Java/C2/User-Input/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | Java ல் BufferedReader ஐ பயன்படுத்தி பயனர் இடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு. |
00:09 | இதில் நாம் கற்கப் போவது: |
00:11 | Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற |
00:13 | InputStreamReader மற்றும் BufferedReader பற்றி |
00:17 | இந்த tutorial ஐ தொடர: |
00:19 | Eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும் |
00:24 | Java ல் datatypes பற்றியும் தெரிய வேண்டும் |
00:27 | இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும் |
00:35 | இங்கே பயனாவது, Ubuntu v 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0 |
00:44 | இப்போது BufferedReader என்றால் என்ன என காண்போம்! |
00:48 | இது input streamலிருந்து text ஐ படிக்கப் பயனாகும் class ஆகும். |
00:53 | இது character களின் array மற்றும் வரிகளை படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது. |
00:59 | BufferedReader ஐ பயன்படுத்த java dot io package'லிருந்து 3 class களை import செய்ய வேண்டும் |
01:05 | அந்த 3 classகள் : IOException, InputStreamReader மற்றும் BufferedReader |
01:12 | packages பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும் tutorialகளில் கபோம். |
01:18 | உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது? |
01:21 | பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும் String வடிவில் இருக்கும். |
01:26 | பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும். |
01:31 | பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம். |
01:35 | இப்போது BufferedReader ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம். |
01:39 | 3 classகளையும் import செய்தபின் InputStreamReaderக்கு object ஐ உருவாக்க வேண்டும். |
01:45 | "' BufferedReaderக்கும் object ஐ உருவாக்க வேண்டும். |
01:49 | நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம். |
01:54 | Eclipseக்கு வருவோம். |
01:56 | InputBufferedReader என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன். |
02:00 | java.io packageஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம். |
02:04 | எனவே எழுதுக, classக்கு முன் import space java dot io dot star semi colon. |
02:14 | இது InputStreamReader, BufferedReader மற்றும் IOException class களை import செய்யும் |
02:20 | main methodனுள் BufferedReader பயன் செய்வோம். |
02:25 | BufferedReader ஐ பயன்படுத்தும் எந்த method லும் IOExceptionஐ இட வேண்டும் . |
02:31 | எனவே main method க்கு பின் எழுதுக throws IOException. |
02:42 | இதன் பொருள்? |
02:45 | Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது Exceptions எனும் பிழைகள் வருகிறது |
02:52 | Exception ஐ தடுக்க throws keywordஐ பயன்படுத்துகிறோம். |
02:57 | Throws என்பது Exception handling போது பயனாகும் keyword ஆகும் |
03:00 | Exception error கண்டிப்பாக வரும் என தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது |
03:05 | BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் நிகழ்கிறது.. |
03:10 | Exception errors நிகழ்வதை தடுக்க throws IOException ஐ பயன்படுத்துகிறோம் |
03:16 | Exception Handling பற்றி வரும் tutorial களில் காண்போம் |
03:20 | இப்போது InputStreamReaderக்கு object ஐ உருவாக்குவோம். |
03:24 | அதற்கு, main methodனுள் எழுதுக InputStreamReader space isr equalto new space InputStreamReader parentheses. |
03:44 | parenthesesகளினுள் எழுதுக System dot in பின் semicolon. |
03:52 | java ல் InputStreamReader என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும் |
04:01 | System dot in.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற java compiler இடம் சொல்கிறது. |
04:10 | சில சமயம் InputStreamReader ன் object ல் சேமிக்கப்பட்டதை... உள்ளீடு System dot in எடுக்கிறது |
04:17 | இதன்பின் BufferedReaderக்கு object ஐ உருவாக்கலாம். |
04:22 | எனவே எழுதுக, BufferedReader br equal to new space BufferedReader பின் parentheses. |
04:36 | parenthesesனுள், isr என்ற InputStreamReader க்கான object ஐ எழுதுக. |
04:43 | இப்போது isr மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது. |
04:48 | BufferedReader object ல் மதிப்பை சேமிக்க BufferedReader உதவுகிறது. |
04:54 | Isr இந்த மதிப்பை BufferedReader object க்கு சேமிக்க அனுப்புகிறது |
05:01 | இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம். |
05:06 | முதலில் String ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே String type variable ஐ உருவாக்குக |
05:14 | எழுதுக, String space str semicolon |
05:19 | இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம். |
05:23 | எனவே எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your name பின் semicolon. |
05:33 | உள்ளீடை String ஆக பெற எழுதுக. |
05:37 | str equal to br dot readLine parentheses பின் semicolon. |
05:45 | readLine method பயனரிடமிருந்து உள்ளீடை படிக்கும். |
05:51 | இப்போது உள்ளீடை integer ஆக பெறுவோம். typeint ல் ஒரு variable ஐ உருவாக்குவோம். |
06:01 | எழுதுக int n semicolon. |
06:05 | பயனரை அவர் வயதை உள்ளிடச் சொல்லி கேட்போம். |
06:08 | எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your age semicolon. |
06:21 | மேலும்.... உள்ளீடை பெற String type ல் str1 என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக. |
06:31 | இப்போது உள்ளீடை String ஆக பெற எழுதுக str1 equal to br dot readLine parentheses பின் semicolon. |
06:45 | இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக n equal to Integer dot parseInt bracketகளில் str1semicolon |
07:05 | Integer என்பது class. parseInt அதன் method. |
07:11 | இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது. |
07:18 | name மற்றும் ageக்கான வெளியீட்டைக் காட்டுவோம். |
07:22 | எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus str semicolon. |
07:38 | அடுத்த வரியில் எழுதுக, System dot out dot println The ages plus n பின் semicolon. |
07:50 | சேமிக்கவும். Ctrl, S ஐ அழுத்துக . program ஐ இயக்குக |
07:55 | Control மற்றும் F11 ஐ அழுத்துக . |
08:00 | வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள். |
08:03 | எனவே பெயரை எழுதுக. Ramu பின் Enter செய்க. |
08:08 | உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள் |
08:11 | இங்கே 20 .... பின் Enter செய்க |
08:13 | நாம் பெறும் வெளியீடு : |
08:15 | The name is Ramu மற்றும் The age is 20. |
08:18 | எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும். |
08:24 | இந்த tutorial ல் நாம் கற்றது : |
08:26 | InputStreamReader பற்றி |
08:28 | BufferedReader பற்றி, String லிருந்து விரும்பும் datatypeக்கு மாற்றுதல் |
08:33 | சுய மதிப்பீட்டிற்காக, float, byte மற்றும் character உள்ளீடை பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும் |
08:42 | ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும். |
08:49 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:54 | இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது |
08:57 | இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும். |
09:02 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:07 | இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது |
09:11 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
09:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:27 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:36 | தமிழாக்கம் பிரியா. நன்றி |