50. |
09:59 | Enter a upper range 99. |
10:02 | கொடுக்கப்பட்டுள்ள எண்களின் எல்லைக்குள், random எண் உருவாக்கப்படுவதைக் காணலாம். |
10:08 | நீங்களே மற்ற optionகளை முயற்சி செய்து பார்க்கவும். |
10:11 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல, |
10:16 | இந்த டுடோரியலில் நாம் PERL programming ல் பயன்படுத்தக் கற்றது: do, use மற்றும் require methodகள். |
10:24 | கவனிக்கவும்: Compile timeல், moduleன் இருப்பை "require" module தீர்மானிப்பதனால், "use" moduleக்கு பதிலாக அது பரிந்துரைக்கப்படுகிறது. |
10:33 | இங்கே உங்களுக்கான பயிற்சி. பங்கேற்பவர்களுக்கு ஒரு கடிதம் எழுத, reminder.pl என்ற Perl programஐ எழுதவும். |
10:41 | Userஐ, To மற்றும் From பெயரை எழுத prompt செய்யவும். |
10:45 | ‘Use’ methodஐ பயன்படுத்தி, Letter dot pmல் இருந்து subroutineகளை call செய்யவும். |
10:50 | Letter dot pm fileலில் கீழ்கண்ட functionகளை எழுதவும். |
10:54 | LetterDate() function தற்போதைய தேதி மற்றும் நேரத்தை return செய்யும். |
10:58 | To() function, பங்கேற்பவர்களின் பெயர்களை return செய்யும். |
11:02 | From() function, அனுப்பனரின் பெயரை return செய்யும். |
11:05 | Lettermsg() function, கடிதத்தின் contentகளை return செய்யும். |
11:09 | Thanksmsg() function, "thanks" மற்றும் "regards"ஐ return செய்யும். |
11:13 | இங்கே காட்டப்பட்டு உள்ளபடி output தெரிய வேண்டும். |
11:20 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:27 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
11:36 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:40 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:51 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |