Git/C3/Hosting-Git-Repositories/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:09, 28 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Git Repositoryகளை host செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Git repositoryஐ host செய்யும் சேவைகள்.
00:11 GitHub accountஐ உருவாக்குவது
00:14 GitHubல் ஒரு repositoryஐ உருவாக்குவது, மற்றும், repositoryயில் ஒரு tagஐ உருவாக்குவது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04, மற்றும், Firefox web browser.
00:29 உங்களுக்கு விருப்பமான browserரை பயன்படுத்தலாம்.
00:32 இந்த டுடோரியலுக்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும்.
00:37 மேலும், Git commandகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:42 இல்லையெனில், அதற்கான Git டுடோரியல்களுக்கு எங்கள் வலைதளத்தை பார்க்கவும்.
00:47 முதலில், Git repositoryஐ host செய்யும் சேவைகள் பற்றிக் கற்போம்.
00:52 Bitbucket, CloudForge மற்றும், GitHub போன்ற பல இணையதள hosting சேவைகள் இருக்கின்றன.
01:00 இங்கு, செலவில்லாமல், Git repository களை import செய்யலாம்.
01:05 ஒரு projectல் பலர் கூட்டாக பணி புரிய, மற்றும், உங்கள் repositoryஐ பகிர்ந்து கொள்ள ஏதுவாக, அவை ஒரு மையப் பகுதியை தருகின்றன.
01:14 செலவில்லாமல் மற்ற projectகளை கற்க, மற்றும், தரவிறக்க அவை இடமளிக்கின்றன.
01:19 அடுத்து, GitHubஐ எதற்கு பயன்படுத்த வேண்டும் என பார்ப்போம்.
01:23 Open Source Softwareஐ house செய்ய, GitHub மிகப் பிரபலமான வலைத்தளம் ஆகிவிட்டது.
01:28 GitHubல் மாற்றங்களை, உங்கள் குழுவுடன் திறம்பட, பார்த்து, கலந்தாலோசித்து, மறு ஆய்வு செய்ய முடியும்.
01:35 GitHubல் பயன்படுத்தப்படும் செயல்முறையும், மற்ற இலவச Git hosting வலைத்தளங்களில பயன்படுத்தப்படும் செயல்முறையும் ஒன்றே.
01:42 நீங்களே, பின்னர், அவற்றை, ஆய்ந்தறியலாம்.
01:45 அடுத்து, GitHubல் ஒரு accountஐ உருவாக்கக் கற்போம்.
01:49 உங்கள் web browserஐ திறந்து, www.github.comக்கு செல்லவும்.
01:56 இங்கு, homepageல், பதிவு செய்ய, உங்கள் விவரங்களை கொடுக்கவும்.
02:01 User nameஆக, "priya-spoken" என கொடுக்கிறேன்
02:07 email-idஆக, "priyaspoken@gmail.com"
02:11 உங்களுக்கு விருப்பமான username ஐயும் சரியான email idஐயும் கொடுக்கவும்
02:16 பிறகு, என் passwordஐ டைப் செய்கிறேன்.
02:19 உங்களுக்கு விருப்பமான எந்த passwordஐயும் கொடுக்கலாம்.
02:23 இப்போது, கீழ், வலது பக்கத்தில் இருக்கும் Sign up for GitHub பட்டனை க்ளிக் செய்யவும்.
02:28 அடுத்து,Step 2வில், நம் planஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
02:32 இலவச சேவைக்காக, நான் Free planஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:37 இப்போது, Finish sign upஐ க்ளிக் செய்யவும்.
02:40 அடுத்து, GitHubல் ஒரு repositoryஐ உருவாக்குவோம்.
02:44 வலது பக்க பெட்டியில் தெரியும், New repository பட்டனை க்ளிக் செய்யவும்.
02:51 Please verify your email address” என்ற தகவலைக் காட்டும்.
02:55 பதிவு செய்யப்பட்ட email idக்கு, GitHub, ஒரு verification mail அனுப்பும்.
02:59 அதனால், நமது email accountஐ திறந்து, GitHub அனுப்பிய emailஐ க்ளிக் செய்யவும்.
03:06 GitHubஉடன் பதிவு செய்யப்பட்ட email-idன் உள் நான் முன்பே சென்றுவிட்டேன்.
03:11 அதை திறக்கிறேன்.
03:13 GitHubல் இருந்து எனக்கு email வந்துள்ளது.
03:16 அதை க்ளிக் செய்கிறேன்.
03:18 subjectல், “Please verify your email address” என இருக்கும்.
03:23 Inboxல், mail இல்லையெனில், Spam அல்லது Junk folderகளை சரி பார்க்கவும்.
03:29 இப்போது, Verify email addressஐ க்ளிக் செய்யவும்.
03:32 GitHub Homepageக்கு திரும்பி அனுப்பப்படுவோம்.
03:36 GitHubல் வெற்றிகரமாக நம் accountஐ உருவாக்கிவிட்டோம் என்பதை இது காட்டும்.
03:42 GitHubல் ஒரு repositoryஐ உருவாக்க முயலுவோம்.
03:45 இப்போது, வலது பக்க பெட்டியில் தெரியும், New repository பட்டனை க்ளிக் செய்யவும்.
03:50 இப்போது, repositoryஐ உருவாக்க முடிகிறது.
03:54 Repository Nameஐ, “stories” என டைப் செய்க.
03:58 repository பற்றி ஏதாவது விளக்கம் தர வேண்டுமெனில், இங்கு கொடுக்கலாம்.
04:04 அடுத்து, இலவசமான, Public optionஐ தேர்வு செய்கிறேன்.
04:09 Private optionஐ தேர்ந்தெடுத்தால், repositoryஐ சொந்தமாக்க, கட்டணம் செலுத்த வேண்டும்.
04:16 அப்படி செய்தால், நம் repositoryஐ மற்ற userகள் கண்டுபிடிக்கவோ அல்லது தரவிறக்கவோ முடியாது.
04:21 மீண்டும், Publicஐ க்ளிக் செய்கிறேன்.
04:24 Initialize this repository with a README, checkboxஐ க்ளிக் செய்யவும்.
04:28 இது ஒரு, readme fileஐ உருவாக்கும்.
04:31 இந்த fileலில், நிறுவுவதற்கான வழிமுறைகள் அல்லது codeஐ பயன்படுத்துவது பற்றிய தகவலை எழுதலாம்.
04:37 உடன் பணி புரிவோர்க்கு, இது பயன்படும்.
04:42 ஆனால், ஏற்கனவே உள்ள repositoryஐ import செய்வதானால், இந்த பெட்டியில் குறியிடக்கூடாது.
04:48 இப்போது, Create repository பட்டனை க்ளிக் செய்யவும்.
04:52 User nameஉடன், repositoryன் பெயரும் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
04:58 Repository உருவானதும், கீழ், இடது பக்கத்தில், readme fileலின் labelஐ காணலாம்.
05:05 பிறகு, இந்த fileலில், சில தகவல்களை எழுதலாம்.
05:09 முன்னிருப்பாக, ஒரு commit அதாவது, Initial commit, ஒரு branch, அதாவது, master branch மற்றும், ஒரு contributorஐ காணலாம்.
05:18 ஒவ்வொரு இணைப்பையும் க்ளிக் செய்து, உங்கள் வசதிக்கு ஏற்ப அதை ஆய்வு செய்யலாம்.
05:23 இப்போது, இந்த repositoryயில் வேலை செய்யலாம்.
05:27 முதலில், நம் repositoryக்கு ஒரு fileஐ சேர்ப்போம்.
05:31 நடு panelலில் இருக்கும் New file பட்டனை க்ளிக் செய்யவும்.
05:34 fileஐ உருவாக்க, ஒரு புது form திறக்கும்.
05:38 இங்கு, "kids-story.html"ஐ file பெயராக தருகிறேன்.
05:44 முன்னர் சேமித்து வைத்திருந்த, writer documentலிருந்து, சில codeகளை, copy மற்றும் paste செய்கிறேன்.
05:51 அதே போல் உங்கள் fileலில் சில தகவல்களை சேர்க்கலாம்.
05:55 இப்போது, இந்த புது fileஐ, commit செய்வோம்.
05:58 commit message கொடுப்பதற்கு கீழே வரவும்.
06:01 இங்கு, commit message fieldல், "Create kids-story.html" என்ற முன்னிருப்பான messageஐ காணலாம்.
06:09 நீங்கள் ஒரு புது messageஐ டைப் செய்யலாம், அல்லது, முன்னிருப்பான messageஐ வைத்துக் கொள்ளலாம்.
06:13 நான் முன்னிருப்பான messageஐ வைத்துக் கொள்கிறேன்.
06:16 இங்கு, அடுத்த fieldல், commitன் விரிவான விளக்கத்தையும் நீங்கள் கொடுக்கலாம்.
06:22 அதனால், இங்கு, "Added first file of the repository", என டைப் செய்கிறேன்.
06:27 முன்னிருப்பாக, master branchக்கு, commit செய்வோம்.
06:31 இப்போது, Commit new file பட்டனை க்ளிக் செய்யவும்.
06:34 நமது புது file, kids-story.html, repositoryக்கு சேர்க்கப்பட்டுவிட்டது.
06:39 இப்போது, commit number, இரண்டாக மாறியிருப்பதை கவனிக்கவும்.
06:43 அதை க்ளிக் செய்யவும்.
06:45 இங்கு, commit messageக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகளை காண முடியும்.
06:49 அதை க்ளிக் செய்யவும்.
06:51 அது, commitன் விளக்கவுரையை காட்டும்.
06:54 commitல் என்ன செய்தோம் என்பதை அறிய, அந்த குறிப்பிட்ட commit messageஐ க்ளிக் செய்யவும்.
07:00 இப்போது, commitன் விவரங்களைக் காணலாம்.
07:03 commit listக்கு திரும்பிச் செல்வோம்.
07:06 இதற்கு, browserன், மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும், இடது arrow பட்டனை க்ளிக் செய்யவும்.
07:11 வலது பக்கத்தில், commitன், hash valueஐ காணலாம்.
07:15 மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும் Code tabஐ க்ளிக் செய்து, repositoryக்கு திரும்பவும்.
07:21 அடுத்து, GitHubல் ஒரு புது branchஐ உருவாக்க கற்போம்.
07:26 இடது பக்கத்தில், Branch என்று label செய்யப்பட்டிருக்கும் drop-down listஐ பார்க்கலாம்.
07:31 புது branchஐ உருவாக்க, அதை க்ளிக் செய்யவும்.
07:34 ஒரு pop-up window திறக்கும்.
07:38 அந்த pop-up windowவில், Find or create a branch fieldஐ காண முடியும்.
07:43 புது branch பெயரை, "new-chapter" என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
07:49 new-chapter branch உருவாக்கப்பட்டிருப்பதையும், அதுவே தற்போதைய branchஆக இருப்பதையும் காணலாம்.
07:55 அடுத்து, branchக்கான செயல்முறையை மேலும் நன்றாக புரிந்து கொள்ள, new-chapter branchல், ஒரு, commitஐ செய்வோம்.
08:02 செயல் விளக்க நோக்கத்திற்கு, kids-story.html fileலில் சில மாற்றங்களை செய்வோம்.
08:09 Repositoryயில், kids-story.html fileஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்.
08:14 editor panelன் மேல் வலது பக்க ஓரத்தில், ஒரு edit iconஐ காணலாம்.
08:19 இந்த fileஐ edit செய்ய, அதை க்ளிக் செய்யவும்.
08:22 எனது writer documentலிருந்து copy செய்த, சில வரிகளை, இங்கு சேர்க்கிறேன்.
08:27 நீங்களும் இவ்வாறே செய்யலாம்.
08:30 இப்போது, இந்த மாற்றத்தை commit செய்வோம்.
08:33 முன்னிருப்பு commit messageஐ அப்படியே வைத்துக் கொள்கிறேன்.
08:37 இங்கு, commit செய்யப்பட்ட இடத்தில், branch பெயரை, "new-chapter" என காணலாம்.
08:43 commit' செய்ய, Commit changes பட்டனை க்ளிக் செய்யவும்.
08:46 Repositoryக்கு திரும்பிச் செல்ல, Code tabஐ க்ளிக் செய்யவும்.
08:50 அடுத்து, new-chapter மற்றும், master branchகளின், commitகளை சரி பார்க்கலாம்.
08:56 commits இணைப்பை க்ளிக் செய்யவும்.
08:59 இங்கு, Branch drop downல் இருந்து, நாம் பார்க்க வேண்டிய branch பெயரை தேர்வு செய்யலாம்.
09:04 பட்டியலில், master branch ஐ தேர்வு செய்கிறேன்.
09:08 அதன் பிறகு, master branchன், commitகள் பட்டியலிடப்படும்.
09:13 new-chapter branchன், commitகளை காண, Branch drop downல், new-chapterஐ தேர்வு செய்வோம்.
09:19 இப்போது, new-chapter branchன், commitகளை காணலாம்.
09:24 Repositoryக்கு திரும்பிச் செல்ல, Code tabஐ க்ளிக் செய்யவும்.
09:28 அடுத்து, GitHubல் ஒரு tagஐ உருவாக்க கற்போம்.
09:32 ஒரு commit stageஐ முக்கியம் என குறியிட, tagging பயன்படுத்தப்படுகிறது என நாம் அறிவோம்.
09:38 kids-story.html fileஐ சேர்த்த பிறகு, master branchல் ஒரு tagஐ உருவாக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
09:46 ஒரு tagஐ உருவாக்க , முதலில், releases இணைப்பை க்ளிக் செய்யவும்.
09:50 Create a new release பட்டனை க்ளிக் செய்யவும்.
09:54 ஒரு புது form திறக்கும்.
09:56 Tag Version பெட்டியில், டைப் செய்க: "V1.0".
10:01 Release title பெட்டியில், டைப் செய்க: "Version one".
10:05 Write' பெட்டியில், நம் tagன் விளக்கத்தைக் கொடுக்கலாம்.
10:10 நான், “This is the version one” என டைப் செய்கிறேன்.
10:13 இப்போது, Publish release பட்டனை க்ளிக் செய்யவும்.
10:18 இங்கு, இடது பக்கத்தில், சமீபத்திய commitன், hash valueஐ காணலாம்.
10:24 முன்னிருப்பாக, சமீபத்திய commitல், tag உருவாக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.
10:30 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
10:33 சுருங்கசொல்ல,
10:35 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
10:38 ஆன்லைனில், Gitன் hosting சேவைகளின் முக்கியத்துவம்.
10:42 GitHub accountஐ உருவாக்குவது
10:44 GitHubல் ஒரு repositoryஐ உருவாக்குவது, மற்றும், repositoryயில் ஒரு tagஐ உருவாக்குவது.
10:50 பயிற்சியாக,
10:52 GitHubல் ஒரு repositoryஐ உருவாக்கவும்.
10:54 repositoryக்கு சில fileகளை சேர்க்கவும்.
10:57 fileகளை edit செய்து, சில commitகளை செய்து, மேலும், repositoryயில் சில branchகளையும், tagகளையும், உருவாக்க முயலவும்.
11:05 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
11:10 அதை தரவிறக்கி காணவும்.
11:12 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:20 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:23 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது.
11:29 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst