PHP-and-MySQL/C2/Common-Way-to-Display-HTML/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:27, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 HTML ஐ உங்கள் php இல் காட்ட இதோ ஒரு குறிப்பு. இது ‘if’ statements அல்லது ஒரு block ஐ பயன்படுத்தும் எதையும் நீங்கள் ஒரு condition உடன் பயன்படுத்த வேண்டிய போதும் அல்லது php இல் வேலை செய்யும் சிலதில் நிறைய HTML output செய்ய வேண்டியபோதும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
00:23 இந்த உதாரணத்தில் ஒரு variable இருக்கிறது - Name, இது Alex க்கு அமைக்கப்பட்டுள்ளது.
00:30 நான் name equals Alex என type செய்தால் அது “Hi, Alex” என echo out செய்கிறது.
00:36 name .. Alex க்கு சமமில்லை எனில் .. நாம் type செய்வது ‘else’- echo out ஆவது “You are not Alex. Please type your name”.
00:47 இங்கே ஒரு input field உள்ளது. நமக்கு இதைச்சுற்றி ஒரு form தேவை.
00:53 ஆகவே, “Form action equals Index.php” Method =post form ஐ இங்கே முடிக்கிறோம்.
01:05 இதை கொஞ்சம் கீழே கொண்டு வந்தால்... ஆ, நன்றாக இருக்கிறது. இந்த Else block இல் HTML code இருக்கிறது.
01:15 நாம் ‘If else’ என type செய்தால்... இங்கே ஒரு block துவங்குகிறது. இங்கே ஒரு block முடிகிறது. இது நிறைய HTML code போல இருக்கிறது.
01:27 இந்த tutorial லின் நோக்கம் நீங்கள் Echo ஐ பயன்படுத்தி HTML code ஐ echo out செய்யத் தேவையில்லை என்று காட்டுவதே.
01:34 quotation marks ஐ பயன்படுத்தி code செய்வது single inverted commas ஐ பயன்படுத்துவதை விட சுலபமானது, நேரம் சேமிப்பது.
01:41 மேலும் blocksஇனுள் code இருப்பது இன்னும் நல்லது, உதாரணமாக, இந்த block ... என்ன type செய்கிறோம் என்பதைப்பற்றி கவலை இல்லாமல்....
01:58 quotation marks க்கு நீங்கள் பழகி இருந்தால் இந்த forward slash .. character ஐ escape செய்யும்.
02:08 ஆகவே அது காட்டப்படும், ஆனால் Echo வின் கடைசியிலும் இந்த Echo வின் ஆரம்பத்திலும் உதாசீனப்படுத்தப்படும்.
02:20 உதாரணமாக.... Refresh செய்யலாம்.
02:25 name equals Alex என்பதால் அந்த greeting ஐத்தான் பார்த்தோம்.
02:31 இந்த Echo குறைந்த உரைக்கு சரிப்படும். ஆனால் ஏராளமான உரை - ஒரு form முதலியவற்றோடு என்றால் இந்த மாதிரி echo தோதுபடாது.
02:44 இப்போது உள்ள நிலையில் அது இயங்காது. error கிடைக்கும். இந்த உரையின் வெளியீட்டுக்கு நாம் ஒருவழியை காட்டவில்லை.
02:59 அது 12 ஆம் வரியில் இருக்கிறது. அங்கே சென்றால் ... இதோ பார்க்கலாம். இந்த பிரச்சினையை இப்படி சரி செய்யலாம்.
03:09 நம் php opening tag இங்கே இருக்கிறது. அந்த tag ஐ நான் இங்கே முடிக்கிறேன்.
03:16 block துவங்கிய பின் tag முடிக்கப்படுகிறது. புதியtag ஒன்றை நான் curly bracket க்கு சற்று முன் இடுகிறேன்.
03:31 ஆகவே இப்போது ஒரு துண்டு php code இங்கும் ஒரு துண்டு இங்கும் உள்ளன. மீதி இங்குள்ளது php என கருதப்பட மாட்டாது. அது HTML ஆகையால் HTML code ஆக கொள்ளப்படும்.
03:49 ஆகவே நான் முதலில் செய்யப்போவது இவற்றை quotation marks ஆக மாற்றுவது.
03:56 இந்த முறையில் முதலிலிருந்தே செய்தால் சுலபமாக code செய்யலாம். அது இன்னும் நன்றாகவும் வேலை செய்யும்.
04:08 இப்போது ஒரு block இங்கும் ஒரு block இங்கும் உள்ளன, php இங்கு முடிவது போல இருக்கிறது.
04:22 ஆனால் நாம் இந்த இடத்தில் ஒரு block ஐ முடிக்கவில்லை. இங்கே கீழே போகிறோம். நாம் இதை echo out செய்யாமல் காட்டுகிறோம்.
04:37 இது குறிப்பாக Else block க்கு பொருந்தும். blockஐ blue highlight செய்த வரியில் இங்கும் இங்கும் முடிக்கிறோம்.
04:47 ஆகவே, மீண்டும் முதலில் “Hi, Alex” கிடைக்கிறது. இப்போது name ஐ உதாரணமாக Kyle என மாற்றி refresh செய்ய....
05:01 HTML சரியாக காட்டப்படுவதை காணலாம். ஆனால் இது நம் php ஆல் echo out ஆகவில்லை.
05:09 HTML ஐ சரியாக் காட்டவும், சுலபமாக மீண்டும் படிக்கவும் இது நல்ல வழியாகும். இந்த tutorial உதவி செய்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst