ExpEYES/C2/Conductivity-of-ionic-solutions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Ionic கரைசல்களின் conductivity குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Conductivityஐ அளவிடுவது மற்றும் Ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிடுவது |
00:15 | இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0 மற்றும் Ubuntu Linux OS பதிப்பு 14.04 |
00:23 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:35 | முதலில், ஒரு கரைசலின், Conductivityஐ வரையறுப்போம். |
00:38 | ஒரு கரைசலின், Conductivity என்பது, மின்சாரத்தை கடத்தக்கூடிய அதன் திறமையின் அளவுகோலாகும். |
00:44 | நீரின் Conductivity, அதனுள்ளே கரைந்திருக்கும் ionகளின் அளவுக்கு, நேர் தொடர்புடையதாகும். |
00:51 | இப்போது, குழாய்நீரின் Conductivityஐ செய்து காட்டுகிறேன். |
00:56 | Circuit இணைப்புகளை விளக்குகிறேன். A1, SINEக்கு இணைக்கப்பட்டிருக்கிறது. |
01:02 | SINE மற்றும் A2ன் wireகள், குழாய் நீர் அடங்கிய ஒரு குவளையில், அமிழ்தப்படுகின்றன. |
01:08 | A2 மற்றும் GNDக்கு இடையே, ஒரு 10K resistor இணைக்கப்படுகிறது. இதுவே, circuit diagram. |
01:16 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
01:20 | Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது. |
01:28 | A2ஐ க்ளிக் செய்து, channel CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது. |
01:35 | 'Waveகளை சரி செய்ய, msec/div sliderஐ நகர்த்தவும். இரண்டு sine waveகள் உருவாக்கப்படுகின்றன. |
01:43 | Black trace ஆனது அசல் sine wave ஆகும். Red trace, குழாய் நீரின் conductivity ஆகும். |
01:50 | CH1ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். |
01:56 | Windowவின் வலது பக்கத்தில், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும். Input voltageஉடன் ஒப்பிடும் போது, குழாய் நீரின் voltage, மிகவும் குறைவாக இருப்பதை கவனிக்கவும். |
02:08 | Voltageகள், மற்றும் degreeயில்Phase differenceஐ காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும். |
02:15 | இப்போது, copper sulphate கரைசலின், Conductivityஐ அளவிடுவோம். கரைசலை செய்ய, 100ml நீரில், ஒரு கரண்டி copper sulphate கரைக்கப்படுகிறது. |
02:27 | அதே இணைப்பில், SINE மற்றும் A2ன் wireகள், copper sulphate கரைசலில் அமிழ்தப்படுகின்றன. |
02:34 | Plot windowவில், conductivity curveஐ காணலாம். |
02:38 | Red trace, copper sulphate கரைசலின் conductivity ஆகும். |
02:42 | கரைசலில், copper மற்றும் sulphate ionகள் இருப்பதனால், conductivity அதிகமாக இருக்கும். |
02:48 | வலது பக்கத்தில், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும். |
02:52 | Voltageகள், மற்றும் Phase difference மதிப்புகளை காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும். |
02:59 | இப்போது, நீர்த்த sulphuric acid கரைசலின், Conductivityஐ அளவிடுவோம். நீர்த்த Sulphuric acidன் சில துளிகள் நீருடன் கலக்கப்படுகிறது. |
03:09 | Sulphuric acid கரைசலில், wireகள் அமிழ்தப்படுகின்றன. Plot windowவில் முடிவைக் காண்போம். |
03:17 | Black மற்றும் red traceகள் ஒன்றுக்கொன்று, பொருந்தி இருப்பதை கவனிக்கவும். |
03:23 | நீர்த்த sulphuric acidன் சில துளிகளை சேர்த்ததால், குழாய் நீரின் conductivity அதிகமாகி இருக்கிறது. |
03:30 | வலது பக்கத்தில், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும். |
03:34 | Voltageகள், மற்றும் degreeயில் Phase differenceஐ காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும். |
03:41 | நீர்த்த Potassium hydroxide கரைசலின், Conductivityஐ அளவிடுவோம். நீர்த்த Potassium hydroxide கரைசலின் சில துளிகள் குழாய் நீருடன் கலக்கப்படுகிறது. |
03:52 | Black மற்றும் red traceகள் ஒன்றுக்கொன்று, பொருந்தி இருப்பதை காணலாம். |
03:58 | நீர்த்த Potassium hydroxide கரைசலின் சில துளிகளை சேர்த்ததால், குழாய் நீரின் conductivity அதிகமாகி இருப்பதை கவனிக்கவும். |
04:05 | Windowவின் வலது பக்கத்தில், voltage மற்றும் frequency மதிப்புகளை கவனிக்கவும். |
04:11 | Voltageகள், மற்றும் degreeல் Phase differenceஐ காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும். |
04:18 | Voltage மதிப்புகளை பயன்படுத்தி, ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிட்டு, முடிவுகளை பட்டியலிட்டு உள்ளோம். |
04:27 | குழாய் நீரின் resistanceன் மதிப்பு, 7.7 KOhm (kilo ohm) ஆகும். Copper sulphate' கரைசலின் resistanceன் மதிப்பு, 1.2 Kohm ஆகும். |
04:38 | Sulphuric acid கரைசல், 0.17 Kohm, மற்றும், potassium hydroxide கரைசல், 0.14 KOhm. Ionic அளவு அதிகமாக்கும் போது, resistanceன் மதிப்புகள் குறைவதை கவனிக்கவும். |
04:55 | சுருங்கசொல்ல, |
04:57 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Conductivityஐ அளவிடுவது மற்றும் Ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிடுவது |
05:06 | பயிற்சியாக, Sodium hydroxide, acetic acid மற்றும் sodium chloride கரைசல்களை பயன்படுத்தி, Conductivityஐ அளவிட்டு, ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிடவும். |
05:18 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
05:26 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
05:32 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது |
05:39 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |