PERL/C2/while-do-while-loops/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:51, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Perl ல் while மற்றும் do-while loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது;
00:09 Perl ல் while loop, Perl ல் do-while loop
00:12 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00:20 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:24 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:28 Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:33 Perl ல் for மற்றும் foreach loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று.
00:38 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00:43 Perl ல் while loop
00:45 ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது while loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது.
00:50 while loop ன் syntax -
00:53 while space அடைப்புகளில் condition
00:58 curly bracket ஐ திறந்து
01:00 condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி
01:04 curly bracket ஐ மூடவும்
01:07 எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின், உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் while loop முடிவடையும்.
01:16 இப்போது while loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01:19 டெர்மினலை திறந்து டைப் செய்க
01:22 gedit whileLoop dot pl space ampersand
01:29 எண்டரை அழுத்துக
01:31 இது gedit ல் whileLoop.pl file ஐ திறக்கும்
01:34 இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க
01:37 hash exclamation mark slash u s r slash bin slash perl
01:45 எண்டரை அழுத்துக
01:47 dollar i equal to பூஜ்ஜியம் semicolon
01:52 எண்டரை அழுத்துக
01:54 while அடைப்புகளில் dollar i less than or equal to நான்கு space
02:04 curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்தி டைப் செய்க
02:08 print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon, dollar i slash n semicolon
02:20 எண்டரை அழுத்துக
02:22 dollar i plus plus semicolon எண்டரை அழுத்துக
02:28 curly bracket ஐ மூடவும்
02:31 while loop ஐ விளக்குகிறேன்.
02:33 variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம்.
02:38 $i less than or equal to 4 என இப்போது while loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் .
02:46 condition உண்மை எனில், while loop னுள் உள்ள code இயக்கப்படும்.
02:52 அதாவது, முதல் முறை நம் while loop.... 'Value of i: 0' என டெர்மினலில் அச்சடிக்கும்.
03:01 பின் $i++ .... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும்.
03:08 இப்போது மீண்டும் loop condition $i<=4 மதிப்பிடப்படும்.
03:16 i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும்.
03:22 இங்கே i equal to 0, 1, 2, 3, 4 வரை while loop இயக்கப்படுகிறது.
03:32 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
03:35 இப்போது டெர்மினலுக்கு வருவோம்.
03:37 ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-
03:42 perl hyphen c whileLoop dot pl
03:47 எண்டரை அழுத்துக
03:49 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
03:52 whileLoop.pl syntax OK
03:56 compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த Perl script ஐ இயக்க டைப் செய்க-
04:02 perl whileLoop dot pl
04:06 எண்டரை அழுத்துக
04:09 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
04:14 இப்போது do-while loop பற்றி காண்போம்
04:20 do...while statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும்.
04:25 பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும்.
04:30 do-while loop க்கான syntax -
04:34 do space
04:36 open curly bracket
04:38 condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி
04:42 close curly bracket பின் space
04:45 while space அடைப்புக்களில் condition பின் semicolon
04:50 டெர்மினலைத் திறந்து டைப் செய்க;
04:54 gedit doWhileLoop dot pl space ampersand
05:03 எண்டரை அழுத்துக
05:05 இது gedit ல் doWhileLoop.pl file ஐ திறக்கும்
05:09 பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க-
05:11 hash exclamation mark slash u s r slash bin slash perl எண்டரை அழுத்துக
05:21 dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக
05:27 do space
05:29 open curly bracket எண்டர்.... டைப் செய்க
05:33 print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon
05:46 எண்டரை அழுத்துக
05:48 dollar i plus plus semicolon
05:52 எண்டரை அழுத்துக
05:54 close curly bracket
05:56 space while space அடைப்புகளில் dollar i less than or equal to four
06:06 semicolon
06:10 இங்கே ஒரு do-while loop க்கான விளக்கம் உள்ளது.
06:13 variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம்.
06:18 முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே do-while loop வெளியீட்டை 'Value of i colon 0' என டெர்மினலில் அச்சடிக்கும்
06:28 loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் $i++ ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும்.
06:36 இரண்டாம் முறை, $i less than or equal to 4 என்ற condition சோதிக்கப்படும்.
06:43 condition.... உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும்.
06:48 இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு 'Value of i colon 1' என இருக்கும்.
06:57 condition பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும்.
07:05 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
07:09 இப்போது, ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
07:16 perl hyphen c doWhileLoop dot pl
07:21 பின் எண்டரை அழுத்துக
07:23 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
07:26 doWhileLoop.pl syntax OK
07:30 compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது Perl script ஐ இயக்குவோம்.
07:36 டைப் செய்க perl doWhileLoop dot pl
07:41 பின் எண்டரை அழுத்துக
07:43 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
07:48 இப்போது, while மற்றும் do-while loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம்.
07:53 டெர்மினலை திறந்து டைப் செய்க -
07:55 gedit loop dot pl space ampersand
08:01 எண்டரை அழுத்துக
08:03 இது gedit ல் loop dot pl file ஐ திறக்கும்
08:07 இப்போது காட்டப்படும் code ன் தொகுதியை டைப் செய்க.
08:12 ஒரு variable count ஐ declare செய்து அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம்
08:19 while loop condition ல், variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம்.
08:29 condition உண்மை இல்லையெனில். while loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.
08:36 do...while loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம்.
08:44 எனவே, code ஒருமுறையாவது இயக்கப்படும்.
08:49 பின் variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது.
08:57 condition உண்மை இல்லையெனில் loop முடிவடையும்.
09:02 இப்போது file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
09:05 இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க
09:12 perl hyphen c loop dot pl
09:16 எண்டரை அழுத்துக
09:19 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்.
09:22 loop dot pl syntax OK
09:26 compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், Perl script ஐ இயக்குவோம்.
09:31 டைப் செய்க perl loop dot pl
09:36 எண்டரை அழுத்துக
09:38 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
09:43 I am in do-while loop
09:46 இங்கே 'I am in while loop' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம்
09:52 இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது.
09:59 இது குறிப்பது,
10:01 condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது do-while loop இயங்குகிறது
10:07 அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition பொய்யாகும்போது while loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.
10:15 இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன்.
10:18 while மற்றும் do-while loopகள் பற்றி அவ்வளவுதான்.
10:22 சுருங்கசொல்ல.
10:24 இந்த டுடோரியலில், நாம் கற்றது -
10:26 உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி Perl ல் while loop மற்றும் do-while loop
10:31 இங்கே உங்களுக்கான பயிற்சி -
10:33 while மற்றும் do-while loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை 'Hello Perl' என அச்சடிக்கவும்
10:41 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:45 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:49 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:53 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10:56 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:00 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:04 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:12 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:17 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:24 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst