KTurtle/C2/Introduction-to-KTurtle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:20, 28 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு
00:07 இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம்.
00:14 இதில் நாம் கற்பது
00:17 KTurtle Window
00:19 Editor, Canvas
00:21 Menu Bar மற்றும் Toolbar
00:24 மேலும் கற்பது
00:26 Turtle-ஐ இயக்குதல்
00:28 கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல்
00:32 ஓர் முக்கோணம் வரைதல்.
00:34 இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta.
00:47 KTurtle என்றால் என்ன?
00:49 இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி.
00:53 கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது
00:59 இதை http://edu.kde.org/kturtle/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்
01:12 இது programming-ஐ சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது.
01:18 குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும்.
01:22 Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது
01:27 commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது.
01:31 KTurtle-ஐ Synaptic Package Manager-ஐக் கொண்டு நிறுவலாம்
01:36 Synaptic Package Manager-ஐப் பற்றி மேலும் அறிய
01:40 எங்கள் தளத்தில் Ubuntu Linux tutorial-ஐப் பார்க்கவும்.
01:46 புதிதாய் ஒரு KTurtle Application-ஐ திறப்போம்.
01:50 பின்னர் Dash home-ன் மீது சொடுக்கவும்.
01:52 Search bar-ல் KTurtleஎன type செய்து
01:55 KTurtle icon-ன் மீது சொடுக்கவும்.
01:59 இதுதான் முழுமையான KTurtle window ஆகும்.
02:02 இதுதான் Menubar.
02:04 இந்த menu bar-ன் தலைப்பில்
02:06 menu items காணப்படும்.
02:08 File, Edit, Canvas, Run, Tools, Settings help போன்ற options இருக்கும். .
02:17 இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம்
02:23 இடதுபுறத்தில் உள்ள Editor-ல் தான், TurtleScript commands அனைத்தும் செய்யப்படும்.
02:30 Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் File மற்றும் Edit menu-வில் காணப்படும்.
02:37 Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன.
02:42 Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும்.
02:46 File menu -க்குச் சென்று Examples ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:50 இங்கு flower ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:53 எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும்.
02:58 இந்த code-ஐ இயக்க Menu bar அல்லது Tool bar- ல் உள்ள Run button -ஐ சொடுக்கவும்.
03:04 editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர் வழியாகும்.
03:10 அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம்.
03:13 உதாரணத்துக்கு வேறு சில KTurtle files-இலிருந்து
03:18 வலது புறத்தில் Canvas இருக்கும். Turtle அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும்.
03:24 அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் Turtle வரையும்.
03:32 Tool bar-ல் உள்ள Run option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும்
03:39 மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும்.
03:43 Full speed(No highlighting and inspector),
03:46 Full speed,
03:48 Slow, Slower,
03:51 Slowest மற்றும் (est) Step-by-Step
03:55 Abort மற்றும் pause எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்)
04:03 இப்பொழுது இந்த code-ஐ Run செய்வோம்.
04:06 Turtle-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம்.
04:11 ஓர் புதிய KTurtle application-ஐ திறக்கும்போது
04:15 முன்னிருப்பாகTurtle-canvas-ன் மையத்தை வந்தடையும்.
04:19 இப்போது Turtle-ஐ நகர்த்துவோம்.
04:22 Turtle- மூன்று விதங்களில் நகரக்கூடியது.
04:25 முன்னும் பின்னுமாக நகரும்.
04:29 இடது அல்லது வலது பக்கம் திரும்பும்
04:32 மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும்.
04:38 இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம்.
04:44 உதாரணத்தை பார்க்கலாம்.
04:48 editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும்.
04:52 reset
04:55 forward 100
04:58 turnright 120
05:02 forward 100
05:07 turnright 120
05:11 forward 100
05:15 turnright 120
05:18 நாம் type செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும்.
05:23 இதற்கு highlighting என்று பெயர்
05:26 வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன.
05:31 இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும்.
05:36 இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம்.
05:38 reset command-ஆனது Turtle-ஐ அதன் default position-ல் அமைக்கும்.
05:42 forward 100 command-ஆனது Turtle-ஐ 100 pixels-க்கு முன்னதாக நகர்த்தும்.
05:49 turnright 120 command-ஆனது Turtle-ஐ 120 degrees anti-clockwise-ல் திருப்பும்.
05:56 முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம் மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும்.
06:03 இப்போது code-ஐ execute செய்யலாம்.
06:06 இங்கு Slow step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம்.
06:16 இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது.
06:19 வேறு உதாரணத்தின் மூலம் இந்த canvas-ஐ இன்னும் அழகாக்குவதை கற்கலாம்.
06:26 இப்போது repeat command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம்.
06:30 தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன்.
06:33 பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன்.
06:38 Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும்.
06:41 reset
06:44 canvassize space 200,200
06:51 canvascolor space 0,255,0
07:00 pencolor space 0,0,255
07:08 penwidth space 2
07:12

repeat space 3 within curly braces

07:19 forward 100
07:23 turnleft 120
07:27 இப்போது code-க்கான விளக்கம்.
07:30 reset command... Turtle-ஐ default position-ல் அமைக்கும்.
07:34 canvassize 200,200 canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும்.
07:42

canvascolor 0,255,0 canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கும்.

07:48

இங்கு 0,255,0 என்பது RGB வீதத்தில் அமைக்கிறது. அதாவது Green-க்கான மதிப்பு மட்டும்255 எனக் கொடுக்கப்பட்டு மற்ற இடத்தில் 0 உள்ளது.

08:03 இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது.
08:07 அவ்வாறே pencolor 0,0,255 pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது.
08:14 இங்கு RGB-ல் blue-க்கான இடத்தில் 255 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
08:20 penwidth 2 என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது.
08:27 அடுத்தபடியாக repeat command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம்.
08:33 இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது
08:39 இங்கு forward 100 மற்றும் turnleft 120 commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன..
08:47 முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் repeat command-ஐத் தொடர்ந்து 3 எனும் எண் கொடுக்கப்பட்டது.
08:54 எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும்.
08:59 முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன.
09:02 இப்போது code-ஐ run செய்வோம்.
09:05 execute க்கு slow -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன்.
09:09 Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு Turtle ஓர் முக்கோணத்தை வரைகிறது.
09:20 இப்போது file-ஐ சேமிப்போம்.
09:23 File menu-க்குச் சென்று Save As -ஐ தேர்ந்தெடுக்கவும்
09:27 Save As dialog box திறக்கப்படுகிறது.
09:30 file-ஐ சேமிக்க Document -ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:34 பிறகு Triangle என file- பெயர் அமைத்து Save -ஐ அழுத்துகிறேன்.
09:41 file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா Turtle files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும்.
09:53 இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.
09:57 சுருக்கமாக,
09:59 இந்த tutorial-ல் நாம் கற்றவை,
10:02 KTurtle-ன் editor, canvas, menubar மற்றும் toolbar
10:07

Turtle-ஐ நகர்த்துதல்

10:09 கோடுகள் வரைதல், அதன் திசைகளை மாற்றுதல்
10:13 ஓர் முக்கோணம் வரைதல்
10:15 பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள்.
10:21 forward, backward, turnleft, turnright மற்றும் repeat
10:26 உங்களுக்கு ஏற்றாற்போல் background color, penwidth மற்றும் pencolor ஐ அமைக்கவும்
10:32 RGB கலவையின் மதிப்புகளை மாற்றி வரைந்து பாருங்கள்.
10:37 தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும்.
10:44 நல்ல bandwidth இல்லையெனில் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம்.
10:48 Spoken Tutorial திட்ட குழு
10:50 spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:53 இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது.
10:56 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
11:03 Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும்.
11:08 National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது.
11:15 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:20 மூலப்பாடம் IT for Change Bangaluru.
11:24 தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst