LibreOffice-Suite-Writer/C2/Introduction-to-LibreOffice-Writer/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:21, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

Resources for recording Introduction to Writer

Time Narration
0:01 லீப்ரே Office Writer குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு! Writer க்கு ஒரு அறிமுகத்தை பார்க்கலாம்.,
0:10 பலவித tool bars,
0:13 புதிய ஒரு document ஐயும் பழைய document ஐயும் திறப்பது,
0:17 document ஐ சேமிப்பது,
0:20 document ஐ மூடுவது ஆகியன.
0:22 லீப்ரே Office Suite இல் உள்ள word processorதான் லீப்ரே Office Writer.
0:27 இது மைக்ரோசாப்ட் Office Suite இல் மைக்ரோசாப்ட் வேர்ட் க்கு சமம்.
0:32 இது ஒரு இலவச திறந்த மூல மென்பொருள். இதை பகிர, மாற்ற, விநியோகம் செய்ய தடை ஏதுமில்லை.
0:41 லைசென்ஸ் கட்டணம் இல்லாமல் இதை பகிர்ந்து கொள்ளலாம்.
0:47 லீப்ரே Office suite ஐ பயன்படுத்த துவங்க மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, MS விண்டோஸ் XP அல்லது MS விண்டோஸ் 7 ஆகியவற்றையோ அல்லது GNU/Linux சையோ .. Operating System ஆக பயன்படுத்தலாம்.
1:04 இங்கு Ubuntu Linux 10.04 நம் operating system . லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4.
1:16 லீப்ரே Office Suite நிறுவப்படாவிட்டால், Writer ஐ Synaptic Package Manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.
1:24 Synaptic Package Manager, குறித்த மேல் தகவல்களுக்கு Ubuntu Linux டுடோரியல்களை பாருங்கள். பின் இந்த வலைத்தளத்தில் சொன்ன படி தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
1:37 விரிவான குறிப்புகள் லீப்ரே Office Suite இன் முதல் டுடோரியலில் இருக்கிறது.
1:43 'Writer' ஐ நிறுவும் போது 'Complete' option ஐ மறவாதீர்கள்.
1:50 லீப்ரே Office Suite ஐ ஏற்கெனெவே நிறுவி இருந்தால்,
1:54 லீப்ரே Office Writer ஐ கண்டுபிடிக்க திரையின் இடது மேல் மூலையில் உள்ள “Applications” மீது சொடுக்கவும்.
2:02 பின் முறையே “Office” , “லீப்ரே Office” option களில் சொடுக்கவும்.
2:08 திறக்கும் புதிய dialog box ல் லீப்ரே Office மென்பொருட்கள் இருக்கும்.
2:13 லீப்ரே Office Writer ஐ அணுக, “text document” option இல் சொடுக்கவும். இதுவே அதன் word processor.
2:23 main Writer window வில் இது ஒரு காலி document ஐ திறக்கும். .
2:28 Writer option இல் பல tool barகள் உள்ளன. அவை title bar,
2:33 menu bar, standard tool bar,
2:36 formatting bar மற்றும் status bar. இவற்றில் சாதாரணமாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் option கள் உள்ளன. இவை குறித்து மேல் வரும் டுடோரியல்கள் கற்பிக்கும்.
2:47 புதிய document ஒன்றை Writer திறப்பதுடன் ஆரம்பிக்கலாம்.
2:53 standard tool bar இல் “new” சின்னத்தை சொடுக்கி புதிய document ஐ திறக்கலாம்.
3:00 அல்லது menu bar இல் “File” option ,
3:05 பின் “new” தேர்வு, கடைசியாக “text document” option ஐ சொடுக்குவதன் மூலம்.
3:12 புதிய Writer option இரண்டு விதத்திலும் தோன்றுகிறது.
3:17 இப்போது ஏதேனும் text யை, editor area ல் இடலாம்.
3:21 “RESUME” என டைப் செய்வோம்.
3:24 document ஐ எழுதி அதை பின்னே பயன்படுத்த சேமிக்க வேண்டும்.
3:29 சேமிக்க menu bar இல் “File” ,
3:33 பின் “Save As” தேர்வில் சொடுக்கவும்.
3:36 திரையில் ஒரு dialog box திறக்கும். அதில் “Name” field இல் பைலின் பெயரை உள்ளிட வேண்டும்.
3:44 “resume” என பெயர் இடலாம்.
3:48 “Name” field இன் கீழ் “Save in folder” என்று இருக்கிறது.
3:53 இந்த field இல் பைலை சேமிக்க வேண்டிய folder இன் பெயரை தர வேண்டும்.
3:58 “Save in folder” இல் கீழ் அம்பை தட்டி “Desktop” ஐ தேர்வு செய்க.
4:02 மெனுவில் பைலை சேமிக்கக்கூடிய folder களின் பட்டியலை காணலாம்.
4:08 “Desktop” option இல் சொடுக்கலாம்.. பைல் desktop இல் சேமிக்கப்படும்.
4:14 “Browse for other folders” என்பதன் மீதும் சொடுக்கலாம்.
4:18 பின் document ஐ சேமிக்க விருப்பமான folder ஐ தேர்ந்தெடுக்கலாம்.
4:23 dialog boxயில் “File type” option மீது சொடுக்கவும்.
4:27 file ஐ சேமிக்க file வகை option கள் அல்லது file extensions ஆகியவற்றின் பட்டியலை காட்டும்.
4:34 லீப்ரே Office Writer இல் default ... “ODF Text Document” இதன் extension “dot odt”.
4:45 ODT என்பது Open Document Format வகையை சார்ந்தது. ODF உலகளாவிய word document களுக்கு standard வகையாகும்.
4:56 மின்னாளுமைக்கு திறந்த standard ஆக இந்திய அரசாலும் அங்கீகரிக்கப்பட்டது.
5:04 லீப்ரே Office Writer இல் திறக்கக்கூடிய dot odt text document களாக சேமிப்பதுடன்
5:11 file ஐ MS Office Word இல் திறக்கக்கூடிய dot doc மற்றும் dot docx format இலும் சேமிக்கலாம்.
5:23 பல மென்பொருட்களால் திறக்கக்கூடிய பிரபல வகையின் extension dot rtf, இது “Rich Text Format” .
5:33 இப்போது “ODF Text Document” option இல் சொடுக்கவும்.
5:37 இப்போது “ODF Text Document” வகை அடைப்புக்குள் dot “odt”, என “File type” option க்கு அடுத்து காணப்படுகிறது.
5:48 “Save” மீது சொடுக்கவும்.
5:50 இது உங்களை பைல் பெயர், தேர்ந்தெடுத்த extensionஉடன் title bar இல் காணும்படி Writer சாளரத்துக்கு இட்டுச்செல்லும்.
5:58 இப்போது Writer window வில் text document ஒன்று எழுத தயார்.
6:03 மேலே சொன்ன format களுடன் Writer ஆவணங்களை “dot html” format இலும் சேமிக்கலாம். இது வலைப்பக்க ஒழுங்கு.
6:13 இது முன் சொன்ன வழியிலேயே செய்யப்படுகிறது. .
6:17 menubar இல் “File” option இல் சொடுக்கி “Save As” தேர்விலும் சொடுக்கவும்.
6:24 ”File Type” option இல் சொடுக்கி, “HTML Document – அடைப்புக்குள் OpenOffice dot org Writer” தேர்விலும் சொடுக்கவும்.
6:35 இந்த option document க்கு “dot html” பின்னொட்டை தருகிறது.
6:40 “Save” மீது சொடுக்கவும்.
6:42 dialog boxயில் “Ask when not saving in ODF format” option இல் குறியிடவும்.
6:50 கடைசியாக “Keep Current Format” option இல் சொடுக்கவும்.
6:55 dot html extension உடன் document சேமிக்கப்படுகிறது.
7:00 document ஐ PDF format க்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதற்கு standard tool bar இல் “Export Directly as PDF” option இல் சொடுக்கவும்.
7:10 முன் போல சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்க.
7:15 மாறாக இதையே menu bar இல் “File” தேர்விலும், பின் “Export as pdf” தேர்விலும் சொடுக்கியும் செய்யலாம்.
7:24 தோன்றும் dialog boxயில் “Export” மீது சொடுக்கி பின் “Save” button இல் சொடுக்கவும்.
7:32 ஒரு pdf file உருவாக்கப்படும்.
7:35 document ஐ “File” , பின் “Close” மீது சொடுக்கி மூடலாம்.
7:40 அடுத்து லீப்ரே Office Writer இல் இருப்பில் உள்ள ஒரு document ஐ திறப்பதை பார்க்கலாம்.
7:47 “document “Resume.odt ஐ திறக்கலாம்."
7:51 இருப்பில் உள்ள ஒரு document ஐ திறக்க மேலே menubar இல் “File” பின் “Open” ஐ சொடுக்கவும்.
8:00 திரையில் dialog box ஐ காணலாம்.
8:04 இங்கே document ஐ சேமித்த folder ஐ கண்டு பிடிக்க வேண்டும்.
8:08 பின் text box இன் மேல் இடது மூலையில் உள்ள pencil button ஐ சொடுக்கவும்.
8:14 அங்கே, “Type a file Name” என இருக்கிறது.
8:16 இது “Location Bar” field ஐ திறக்கும்.
8:19 நமக்கு வேண்டிய பைலின் பெயரை உள்ளிடவும்.
8:24 ஆகவே நாம் “resume” என உள்ளிடுகிறோம்.
8:27 தோன்றும் பட்டியலில் “resume dot odt” என்பதை தேர்க.
8:34 இப்போது “Open” ஐ சொடுக்கவும்.
8:37 resume.odt file திறக்கிறது.
8:41 இருப்பில் உள்ள ஒரு document ஐ திறக்க மேலே toolbar இல் “Open” சின்னத்தை சொடுக்கி முன் சொன்ன வழியிலேயே திறக்கலாம்.
8:52 மைக்ரோசாப்ட் Word பயன்படுத்தும் “dot doc”, “dot docx extensionஉள்ள பைல்களையும் Writer ஆல் திறக்கலாம்.
9:03 அடுத்து file ஐ மாற்றி பின் அதே பெயரில் சேமிப்பதை பார்க்கலாம்
9:10 “RESUME” என்ற text யை அதன் மீது இடது சொடுக்கியால் இழுப்பதன் மூலம் தேர்ந்தெடுங்கள்.
9:17 இது text ஐ தேர்ந்தெடுத்து முன்னிலை படுத்தும். இப்போது இடது சொடுக்கி பட்டனை விடவும்.
9:24 text இப்போதும் முன்னிலை படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
9:26 இப்போது standard toolbar இல் “Bold” சின்னத்தில் சொடுக்கவும். text தடிமனாக ஆகிவிடும்.
9:33 இந்த text யை பக்கத்தின் நடுவில் ஒழுங்கு செய்ய toolbar இல் “Centered” சின்னத்தில் சொடுக்கவும்.
9:41 text பக்கத்தின் நடுவில் ஒழுங்கு செய்யப்பட்டது.
9:45 இப்போது text இன் எழுத்து அளவை கூட்டலாம்.
9:48 toolbar இல் “Font Size” கீழ் அம்பு விசையை சொடுக்கலாம்.
9:53 கீழிறங்கும் menu வில் நாம் “14” மீது சொடுக்கலாம்.
9:57 ஆகவே font இன் அளவு “14” ஆகிறது.
10:01 “Font Name” field இல் கீழ் அம்பை சொடுக்கி “UnDotum” ஐ font பெயராக தேர்ந்தெடுக்கவும்.
10:09 toolbar இல் “Save” சின்னத்தை சொடுக்கவும்.
10:13 மாற்றங்களை செய்தாலும் அதே பெயரில் பைல் சேமிக்கப்படுவதை காணலாம்..
10:21 document ஐ சேமித்த பின் அதை மூட விரும்பினால்,
10:25 menu bar இல் “File” பின் “Close” இல் சொடுக்கவும். இது file ஐ மூடும்.
10:33 இத்துடன் லீப்ரே Office Writer குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. நாம் கற்றது:
10:43 Writer க்கு அறிமுகம். Writer இல் பலவித toolbars
10:45 புதிய document ஐ திறத்தல் , இருப்பில் உள்ள document ஐ திறத்தல், document ஐ சேமித்தல்,
10:52 document ஐ மூடுதல்.
10:55 முழுமையான பயிற்சி: புதிய document ஐ Writer இல் திறத்தல்,
11:01 “practice.odt” என்ற பெயரில் document ஐ சேமித்தல்,
11:05 “This is my first assignment” என text எழுதுதல், File ஐ சேமித்தல், text ஐ அடிக்கோடு இடுதல்,
11:13 font அளவை 16 என அதிகரித்தல். File ஐ மூடுதல்.
11:18 கீழ் வரும் தொடுப்பில் விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
11:24 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11:29 spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:38 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@spoken-tutorial.org
11:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:48 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:56 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:07 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Priyacst