Netbeans/C2/Developing-a-Sample-Web-Application/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:33, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:02 வணக்கம். Netbeans IDE ல் Web Applicationகளை உருவாக்குதலின் அறிமுகம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 netbeans ன் அடிப்படை உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறோம்
00:12 இல்லையெனில் Netbeans டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தைக் காணவும்
00:19 முதல் டுடோரியலைப் பார்த்தால்
00:22 Netbeans ன் interface மற்றும் நிறுவுதல் குறித்து உங்களுக்கு தெரியும்.
00:25 முன் டுடோரியல் ஒரு புது projectஐ உருவாக்குவதைக் காட்டுகிறது.
00:29 இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1
00:40 Netbeans ஐ பயன்படுத்தி web applicationகளை உருவாக்குவதைக் காண்போம்.
00:46 ஒரு web application project ஐ அமைத்தல்
00:49 source fileகளை ஐ உருவாக்குதல் மற்றும் edit செய்தல்
00:52 java package மற்றும் java source file ஐ உருவாக்குதல்
00:56 Getter மற்றும் Setter methodகளை உருவாக்குதல்
00:59 முன்னிருப்பு JavaServer Pages file ஐ edit செய்தல்
01:02 JavaServer pages file ஐ உருவாக்குதல்
01:05 கடைசியாக நம் web application project ஐ இயக்குதல்.
01:08 இந்த டுடோரியலைத் தொடர, தேவையானவை Netbeans IDE
01:13 Java Development Kit (JDK) பதிப்பு 6
01:17 GlassFish Server Open Source Edition.
01:20 மேற்சொன்ன அனைத்தையும் திரையில் காட்டப்படும் இணைப்பில் ஒரு தொகுப்பாக தரவிறக்கலாம்
01:26 இந்த டுடோரியலில் காட்டப்படுபவை, ஒரு எளிய web application ஐ உருவாக்குதல்,
01:30 அதை ஒரு serverக்கு deploy செய்தல்,
01:32 browser ல் அதன் காட்சியைக் காணுதல்.
01:35 இந்த application உங்கள் பெயரை உள்ளிட சொல்ல (JSP) JavaServer Pages ஐ வைத்திருக்கிறது
01:42 பின் இது HTTP sessionன் போது பெயரை கொண்டிருக்க JavaBeans component ஐ பயன்படுத்துகிறது,
01:48 பின் இரண்டாம் JSP page ல் output ஐ பெறுகிறது.
01:51 இப்போது Netbeans க்கு சென்று நம் web application project ஐ உருவாக்குவோம்
01:58 File menu ல் New Projectஐ தேர்ந்தெடுக்கவும்
02:01 Categoriesல் Java Web ஐ தேர்ந்தெடுக்கவும்
02:04 Projectsல் Web Application ஐ தேர்ந்தெடுத்து Nextஐ க்ளிக் செய்க
02:09 உங்கள் project க்கு பெயரிடவும். நான் HelloWeb என பெயரிடுகிறேன்
02:15 உங்கள் கணினியில் ஏதேனும் directory ஐ Project Location க்கு கொடுக்கவும்.
02:20 Nextஐ க்ளிக் செய்க
02:22 Server and Settings panel திறக்கிறது.
02:25 உங்கள் application ல் நீங்கள் பயன்படுத்த விரும்பும் Java பதிப்பை தேர்ந்தெடுக்கவும்.
02:29 நீங்கள் deploy செய்யவிரும்பும் server ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:34 Next ஐ க்ளிக் செய்க
02:36 Frameworks panel ல்,
02:38 project ஐ உருவாக்க Finish ஐ க்ளிக் செய்க.
02:41 HelloWeb project folder ஐ IDE உருவாக்குகிறது.
02:46 உங்கள் folder உங்கள் அனைத்து sourceகள் மற்றும் project metadata ஐ கொண்டிருக்கும்.
02:51 main windowல் Source Editor ல் Welcome page, 'index.jsp திறக்கப்படுகிறது.
02:57 இங்கே இடப்பக்கம் Files window ல் projectன் file structure ஐ காணலாம்
03:05 Projects Window ல் அதன் logical structure உள்ளது.
03:10 source fileகளை உருவாக்குதலும் edit செய்தலும் IDE கொடுக்கும் மிக முக்கியமான செயல்பாடு ஆகும்.
03:15 இப்போது Projects windowல், Source Packages node ஐ விரிவாக்குவோம்.
03:20 காலியான default package node ஐ மட்டும் Source Packages node கொண்டிருப்பதைக் காண்க.
03.25 Source Packagesஐ ரைட்-க்ளிக் செய்து New > Java Class ஐ தேர்ந்தெடுக்கவும்
03:32 உங்கள் classக்கு ஒரு பெயரைக் கொடுக்கவும். நான் NameHandler என பெயரிடுகிறேன்
03:40 Package combobox ல் org.mypackage.hello என டைப் செய்கிறேன்
03:54 Finish ல் க்ளிக் செய்க
03:57 Source Editor ல் NameHandler.java file திறக்கிறது.
04:01 இப்போது class declarationக்கு கீழே நேரடியாக ஒரு String variable ஐ declare செய்வோம்
04:07 ஒரு string variable... String name ஐ declare செய்கிறேன்
04:12 மேலும் ஒரு constructor public NameHandler ஐ classக்கு சேர்க்கிறேன்
04:23 இப்போது அந்த constructor ன் உள் name = null; ஐ சேர்க்கிறேன்.
04:30 அடுத்து Getter மற்றும் Setter Methodகளை உருவாக்குவோம்
04:33 Source Editor ல் name field ல் ரைட் க்ளிக் செய்து context menu ல் Refactor பின் Encapsulate Fields ஐ தேர்ந்தெடுக்கவும்
04:46 ஏற்கனவே உள்ள code ன் structure ஐ மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறையான நுட்பம் Refactoring ஆகும். இது காணக்கூடிய நடத்தையை மாற்றாமல் செய்யப்படுகிறது.
04:56 எளிதாக, code ன் நடத்தையை மாற்றாமல் structure ஐ மாற்றலாம்.
05:01 Refactoring மூலம் எதையும் உடைக்காமல் fieldகள், methodகள் அல்லது classகளை நகர்த்தலாம்.
05:08 மீண்டும் IDEக்கு வருவோம்.
05:11 Encapsulate Fields dialog திறக்கப்பட்டு name field பட்டியலிடப்படுகிறது.
05:16 முன்னிருப்பாக Fields visibility ஆனது private ஆகவும்,
05:20 Accessors visibility ஆனது public, ஆகவும் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க
05:24 class variableகளுக்கான access modifier ஆனது private ஆக குறிப்பிடப்பட்டிருப்பதை இது காட்டுகிறது,
05:30 அதேசமயம் getter மற்றும் setter methodகள் முறையே public modifierகளுடன் உருவாக்கப்படுகிறது.
05:36 Refactor ஐ க்ளிக் செய்க
05:39 name fieldக்கு Getter மற்றும் Setter methodகள் உருவாக்கப்படுகின்றன.
05:46 class variableக்கான modifier ஆனது private ஆக அமைக்கப்படுகிறது அதேசமயம் getter மற்றும் setter methodகள் public modifierஉடன் உருவாக்கப்படுகின்றன.
05:56 கடைசியாக உங்கள் java class இவ்வாறு இருக்க வேண்டும்
05:59 அடுத்து Default JavaServer Pages File ஐ edit செய்வோம்
06:04 Source Editor ல் index.jsp tab ஐ க்ளிக் செய்து அந்த file ஐ திறப்போம்
06:11 இப்போது Palette manager ஐ திறப்போம் அதற்கு Tools menu ல் Palette பின் HTML/JSP code clipsஐ க்ளிக் செய்க
06:21 Palatte manager திறக்கிறது.
06:26 palette manager ல் HTML forms ஐ விரிவாக்குவோம்
06:31 Form item ஐ தேர்ந்தெடுத்து.
06:34 அதை இழுத்து Source Editor ல் h1 tagகளுக்கு பின் வைப்போம்
06:42 Insert form dialog box திறக்கிறது.
06:45 இங்கு திரையில் காட்டப்படுவதுபோல மதிப்புகளைக் கொடுக்கவும்:
06:49 Action ல் response.jsp
06:54 Method ல் GET
06:56 பின் நம் form க்கு Name input form என பெயரைக் கொடுத்து
07:04 OK ல் க்ளிக் செய்க.
07:07 index.jsp file க்கு ஒரு HTML form சேர்க்கப்படுகிறது
07:13 இப்போது Palette manager ல் இருந்து Text Input item ஐ தேர்ந்தெடுத்து அதை இழுத்து closing form tagக்கு முன் வைக்கவும்
07:25 Insert text input dialog box ல் Namename என கொடுப்போம்
07:32 Typetext எனவே விட்டு
07:34 OK ல் க்ளிக் செய்க.
07:36 இப்போது form tagகளுக்கு இடையில் ஒரு HTML input tag சேர்க்கப்பட்டது.
07:41 input tag ல் உள்ள காலியான value attribute ஐ நீக்குவோம்.
07:49 இப்போது palette ல் Button item ஐ தேர்ந்தெடுத்து.
07:53 அதை இழுத்து closing form tag க்கு முன் வைக்கவும்
07:58 Label ல் OK மற்றும்
08:00 Type ல் submit என கொடுத்த
08:03 மீண்டும் OK ல் க்ளிக் செய்க
08:05 இப்போது form tagகளுக்கு ஒரு HTML button சேர்க்கப்பட்டது.
08:12 முதல் input tag க்கு முன் டைப் செய்க Enter your name
08:22 பின் h1 tagகளுக்கு இடையே உள்ள default text ஐ மாற்றுவோம்
08:28 அதை Entry form என மாற்றுவோம்
08:34 இப்போது, palette manager ஐ மூடுவோம்.
08:38 உங்கள் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து
08:41 உங்கள் code ன் format ஐ சீராக்க Format option ஐ க்ளிக் செய்க.
08:46 உங்கள் index.jsp file இப்போது இவ்வாறு இருக்க வேண்டும்.
08:49 அடுத்து ஒரு JavaServer Pages File ஐ உருவாக்குவோம்
08:53 Projects window ல், HelloWeb project node ல் ரைட் க்ளிக் செய்து New பின் JSP ஐ தேர்ந்தெடுக்கவும்
09:01 New JSP File wizard திறக்கிறது.
09:05 file க்கு response என பெயரிட்டு Finish ல் க்ளிக் செய்க
09:14 Projects window ல் index.jsp file க்கு கீழே response.jsp file node இருப்பதைக் காணலாம்,
09:23 அந்த புது file... Source Editor லும் திறக்கிறது.
09:26 மீண்டும் Palette manager ஐ திறக்கவும்
09:35 இப்போது JSP optionஐ விரிவாக்கவும்.
09:39 Use Bean item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து bodyக்கு கீழே வைக்கவும்
09:53 Insert Use Bean dialog திறக்கிறது.
09:56 மதிப்புகள்
09:58 ID ல் mybean
10:01 Classல் org.mypackage.hello.NameHandler
10:13 Scope ல் session என அமைத்து
10:15 OK ஐ க்ளிக் செய்க.
10:18 body tagக்கு கீழே jsp:useBean tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க.
10:30 JavaBeans என்பவை Javaக்கான மீண்டும் பயன்படுத்தக்கூடிய componentகள் ஆகும்.
10:34 பல objectகளை ஒரே ஒரு object ஆக பெற அவை பயன்படுகின்றன
10:38 அதன் மூலம் அவற்றை பல தனித்த objectகளுக்கு பதிலாக ஒரே ஒரு bean object ஆக அனுப்பலாம்.
10:46 இப்போது Palette manager ல், setbean property item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து h1 tagகளுக்கு முன் வைக்கவும்
11:03 OK ஐ க்ளிக் செய்க.
11:12 இங்கே தோன்றும் jsp:setProperty tag ல் காலியான value attribute ஐ நீக்கவும்.
11:21 name attribute ல் mybean மற்றும் Property ல் name என அமைப்போம்
11:30 இப்போது h1 tagகளுக்கு இடையே text ஐ Hello comma space ஆச்சரிய குறி என மாற்றுவோம்
11:40 இப்போது Palette manager ல் Get Bean property item ஐ தேர்ந்தெடுத்து அதை இழுத்து h1 tagகளுக்கு இடையே Hello text க்கு பின் வைக்கவும்
11:51 Get Bean Property item ல்
11:53 Bean Name ல் mybean
11:57 Property Name ல் name என அமைத்து
11:59 OK ஐ க்ளிக் செய்க
12:01 h1 tagகளுக்கு இடையே இப்போது jsp:getProperty tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க.
12:07 மீண்டும் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து, தேவையெனில் உங்கள் code ன் format ஐ சீராக்க Format ஐ க்ளிக் செய்க
12:16 அடுத்த படி நம் Web Application Project ஐ இயக்குவது
12:20 palette manager ஐ மூடுகிறேன்
12:26 Projects window ல், HelloWeb project node ல் ரைட் க்ளிக் செய்து Run option ஐ தேர்ந்தெடுக்கவும்
12:32 அல்லது toolbar ல் இருந்தும் Run option ஐ க்ளிக் செய்யலாம் அல்லது keyboard ல் F6 key ஐ அழுத்தலாம்.
12:41 என் project ஐ இயக்க toolbar ல் Run button ஐ க்ளிக் செய்கிறேன்`
12:44 ஒரு Web application ஐ இயக்கும்போது.... IDE ஆனது application code ஐ கட்டமைத்து compile செய்கிறது
12:53 server ஐ துவக்கி server க்கு application ஐ deploy செய்கிறது
12:58 கடைசியாக browser window ல் application ஐ காட்டுகிறது
13:02 இந்த செயல்பாட்டைக் காண output window ஐ திறக்கலாம் அதற்கு Window menu ல் Output option ஐ தேர்ந்தெடுக்கவும்
13:10 உங்கள் application வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்
13:17 index.jsp பக்கம் உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கப்படும்
13:23 மீண்டும் project ஐ இயக்குகிறேன்
13:27 இங்கே உள்ளது, இது உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கிறது
13:32 server output ஐ IDE காட்டுவதற்கு முன்பேகூட சில சமயம் browser window திறக்கப்படலாம் என்பதைக் குறித்துக்கொள்க
13:38 இப்போது browser ல் text box ல் பெயரை உள்ளிடுவோம்
13:42 உதாரணமாக Ubuntu பின் OK ஐ க்ளிக் செய்க.
13:46 response.jsp பக்கம் காட்டப்பட்டு, ஒரு எளிய வரவேற்பு செய்தி காட்டப்படுகிறது.
13:52 இப்போது உங்களுக்கான பயிற்சி
13:56 இந்த web application project ன் தொடர்ச்சியாக, மேலும் இரு text fieldகளை உள்நுழைக்கவும். அதாவது மொத்தம் மூன்று input text fieldகள்
14:06 bean property ஐ அமைக்க JavaBeans Component ஐ பயன்படுத்தவும்
14:09 பின் browser ல் அதன் காட்சியைக் காணவும்
14:12 கடைசியாக இரண்டாம் JSP பக்கத்தில் அதன் output ஐ பெறவும்
14:17 இந்த பயிற்சியை நான் ஏற்கனவே செய்துவிட்டேன்
14:21 அதை திறந்து IDEல் இயக்குகிறேன்
14:30 நான் 3 input text fieldகளை வைத்துள்ளேன்
14:35 விவரங்களை உள்ளிட்டு Ok ல் க்ளிக் செய்கிறேன்
14:42 காட்டப்படுவது போன்ற ஒரு output வர வேண்டும்
14:47 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
14:51 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
14:54 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
14:59 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
15:05 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
15:09 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
15:16 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
15:28 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
15:40 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst