BOSS-Linux/C2/BOSS-Linux-Desktop/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:59, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 BOSS டெஸ்க்டாப் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு!
00:06 இதில் BOSS டெஸ்க்டாப் என்விரான்மென்ட் க்கு அறிமுகம் செய்து கொள்வோம்!
00:12 இங்கே, பரவலான இந்திய மொழிகளுக்கு ஆதரவுடனும் packageகளுடனும் BOSS Linux 3.4.2 ஐ பயன்படுத்துகிறேன்.
00:21 slideகளை minimize செய்கிறேன்.
00:24 இப்போது பார்ப்பது BOSS டெஸ்க்டாப்.
00:28 மேல் இடது மூலையில் main menu ஐ காணலாம்.
00:33 இதை திறக்க நீங்கள் alt+ f1 ஐ உங்கள் விசைப்பலகையில் அழுத்தவும்.
00:42 மாறாக Applications menu ஐயும் க்ளிக் செய்யலாம்.
00:46 எல்லா நிறுவிய அப்ளிகேஷன்களும் இந்த மெனுவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
00:54 இந்த Applications menuல், சில முக்கியமான applicationகளை அறிமுகம் செய்து கொள்வோம்.
01:01 எனவே செல்வோம் Applications, Accessories, Calculator.
01:08 கால்குலேட்டர் கணித, விஞ்ஞான, வர்த்தக கணக்குகளை போட உதவுகிறது.
01:16 calculator ஐ அதன் மீது க்ளிக் செய்வதன் மூலம் திறக்ககலாம்.
01:20 சில எளிய கணக்குகளை போட்டு பார்க்கலாம்.
01:23 டைப் செய்க 5 பெருக்கல் 8 பின் =(சமக்குறியை) அழுத்துக
01:29 சமக்குறியை க்ளிக் செய்யாமல் என்டர் விசையையும் தட்டலாம்
01:35 இப்போது close பட்டன் மீது க்ளிக் செய்து இந்த calculator ஐ மூடலாம்.
01:40 இப்போது மற்றொரு application ஐ காணலாம்.
01:43 அதற்கு செல்க Applications பின் Accessories.
01:49 Accessories ல், gedit Text Editor ஐ அதன் மீது க்ளிக் செய்து திறக்கலாம்.
01:56 இப்போது திரையில் காண்பது gedit Text Editor.
02:02 இப்போது சில உரைகளை உள்ளிட்டு அதை சேமிக்கிறேன்.
02:06 டைப் செய்க Hello World
02:11 file ஐ சேமிக்க Crtl+S விசைகளை அழுத்தலாம் அல்லது File க்கு சென்று Save மீது க்ளிக் செய்யலாம்
02:20 எனவே File க்கு சென்று Save மீது க்ளிக் செய்கிறேன்
02:26 Save As dialog box திறக்கிறது.
02:29 இது fileன் பெயர் மற்றும் file ஐ சேமிக்க வேண்டிய இடத்தைக் கேட்கிறது.
02:36 எனவே hello.txt என பெயரை டைப் செய்து சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்வு செய்கிறேன்
02:47 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
02:49 இப்போது gedit விண்டோவை மூடி Desktop ல் நம் file சேமிக்கப்பட்டதா இல்லையா என சோதிப்போம்.
02:58 இப்போது Desktop க்கு வந்து நம் file hello.txt இங்கிருப்பதைக் காணலாம்.
03:05 எனவே நம் text file வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது.
03:10 அந்த file மீது டபுள்-க்ளிக் செய்து அதை திறக்கலாம்.
03:14 இங்கே நம் text Hello World உள்ளது.
03:18 gedit text editor ல் பல வட்டார மொழிகளையும் எழுதமுடியும்.
03:24 அதை செய்வதைக் காண்போம்.
03:27 gedit Text Editor ல் CTRL மற்றும் SPACE BAR ஐ அழுத்துக
03:33 கீழ் வலது பக்கம் ஒரு சிறிய பெட்டியைக் காணலாம்.
03:39 அதன் மீது க்ளிக் செய்க.
03:41 Hindi.... பின்
03:43 Inscript ஐ தேர்ந்தெடுப்போம்.
03:45 hello world என டைப் செய்கிறேன்.
03:49 Hindi Inscript க்கு text மாறியிருப்பதைக் காணலாம்.
03:53 இப்போது Hindi பின் Phonetic ஐ தேர்ந்தெடுக்கிறேன்
03:59 phonetics ஐ பயன்படுத்தி welcome ஐ டைப் செய்கிறேன்.
04:03 Hindi ல் welcome எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
04:08 இப்போது மாற்றங்களை சேமிக்க Save மீது க்ளிக் செய்க.
04:11 இந்த text editor ஐ மூடி Accessories ல் உள்ள மற்றொரு முக்கியமான application... Terminal ஐ காண்போம்
04:20 எனவே செல்வோம் Applications , Accessories பின் Terminal.
04:27 Terminal ல் இருந்து கணினிக்கு கட்டளைகளை கொடுக்கமுடியும் என்பதால் இது command line எனப்படுகிறது. உண்மையில் GUI ஐ விட இது சக்தி வாய்ந்தது.
04:40 இப்போது Terminal ல் ஒரு எளிய command ஐ டைப் செய்வோம்
04:45 டைப் செய்க ls பின் எண்டர் செய்க.
04:50 நடப்பு directory ல் உள்ள அனைத்து fileகள் மற்றும் folderகளை இது பட்டியலிடுவதைக் காணலாம்.
04:57 இங்கே இது Home folder ல் உள்ள fileகள் மற்றும் folderகளை காட்டுகிறது.
05:02 பின்னர் இதே டுடோரியலில் Home folder பற்றி காண்போம்.
05:07 இந்த Linux spoken tutorialகள் தொடரில் Terminal commandகள் தெளிவாக விளக்கப்படுகின்றன.
05:15 இப்போது Terminal ஐ மூடுவோம்.
05:18 இப்போது மற்றொரு application... Iceweasel Web Browserஐ காண்போம்
05:25 இதுதான் BOSS இயங்குதளத்தின் முன்னிருப்பு web browser ஆகும்.
05:30 க்ளிக் செய்க Applications ; Internet ; Iceweasel Web Browser.
05:36 Iceweasel ஆனது ; Firefox ன் மறுவணிகபெயரூட்டப்பட்ட பதிப்பு (re-branded version) ஆகும்.
05:41 இந்த browser ஐ பயன்படுத்தி, உங்கள் மின்னஞ்சல்களை அணுகலாம் அல்லது சில தகவல்களை இணையத்தில் தேடலாம்.
05:49 google தளத்திற்கு செல்வோம்.
05:51 address bar க்கு செல்வதற்கான short-cut key F6.
05:56 அல்லது address bar ல் க்ளிக் செய்யலாம்.
06:00 டைப் செய்கிறேன் www.google.co.in
06:07 டைப் செய்யும்போது, Iceweasel சில சாத்தியங்களை பரிந்துரைக்கலாம்.
06:11 அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்..
06:14 ... அல்லது முழு முகவரியையும் டைப் செய்து எண்டரை அழுத்தலாம்.
06:19 இப்போது google search page ல் இருக்கிறோம். search bar ல் டைப் செய்வோம் spoken tutorial.
06:27 முதல் தேர்வாக spoken tutorial வலைத்தளம் பட்டியலிடப்படுகிறது. அதன் மீது க்ளிக் செய்வோம்.
06:34 இது spoken tutorial home page ஐ திறக்கும்.
06:38 இது மூடிவிட்டு தொடர்வோம்.
06:42 இப்போது, க்ளிக் செய்க Applications பின் Office.
06:48 இந்த Office menu ல், Writer, Calc மற்றும் Impress போன்ற LibreOffice தேர்வுகளை கொண்டுள்ளோம்
06:57 இவை LibreOffice தொகுப்பின் word processor, spreadsheet மற்றும் presentation componentகள் ஆகும்.
07:04 இவற்றிற்கான spoken tutorialகளை Spoken Tutorial வலைத்தளம் கொண்டுள்ளது. அவற்றை காண பரிந்துரைக்கிறோம்.
07:12 அடுத்து Applications ல், Sound &Video menu ஐ காணலாம்.
07:19 இந்த தேர்வு BOSS OS ல் கிடைக்கும் பல்வேறு player தேர்வுகளை காட்டுகிறது.
07:27 உங்கள் video அல்லது audio fileகளை இயக்க இவற்றில் ஏதேனும் ஒரு தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.
07:33 இப்போது, முக்கியமான சிலவற்றைக் காண்போம், இம்முறை Places menu க்கு செல்வோம்.
07:41 இங்குள்ள முதல் தேர்வு Home folder.
07:45 அதை திறக்கலாம்.
07:47 BOSS OS ல் ஒவ்வொரு பயனரும் ஒரு தனித்த Home folder ஐ கொண்டிருப்பார்
07:52 Home folder ஐ நம் வீடு எனலாம் இங்கே நம் fileகள் மற்றும் folderகளை சேமிக்கலாம்.
08:00 நாம் அனுமதிக்காதவரை மற்றவரால் அவற்றை பார்க்க முடியாது.
08:04 file அனுமதிகள் குறித்த மேலும் தவல்கள் spoken tutorial வலைத்தளத்தில் உள்ள Linux spoken tutorialகளில் கிடைக்கும்.
08:14 நம் Home folder, ல் Desktop, Documents, Downloads, Music போன்ற மற்ற folder களை காணலாம்.
08:25 Linux ல், அனைத்தும் ஒரு file.
08:29 Desktop folder ஐ அதன் மீது டபுள்-க்ளிக் செய்து திறக்கலாம்.
08:35 gedit text editor ல் நாம் சேமித்த அதே file hello.txt இங்குள்ளது.
08:44 எனவே இந்த folder ம் Desktop ம் ஒன்றே.
08:49 இந்த folder ஐ இப்போது மூடுவோம்.
08:52 இப்போது Desktop theme ஐ மாற்ற கற்போம்.
08:55 வலப்பக்க மூலைக்கு சென்று அங்கு காட்டப்படும் username மீது க்ளிக் செய்க.
09:02 என் கணினியில் username spoken. எனவே spoken மீது க்ளிக் செய்கிறேன்
09:09 இப்போது System Settings தேர்வு மீது க்ளிக் செய்க.
09:13 System Settings dialog box திறக்கிறது.
09:16 Background icon மீது க்ளிக் செய்க
09:19 காட்டப்படும் பட்டியலில் ஏதேனும் ஒரு background ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:23 உங்கள் புது background ஆக இது தோன்றும்.
09:27 இந்த dialog box ஐ மூடவும்.
09:29 இப்போது, Applications menu ல் உள்ள System Tools தேர்வுக்கு வருவோம்.
09:36 உங்கள் desktop மற்றும் வெவ்வேறு applicationகளை மேலாள உதவும் பல முக்கிய தேர்வுகளை இந்த menu கொண்டுள்ளது.
09:44 க்ளிக் செய்க System tools, Administration மற்றும் Synaptic Package Manager.
09:51 உடனே இது அங்கீகாரத்திற்காக admin password ஐ கேட்கும்.
09:57 உங்கள் admin password ஐ டைப் செய்து Authenticate பட்டன் மீது க்ளிக் செய்க.
10:02 Synaptic Package Manager ஐ பயன்படுத்துவதற்கான ஒரு டுடோரியல் இந்த தொடர் டுடோரியல்களில் உள்ளது.
10:10 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:15 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:18 BOSS Desktop, main menu
10:21 மற்றும் BOSS Linux OS ன் பல முக்கிய அம்சங்கள்.
10:25 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
10:28 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
10:31 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:36 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:41 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:45 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:53 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:57 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:05 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
11:11 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst