Jmol-Application/C2/Introduction-to-Jmol-Application/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | வணக்கம். Jmol அப்ளிகேஷனுக்கு அறிமுகம்குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நான் சுருக்கமாக விளக்கப்போவது: |
00:11 | Jmol அப்ளிகேஷன் விண்டோ மற்றும் சில அடிப்படை செயல்பாடுகள். |
00:16 | நாம் கற்கவோவது |
00:18 | Menu Bar, Tool bar, மற்றும் Jmol panel |
00:22 | எவ்வாறு: Jmol panelன் அளவை மாற்றுதல் |
00:25 | எளிய கரிம மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல் |
00:28 | ஹைட்ரஜனுக்கு பதிலாக ஒரு மெத்தில் குழுவை சேர்ப்பதன் மூலம் மூலக்கூறுகளை கட்டமைத்தல். |
00:34 | மேலும் நாம் கற்கபோவது |
00:36 | ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்தல் |
00:41 | மற்றும் .mol file ஆக படத்தை சேமித்தல். |
00:45 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு |
00:49 | உயர்நிலைப் பள்ளி வேதியியல் மற்றும் |
00:50 | அடிப்படை கரிம வேதியியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:53 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
00:56 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04 |
01:00 | Jmol பதிப்பு 12.2.2 |
01:03 | மற்றும் Java பதிப்பு 7 . |
01:07 | குறிப்பு: Jmol அப்ளிகேஷன் நன்றாக இயங்க, உங்கள் கணினியில் Java ஐ நிறுவியிருக்க வேண்டும். |
01:14 | Jmol அப்ளிகேஷன் |
01:17 | இது, ஒரு கட்டற்ற(free and open source) மூலக்கூறு காட்சிபடுத்தி |
01:21 | வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது. |
01:27 | மேலும் புரதங்கள் (proteins) மற்றும் பெருமூலக்கூறுகளின் (macromolecules) இரண்டாம் அமைப்புகளைக் காண பயன்படுகிறது. |
01:33 | தரவிறக்கம் மற்றும் நிறுவுதல் குறித்த தகவல் : |
01:37 | உபுண்டு இயங்குதளத்தில், உபுண்டு சாப்ட்வேர் சென்டர்(Ubuntu Software Center) மூலம் Jmol நிறுவப்படுகிறது. |
01:45 | இந்த டுடோரியலை எங்கள் இணையத்தளத்தில் லினக்ஸ் தொடரில் காணவும் www.spoken-tutorial.org. |
01:56 | விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு (Android) சாதனங்களில் நிறுவ இங்கே செல்லவும், www.jmol.sourceforge.net |
02:08 | நிறுவ இந்த இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். |
02:13 | உபுண்டு சாப்ட்வேர் சென்டரை பயன்படுத்தி என் கணினியில் ஏற்கனவே Jmol அப்ளிகேஷனை நிறுவியுள்ளேன். |
02:20 | Jmol அப்ளிகேஷனை திறக்க Dash homeல் க்ளிக் செய்க. |
02:24 | search box ல் Jmol என டைப் செய்க. |
02:27 | திரையில் Jmol ஐகான் தோன்றுகிறது. |
02:30 | Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறக்க Jmol ஐகான் மீது க்ளிக் செய்க. |
02:35 | Jmol அப்ளிகேஷன் விண்டோ மேலே ஒரு menu bar ஐ கொண்டுள்ளது. |
02:40 | Menu bar க்கு கீழே ஒரு Tool bar உள்ளது. |
02:43 | இங்கே காட்சி பகுதி உள்ளது, இது Jmol panel எனப்படுகிறது. |
02:48 | menu bar ல், பல்வேறு தேர்வுகள் உள்ளன அவை File, Edit, Display, மற்றும் மேலும் பல. |
02:56 | இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு துணை தேர்வுகளையும் கொண்டுள்ளன. |
03:00 | மற்ற தேர்வுகளை தவிர Tools menu அணுக்களுக்கு இடையேயான தூரத்தைக் கணக்கிட toolகளை கொண்டுள்ளது. |
03:07 | பின்வரும் டுடோரியல்களில் இந்த தேர்வுகள் பற்றி கற்போம். |
03:12 | Help menu Jmol அப்ளிகேஷன் பற்றிய பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது |
03:18 | ஆவணத்தைக் கொண்ட ஒரு User Guide (பயனர் கையேடு) ஐயும் இது கொண்டுள்ளது. |
03:23 | Tool bar பல menu ஐகான்களைக் கொணடுள்ளது. |
03:27 | menu ஐகான்கள் குறிப்பிட்ட செயல்பாடுகளை விரைவாக இயக்குகிறது; உதாரணமாக திறத்தல், சேமித்தல், export செய்தல், அச்சடித்தல் மேலும் பல. |
03:37 | இங்கே ஐகான்களின் ஒரு தொகுப்பு உள்ளது, அவை சுழற்ற, அணுக்களின் ஒரு தொகுப்பை தேர்ந்தெடுக்க, தூரத்தை அளவிட, மேலும் சிலவற்றிற்கு. |
03:47 | “ modelkit” ஐகான் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் பயன்படுகிறது |
03:53 | தேவைக்கேற்ப Jmol panel ஐ அளவுமாற்றலாம். |
03:58 | கர்சர் ஒரு அம்புக்குறியாக மாறும் வரை விண்டோவின் ஏதேனும் ஒரு மூலைக்கு எடுத்துசெல்க. |
04:04 | இப்போது மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி குறுக்காக இழுப்பதன் மூலம் விண்டோவை மறுஅளவாக்கவும். |
04:10 | menu bar ல் Display menu மூலமாகவும் panel ன் அளவை மாற்ற முடியும். |
04:16 | Display menu மீது க்ளிக் செய்து Resize தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
04:20 | ஒரு dialog box திறக்கிறது, இங்கே அகலம் மற்றும் நீள பரிமாணங்களை pixelகளில் தரலாம். |
04:27 | 800 by 600 pixelகள் அளவில் எனக்கு விண்டோ தேவை. |
04:32 | எனவே 800 space 600 என டைப் செய்து OK பட்டன் மீது க்ளிக் செய்கிறேன். |
04:41 | இப்போது Jmol panel 800 by 600 pixelகளுக்கு அளவுமாற்றப்பட்டது |
04:47 | இப்போது சில எளிய கரிம மூலக்கூறுகளுக்கு மாதிரிகளை உருவாக்க ஆரம்பிக்கலாம். |
04:53 | energy minimization உடன் மாதிரிகளை கட்டமைக்கவும் மாற்றவும் Modelkit நம்மை அனுமதிக்கிறது. |
05:00 | tool bar ல் “modelkit” ஐகான் மீது க்ளிக் செய்க. |
05:04 | panel ல்மீத்தேனின் மாதிரி தோன்றுகிறது. |
05:07 | Jmol panel ல் மேல் இடது மூலையில் ஒரு menu தோன்றுகிறது. |
05:12 | இந்த menu ன் அம்சங்களாவன எளிமைாக அணுக்களை சேர்க்க, நீக்க, இழுக்க |
05:19 | (functional group) செயல்பாட்டு குழுக்களை சேர்க்க |
05:21 | பிணைப்புகளை நீக்க, சேர்க்க மற்றும் சுழற்ற |
05:25 | ஹைட்ரஜன்களை சேர்க்க, fileகளை Minimize செய்ய, சேமிக்க மற்றும் பல. |
05:30 | menu ல் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை பயன்படுத்த, கொடுக்கப்பட்டுள்ள தேர்வு பெட்டியில் க்ளிக் செய்க. |
05:35 | Modelkit function ஒரு ஹைட்ரஜன் அணுவுக்கு பதிலாக மெத்தில் குழுவை வைக்க அனுமதிக்கிறது. |
05:41 | நீங்கள் மாற்ற விரும்பும் ஹைட்ரஜன் அணுவிற்கு அருகில் கர்சரை கொண்டுவரவும். |
05:46 | அந்த ஹைட்ரஜன் அணு மீது ஒரு சிவப்பு வளையம் தோன்றுகிறது. |
05:50 | அந்த அணு மீது க்ளிக் செய்க. |
05:52 | ஒரு மெத்தில் குழு சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம். |
05:56 | மீத்தேன் மூலக்கூறு இப்போது ஈத்தேனாக மாறியுள்ளது. |
06:00 | முன்புபோல அதே படியை மீண்டும் செய்யவும். |
06:03 | ப்ரோப்பேனின் மாதிரியைப் பெற ஹைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க. |
06:07 | இந்த மூலக்கூறு மீதான energy minimization மிக நிலையான வெளிவடிவமைப்பை கொடுக்கும். |
06:13 | Energy minimization ஐ செய்ய: |
06:15 | Modelkit menu தேர்வுகளில் கீழே வந்து. |
06:19 | minimize தேர்வு மீது க்ளிக் செய்க |
06:22 | இப்போது நாம் ப்ரோபேன் மூலக்கூறின் மிக நிலையான வெளிவடிவமைப்பு மாதிரியை கொண்டுள்ளோம் |
06:28 | இந்த அமைப்பை ஒரு .mol file ஆக சேமிக்க, Modelkit menu ஐ திறக்கவும். |
06:33 | menu ல் கீழே வந்து save file தேர்வு மீது க்ளிக் செய்க. |
06:37 | திரையில் Save dialog box தோன்றுகிறது. |
06:41 | உங்கள் file ஐ சேமிக்க விரும்பும் folder மீது க்ளிக் செய்க. |
06:45 | என் file ஐ சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:50 | எனவே Desktop ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:54 | File Name க்கு சென்று உரைப்பெட்டியில் Propane என டைப் செய்க. |
06:59 | Files of Type மீது க்ளிக் செய்து MOL தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
07:03 | இப்போது, dialog box ன் கீழ் வலது பக்கத்தில் Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
07:08 | ப்ரோபேனின் 3D மாதிரி Desktop ல் .mol file ஆக சேமிக்கப்படும். |
07:14 | Jmol ல் இருந்து வெளியேற, File menu மீது க்ளிக் செய்து Exit தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
07:22 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது : |
07:25 | Jmol அப்ளிகேஷன் விண்டோ |
07:27 | Jmol panel ஐ மறுஅளவாக்குதல் |
07:29 | மீத்தேன், ஈத்தேன் மற்றும் ப்ரோபேன் போன்ற எளிய கரிம மூலக்கூறுகளின் 3D மாதிரிகளை உருவாக்க Tool bar ல் உள்ள Modelkit function ஐ பயன்படுத்துதல் |
07:40 | ஹைட்ரஜனுக்கு பதிலாக மெத்தில் குழுவை சேர்ப்பதன் மூலம் மூலக்கூறுகளை கட்டமைத்தல் |
07:45 | நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization ஐ செய்தல் |
07:48 | மற்றும் .mol file ஆக படத்தை சேமித்தல். |
07:52 | பயிற்சியாக Jmol Modelkit function ஐ பயன்படுத்தி, பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்: |
07:58 | 2-4 டைமெத்தில் பென்டேன் (Dimethyl Pentane) மற்றும் 3-எத்தில்-5-மெத்தில் ஹெப்டேன். |
08:03 | ஒரு நிலையான வெளிவடிவமைப்பை பெற Energy minimization செய்யவும். |
08:07 | .mol file ஆக படத்தை சேமிக்கவும். |
08:11 | tool bar ல் உள்ள rotate molecule ஐ பயன்படுத்தி மாதிரியை சுழற்றவும். |
08:15 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
08:19 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What]_is_a_Spoken_ Tutorial |
08:22 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:26 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:36 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:40 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:47 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:52 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:59 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |