Git/C2/Overview-and-Installation-of-Git/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Gitஐ நிறுவுதல் மற்றும் மேலோட்டப் பார்வை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, Version Control System, Git மற்றும், Ubuntu Linuxமற்றும் Windows இயங்குதளங்களில், Gitஐ நிறுவுதல். |
00:17 | இந்த டுடோரியலுக்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும். |
00:22 | உங்களிடம் Ubuntu Linux அல்லது Windows இயங்கு தளம் இருக்க வேண்டும். |
00:28 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, குறிப்பிடப்பட்டுள்ள இயங்கு தளங்களில், ஏதேனும் ஒன்று நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். |
00:36 | முதலில், VCS அதாவது Version Control System' பற்றி கற்போம். |
00:39 | Version Control System என்பது ஒருbackup system போன்றது. |
00:44 | அது, ஆவணங்கள், computer programs மற்றும் இணையதளத்தில் உள்ள மாற்றங்களை மேலாளும். |
00:51 | இது, நீங்கள் காலங்காலமாக செய்த மாற்றங்களின் வரலாற்று பதிவைக் கொடுக்கும். |
00:55 | VCS என்பது revision control, source control மற்றும்Source Code Management (SCM) என்றும் அழைக்கப்படும். |
01:03 | RCS, Subversion மற்றும்Bazaar என்பவை VCS ன் சில உதாரணங்கள் ஆகும். |
01:11 | இப்போது, Gitஐ ஆரம்பிப்போம். |
01:13 | Git என்பது ஒரு distributed version control software. |
01:16 | அது ஒரு இலவச மற்றும்open source software. |
01:19 | இது, ஒரு file அல்லது fileலின் தொகுப்பிற்கோ செய்யப்பட்ட மாற்றங்களை கண்காணிக்கும். |
01:24 | இது, developerகள் கூட்டாக பணி செய்ய வழி வகுக்கிறது. |
01:28 | இது, projectன் பதிப்புகளை சமாளித்து சேமிக்கிறது. |
01:32 | இது, projectன் முன்னேற்ற வரலாற்றை கண்காணிக்க உதவுகிறது. |
01:37 | Gitன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு. |
01:42 | நாம் Gitல் நமது பணியின் முந்தைய பதிப்புகளை திரும்பப் பெறலாம். |
01:47 | நமது மாற்றங்களின் முழு வரலாற்றை காணலாம். |
01:52 | Gitன் பரிந்துரைகளை பயன்படுத்தி, பிரச்சனைகளுக்கு எளிதாக விடை காணலாம். |
01:58 | ஏதேனும் dataஐ இழந்தால், ஏதேனும் ஒரு client repositoryல் இருந்து அதை மீட்கலாம். |
02:05 | பின்வருபவர்கள் Gitஐ பயன்படுத்துகிறார்கள்: programmerகள், web developerகள், project managerகள், எழுத்தாளர்கள் மற்றும் பலர். |
02:14 | பதிப்புகளை கண்காணிக்க text files, sheets, design files, drawings ஆகியவற்றை வைத்து பணி செய்பவர்கள். |
02:22 | ஒரு செயல்பாடு அல்லது projectல் கூட்டாக பணி புரியும் மக்கள். |
02:28 | இப்போது, Git எப்படி வேலை செய்கிறது என்று காண்போம். |
02:31 | முழு projectன், snapshot ஐ Git சேமிக்கிறது. |
02:36 | snapshot என்பது, குறிப்பிட்ட நேரத்தில் எல்லா fileகளின் படத்தை எடுப்பதற்கு ஒப்பாகும். |
02:42 | ஒருவேளை, சில fileகளுக்கு மாற்றங்கள் இல்லையெனில், Git அதை சேமிக்காது. |
02:47 | அது முந்தைய பதிப்புகளுடன் அதை இணைத்து விடும். |
02:50 | தோல்விகள் நிகழும் போது, தகவல்கள் snapshotலிருந்து திரும்ப பெறப்படும். |
02:56 | இந்த தொடரில் கற்கப்போகும் சில அம்சங்களை, இப்போது பார்க்கலாம். |
03:01 | Gitன் அடிப்படை commandகள் |
03:04 | git checkout command |
03:06 | Gitல் inspection மற்றும் comparison மற்றும் |
03:09 | Gitல் tag செய்தல். |
03:11 | இந்த தொடரில், நாம் மேலும் கற்கப்போவது, Gitல் branch, Branchகளை நீக்குதலும் சேர்த்தலும் மற்றும் Stash ஐ உருவாக்குதலும் நீக்குதலும். |
03:22 | Ubuntu Software Centerஐ பயன்படுத்தி, Gitஐ, Ubuntu Linuxல் நிறுவலாம். |
03:27 | Ubuntu Software Center பற்றி மேலும் அறிய, இந்த இணையதளத்தில், "Linux" tutorialsஐ பார்க்கவும். |
03:35 | என் கணிணியில், நான் ஏற்கெனவேGitஐ நிறுவி விட்டேன். இப்போது, நாம் இதை உறுதிப்படுத்துவோம். |
03:42 | terminal-லுக்கு சென்று, டைப் செய்க:git space hyphen hyphen version , பின்Enterஐ அழுத்தவும். |
03:50 | Gitன் பதிப்பைக் காணலாம். |
03:53 | Git , வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது என்பதனை இது குறிக்கும். |
03:57 | அடுத்து, Windows OSல், Gitஐ நிறுவக் கற்போம். |
04:01 | web browserஐ திறந்து, www.git-scm.comக்கு செல்லவும். |
04:-09 | இடது பக்கம் இருக்கும், Downloads இணைப்பை க்ளிக் செய்யவும். |
04:13 | Windowsக்கு, Gitஐ தறவிரக்க, Windows icon மீது க்ளிக் செய்யவும். |
04:17 | Save As dialog box தோன்றும். Save File பட்டனை க்ளிக் செய்யவும். |
04:22 | முன்னிருப்பான Downloads folderல், installer file தறவிரக்கப்படும். |
04:26 | Gitஐ நிறுவ, "exe" file மீது டபுள்-க்ளிக் செய்யவும். |
04:30 | dialog boxல், முதலில் Run மீதும், பிறகு, Yes மீதும் க்ளிக் செய்யவும். |
04:35 | அடுத்து, Next மீது க்ளிக் செய்யவும். "General Public License" பக்கத்தில், Next மீது க்ளிக் செய்யவும். |
04:41 | முன்னிருப்பாக, Program Filesல், Git நிறுவப்படும். |
04:46 | நிறுவுவதற்கு வேண்டிய componentகளை, நாம் தேர்வு செய்யலாம். |
04:49 | Additional icons checkbox மீது க்ளிக் செய்யவும். |
04:52 | Next மீது க்ளிக் செய்யவும். மீ்ண்டும், Next மீது க்ளிக் செய்யவும். |
04:57 | இங்கு, Git commandsஐ இயக்க, தேர்வு செய்யலாம். |
05:00 | நான், Use Git Bash only ஐ தேர்வு செய்து, Next மீது க்ளிக் செய்கிறேன். |
05:04 | நான், இந்த தேர்வை முன்னிருப்பாக வைத்து, Next மீது க்ளிக் செய்கிறேன். |
05:09 | Git ' நிறுவப்படுகிறது. உங்களின் இணையதள வேகத்தைப் பொருத்து, இது சில நிமிடங்கள் எடுக்கலாம். |
05:15 | நிறுவுதலை முடிக்க, Finish பட்டன் மீது க்ளிக் செய்யவும். |
05:19 | இப்போது, Git Release Notes தானாகவே திறக்கும். அதை நான் மூடுகிறேன். |
05:24 | Git Bash எனும் short-cut icon , உங்கள் Desktopல் தோன்றுவதைக் காணலாம். அதை திறக்க டபுள்-க்ளிக் செய்யவும். |
05:32 | மாற்றாக, 'Start' menu >> All programs >> Git மீது க்ளிக் செய்து, பின் Git Bash மீது க்ளிக் செய்யவும். |
05:41 | இப்போது, Git Bash திறக்கும். |
05:44 | அது, Git ன் நிறுவப்பட்ட பதிப்பைக் காண்பிக்கும். |
05:48 | ஆதலால், Git , வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது என்று நமக்கு தெரியும். |
05:51 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். |
05:55 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Version Control System, Git மற்றும், Ubuntu Linuxமற்றும் Windows இயங்கு தளங்களில், Gitஐ நிறுவுதல். |
06:10 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
06:18 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
6:29 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
06:40 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |